• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 20

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 20

காரில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான் ப்ரணித். நினைவு முழுதும் அலுவலகத்தில் அவளை அறிமுகம் செய்ய போகும் தருணத்தில் தான் நின்றது.

சில விஷயங்கள் அவள் பேசும் போது இது தானே எதார்த்தம் என்று புரிந்தாலும் தனக்கு புரிந்ததை மற்றவர்களும் புரிந்து கொள்வார்களா என்று தான் எண்ண வைத்தது மனம்.

அவளின் இயல்பை புரிந்து கொண்ட ப்ரணித்திற்கு இத்தனை வருடம் தன்னுடன் இருந்த இயல்பை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

அலுவலகத்தில் கூட நிறைய பெண்களிடம் இவன் பேசி இருக்கிறானே! அந்த மூன்று வார்த்தையை வாங்கியும் சில பேரிடம் பெற்றும் என மறுத்தவை மறுக்கப்ப்பட்டவை எல்லாம் நியாபகம் வர, கல்யாணியின் பேச்சு மட்டும் ஒரு குறையாய் தோன்றியது அவனிற்கு.

"இதற்கு தானா?" என்ற பார்வை யாரிடமாவது இருந்து வந்தால் நிச்சயம் இவன் தன்னிலை இழப்பான் என்றே தோன்றியது.

"என்ன அமைதியா வாறிங்க? இன்னும் கோவம் போவலயாக்கும்?" என்று கல்யாணி கேட்க,

'இந்த பேச்சு மட்டும் தான் கல்யாணி என்னை டிஸ்டர்ப் பண்ணுது.. அதுவும் என்கிட்ட ஓகே! ஆனா அங்கே? ' என தனக்குள் ஓடுவதை அவளிடம் கூற முடியவில்லை.

'அன்றே ஒரு வார்த்தை கூறினாலே' என்று யோசித்தவன் 'மட்டந்தட்டி.. ஹ்ம் இப்ப சொன்னா கூட புரியாது.. மறுபடியும் அப்படி நினைச்சுட்டா' என்று நினைத்தவன் எதுவும் கூறவில்லை.

"என்ன பதிலக் காணோம்?" கல்யாணி மீண்டும் கேட்க,

"ஹ்ம்! இல்ல பிரண்ட்ஸ் யாரை எல்லாம் இன்வைட் பண்ணனும்னு தான் யோசிச்சுட்டு வந்தேன்" என்றான் அவளை திரும்பிப் பார்த்து.

காட்டன் புடவை, தளர பின்னிய கூந்தல், குட்டியாய் வட்டமாய் பொட்டு என இயற்கை அழகாய் இருந்தாள். அதில் எந்த குறையும் அவனால் சொல்ல முடியாது. அவனுக்கு இது பிடித்தும் இருந்தது.

"சரி தேன்! வண்டில ஆபீஸ்க்கு போறோமா இல்ல மேலோகத்துக்கு போறோமா? இந்த பார்வ பாக்கிங்க?" என்று கல்யாணி கேட்ட பின் தான் சிரித்தபடி சாலையை கவனித்தான்.

"என்னம்போ மண்டையில ஓடுது.. சொல்ல தான்? மாட்டுக்கிங்க" நேராய் அவள் கேட்டும்,

"அதெல்லாம் ஒன்னும் இல்லை கல்யாணி!" என்றான்.

'கூறினால் அடுத்த சண்டை நிச்சயம் வரும். தான் கோபம் கொள்வோமா தெரியாது.. அவளுக்கு நிச்சயம் இந்த பேச்சு கோபத்தை கொடுக்கும்.. பின் அவள் திருமணத்தை நிறுத்த முயன்றதை பேசினால் தனக்குமே கோபம் வரலாம்..வேண்டாம்' என்று முதல் முறையாய் அவளளவில் இருந்து ஒரு விஷயத்தை யோசித்தான்.. அவள் வருந்த வேண்டாம் என்றும் யோசித்தான்.

"சரி போங்க! எனக்கென்ன?" என்றவள் சாலையை வெறித்தாள்.

அருண், விவேக், மது மூவரின் வீட்டிலும் நேராய் சென்று அழைத்த ப்ரணித் அடுத்து அலுவலகத்திற்கு அழைத்து வந்தான் கல்யாணியை.

"இங்கயா வேலை பாக்கிங்க?" இறங்கி சுற்றிலும் பார்த்துக் கேட்டாள்.

"ம்ம் ஆமா! அந்த பில்டிங் தான்.. ஃபோர்த் ஃப்ளோர்!.. வா!" என்று கைப்பிடித்து அழைக்க, இறங்கி நடந்தாள்.

"ஹ்ம்! நல்லா தான் இருக்கு!" என்று சுற்றிலும் பார்த்தபடி அவள் கூற, ப்ரணித் தொண்டைக்குள் தான் ஏதோ சிக்கிய உணர்வு.

"ஹே கல்யாணி!" என்ற சத்தத்தில் இருவரும் திரும்ப, அழைத்தது மது.

"ஹாய்!" என்றவளிடம்,

"எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரிக்க,

"என்ன டா ஆபீஸ் பக்கம்?" என்றாள் ப்ரணித்திடம்.

"நாளைக்கு ரிசெப்ஸன் மது.. சிம்பிளா தான்.. அதான் நம்ம டீமை மட்டும் இன்வைட் பண்ணலாம்னு" ப்ரணித் கூற,

"உங்க அம்மா அப்பாவை பார்த்துட்டி தான் வர்றோம்!" என்றாள் கல்யாணி. அவள் பேசியதை கவனிக்கவில்லை ப்ரணித்.

"என்ன ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்?" என்ற மது,

"அப்ப என் புருஷனை கூப்பிடல? அப்படி தானே?" என்று கேட்கவும் கல்யாணி சிரிக்க,

"உன் ஆத்துக்காரர் பெங்களூர் போயிருக்கார்னு தெரியும் டி.. போன் பண்ணிட்டு தான் உன் வீட்டுக்கு போனதே!" என்றான் ப்ரணித்.

பேசியபடியே அவர்கள் தளத்தில் வந்து இறங்க, வெகுவாய் சூழ்ந்து கொண்டனர் அவன் நண்பர்கள் குழு.

நல விசாரிப்புகள், வாழ்த்துக்கள் என முடியும் வரை ப்ரணித்திடம் ஒவ்வொருவரும் பேசும் வரை கல்யாணி பார்த்தபடி இருந்தாள்.

"சோ! கைஸ்.. திஸ் இஸ் கல்யாணி! மை கேர்ள்!" என்று ப்ரணித் அவன் டீம் என உள்ளவர்களிடம் கூற, சுற்றி இருந்த கூட்டம் அவளிடமும் வாழ்த்துக்களை தெளித்தது.

"கல்யாணத்துக்கு எல்லாரையும் இன்வைட் பண்ண முடியல.. வெரி சாரி! நாளைக்கு சின்னதா பார்ட்டி அர்ரேஞ் பண்ணி இருக்கேன்.. எல்லாரும் கண்டிப்பா வரணும்" என்று கூற, அனைவருமே சம்மதித்தனர்.

ப்ரணித் நண்பர்களோடு அவன் உயர் அதிகாரி ஒருவரும் வந்து விடவே அவர்களோடு அவன் பேசியபடி இருக்க, கல்யாணியை மதுவுடன் சில பெண்களும் பிடித்துக் கொண்டனர்.

"அப்புறம் கல்யாணி! ப்ரணி ஓவரா பிகு பண்ணிப்பானே! உன்கிட்ட எப்படி சாஃப்டா இருக்கானா இல்ல அங்கேயும் ரஃப் தானா?" என ஒரு பெண் கேட்க,

"கேள்வி பட்டோம் நீங்க வில்லேஜ்னு.. எப்படி ப்ரணி மேரேஜ்க்கு சம்மதம் சொன்னான்? எங்ககிட்ட எல்லாம் அவ்வளவு சீன் போட்டான்?" என்று கேட்டாள் இன்னொரு பெண்.

"நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்று ஒருத்தியின் கேள்விக்கு,

"படிச்சிருக்காங்களான்ணு கேளு டி" என்றாள் இன்னோர் பெண்.

வாழ்த்துக்களோடு சிலர் அமைதியாய் விலகி நின்று கொண்டனர்.

"ஹே போதும் போதும்! ரொம்ப பண்ணாதீங்க.. நீங்க பேச வேண்டியதை ப்ரணிகிட்ட பேசிக்கோங்க" என்று மது அவர்களை தடுக்க,

இங்கே பார்த்தபடி பேசிக் கொண்டிருந்த ப்ரணித் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு வந்துவிட்டான்.

"என்னாச்சு?" என்று அவன் கேட்கவுமே,

"ஒன்னும் இல்லைங்க.. நீங்க சாஃப்டா ரஃபானு அவங்க கேட்டாங்க.. அப்புறம் கிராமம் தானே எப்படி கல்யாணத்துக்கு ஓகே சொன்னிங்கனு இவங்களுக்கு தெரியணுமாம்.. அப்புறம் நீங்க என்ன கேட்டிங்க?" என்று கிண்டல் செய்த பெண்களை மட்டும் அப்படியே கூறினாள் கல்யாணி.

மதுவே வாயில் கைவைத்து விட ப்ரணித் பேசும் முன்,

"இவர் என்னோட ஹஸ்பண்ட்! உங்ககிட்ட இருக்குற மாதிரி ஏன் என்கிட்ட நடந்துக்கணும்? அவர் பிகு பண்ணினா நீங்க அதுக்கேத்த மாதிரி தானே இருந்திருக்கணும்? கிராமம்னா இவங்களுக்கு புடிக்காதுன்னு உங்ககிட்ட வந்து சொன்னாரா? ஏங்க! சொன்னிங்களா?" என்று கேட்க,

கல்யாணியின் இந்த பேச்சில் ப்ரணித்தே ஸ்தம்பித்து தான் போயிருந்தான்.

"அவர்கிட்ட பேச முடியாததை எல்லாம் முதல் நாள் பாக்குறோம்ன்ற மன்னேர்ஸே இல்லாம என்கிட்ட பேசறீங்க! பரவாயில்ல என் வீட்டுக்காரர்க்கு யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரிஞ்சி தான் நடந்திருக்கார்.." என்றவள்,

"நான் படிச்சிருக்கேனா படிக்கலையா? என்னை படிக்க வைக்கணுமா வேலைக்கு அனுப்பனுமான்ணு எல்லாம் பார்த்துக்க இவர், இவரோட, அம்மா, அப்பான்னு நிறைய பேர் இருக்காங்க.. நாளைக்கு முடிஞ்சா வாங்க.. அவங்களை எல்லாம் மீட் பண்ணலாம்.. என்ன மது?" என்று கேட்க,

"ஹான்!" என்று விழித்தாள் மது.

"இல்ல நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?" கல்யாணி கேட்க,

"ச்சே ச்சே! இவங்களுக்கு இது தான் சரியான பதில்.. பட் ஐ டிட்ண்ட் எக்ஸ்பெக்ட் திஸ் பிரம் யூ! தாட்ஸ் ஒன்லி" என்றவள் அவள் முன் இருந்த பெண்களைப் பார்த்து முறைக்கவும் தவறவில்லை.

"நாங்க கிளம்புறோம் மது! அவசியம் நீங்க வரணும்" என அனைவர் முன்பாகவுமே கூறிவிட்டு ப்ரணித்தைப் பார்க்க, இன்னுமே அவன் அதிலிருந்து மீளாமல் தான் இருந்தான்.

"ப்ரணி!" என்று சத்தமாய் அழைத்து கையில் ஒரு அடியை மது வைக்க, ஸ் என்று தன்னுணர்வு வந்த பொழுது தனியாய் வந்திருந்தனர் அருண், விவேக், மது என.

"என்ன டா கனா கண்டுட்டு இருக்க?" என்று அருண் கேட்க,

"ஆமா! இவன் உங்க ஸ்லாங்கை கிண்டல் பண்ணினானா? இங்க அப்படி பேச கூடாதுன்ணு சொல்லி கூட்டிட்டு வந்தானா?" என்று மது கேட்க,

"நான் அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லல" என்று ப்ரணித் கூற,

"அவங்க எதுவும் சொல்லல.. இது அவங்க வேலை பாக்குற இடம்.. அதுக்கான மரியாதை வேணும்ல.. அதனால நானா தான் மாத்திகிட்டேன்.. நீங்க புரிஞ்ச மாதிரி எல்லாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க இல்ல?" என்று கல்யாணி பதில் கூற,

"அய்யோ! அழகு டா அம்மு நீங்க!" என கொஞ்சிய மது,

"பார்த்துக்கோ டா!" என்று ப்ரணியிடமும் கூறினாள்.

இன்னும் ப்ராமிப்பாய் தான் உணர்ந்து கொண்டு இருந்தான் ப்ரணித் கல்யாணியை. எவ்வளவு முதிர்ந்த எண்ணம்.. இவளை என்னவெல்லாம் நினைத்து விட்டோம் என்று அவன் மனமே அவனை எள்ளியது.

"சரி டா நாங்க கிளம்புறோம்.. நாளைக்கு கண்டிப்பா வந்துடுங்க" என மீண்டும் ஒருமுறை கூறிவிட்டு விடைபெற்று லிப்ட்டில் ஏறி கீழே இறங்கி இருக்க,

கல்யாணி ஏதோ கூற வரவும், "ஒரு நிமிஷம் கல்யாணி!" என்ற ப்ரணித் அவளைக் கைப்பிடித்து கிட்டத்தட்ட இழுத்து சென்று நின்றான் ஒரு பெண் முன்.

"ஹேய் ஹாய்!" என்ற ப்ரணித் திடீர் என முன் வந்து நின்றதும் ஹரிணி பதறி நிமிர,

"திஸ் இஸ் மை வைஃப்.." என்றான்.

"ஹாய்!" என்ற கல்யாணிக்கு பதில் கூறாமல் அவள் பார்க்க,

"நாளைக்கு ரிசெப்ஷன் இருக்கு.. அதான் பிரண்ட்ஸ்ஸை இன்வைட் பண்ணலாம்னு வந்தேன்" என்றவன்,

"போலாம்!" என்று கல்யாணியின் கைகளைப் பிடித்து மீண்டும் அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.

"அய்யோ கல்யாணி!" என்று காரில் ஏறியதும் அவள் கண்ணங்களைப் பிடித்து வழித்து கைகளால் முத்தமிட்டவன்,

"தெறிக்க விட்டுட்ட போ!" என்றான் வண்டியை இயக்கி.

"அதெல்லாம் இருக்கட்டும்.. இதுவும் நீங்க காதலிச்ச பொன்ணுல ஒண்ணாக்கும்?" காரில் ஏறி அமர்ந்ததும் கல்யாணி கேட்க,

"ஹி ஹி!" என்று சிரித்தவன்,

"ச்ச! ச்ச! இவளுக்கு அவ்வளவு சீன்லாம் இல்ல" என்றதும், கல்யாணி பார்க்க,

"ஆனா ஐ லவ் யூ சொன்னேன்?" என்றவனை நன்றாய் அவன் பக்கம் திரும்பி அமர்ந்து முறைத்தாள்.

"முறைக்காத கல்யாணி! நான் தான் சொன்னேனே உன்கிட்ட! அவளே வாண்டட்டா கூட்டிட்டு போய் என்னை ரொம்பவே இன்ஸல்ட் பண்ணிட்டா! அப்புறம் என்கிட்ட நல்லா வாங்கியும் கட்டிக்கிட்டா.. உனக்கு தெரியணும்னு தோணுச்சு.. அதான் காட்டினேன்.. மத்தபடி அவ அவ்ளோ ஒர்த் எல்லாம் இல்ல" என்றான் சாலையில் கவனம் வைத்து.

"என்னமோ சொல்லுதிய.. நானும் கேக்குத்தேன்!" என்றவள்,

"என்ன இவ மறுவடி இப்படி பேசுதான்ணு தான பாக்குத்திங்க?" என்றாள் தன்னை இரு நொடி அதிகமாய் பார்த்த கணவனைப் பார்த்து.

"நோ வே!" என்று சிரித்தவன்,

"நீ இப்படி பேசுறது தான் இப்ப எனக்கு பிடிச்சிருக்கு" என்றான்.

"அதிசயம் தேன்!" என்றவள் அவன் அலுவலகம் பற்றி ஒவ்வொன்றாய் கேட்டபடி வர, உள்ளே ஊற்றெடுத்த மகிழ்ச்சியுடன் அவளுக்கு பதில் கூறி வந்தான் ப்ரணித்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அட்ரா சக்கை அட்ரா சக்கை....
அடடா.....அழகு கல்யாணி
அசத்திட்ட போ.....
ஆள் அவுட்..... நம்ம ஆளும்.....
I love u chellam .... 🤩🤩💐💐
 
  • Love
Reactions: Rithi

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அடடடடா கல்யாணி கலக்குறம்மா, எடத்துக்கு தோதா பிள்ள பேசுது இருந்தாலும் கிராமத்து பாஷை தான் செம 😍😍😍😍😍😍😍😍😍😄😍😍
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அட்ரா சக்கை அட்ரா சக்கை....
அடடா.....அழகு கல்யாணி
அசத்திட்ட போ.....
ஆள் அவுட்..... நம்ம ஆளும்.....
I love u chellam .... 🤩🤩💐💐
🫣🫣🫣thank u sis