• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 17

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 17

"நாங்க கிளம்புறோம் வாசு! அவளை கொஞ்சம் பார்த்துக்கோ டா!" என்ற அன்னையை வெளிப்படையாய் வாசு முறைத்தான்.

"இத்தோட நூறாவது முறையா சொல்லிட்டீங்க ம்மா.. அண்ணா என்ன சின்ன குழந்தையா?" விஷ்வாவே கேட்க,

"எனக்கு என்னவோ சரி இல்லைனு தோணுது.. அதான் சொல்றேன்.. நீ தான் கொஞ்சம் அமைதியா இரேன்!" என்றவர்,

"வாசு! உனக்கு கோபம் வந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு! அவ வீட்டுல அவ கடைக்குட்டி.. நம்ம வீட்டுல விஷ்வா எவ்வளவு செல்லமோ அதே மாதிரி.. அதை விடவும் அதிக செல்லம்னு அவ பேசுறதுலையே புரியுது தானே? ஏதாச்சும் துடுக்கா பேசினாலும் என்னனு சொல்லி குடு டா.. சட்டுனு உன் கோபத்தை காட்டிடாத!" என்றார்.

"ஆமா அண்ணா! அம்மா மாதிரி பொறுமையா அண்ணிக்கு சொல்லி குடுங்க.. சரியா சொன்னேனா ம்மா?" என்று கேட்டு தலையில் கொட்டும் வாங்கிக் கொண்டான் விஷ்வா.

"ம்மா! எனக்கு தெரியும் நான் பார்த்துக்குறேன்.. அதே மாதிரி நீங்களும் ஒன்னு நியாபகம் வச்சுக்கோங்க.. நான் கோபப்படுறேன்னு பயந்து போறவ இல்ல உங்க மருமக" என்றவன் முகத்தில் மலர்ச்சியே இருக்க கொஞ்சமாய் சமாதானம் ஆனார் சிவகாமி.

"வாசு ண்ணா பேச்சே ஒரு மாதிரி இருக்கே!" குறுகுறுவென பார்த்து விஷ்வா கூற,

"உதை வாங்காமல் கிளம்பு டா!" என்றான் இன்னும் புன்னகை வாடாமல்.

விஷ்வா கல்லூரி சென்று வந்து அன்னையை அழைக்க வந்திருக்க அவர்களோடே உமாவும் கிளம்ப ஏற்பாடு ஆகி இருந்தது.

வாசுவுடன் சிவகாமி பேசிக் கொண்டிருக்கவும் அன்னை தோள்களைக் கட்டிக் கொண்டு அங்கே வந்தாள் திக்ஷிதா.

"சரி! என்னவோ சொல்ற.. நானும் நம்புறேன்.. செவ்வாய் கிழமை பூஜைக்கு சொல்லிடுறேன்.. கண்டிப்பா வந்துடுங்க.. முன்னாடியே வந்துட்டாலும் சந்தோசம்" என்றார் சிவகாமி.

"முன்னாடின்னா திங்களா மாமி?" என்று திக்ஷிதா கேட்க,

"உன்கிட்ட வாயை கொடுக்க எனக்கு நேரம் இல்லை டி!" என்றவர்,

"என் பையனை ரொம்ப படுத்தாத!" என்று சொல்லி காருக்குள் செல்ல,

"மாமி!" என முறைத்து இடுப்பில் கைவைத்தவளைப் பார்த்து கேலியாய் சிரித்தான் வாசு.

"விளையாட்டுக்கு சொல்றதுக்கு முறைப்பியா? அவங்க உனக்கு அத்தை!" என்று அதட்டிய உமா,

"வர்றேன்! பார்த்து இருந்துக்கோ.. எதுவும்னா கால் பண்ணு!" என்றுவிட்டு கிளம்ப, விஷ்வாவும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

கார் கண்ணில் இருந்து மறையும் வரை அவள் பார்திருக்க, வாசு உள்ளே சென்றிருந்தான்.

உள்ளே வந்தவள் அவனை கண்டு கொள்ளாமல் செல்ல பார்க்க,

"திக்ஷி! இங்க வா!" என்றான் அவள் திரும்பியதும்.

"என்னவாம்!" என்ற எண்ணத்துடன் அவனருகில் வந்து நிற்க, தன் மேல் சரித்துக் கொண்டான் அவளவன்.

"விடுங்க விடுங்க!" என திமிறியவளை அதற்கு முடியாதவாறு தன்னோடு அவன் சேர்த்துக் கொள்ள,

"நான் இன்னுமே செம்ம கோபத்துல இருக்கேன்!" என்றாள்.

"இதெல்லாம் ஓவர்! அதான் அவ்வளவு பேசிட்டியே.. அதுவும் ரெண்டு நாள் ஆச்சு உன்னை இவ்வளவு கிட்டக்க பார்த்து"

"எவ்வளவு பேசிட்டு எவ்வளவு சாதாரணமா சொல்றிங்க? நீங்க எப்படி அப்படி பேசலாம்!" என்று இன்னும் திக்ஷி கேட்க,

"அதான் சாரி கேட்டேனே திக்ஷி! விடேன்.. என்னை விட ரொம்ப அதிகமாவே பேசிட்ட நீ பதிலுக்கு.. பழி வாங்கவும் செஞ்சுட்ட" என்றவன் கைகளில் அவள் முறைத்தபடி இருக்க,

"பேச்சு பேச்சா இருந்தா ஆகாதா? எதுக்கு ரெண்டு நாளா ரூமை தாண்டி வெளில போன நீ?" என்றான்.

"நீங்க மட்டும் என்னவாம்? ப்ரொபோஸ் பண்றவங்களுக்கு எல்லாம் பல்லை காட்டிட்டு நிக்கிறீங்களாம்? நான் கேட்டேனா?" என்றாள்.

"நீ என்ன இவ்வளவு பேசுற திக்ஷி? அவ்வளவு கோபமா என் மேல?" என்றான் இன்னும் அவள் முகமருகே குனிந்து.

"ஆமா! நீங்க தானே சொன்னிங்க நான் நானா இருக்கேன்னு.. தோணுறதை பேசிடறது நல்லது தான?"

"ஆனால் என்னால அப்படி இருக்க முடியலை திக்ஷி.. மூச்சு முட்டுது.. என்கிட்ட பேசின, சண்டை போட்ட, பேசாம கூட இருந்த.. எல்லாம் ஓகே.. ஆனா விட்டுட்டு போனா என்ன அர்த்தம்?" நிஜமாய் அவன் கேட்க, பதில் பேசாமல் மௌனமானாள் திக்ஷி.

"பேசும்மா!" என்றான் அப்போதும் மென்மையாய்.

"இப்படிலாம் பேசாதீங்க.. எனக்கு என்னவோ நான் தப்பு பண்ணின மாதிரி இருக்கு இப்ப.." என்றவள்,

"முதல்ல என்னை விடுங்க!" என்றாள்.

"இப்படி இருந்துட்டே கூட பேசலாம்.. இல்ல ரூம்க்கு தூக்கிட்டு போகவா?"

"ஒன்னும் வேணாம்! என் அம்மா அப்பாவை பேசினீங்க தானே? அந்த கோபத்துல தான்..."

"ம்ம் அந்த கோபத்துல தான் நைட்டு என்னை காய விட்டுட்ட இல்ல?"

"அப்படிலாம் இல்ல.. அதெப்படி என்கிட்ட கேட்காமல் நீங்களா ஒன்னு நினைக்கலாம்னு கோபம்.."

"இன்னும் அந்த கோபம் இருக்குல்ல?"

"இல்லைனு சொல்ல மாட்டேன்!"

"திக்ஷி!" என்றவள் கை அவளிடம் இறுக,

"வலிக்குதுங்க!" என்றாள்.

"ப்ச்!" என்று அவன் பிடியை விட, இப்போது அவளும் விலக்காமல் விலகாமல் இருந்தாள்.

"ப்ரீத்தா ப்ரொபோஸ் பண்ணுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல.. பண்ணின அப்பவும் வேண்டாம்னு சொன்ன அப்புறம் அதை மறந்தும் கூட போய்ட்டேன்"

"நிஜமாவா?"

"சந்தேகமா?"

"இல்ல.. ஒரே ஆபீஸ்.. ப்ரொபோஸ் பண்ணிருக்காங்க.. அழகா இருக்காங்க.. ஏன் ரிஜெக்ட் பண்ணீங்க?"

"அழகா இருந்தா போதுமா?"

"வேற என்ன வேணும்? அறிவும் வேணுமோ?"

"ஹ்ம்! அப்படினா உன்னையும் எனக்கு புடிச்சிருக்காதே?" என்று கூறி கண் சிமிட்ட,

"இந்த லொள்ளு தானே வேணாம்ன்றது.. எனக்கு அறிவு இல்லைனுன்றிங்களா?"

"சும்மா திக்ஷி!" என்றவன் அவள் கழுத்தில் தன் கைகளை மாலையாய் போட்டுக் கொள்ள,

"சரி சொல்லுங்க லவ்வுன்னா உங்களுக்கு என்ன? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்?" என்றாள்.

"தெரியலையே!" என்றவனை திரும்பிப் பார்த்து அவள் முறைக்க,

"வைஃப் அப்படினு நீ வந்த அப்புறம் தான் வாசுவால இப்படியும் இருக்க முடியும்னு எனக்கு சில விஷயங்கள் புரிஞ்சது திக்ஷி.. மே பீ அதை தான் லவ்னு சொல்றாங்க போல" என்ற வாசுவின் பேச்சில் பே என அவள் விழிக்க,

"நிஜமா தான்.. சட்டுனு கோபம் வரும், ரொம்ப பேசமாட்டான் இவ்வளவு தான் வாசுன்னா.. ஆனா இப்போ?" என்று கேட்க,

"இப்ப மட்டும் கிளுகிளுன்னு பேசி சிரிச்சு கொட்டிட்டிங்களாக்கும்?" என்றவளை தன்னோடு இறுக்கி சிரித்தவன்,

"இவ்வளவு ரிலாக்ஸ்டா என்கிட்ட யாரும் பேசினது இல்ல திக்ஷி..உன்னை தவிர! அம்மா கூட.. அது என்னவோ வளர வளர அப்படியே தனியா இருந்துட்டேனோன்னு இப்ப தோணுது"

"தோணுதா? தோணனும்.. அதான் உண்மை.. திக்ஷிகிட்ட நீங்க பேசாதனு சொன்னாலும் வேஸ்ட்.. என் வாய் எல்லாம் அதுக்கு கோ ஆப்பரேட் பண்ணாது"

"அப்ப எதுக்கு கோ ஆப்பரேட் பண்ணுமாம் திக்ஷி?" என்ற ஹஸ்கி வாய்ஸ்ஸில்,

"இவ்ளோ பேசுறது எனக்கே அதிர்ச்சி ஆகுது பா!" என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள்.

"இந்த பொண்ணுனால இவ்வளவு டிப்பரென்ட் வாசு லைஃப்ல வரும்னு தெரியாம போச்சு.. அதுவும் இவ்வளவு சீக்கிரம்.." என்று அவள் கன்னம் கிள்ளி கூற,

"உளறுறீங்க" என்றாள் புரிந்தேன்.

"அது தான் லவ் போல! எனக்கு பேர் எல்லாம் தெரியாது.. ஆனா புடிச்சிருக்கு.. லைஃப் மட்டும் இல்ல இந்த பொண்ணையும்.. இந்த பொண்ணு இல்லைனா ஒரு நாள் கூட தூங்க முடியாதுன்னுற அளவுக்கு பைத்தியம் ஆக வச்சிட்டா"

"ஆஹான்!"

"ஆனா உனக்கு ஒன்னும் இல்லை இல்ல? நீ நிம்மதியா குறட்டை விட்டு உன் அம்மாகிட்ட தூங்கிட்டு இருந்தியே!" என்றவனை பார்த்து சிரித்தவள்,

"அது அம்மாவைப் பார்த்த சந்தோஷம்.." என்றாள்.

"கூடவே உங்க மேல கொஞ்சம் கோபம்.. அதான்!"

"அதான் தூக்கம் வந்துச்சா? ரெண்டு நாளா தூக்கம் இல்லாம என்னை பழி வாங்கிட்ட"

"சாரி! இன்னைக்கு தூங்கிக்கோங்க!" நல்ல பிள்ளையாய் திக்ஷி கூற,

"ப்ச்! இன்னைக்கும் தூக்கம் போய்டும்.." என்றவன் கள்ளப் புன்னகையில் அவன் மார்போடு தன் கைகளை இடிக்க,

"புரிஞ்சிடுச்சு இல்ல?" என்று இன்னும் அதிகமாய் சிரித்து அவள் முகம் செம்மையுறுவதை ரசித்தான்.

"அன்னைக்கு நான் பேசினது தப்பு தான்.. சாரி திக்ஷி!" என்றவன்,

"அன்னைக்கு உன் நிழல் கீழ தெரியவும் தான் உன்கிட்ட பேச மாடிக்கு வந்தேன்.. விஷ்வா அங்க மண்டபத்துல நடந்ததை சொன்னான்.. நீயும் உன் வாயாலையே அது உண்மைனு சொன்ன.. எனக்கு ஷாக் ஆகாதா?" என்று கேட்டு,

"ஏற்கனவே இந்த விஷ்வா பிரச்சனை வேற! ஐஸ்வர்யா வீட்டுல நிச்சயம் பண்ண வர்ராங்கனு தெரிஞ்சதுல இருந்து.. வேணாம்னு சொன்னாலும் விஷ்வா கேட்கலைன்னு கோபம்.. அவனுக்காக அந்த பொண்ணு வீட்டுல போய் பேசவா அது சாரி வருமானு டென்ஷன்.. இப்படி இருக்கும் போதும் இதுவும் சேர்ந்து இன்னும் டென்ஷன் ஆகிடுச்சு.." என்றான்.

"ஆக மொத்தம் எல்லா கோபமும் சேர்த்து என்கிட்ட கொட்டி இருக்கீங்க"

"அப்படினு சொல்ல முடியாது.. உன்கிட்ட தானே என்னால கோபத்தை காட்ட முடியும்? அதனால கூட அதிகமா பேசியிருப்பேன் போல.. ஆனாலும் லாஸ்ட்டா சொன்னியே டைவோர்ஸ்னு.. செம்ம கடுப்பானது அங்க தான்.. இதுல வேற நேத்து மார்னிங் வந்து டிவோர்ஸ் பண்ணுவேன்னு நான் சொன்னதா சொல்ற" என்று கூறி, கன்னத்தை வலுவாய் பற்றி திருப்பி கடிக்க,

"வலிக்கவே இல்லை!" என்றாள் புன்னகைத்து.

"சேட்டை!" என்றவன்,

"கோபம்னா பேசிக்கலாம்.. அடிச்சுக்கலாம்.. என்ன வேணா பண்ணிக்கோ.. ஆனா அந்த ரூமை விட்டு வெளில வந்துடாத திக்ஷி.. எனக்கு சொல்ல தெரியலை.. ஆனா உள்ள நெஞ்சுக்குள்ள குறுகுறுன்னு என்னவோ பண்ணுது.. நீ இல்லைனா அவ்ளோ தான் போல நானு!"

"ஷ்ஷ்!" என்றவள் அவன் உதடுகளில் விரல் வைக்க,

"திக்ஷி பைத்தியம்னு தோணுது இல்ல" என்று விரலில் முத்தம் வைத்து கூற,

"ச்சோ! நீங்க பேசாம இருக்குறது தான் நல்லது போல.. ஷ்ஷ்!" என்றாள் அவன் பேச்சை தாள முடியாமல்.

"அதுக்கும் நீ தான் திக்ஷி வேணும்" என்றவனை அவள் நன்றாய் திரும்பி அணைத்துக் கொள்ள, தனக்குள் கொண்டு வந்திருந்தான் அவளை வாசு.

தான் நினைத்தது என்ன அவன் பேசுவது என்ன என நினைத்தவளுக்கு அவனை மொத்தமாய் புரிந்து போக, எப்படி சாத்தியம் என்று யோசிக்க முடியாமல் அவளை தத்தளிக்க வைத்தது அவன் அன்பு.

தொடரும்..