அத்தியாயம் 21
ப்ரணித் கல்யாணி இருவரும் கல்யாணியின் மாமா வீரனின் வீட்டிற்கு சென்று அவர்களையும் வரவேற்றுவிட்டு வீட்டிற்கு கிளம்பி வர இரவு ஏழு மணியை நெருங்கி இருந்தது.
"என்னத்தா! எல்லாத்தையும் அழைச்சாச்சா?" வடிவு கேட்க,
"ஆச்சி அப்பத்தா! மாமா மட்டும் கொஞ்சம் நேரம் கழிச்சு வருவாங்க போல... கண்ணகி அத்த ரெஜினா, தினேசு கூட முன்னயே வந்திருதேன்னு சொன்னாங்க" என்றாள்.
"சரி ம்மா! நீ போய் ட்ரெஸ் மாத்திட்டு முகம் கழுவிட்டு வா.." என்று ராணி கூறவும் மேலே சென்றாள் கல்யாணி.
"அப்பா நம்ம சொந்தக்காரங்க எல்லாத்தையும் கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டாங்க ப்ரணி.. வேண்டியவங்கன்னு கொஞ்சமா தான் சொல்லி இருக்கோம்.." என்று ராணி கூறவும்,
"சரி ம்மா! அதுவும் நல்லது தான்.. நானும் பிரன்ஸ் அப்புறம் ஆபீஸ்லனு கொஞ்சமா தான் சொல்லி இருக்கேன்" என்றான்.
"ஸ்ரே அவனோட பிரண்ட்ஸ் பத்து பேர் வருவாங்கன்னு சொன்னான் டா.. கேட்டுக்கோ.. அப்பா கூட பேசிட்டு டின்னர் எப்படி பண்ணலாம்னு கேட்டுக்கோ.. டெகரேஷன் எல்லாம் சொல்லியாச்சு.. கார்டன்ல தானே மத்தியமா வந்துடுவாங்க" என்ற ராணி,
"வேற ஏதாவது மறந்திருக்கேனா அன்னம்?" என்று கேட்க,
"இல்ல அண்ணி! உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே செஞ்சிருங்க" என்று விட்டார் அவரும்.
"ஆமா த்தா! கல்யாணத்துக்கு நாங்க உங்களை கேக்காம என்னலாமோ பண்ணினோம்.. உங்களுக்கு புடிச்சதானு கேட்டமா என்ன?" என்று வடிவு கூற,
"அதெல்லாம் அரசன் அண்ணே ஒவ்வொண்ணுக்கும் ப்ரணி அப்பாக்கு போன் போட்டு சொல்லிட்டு தான் பண்ணினார்.. ஏக சந்தோசம் அவருக்கு அதுல" என்று கூற, வடிவு அன்னம் இருவருக்குமே ஆச்சர்யம் தான்.
"அம்புட்டு கூறு இருந்துதாக்கும் அவனுக்கு?" என்று பேசி நேரம் கழிய, அனைவரும் ஒன்றாய் சாப்பிட அமர்ந்தனர்.
"பியூட்டி! உங்களுக்கு சமைக்க தெரியுமா?" ஸ்ரேயாஸ் கேட்க,
"நீ மட்டும் என் புருசன் இருக்கயில இத கேட்ருக்கணும்.. மனுசன் என்னைய தலையில தூக்கி உக்காத்தி வச்சுப்பாரு.. அம்புட்டு ரசிச்சி சாப்பிடுவாரு நான் செஞ்சத.." என்றார் வடிவும் மலர்ந்த நினைவுகளோடு.
"இப்ப தான் தெரியுது தாத்தா ஏன் சீக்கிரமே டிக்கெட் வாங்கினார்னு.. மனுஷன் உங்ககிட்ட சொல்ல முடியாம தவிச்சே போய் சேர்ந்திருப்பாரு!" என்று கூற,
"இங்கன பாரு அவரை ஒரு வார்த்த சொன்னயாக்கும்.. குரவல காணாம பண்ணிருவேன்" என்று வடிவு மிரட்ட,
"ரவுடி பியூட்டியா நீங்க?" என்றான் ஸ்ரேயாஸ்.
"டேய்! சும்மா இரு டா" என்ற சரவணன்,
"நேத்து நீ கல்யாணி சமைச்சதை சாப்பிட மிஸ் பண்ணிட்ட டா ப்ரணி.. செம்ம டேஸ்ட் தெரியுமா?" என்று கூற,
"நைட்டுக்கு எனக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுட்டு மிஸ் பண்ணிட்டேனாம்.. ஏன் தனியா எடுத்து வைக்க கூடாதா?" என்றான் ப்ரணித் கல்யாணியையும் ஓரக் கண்ணால் பார்த்து.
"அதுக்கென்ன! இனிமே அவ தான பாத்துக்கிட போறா.. எல்லாமே தெரியும் அவளுக்கு.. நாளோண்ணுக்கும் தினுசு தினுசா பண்ணி குடுத்துட்டா போவுது.. என்ன த்தா!" என்றார் வடிவு.
"அது சரி!" என்று விட்டான் ப்ரணித்தும்.
"டிரஸ் எல்லாம் பார்த்தியா கல்யாணி? உனக்கு புடிச்சிருக்கா?" என்று ராணி கேட்க,
"நல்லாருக்கு ராணி ம்மா.. காலையில தான் பாத்தேன்" என்றாள்.
சாப்பிட்ட பின் சரவணன் உடன் அரசன் அவர்கள் அறைக்கு தூங்க சென்றுவிட, ஸ்ரேயாஸும் கிளம்பிவிட்டான்.
ராணி கல்யாணியிடம் எதுவோ கூற வர, அதற்குள் "ஆச்சி!" என அழைத்திருந்தான் ப்ரணித்
"சொல்லு யா பரணி!" என்று வடிவு கேட்கவும்,
இரு கைகளின் பெரு விரலை மட்டும் உயர்த்தி தன் அறையைக் காட்டியவன் "இப்போ நான் போலாம் தானே?" என்று கேட்க,
"யாத்தே!" என்று நாடியில் கை வைத்த வடிவிற்கு தான் அத்தனை வெட்கம்.
அன்னம் கூட வாய் மூடி சிரித்தபடி திரும்பிக் கொள்ள,
"டேய்! பேசாம போ டா!" என்று அனுப்பி வைத்தார் ராணி. சிரித்தபடி சென்றிருந்தான் ப்ரணித்தும்.
"விவஸ்த கெட்ட மனுசன்.. எப்ப பாரு ஏட்டிக்கு போட்டியா எதையாவது செஞ்சு வைக்கது" என்று தனியே ப்ரணித்தை மனதில் திட்டிக் கொண்டாள் கல்யாணி.
"கல்யாணி! சாமி கும்பிட்டு இந்த பாலையும் கொண்டு போ!" என்று ராணி கூறவும், சரி என தலையசைத்தவள் கூறியபடியே செய்தாள்.
'அன்னைக்கு மாதிரி எதுவும் பேசி வாயைக் குடுத்துட கூடாது டா ப்ரணி!" என தனக்குள் சொல்லிக் கொண்ட ப்ரணித்திற்கு கல்யாணி மேலான ஆசையும் காதலுமே கொஞ்சம் கொஞ்சமாய் இருந்தது இந்த நாளில் அதிகமாய் வளர்ந்திருந்தது.
மாலையில் நண்பர்கள் முன் எப்படி நிற்க போகின்றோம் என்பதை போன்ற மனநிலையில் இருந்தவனை அவள் பேச்சில் மட்டும் இல்லாமல் அங்கிருந்த பெண்களிடம் பதிலடி கொடுத்து இன்னமும் உயரத்திற்கு சென்றிருந்தாள் அவன் மனதில்.
அவள் கூறாமலே அவன் உணர்ந்த இன்னொன்று அவன் முகத்தில் மாறுதல் மூலம் தான் அவன் பிரச்சனையை கல்யாணி கண்டு அலுவலகத்தில் அவள் நடந்து கொண்ட விதமும் என்று.
பாலுடன் உள்ளே வந்தவளைப் பார்த்து ப்ரணித் சிரிக்க, வந்ததும் ஆரம்பித்து வைத்தாள் கல்யாணி.
"என்ன பேச்சு இது அப்பத்தாகிட்ட? கூறு வேணாம்?" அவள் கேட்க,
"உங்க அப்பத்தாக்கு மட்டும் இருந்ததா? உன் ரூம் வாசல்ல தூங்கிச்சு தெரியுமா?" என்றான் அவனும்.
"அது வயசு என்ன.. உங்க வயசு என்ன?.. என்னத்த படிச்சீங்களோ!"
"ஆமா ஆமா! இதை தான் சொல்லி தந்தாங்க.. கல்யாணம் ஆகி நாலு நாள் ஆச்சு.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணின எக்ஸ்பிரஸன் இன்னும் உன்கிட்ட நான் பார்க்கல" என்றான் சிரிப்புடன்.
"என்னத்த எதிர்பாத்திங்கன்னு சொன்னா தான தெரியும்?" என்றாள் அவனுக்கு ஈடாய்.
"அது வர்றது எல்லாம் டவுட் தான்" என்றவன்,
"ஆமா எப்படி கண்டுபிடிச்ச?" என்றான்.
"என்னத்த கண்டுபிடிக்காங்க?" என்றாள் அவளும்.
"உண்மைய சொல்லு.. கார்ல என்னை கேட்டுட்டே இருந்த என்ன பிரச்சனைனு.. அதை நீ ஸ்மெல் பண்ணிட்ட கரெக்ட்டா?" என்றான்.
"பெரிய கண்டுபிடிப்பு தேன்.. முகரைக்கட்டைய பாத்தாலே தெரியுத.. எப்படியும் சொல்லுவீங்க நல்லா நாலு கேள்வி உங்கள கேக்கணுமுன்னு தான் நினச்சேன்.. நீங்க கேக்கவே இல்ல.. அதான்" என்றாள்.
"ஆனா எப்படி?" ப்ரணித் கேட்க,
"என்ன எப்படி? கல்யாணம் ஆன அன்னைக்கே இப்படி தான் பேசுவியா என்னைய மாதிலாம் பேச தெரியாதானு கேட்டவரு தான நீங்க? உங்க இடத்துக்கு என்னைய கூட்டிட்டு போனா உங்க நினைப்பு அதுவா தான இருக்கும்?" என்றாள்.
மீண்டும் அள்ளிக் கொள்ள தோன்றும் பதில் அவளிடம் இருந்து.
"கோவம் வந்துது தான்.. ஆனா நான் சொன்ன மாதி உங்களுக்கு அங்க மரியாதை வேணுமுல்ல? நான் பேசிட்டு வந்துருவேன்.. எல்லா ஊர்லயுமே நேரா மூஞ்சப் பாத்து பேசுதவன விட முதுகுக்கு பின்னால பேசுதவன் தான் அதிகம்.. யோசிச்சதும் இது தான் சரினு பட்டது.. வேற ஒன்னும் இல்ல" என்றாள்.
"எப்படி கல்யாணி இவ்வளவு யோசிக்குற ஒவ்வொரு விஷயத்திலேயும்?" அவ்வளவு ஆச்சார்யமாய் இருந்தது ப்ரணித்திற்கு.
"ஒவ்வொன்னும் யோசிச்சி தான் பண்ணனும்.. நமக்கு மட்டும் இல்லாம நமக்கு எதிர்ல இருக்கவங்களுக்கும் சேத்து யோசிக்கணும்.. முதல்ல அத பழகிக்கங்க.. கார்ல எனக்கு கோவம் வந்துது நீங்க இப்படி நினைக்கிங்கனு.. பொறவு தான் யோசிச்சேன்.. நீங்க நினைக்கதும் சரி தானனு தோணுனதும் தான் அமைதியானேன்.. நீங்களும் நான் என்னவும் நினைச்சுக்குவேன்னு தான எனட்ட இப்படி இரு அப்படி இருனு சொல்லல? அப்போ எனக்காவ தான நீங்க யோசிச்சி இருக்கிங்க?" என்றாள்.
"உங்க ஆஃபீஸ்ல பேசுன மாதி தினமும் உங்ககிட்டயும் பேச முடியும்.. ஆனா அது நிஜமா இருக்காது.. என்னவோ நடிச்சுக்குட்டு இருக்க மாதி இருக்கும்.. இது தான் நான்.. தெரிஞ்சி தான கல்யாணம் பண்ணுனோம்.. பொறவு என்னத்துக்கு மாத்திக்கணும்.. பின்னாடி அப்படி ஒரு நிலைமை வந்தா அப்போ பாத்துக்குவோம்.. நான் இப்படி தான் இருப்பேன்.. அது தான் வாழ்க்கைக்கு ஒத்து வரும்" என்றாள் நேராய் அவனிடம்.
"எனக்கும் அது லேட்டா தான் புரிஞ்சது கல்யாணி! லேட்டான்னா ரொம்ப லேட்டா.. இன்னைக்கு ஆபீஸ்ல எல்லாம் பேசி முடிச்ச அப்புறம்.. இப்ப எனக்கு இந்த ஸ்லாங் ரொம்ப ரொம்ப புடிச்சி போச்சு.. அதுவும் நீ பேசுறது இன்னும் ஸ்பெஷலா இருக்கு" என்றான் முகத்தில் அத்தனை வெளிச்சதுடன்.
"சரி தேன்! பேச்செல்லாம் ஒரு மாதி தான் இருக்கு.. நம்புத மாதி தான் இல்ல.. நீ பேசுததே எனக்கு புரிய மாட்டுக்குன்னு எனட்ட சொன்ன ஆளு நீங்க தான? அதுவுஞ் சொல்லி நாலு நாள் தான் ஆவுது" என்றாள் கிண்டலுடன்.
"ஆமால்ல! ஆனா நாலு நாள்ல நீ எவ்வளவு என்னை மாத்தி இருக்கனு உனக்கு தெரியுமா?" என்றான்.
"யாரு நானு? நான் மாத்தி நீங்க மாறிட்டிங்க? இதையும் நான் நம்பனும்.. பட்டணத்துல நிறைய பொய்யா பேசுவாங்கன்னு அப்பத்தா சொல்லி தான் அனுப்புனுது" என்றாள்.
"ம்ம்ம் இல்லைனு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்!" என்றவன்,
"எவ்வளவு ஈசியா எல்லாம் ஹாண்ட்ல் பண்ற? நிஜமா இந்த மாதிரி ஒரு பொண்ணு தான் எனக்கு வேணும்.. அதான் கடவுள் உன்னை எனக்குன்னு அனுப்பி இருக்கார் போல" என்றான் அவள் பேசிய ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து.
"அப்படியே கனா கண்டுட்டு இருங்க.. நான் தூங்குதேன்" என்றவள் கட்டிலுக்கு செல்ல போக,
"தூங்க தான் பால் கொண்டு வந்தியா கல்யாணி?" என்றான் கள்ளப் புன்னகையோடு.
"ராணி ம்மா தான் தந்து வுட்டாங்க.. வேணுமுன்னா குடிச்சிட்டு மல்லாந்துக்கோங்க" என்றவளுக்கு அவன் பாஷை புரியாமல் இல்லை.
"சரி உன்னை மாதிரி நேராவே சொல்றேன்.." என்றவன் கல்யாணியை கைப்பிடித்து நிறுத்தி அவள் கண்களைப் பார்க்க, அவள் கைகளின் நடுக்கத்தை உணர்ந்து கொண்டான்.
"ரொம்ப வீக் தான் இல்ல?" என்று சிரித்தவன், அவள் குனிந்து கொள்ளவும்,
"ஹப்பா! இதை தான் இந்த வெட்கத்தை தான் உன்கிட்ட பார்க்கவே முடியாதோன்னு நினச்சேன்" என்றவன்,
"இன்னைக்கு எனக்கு ஃபுல்ஃபில்லா தோணுது கல்யாணி! மே ஐ..." என்றவன் குரலும் கைகளும் மிச்சத்தை அவளுக்கு கூற, அவளின் மௌனமே அவனுக்கு போதுமானதாய் இருந்தது தன்னவளை மிச்சமின்றி எடுத்துக் கொள்ள.
புரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் இருவருக்குள்ளும் அதிகமாய் இருந்த போதும், இந்த திருமண பந்தம் ஒன்றே போதுமானதாய் இருந்தது இருவருள்ளும் காதலை விதைக்க.
தொடரும்..