அத்தியாயம் 15
"அழாத கண்ணு! ஒரு ரெண்டு நாளு தான.. நான், அப்பா, அப்பத்தா எல்லாம் பின்னாலயே வந்துர போறோம்.. அழாம கிளம்புத்தா" என்று அன்னம் கூற, நேரம் ஆக ஆக கல்யாணியின் கண்ணீரும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
இன்னும் சில நிமிடங்களில் சென்னைக்கு கிளம்ப வேண்டும்.. நினைத்து நினைத்து காலையில் இருந்து அழுது கொண்டிருந்தாள் கல்யாணி.
"ஆத்தா! நீ சொன்னா தான் கேக்கும்.. நீயே சொல்லு" என்று அரசன் தன் அன்னையை அழைக்க,
"நானே என்னனு கிடக்க போறேனோ இந்த ஊருல.. அவளுக்கு நான் என்னத்த சொல்லுவேன்" என்று கல்யாணிக்கு மேல் வடிவு அழ,
"ண்ணா! அண்ணி ரொம்ப பீல் பன்றாங்க.. நீ வேணா அண்ணி கூட இன்னும் ஒரு நாளு நாள் இங்கேயே தங்கிட்டு வாயேன்" என்று ஸ்ரேயாஸ் ப்ரணித்திடம் கேட்க,
"வாய வச்சுட்டு சும்மா இரு டா.. வாய்ப்பே இல்ல.. ஆனாலும் அய்யோ பாவம் கல்யாணி! இந்த பொண்ணுங்களுக்கு இது ஒரு கொடுமை இல்ல?" என்று தம்பியிடம் மனைவிக்காய் வருந்தினான் ப்ரணித்.
"நீ அழுது அவள நோவடிச்சிகிட்டு கிடக்கியாக்கும்.. புள்ள வாழ போவுது.. பெரிய மனுசியா நல்ல வார்த்த சொல்லி அனுப்புவியா.. இருந்து ஊரக் கூட்டுத?" என்று அரசன் சத்தம் போட,
"உனக்கு என்னத்த தெரியும்.. எனக்கு அந்த ஆவிலாம் இல்ல.. என் பேத்தி எங்க இருந்தாலும் நல்லா தான் இருப்பா.. நீ போயிட்டு வா ஆத்தா" என்று கண்ணீர் வடிய கூறிவிட்டு உள்ளே செல்ல வடிவு அறைக்குள் திரும்ப,
"ஒரு நிமிஷம் ஆச்சி!" என்று நிறுத்தினான் ப்ரணித்.
"கல்யாணிக்கும் கஷ்டமா தான் இருக்கும்.. உங்களை பார்த்தாலும் புரியுது.. சோ! நீங்களும் எங்களோட வரலாமே! கல்யாணிக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்ல?" என்று ப்ரணித் கேட்க,
"சரியா சொன்ன ப்ரணி! நான் கூட யோசிக்கவே இல்லை.. எப்படியும் ரெண்டு நாள்ல எல்லாரும் அங்கே வர்ராங்க தானே? அவங்களோட வேணா நீங்க திரும்ப வந்துக்கலாம்?" என்றார் ராணியும் மகனுடன் சேர்ந்து.
"சூப்பர் ஐடியா ம்மா.. எனக்கும் கொஞ்சம் டைம்பாஸ் ஆகும்.. பியூட்டி போலாமா?" என்று ஸ்ரேயாஸ் கேட்க, சரவணன் புன்னகைத்தார்.
வடிவு என்ன சொல்லவென யோசிக்க, "பொண்ணு குடுத்த இடம்.. அங்கே எப்படி தங்குறதுனு எல்லாம் நினைக்காதீங்க.. இனி அது கல்யாணி வீடு.. நீங்க உரிமையா வந்து தங்கலாம்" என்றார் சரவணன்.
"நீ கூப்பிடு கல்யாணி!" என்று ராணி கூற,
"வர்றியா அப்பத்தா?" என்றாள் கண்ணீருடன் கல்யாணி.
"ஆத்தா வரும் நீ அழாம இரு!" என்று கூறி தன் சம்மதத்தை தெரிவித்து இருந்தார் அரசன்.
வடிவும் மகிழ்ச்சியுடனே வண்டியில் ஏறிக் கொள்ள, வழியனுப்பி வைக்க நின்ற தாய் தந்தையைப் பார்த்தவாறே கவலையுடன் காரில் அமர்ந்திருந்தாள் கல்யாணி.
"அதான் நாங்க இருக்கோம்ல ரிலாக்ஸ்!" என்று கல்யாணி கைகளை ப்ரணித் அழுத்திக் கொடுக்க,
"உங்களையா அப்பத்தா ஆத்தான்னு கூப்புட முடியும்? என்னத்தையாவது சொல்லணுமுன்னு சொல்லாதீங்க" என்றுவிட்டாள் பட்டென்று கவலையில் இருந்தவள்.
'காலங்ககாலமா இப்படி தானே டா சமாதானப்படுத்துவாங்க.. பயிற்சி வேண்டுமோ?' மனம் இப்படி தான் நினைத்தது ப்ரணித்திற்கு.
"விடு டா அவளே கவலையில இருக்குறா!" என்று அன்னை வேறு மகனை சமாதானப்படுத்த,
"தேவை தான் எனக்கு!" என்றான் வாய்விட்டே.
"இவன எதுக்கு என் பேத்தி பக்கத்துல உக்கார வச்ச? ராணி நீ அந்த ஓரமா உக்காந்துருக்கலாம்ல?" என்று ஸ்ரேயாஸ் அருகில் இருந்த வடிவு கேட்க,
"கார்ல தானே ம்மா! சின்ன பசங்க எதாவது பேசிட்டு வருவாங்க!" என்று ராணி கூறும் முன்,
"அவ்வளவு கஷ்டம்னா பேத்தியை வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்கலாம்ல.. எதுக்கு கல்யாணத்தை செஞ்சு வைக்கணும்.. ஆச்சிக்கு கொழுப்பை பாரேன்!" என்றான் ப்ரணித் அருகில் இருந்த தாய்க்கும் மனைவிக்கும் மட்டும் கேட்கும் குரலில்.
"ண்ணா! நீ ஒன்னு மறந்திட்ட!" என்று பின்னிருந்த ஸ்ரேயாஸ் ப்ரணித் காதுகளில் கூற,
"என்ன டா?" என்றான்.
"பியூட்டி இங்கேயே அண்ணி ரூம் முன்னாடி கவுந்தடிச்சி தூங்கிச்சு.. அப்ப அங்கே வந்து?" என்று கேட்க,
"அதெல்லாம் தெரியாமலா ஆச்சியை கூப்பிட்டேன்.. அதுக்கெல்லாம் எப்பவோ பிளான் பண்ணிட்டேன்" என்றான் தம்பியிடம்.
"என்ன டா கேட்குறான்?" அன்னை கேட்க,
"அதெல்லாம் ஒன்னும் இல்லை ம்மா.. போலாம் தானே? டிரைவர் கிளம்புங்க" என்று கூறவும் கார் அந்த கிராமத்தை விட்டு கிளம்பியது.
சென்னை வந்து சேரும் வரையுமே முகம் வீங்கும் அளவிற்கு கண்ணீர் வடிய வடிய அழுது வைத்திருந்தாள் கல்யாணி.
"ஃபேஷ்வாஷ் பண்ணிக்கோ டா.. அங்கே நம்ம சொந்தக்காரங்க கொஞ்சம் இருப்பாங்க.." என ராணி வண்டியை நிறுத்தி இருக்க, இறங்கி முகம் கழுவி வந்தவள் தன் முகத்தையும் மாற்றிக் கொண்டாள்.
"ராணி! ரெண்டு பேருமே டையார்ட்டா இருப்பாங்க.. அங்கே இருக்குறவங்க புடிச்சி வச்சிடாம கொஞ்சம் பார்த்துக்கோ" என்று சரவணன் கூறவும் ராணி சிரித்தார்.
அங்கிருப்பது அனைவரும் ராணியின் குடும்பத்தினர் தான்.
அதில் பலருக்கும் ராணி மேலும் கோபம் கூட.. ப்ரணித்திற்கு சரவணன் குடும்பத்தில் பெண் எடுப்பதைக் கேட்டதில் இருந்து.
இன்னும் சிலர் திருமணத்திற்கு வரவே இல்லை கோபத்தில். ப்ரணித் கல்யாணத்தை பற்றி பேசும் பொழுதெல்லாம் ராணியே பேசவிட்டதில்லை அவர்களை.
வசதி, அழகு, வேலை என ப்ரணித்தை தன் மகளுக்கு என கேட்ட எவருக்குமே ராணி சரியாய் பதில் கூறவில்லை அப்பொழுது.
இன்னும் சரியாய் கூற வேண்டும் என்றால் பெண் கேட்டவர்களின் பெண்கள் எல்லாம் படித்து வேலையில் இருக்கும் பெண்கள். அத்தோடு பேச்சு பழக்க வழக்கமும் கூட ராணிக்கு பிடிக்காத விதமாய் இருக்கும்.
அவர்களை தான் எதிர்கொள்ள போகிறாள் கல்யாணி. சரவணன் கூறவும் ராணியும் அர்த்தமாய் புன்னகைக்க,
"ப்ரணி! நீ எதுவும் பேச கூடாது அப்பா இப்பவே சொல்லிட்டேன்.. நீயும் தான் டா!" என இரு மகன்களையுமே எச்சரித்தார் சரவணன்.
"எதுக்கு இம்புட்டு புத்திமதி.. யாரு வந்திருக்காவ?" என வடிவு கேட்க,
"என் அக்கா மாமியாரும், அண்ணன்களும் வந்திருக்காங்க ம்மா.. அண்ணங்க ரெண்டு பெரும் சொந்த பிசினஸ்.. வர முடியலைன்னு சொன்னாங்க.. சரினு சொன்னேன்.. இப்ப வீட்டுக்கு வந்திருக்காங்க போல.. அக்கா மாமியார்... அவங்களும் கல்யாணத்துக்கு வர முடியலைனு வந்திருக்காங்க போல" என்று நிறுத்திவிட்டார் ராணி.
"அண்ணங்கன்னா பரணிக்கு தாய்மாமா இல்ல? அப்படி என்ன ஜோலி கிடக்கு..?" என்று வடிவு கேட்க,
"பியூட்டி! பரணி இல்ல ப்ரணி.. எங்க சொல்லுங்க ப்ரணி" என்று ஸ்ரேயாஸ் வகுப்பெடுக்க,
"எல்லாம் ஒன்னுதேன்.. நான் என்னத்த சொல்லுதேனோ அது தேன்.. ஏய்யா பரணி நான் உன்னைய தான் கூப்புடுத்தேன்னு உனக்கு புரியுதாங்காட்டு இருக்கா?" என்று ப்ரணித்திடம் கேட்கவும்,
"அதெல்லாம் புரியுது ஆச்சி. உங்க ஸ்லாங் பிக்கப் பண்ண தான் கஷ்டப்படுறேன்" என்றான் கல்யாணியையும் அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே,
"என்னது? விளங்கல?" என்று வடிவு கேட்க,
"எனக்கு நல்லா விளங்கிற்று!" என்று ப்ரணித் கூற, நீண்ட நேரங்களுக்கு பின் மெல்லிய புன்னகை கல்யாணியிடம்.
"நான் வேணா எஸ்பிளாயின் பண்ணவா பியூட்டி?" என்று ஸ்ரேயாஸ் கேட்க,
"இவ் ஒருத்தே! எனட்ட கடல போட பாக்கான்.. உனக்கு வாரவா என்ன சங்கடப்பட போறாளோ!" என்று கூற, அனைவரும் சிரிக்க என பேசி சிரித்தபடியே வந்து சேர்ந்தனர் ப்ரணித்தின் வீட்டிற்கு.
"நீ இறங்காத ஆத்தா! ஆரத்தி தட்டு வரட்டும்" என்று வடிவு கூறவும் ப்ரணித்தும் கல்யாணியோடு அமர்ந்து கொண்டான்.
"அங்கை! ஆரத்தி எங்கே?" என்று கெட்டவர்,
"கொஞ்சம் நேரமாகிடுச்சு அத்தை ட்ராபிக்ல.. எப்படி இருக்கீங்க?" என்று கேட்டு ராணி வந்திருந்தவர்களிடம் பேச, அங்கை கொண்டு வரவும் தானே மணமக்களுக்கு சுற்றினார்.
"உள்ளே வாங்க!" என்று அழைத்து செல்ல,
"விடாப்பிடியா நம்ம சொந்தத்துல பொண்ணு எடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருந்துட்ட இல்ல?" என்று ராணியின் பெரிய அண்ணன் கேட்க,
"எல்லாம் முடிஞ்ச அப்புறம் எதுக்கு? பேசாம இருங்க!" என்றார் அவரின் மனைவி.
"அண்ணே! நான் தான் சொன்னேனே! சந்தர்ப்பம், சூழ்நிலை இதையெல்லாம் விட இவங்களுக்கு இவங்க தான்னு ஏற்கனவே கடவுள் முடிவு பண்ணினது ண்ணே!" என்றார் ராணி நிதானமாகவே.
"எடே சிரே! உன் மாமனுங்க நிக்க தோரணைய பாத்தா கல்யாண வீட்டுக்கு சந்தோசமா வந்தது மாட்டுக்க இல்லய?" என்று மெதுவாய் வடிவு கேட்க,
"குதுகலமா இருக்க வீட்ல கும்மி அடிக்க நாலு பேர் இருப்பாங்க இல்ல.. அதுல ரெண்டு தான் என் மாமனுங்க" என்றான் ஸ்ரேயாஸ்.
"அப்போ மத்த ரெண்டு?"
"அதுல ஒன்னு இந்த பாட்டி.. என் பெரியம்மாவோட மாமியார்.. அவங்க பேத்திக்கு அண்ணனை கேட்டுட்டே இருந்திச்சி.. பட் அம்மாக்கு இஷ்டம் இல்ல.. இன்னொன்னு இருக்கு.. இதோட தங்கச்சி வெரி டேஞ்சரஸ் லேடிஸ்!" என்று சுருக்கமாய் முடித்தான் ஸ்ரேயாஸ்.
"இம்புட்டு கத இருக்கா.. உன் அண்ணன்காரன் மவுசு கூடுனவன் தான்.. இப்போ எதுக்கு வந்துருக்காவ? என் பேத்தி வந்த முத நாவே வாய வச்சுட்டு சும்மா இல்லாம எண்ணத்தையாவது சொல்லி போடுறாம.." என்று பேத்திக்காக வடிவு நினைக்க,
"அதெல்லாம் அம்மா பாத்துக்குவாங்க பியூட்டி.. யூ டோன்ட் வொரி!" என்று கூறி அறைக்கு சென்றுவிட்டான் ஸ்ரேயா.
அவன் கூறியது போலவே தான் நடந்தது.. யாரையும் பேச விடவில்லை ராணி.
"நீ கொஞ்ச நேரம் அந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடு டா.." என கல்யாணியை அனுப்பியவர், மகனைப் பார்க்கவும் அவன் மொபைலோடு தோட்டத்திற்கு சென்றுவிட்டான்.
வந்தவர்களிடமும் அதிகமாய் இல்லாது தேவைக்கு என பேசி அவர்கள் வாயையும் பேச விடாமல் தடுத்து அதை கல்யாணி காதிற்கும் கொண்டு செல்லாமல் என வீட்டின் சிறந்த நிர்வாகியாய் இருந்தார் ராணி.
"நாங்க கிளம்புறோம்... தங்கச்சி ஆச்சேன்னு ஓடி வந்ததுக்கு உன் மரியாதையே சரி இல்ல.. இனி இங்கே எதுக்கு நாங்க?" என்று அண்ணன் கேட்ட பொழுதும்,
"இதை நீங்க கல்யாணத்தன்னைக்கு வந்து சொல்லி இருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்.. பரவாயில்ல.. தங்கச்சி வீட்டுக்கு இன்னைக்கு தான் உங்களுக்கு வழி தெரிஞ்சிருக்கும்.. அதுவும் ஆயிரத்தெட்டு வேலைக்கு இடையில.. நீங்க போய்ட்டு வாங்க ண்ணே!" என்று சிரித்த முகமாகவே ராணி கூற, இரு அண்ணன்களுமே சிவந்த விழிகளோடு கிளம்பி இருந்தனர்.
"என்னடா உன் தாய்மாமனுங்க இப்படி இருக்கானுங்க.. இதுக்கு தான் நகரத்துக் காரனுங்க சகவாசம் ஆவாதுன்னு எங்கஊருல சொல்லுதாங்க" என்று வேடிக்கை பார்த்த வடிவு ஸ்ரேயாஸிடம் கூற,
வடிவையும் பேசி பேசி மற்றதை மறக்க வைத்து அவருக்கு தனி அறை கொடுத்து உறங்க வைத்து என அண்ணனுக்கு உதவி புரிந்தான் ஸ்ரேயாஸ்.
தொடரும்..