• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 22

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 22

"எப்ப எழுந்த நீ?" தலையணையை இருக் கைகளாலும் வாரி எடுத்து நெஞ்சோடு வைத்துக் கொண்டு பிரணித் கேட்க,

"அஞ்சு மணி இருக்கும்.. குளிச்சிட்டு கீழ போனேன்.. யாரும் எந்திக்கல போல.. காபி போட்டு வச்சாலும் ஆறிரும்.. அதான் மேல வந்து தலைய துவட்டுனேன்.." என்றவள் தலையை வாற ஆரம்பித்தாள்.

"கலங்காத்தால நீ காபி போட வரலன்னு உன்னை கேட்டாங்களா?" ப்ரணித் அவளையே பார்த்தவாறு இருந்தவன் கேட்க,

"ஆத்தா அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துக்கும்.. அதான் போனேன்.. இல்லின்னா அதுக்கும் வையும்.." என்றாள்.

"இன்னைக்கு யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க.. அதுவும் நீ போனதை பாத்திருந்தா தான் திட்டி இருப்பாங்க" என்றான் கிண்டலாய்.

கூடவே அவன் முகம் பார்க்காமல் பேசுபவளை சீண்ட வேண்டி.

"வாய மூடுங்க! எப்போ பாரு எதையாவது சொல்லிக்கிட்டு" என்றவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று முகத்தின் செம்மையை மறைத்தாள் அவனிடம்.

"வாய் பேசியே எல்லாத்தையும் மறைக்க முடியுமா கல்யாணி" என்று சிரித்தவன் அருகில் ஓடியவள்,

"செத்தே பேசாம தான் இருங்களேன்!" என்று கெஞ்சவே செய்ய, சத்தமாய் சிரித்தான் ப்ரணித்.

"நான் கீழயே இருந்துருக்கணும்.. அவங்க திட்டுதது எவ்வளவோ பரவால்ல உங்களுக்கு" என்றவளை நகர விடாமல் கைப்பிடிக்க, அமர்ந்துவிட்டாள் அவனருகில்.

"நான் குளிச்சி கிளம்பிட்டேன்.. அங்கேயே இருக்கனும்" ஆள்காட்டி விரலை நீட்டி கல்யாணி மிரட்டிட,

"ஏன் கல்யாணி! ஒரு நாளைக்கு ஒரு வாட்டி தான் குளிக்கணும்னு உங்க கிராமத்துல சொல்லி இருக்காங்களா?" என்று முக்கியமாய் கேட்க,

"ஏட்டிக்கு போட்டியா பேசுதவங்க வாயில் போடணுமுன்னு சொல்லி இருக்காங்க" என்றவள் முடிக்கும் முன் அவள் மடியில் விழுந்தவன்,

"நான்லாம் தர மாட்டேன்னு சொல்லவே மாட்டேன்" என்று கூற,

"உங்களோட..!" என்றவளுக்கு இந்த ப்ரணித்தை அதிகமாய் பிடித்தது.

தான் வேண்டாம் என்று கூறியது போல அவன் தன்னை கூற பல காரணங்கள் கொட்டி இருக்கிறதே!

படிக்காத பெண், கிராமம் என எந்த விதத்தில் தகுதி? போதாதற்கு முதல் நாளே அவனிடம் எதிர்த்து பேசிய வார்த்தைகள்.

படித்தவன், அழகானவன், செல்வம் மிகுந்தவன் என எந்த விகிதத்திலும் அவனிற்கு குறைவில்லை என்று நினைத்த கல்யாணிக்கு அப்பொழுது தான் ஒரு சந்தேகம் வந்தது.

மடியில் வைத்திருந்த தலையை கோதிக் கொண்டிருந்தவள் அதை நிறுத்தி விட, எங்கோ பார்த்து எதையோ யோசித்த வண்ணம் இருந்தவளை ரசித்து பார்த்திருந்தான் ப்ரணித்.

"என்னம்மா?" கனிவாய் அவன் கேட்க,

"ஆமா நீங்க எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்க? என் போட்டா கூட பாக்கல தான.. பாக்கலன்னு தான் ராணி ம்மா சொன்னாங்க.." என்று கேட்கவும் சிரித்தவன்,

"ஏன் இவ்வளவு சீக்கிரம் கேட்டுட்ட? இன்னும் ஒரு பத்து மாசத்துக்கு அப்புறம் கேட்ருக்கலாம் இல்ல?" என்று கேட்டான்.

"விளையாட்ட வுட்டு சொல்லுங்க.. புடிக்காம பண்ணுன மாதி நீங்க பேசி தெரியல.. நான் பேசுதத தான் ஒரு மாதி பாத்திங்க.. கிண்டல் பண்ணியும் சொல்லல.. எதுக்கு?" என்று கேட்க,

"என்ன எதுக்கு? நூறு பொண்ணுங்களை தேடியும் ஒருத்தியும் செட்டாகல.. வேற வழி!" என்று கூற,

"யோவ்! புருசன்னு பாக்க மாட்டேன்.. ஒழுங்கா உண்மைய சொல்லு யா" என்றாள்.

"கல்யாணி!" என்றவன் அவள் உள்ளங்கையை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு,

"நிஜமா லவ் மேரேஜ் தான் என்னோட ஃபோகஸ்.. என்ன எழவோ அது எனக்கு செட்டாகவே இல்ல.. நான் ஒன்னை ரிஜாக்ட் பண்ணினா இன்னொன்னு என்னை ரிஜெக்ட் பண்ணுச்சு.. அப்பவும் விடாம முயற்சி பண்ணிட்டு தான் இருந்தேன்.. ஆனா ஒன்னு வந்து சேர்ந்துச்சு" என்றவன்,

"அன்னைக்கு லிப்ட்ல இறங்கவும் பார்த்தோமே! அந்த டுபாக்கூர் தான்.. என்னை ஒரு மாதிரி டிஸ்கஸ்டிங்கா பீல் பண்ண வச்சுட்டு.. அப்ப தான் அம்மா உன்னை பார்த்துட்டு வந்ததா சொல்லி நீ போன் பண்ணுவனு சொன்னாங்க.." என்றவன்,

"அப்ப கூட இவ்வளவு சீரியஸா அம்மா இருப்பாங்கன்னு நினைக்கல.. அப்புறம் தான் யோசிச்சேன்... தெரியாத ம்ம்ம் விட தெரிஞ்ச சாத்தானே மேல்னு தான்" என்று முடிக்கும் முன் அவனை தள்ளி விட்டவள்,

"எம்புட்டு கொழுப்பு உங்களுக்கு.. நான் சாத்தானா.. இது தேன்.. இந்த வாய் தேன் சனிங்குறது.." என்றவள் விரட்ட,

"சும்மா சொன்னேன் டி!" என்றவன் ஓட என நேரம் சென்றிருக்க,

"மணி பத்தாவ போவுது.. என்னைய என்ன நினப்பாங்க.. எல்லாம் உங்களால.. உங்களுக்கு இருக்கு இன்னைக்கு" என்று முறைத்து விட்டு அருகே வந்தவனை குளியலறைக்குள் தள்ளிவிட்டு கீழே சென்றாள்.

"நீ ஏன் ஆத்தா இத எல்லாம் பாக்க? நான் தான் வருவேம்ல.. நவுரு! ராணி ம்மா தூங்குதாவளா?" என நேராய் சமையலறையில் சென்று பாத்திரத்தை விளக்கிக் கொண்டு நின்ற அன்னத்திடம் கூற, அவளை அதன் பின் தான் கவனிக்கவே செய்தார் அன்னம்.

எப்படி என்னவென்று கேட்க என்று தெரியாமல் தடுமாறினார் அன்னம். கிராமத்தில் வழக்கம் தான் முதல் நாள் வரும் புதுப் பெண்ணை விசாரிப்பது.

இருந்தாலும் அன்னம் தயங்கி நிற்க, அங்கே இருந்த வடிவை கவனிக்கவே இல்லை கல்யாணி.

"ஏத்தா!" என்று வடிவு அழைக்கவும் கல்யாணி திரும்பிப் பார்க்க, எதிர்பார்ப்பு கலந்த பார்வை இருவரிடமும் என்றால் வடிவின் ஆவல் அப்பட்டமாய் தெரிந்தது.

"என்னத்த அப்படி பாக்குத்திங்க? என்னைய முன்ன பின்ன பாத்தது இல்லையாக்கும்?" என்ற கல்யாணி அவர்கள் பார்வை புரிந்து சிவந்த முகத்துடன் திரும்பிக் கொண்டு கூற,

"போதுமா டி அன்னம்? பதில வாயால சொன்னா தானாக்கும்.. போ! போ! எம் பேத்தி இங்கன சந்தோசமா தான் இருப்பா" என்றார் வடிவு.

"சும்மா இரு அப்பத்தா!" என்ற கல்யாணிக்கு அதற்கே அதிகமாய் வெட்கம் தின்றது.

"இது போதும் த்த! நான் இனிமே சந்தோசமா கிளம்புவேன் ஊருக்கு" என்ற அன்னத்தின் வார்த்தைகளில் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வந்தது.

'இதை எப்படி மறந்தேன்!' எனும் முக பாவம் கவலையை பூசிக் கொள்ள, அன்னையை நோக்கி திரும்பினாள்.

"இன்னைக்கே கிளம்பணுமா ஆத்தா?" என்று கேட்ட கேள்விக்கு தனக்கே விடை தெரியுமே!.

இன்று கிளம்புவதற்கான முன்னேற்ப்பாடோடு தானே வந்திருந்தனர்.

"தெரிஞ்சது தான கல்யாணி.. ஏன் வாடுத.. நீ சந்தோசமா இருக்கன்னு தெரிஞ்சிட்டு போனா நிம்மதியா இருக்குமன்னு நினைச்சோம்.. இப்போ அந்த நிம்மதியோட தான் கிளம்ப போறோம்!" என்றார் அன்னம்.

"இனிமே எப்போ ஆத்தா நான் உங்கள பாக்க?" என்று கண்ணீர் கட்டிய கண்களுடன் கல்யாணி கேட்க,

"அடடா! காலையிலே ஆரம்பிச்சுட்டாளா மாட்டுப் பொண்ணு?" என்று வந்தார் ராணி.

"ராத்திரி முழுக்க உன் அப்பா ப்ரணி அப்பாகிட்ட புலம்பி இருக்காங்க.. இப்ப நீயா?" என்ற ராணி கல்யாணி அருகே வந்து நின்றார்.

"ப்ரணி! உன்னை நல்லா பார்த்துப்பான்.. இதை தவிர வேற எதுவும் என்னால சொல்ல முடியாது டா.. எனக்கு புரியுது உன் அம்மா அப்பாக்காக நீ பீல் பண்றது.. ஆனா இது தானே நிஜம்?" என்று ராணி கேட்க,

"உங்க பையன மாதியே பேசுதீங்க ராணி ம்மா நீங்க.." என்றாள் கல்யாணி விசும்பலோடு.

"அப்படியா! அவன் என்ன சொன்னான்?" என்று ராணி கேட்க,

"அவரும் இப்படி தான் வாயிலேயே வட சுடுவேன்னு சொன்னாரு" என்று கூறவும் ராணி பக்கென்று சிரித்துவிட,

"பெரியவங்கட்ட என்ன இது மட்டு மரியாதை இல்லாத பேச்சு?" என கண்டித்தார் அன்னம்.

"விடு அன்னம்! அவ இங்கே இனி என்னோட தானே இருக்க போறா! நான் பாத்துக்குறேன்" என பொய்யாய் மிரட்டிய ராணி,

"அவன் பேச்சை இவளும் பேச கத்துட்டு இருக்கா" என்று கூறி சிரிக்க,

"சும்மா சொன்னேன் ராணி ம்மா" என்றாள் கல்யாணியும்.

"கல்யாணி! இங்கயும் இந்த மாதி எதித்து பேசுத வேலைய வச்சுக்காத.. பெரியவங்கட்ட மரியாதையா பழகணும்" அன்னம் அங்கேயே வகுப்பு எடுக்க ஆரம்பிக்க,

"விடு அன்னம்! அதான் சொல்றேன்ல.. ரெண்டும் பையனுங்க.. பொண்ணு இல்லாத குறைக்கு அவ இஷ்டப்படி இருந்துட்டு போகட்டும் எங்களுக்கு" என்று கல்யாணிக்கு வாக்கிட்டார் ராணி.

"ரொம்ப எடம் குடுத்து அவள கெடுத்துடாதீங்க அண்ணி!" என்று அன்னம் கூற,

"என் பேத்தி எங்க போனாலும் அவ தான் டி முன்ன நிப்பா" என்றார் வடிவு.

காலை பொழுது அனைவர்க்கும் அத்தனை இதமாய் இருந்த பொழுதும் ஒவ்வொரு நொடியும் இதோ இப்பொழுது தன் குடும்பத்தினர் கிளம்பி விடுவார்கள் எனும் வருத்தத்தில் உள்ளுக்குள்ளே மருகிக் கொண்டிருந்தாள் கல்யாணி.

மதியம் உணவை முடித்துக் கொண்டு அனைவரும் பேசியபடி இருக்க,

"கல்யாணி! கொஞ்சம் மேல வாயேன்!" என்றுவிட்டு ப்ரணித் சென்றான்.

அப்பொழுதும் அவள் செல்லாமல் ஒவ்வொரு வேலையாய் செய்தபடி அன்னையோடு அமர்ந்திருக்க,

"பரணி உன்னைய கூப்புட்டு அர மணி நேரம் ஆவுது த்தா! போயி என்னனு கேட்டுட்டு வா" என்றார் வடிவு.

"ஆமா கல்யாணி! அவன் அடுத்து கூப்பிடறதுக்குள்ள என்னனு கேட்டுட்டு வந்துடு" என்றார் ராணியும்.

"உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் தான் ஆத்தா கூட இருக்கேம்னு தெரியுது இல்ல.. என்ன வேணுமுன்னு அங்கயே சொல்ல வேண்டியது தான?" உள்ளே வந்ததும் கோபத்தில் அனைத்தையும் கொட்ட,

"மெதுவா பேசு டி.. ஸ்பீக்கர முழுங்கினா மாதிரி என்ன சத்தம்.." என்றவன்,

"மார்னிங் நல்லா தானே இருந்த? இப்ப என்ன உர்ருனு சுத்தி வர்ற?" என்றான் கேள்வியாய்.

அதில் சலிப்பாய் அவள் அமர, "சொல்லு கல்யாணி! என்னாச்சு? அம்மா எதுவும் சொல்ல வாய்ப்பில்லை.. அத்தை ஏதாவது சொன்னாங்களா?" என்று அக்கறையாய் கேட்க அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

"நீங்க உங்க அம்மா அப்பா கூட இருக்குற மாதி நானும் என் ஆத்தா அப்பா கூட இருக்கவா?" என்று கல்யாணி கேட்க,

"எதே?" என்று தன் மேல் சாய்ந்து இருந்தவளை நிமிர்த்தினான்.

"என்ன? எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? நான் அவங்களோட இருக்கனும்.. அவங்க பாவம்.. என் முன்ன தான் ஆத்தா அழாம இருக்கு.. ஊருக்கு போய் மொத்தமா அழுவும்.. அப்பத்தா கூட பாவம் தான் தெரியுமா?" என்றவளின் வருத்தம் புரிய, மூச்சை இழுத்துவிட்டான்.

"என்ன பண்ணலாம் இப்ப?" என்று கேட்க,

"என்கிட்ட கேட்டா? அன்னைக்கு போன போட்டேம்ல அப்போ எடுத்து சரியா பேசி இருந்திங்கன்னா இந்த கல்யாணமே நடந்துருக்காது.. நான் என் ஆத்தாவோட ஊர்ல இருந்துருப்பேன்.. எங்கள பிரிச்சது நீங்க தான்" என்றாள் அவனிடம் அழுகையோடு.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
கருத்தா பேசுது புள்ள என்றால்
குழந்தை போல அழுது....
கல்யாணி...சோ cute.... 💐💐💐💐
 
  • Haha
Reactions: Rithi

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அட ஆண்டவா கல்யாணிக்கி தெரியாததா, நெல்லு நாத்து போல தான் பொண்ணுங்க வாழ்க்கைன்னு, ம்ம்ம் பிரணித் எப்படி சமாளிக்க போறானோ 😀😀😀😀😀😀😀
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அட ஆண்டவா கல்யாணிக்கி தெரியாததா, நெல்லு நாத்து போல தான் பொண்ணுங்க வாழ்க்கைன்னு, ம்ம்ம் பிரணித் எப்படி சமாளிக்க போறானோ 😀😀😀😀😀😀😀
Luv🥰🥰