அத்தியாயம் 16
காலையில் வாசு கண் விழிக்கும் பொழுது வீட்டில் பேச்சுக் குரல்கள் அதிகமாய் கேட்க, திக்ஷிதா அறைக்கு வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.
எழுந்தவன் கிளம்பியே வெளியே வர, திக்ஷிதா அன்னை உமா வந்திருந்தார்.
"வாங்க!" என்று உமா புன்னகைக்க, நேற்றைய தன் பேச்சுக்கள் நியாபகம் வந்ததில் அவரைப் பார்க்கவே சங்கோஜமாய் இருந்தது வாசுவிற்கு.
தலையை மட்டும் அசைத்தவன் பொதுவாய் பார்ப்பதை போல கண்களால் வீட்டினை ஸ்கேன் செய்ய,
"அம்மு உள்ள சமயக்கட்டுல இருக்குறா டா!" என்றார் சிவகாமி.
"அவங்க சாப்பிட வந்துட்டாங்க அம்மு! நீ போய் பரிமாறு.. நான் தோசை ஊத்துறேன்" என்று திக்ஷிதாவை உமா அனுப்பி வைக்க, வேறு வழி இல்லை திக்ஷிதாவிற்கும்.
அறையில் இருந்து வந்து தன் அருகே நிற்கும் வரை அவளையே தான் பார்த்திருந்தான் வாசு.
"மாமா சாப்பிட்டாங்களாமா மாமி?" என்று சிவகாமியிடம் கேட்டபடி கணவனுக்கு எடுத்து வைக்க,
"இப்ப தான் பேசினேன்.. வீட்டுல ஆள் இல்லைனதும் மனுஷன் நிம்மதியா தூங்குனேன் எழுப்பிட்டியான்றார்" என்று கூற,
"பாவம்! இப்பவாச்சும் நிம்மதியா இருக்காரே! இன்னும் கொஞ்ச நாள் நீங்க இங்கேயே இருந்துடுங்க" என்று வம்பு செய்ய, வாசு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
துளியும் அவனை கண்டு கொள்வதாய் இல்லை என்பதை போல தோசையை வைத்தவள் சாம்பார் சட்னி எடுத்து வைத்துவிட்டு அருகே தண்ணீர் ஜக்கையும் நகர்த்தி வைத்துவிட்டு சிவகாமி அருகே சென்று விட்டாள்.
"விஷ்வா வந்ததும் கிளம்பணுமா? எனக்கும் போரடிக்கும்ல? இங்கேயே இருங்களேன் மாமி!" என கெஞ்சியபடி சிவகாமி அருகில் அமர, பல்லைக் கடித்த வாசுவிற்கு சாப்பாடு உள்ளே இறங்கவே இல்லை.
"உன் அம்மாவை கேட்குறதை விட்டுட்டு என்கிட்ட என்ன தாஜா பண்ணிக்கிட்டு இருக்குற? என்னையும் என் புருஷனையும் பிரிக்கலாம்னு பாக்குறியா?" என்றார் சிவகாமி.
"உங்களை கூட பேசியே உட்கார வச்சுடுவேன்.. என் அம்மா கழுவுற மீனுல நழுவுற மீனு.. அப்பா இல்லாம இங்க தாங்குறதெல்லாம் நான் கனவுல கூட நினச்சு பார்க்க முடியாது" திக்ஷிதா கூறவும்,
"இவ்வளவு பேசுறவ எங்களோட வந்து நாலு நாள் இருக்க வேண்டியது தானே?" என்று உமா வர, என்ன சொல்வாளோ என காதை நன்றாய் அவர்கள் பக்கம் நீட்டி இருந்தான் வாசு.
"நல்லா தான் இருக்கும்.. ப்ராஜெக்ட் வொர்க் இல்லைனா நீங்க கூப்பிடலைனாலும் நானே வந்திருப்பேன்" என்ற பதில் மீண்டும் சுருசுருவென வர வைத்தது வாசுவிற்கு.
அவன் என்ன பதில் எதிர்பார்த்தானோ அவனுக்கு தான் தெரியும்.
"கார் கீ ரூம்ல வச்சுட்டேன்.. எடுத்துட்டு வா திக்ஷி!" கையை கழுவியபடி வாசு கூற, ஒரு நொடி அவனைப் பார்த்தவள் பின் எழுந்து செல்ல, சிவகாமிக்கு சந்தேகம் வலுத்துக் கொண்டே தான் சென்றது அவர்களின் பேச்சுக்களும் மௌனங்களுமாய்.
"வச்சா வச்ச இடத்துல வந்து எடுத்துக்க தெரியாதாமா? அதுக்கு எதுக்கு என்னைய கூப்பிடனும்.. லொள்ளு தான்.." முணுமுணுத்தபடி அவள் சாவி தேடுவதாய் அறையை ரெண்டு பண்ண,
"எனக்கு கேட்டுச்சு!" என்ற குரல் அவனுடையது என தெரிந்தாலும் திரும்பவில்லை திக்ஷி.
இன்னும் அமைதியாய் தேடிக் கொண்டே இருக்க,
"அவங்க கூப்பிட்டா என்கிட்ட கேட்கணும்னு சொல்ல மாட்டியா? ப்ராஜெக்ட் ஒர்க் இல்லைனா நீயா போய்டுவியா?" என்றான் கோபத்தை மறைக்காமல்.
"இருக்கும் பிரச்சனையில் இது மட்டும் தான் உனக்கு பிரச்சனையா?" என்பதை போல திரும்பிப் பார்த்தவள் பேசாமல் நிற்க,
"உன்கிட்ட தான் திக்ஷி!" என்றான்.
"சாவி காணும்.. எங்க போட்டிங்க?" என்றவள் மீண்டுமாய் அறையை அலச போக, கையில் இருந்த சாவியை கட்டிலில் தூக்கி எறிந்தான்.
அதில் திக்ஷி முறைத்தவள் எதுவும் கூறாமலே வெளியேற போக, "உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் எங்க போற நீ?" என கையைப் பிடிக்க,
"கையை விடுங்க! எனக்கு அம்னிஷியா எல்லாம் இல்லை.. நைட்டு நடந்த எதையும் நான் மறக்கலை.. டிவோர்ஸ் பண்ணுவேன்னு சொன்னிங்க தானே? அப்போ கையை பிடிக்காதீங்க" என்று உருவ,
"ஏய்! நான் எப்ப அப்படி சொன்னேன்? உளராத.. நீ சொன்னதுக்கே செம்ம கோவத்துல இருக்கேன்.."
"அதான் அவ்வளவு பேசுனீங்க இல்ல? அப்ப அது தானே எனக்கு தோணும்?" என்றாள் திக்ஷிதாவும் விடாமல்.
"நானா அதிகமா பேசினேன்?" என்றவள் கேள்வியில் அவள் திரும்பி நடக்க,
"திக்ஷி நில்லு!" என்று அவளோடும் அவள் கோபத்தோடும் மல்லுக்கு நின்றான்.
"இப்ப என்ன பண்ணனும்? சரி சாரி! இனி அந்த பேச்சுக்கே நான் வர்ல.. நீ யார்கிட்ட வேணா பேசலாம்.. எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல"
"ஓஹ் அப்ஜெக்ட் பண்ண வேற செய்விங்களோ? எனக்கு தோணிச்சுனா நான் பேசுவேன்.." என்றாள் அவன் அருகில் வந்து.
"ம்ம்! இப்படி கிட்ட வந்தே சண்டை போடு!" கண்ணுக்கே தெரியாத குறுஞ்சிரிப்போடு அவன் கூற,
"வித்த காட்டுறான் நம்பாத திக்ஷி!" என நினைத்தவள்,
"கிளம்புங்க! காத்து வரட்டும்" என்றபடி நடக்க,
"நீ நீயா தான் இருக்க.. ஆனா என்னால நான் நானா இருக்க முடியல!" என்றவன் பேச்சும் குரலும் என கூறுவது புரிந்தாலும்,
"போய் நல்ல டாக்டரா பாருங்க!" என்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாள்.
"கொஞ்சம் கூட பயம் இல்லாம போச்சு!" என நினைத்தவனுக்கு, 'எல்லாம் நீ செய்ததான் விளைவு' என புரியாமலும் இல்லை.
வாசு கிளம்பிய சில நிமிடங்களில் எல்லாம் விஷ்வாவின் அன்னை துளசி வந்துவிட, சிவகாமி அவரை நலம் விசாரிப்பதும் உமாவிற்கும் அறிமுகப்படுத்தி வைப்பதுமாய் சென்றது நேரம்.
"அந்த பொண்ணு என்ன ஆனா துளசி?" சிவகாமி கேட்க, துளசி திக்ஷிதாவை முறைத்தார்.
"கேள்வி கேட்ட மாமியாரை முறைக்க முடியலைன்னு என்னை ஃபையர் விடுறிங்களா?" என திக்ஷி கேட்க, ஐஸ்வர்யாவை விஷ்வா இங்கே அழைத்து வந்ததையும் திக்ஷிதா அவர்களுக்கு உதவுவதாயும் சைகையில் கூற,
"துளசிம்மா! ஊருக்குள்ள இப்படி தான் சொல்லிக்கிட்டு திரியிறீங்களா? மாமி! சத்தியமா அவங்களுக்கு நான் ஹெல்ப் எல்லாம் பண்ணல.. ஐஷுவும் விச்சுவும் அதுங்களா நான் ஹெல்ப் பண்றதா நினைச்சுட்டு இருக்குதுங்க.. ஏற்கனவே ஒரு லவ்னால தான் அம்புட்டும் அக்கப்போரா இருக்கு என் வாழ்க்கைல.. இந்த லவ்வுக்கும் எனக்கும் சும்மந்தமே கிடையாது.. உங்க பையன்கிட்ட கோர்த்து விட்டுட்டு போய்டாதீங்க!" என்றவள் பேச்சில் சிவகாமியோடு துளசியும் சிரிக்க,
"பெரியவங்ககிட்ட கொஞ்சம் மரியாதையா பேசணும் அம்மு! என்ன பேச்சு இது.. முதல்ல அவங்களை அத்தைனு பேசி பழகு!" என்று உமா கண்டிக்க,
"விடுங்க உமா! திக்ஷி இப்படி பேசுறது தான் எனக்கு நல்லா இருக்கு.. பொம்பள புள்ளை இருந்தா இப்படி தான் இருந்திருக்கும்னு நான் இவ மாமாகிட்ட சொல்லிட்டே இருப்பேன்!" என்று கூற, துளசியுமே ஆமாம் என கூறினார்.
விஷ்வாவும் சிவகாமியை பார்க்க மாலை நேரம் வர,
"வா டா! எப்படி இருக்க?" என்று கேட்ட சிவகாமி,
"என்ன தனியா வந்திருக்க? ஆள் இல்லைனா தான் ஜோடியா வருவியோ?" என்று கேட்கவும் விழித்தவன் பார்வை திக்ஷிதா பக்கம் திருப்ப,
"மாட்டிக்கோ டா சாம்பார் மூஞ்சி!" என்று நக்கலாய் பார்த்தாள் திக்ஷி.
"தெய்வமே! நம்பி வந்ததுக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க இல்ல?" என்றவன்,
"சிவகாமி மம்மி! பாஸ் எனக்காக எவ்வளவு பெரிய வேலை பார்திருக்கார் தெரியுமா?" என்று கேட்க,
"என்ன ஐஸ்வர்யாவை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொன்னாரா?" என்று கிண்டல் செய்த திக்ஷி,
"இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு கூட இல்லையே?" என்றும் சேர்த்து சொல்ல,
"திக்ஷி!" என்று உமா கண்டிக்க,
"நீங்க சொல்லலைனாலும் அதான் நிசம்! பாஸ் எனக்காக ஐஸ்வர்யா வீட்டுல போய் பேசி இருக்கார்.. நடக்க இருந்த நிச்சயத்தை நிறுத்தி இருக்கார்.." என்று காலரை தூக்கிவிட்டு விஷ்வா கூற,
"என்ன டா சொல்ற?" என்று சிவகாமியும்,
"நிஜமாவா?" என உஷாவும் ஆச்சர்யமாயும் அதிர்ச்சியாயும் கேட்க,
"யார் காதுல பூ சுத்துற? நீ சொல்றதை எல்லாம் இந்த திக்ஷி இனி நம்ப மாட்டா.. கோ மேன்!" என்றாள் திக்ஷி சுத்தமாய் நம்பாமல்.
"ப்ச்! அட!" என்றவன் உடனே ஐஸ்வர்யாவிற்கு அழைத்து ஸ்பீக்கர் ஆன் செய்து,
"சொல்லு ஐஷு!" என்று கூற,
"டேய் டேய்! ஸ்பீக்கர்னு சொல்லிடு! கொஞ்சி கெஞ்சி பேசிட போறா!" என்று சிவகாமி கூற,
"ம்ம்க்கும்ம்! அதுக்கெல்லாம் இந்த விஷ்வாக்கு குடுத்து வைக்கல.." என்று கூறியவன்,
"ஐஷு அங்கேயே நடந்ததை சிவகாமி மம்மிக்கு என் மம்மிக்கு நம்ம திக்ஷி பேபி கேர்ள்க்கு எல்லாம் கேட்குற மாதிரி சத்தமா சொல்லு" என்று கூற,
"எல்லாரும் ஒன்னா இருக்காங்களா?" என்று கேட்டவள்,
"விஷ்வா சொன்னது நிஜம் தான் என்னாலையே இன்னும் நம்ப முடியல.. என் அப்பாவும் கூட கிட்டத்தட்ட சம்மதிச்சுட்டாங்க.. இன்னும் விஷ்வா வந்து பேசினா போதும்.. நிஜமா நான் அவ்வளவு ஹாப்பியா இருக்கேன்!" என்றவள் பேச்சில் அனைவரும் வாயை பிளந்தபடி, வாசுவா என நம்ப முடியாமல் இருக்க,
சிவகாமியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிட்டாள் ஐஸ்வர்யா.
"என்ன நடக்குது இங்க? என் புள்ளையா இப்படி ஒரு வேலை பார்த்தது?" சிவகாமி கேட்க,
"வேண்டாத வேலைக்கெல்லாம் பேர் போனவர் தான் உங்க பிள்ளை!" என்றாள் திக்ஷி.
"அம்மு!" என்று கோபமாய் உமா அழைக்கவுமே,
"அட அவளுக்கு தான் நாக்கை அடக்க முடியலையே.. விடுங்களேன் உமா! கழுத போகும் போது அவன்கிட்ட சொல்லி வச்சுட்டு போவோம்" என்றார் சிவகாமியும்.
"நல்ல மாமியார்.. நல்ல மருமகள்" என நினைத்துக் கொண்ட உமாவும் விட்டுவிட,
"என்ன சிஸ்டர் ஹப்பியா? எங்களை எப்படியாவது சேர்த்து வச்சுடுவீங்கனு எனக்கு தெரியும்.. ஆனால் அதுக்கு பாஸ்ஸையே இப்படி மாத்தி வைப்பிங்கனு எனக்கு தெரியாம போச்சே!" என விஷ்வா பேச்சில் அவ்வளவு துள்ளல் இருக்க,
"மரியாதையா ஓடி போய்டு.. நானே கொலை காண்டுல இருக்கேன்.." என்றாள் திக்ஷி.
இரவு வந்த வாசுவிடம் இதை கேட்க, "எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியலை ம்மா.. இவன் வேற ரொம்ப சீரியஸா இருக்கான்.. நிச்சயம் பண்ணிட்டா அது வேற ஒரு பிரச்சனை கொடுக்கும்.. அதான் போய் பேசினேன்" என்றவன் மனைவி எதாவது கூறுவாளா எனப் பார்க்க, கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டாள் திக்ஷிதா.
அன்று இரவுமே அன்னையை சாதகமாய் வைத்து சிவகாமி, உமாவோடு அவர்கள் அறையில் இரவு இருந்து கொண்டவள் வாசுவை வெகுவாய் சோதித்துக் கொண்டிருந்தாள்.
தொடரும்..