• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 23

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 23

"என்னை எங்க ஆத்தா, அப்பத்தா, அப்பான்னு எல்லார்கிட்ட இருந்தும் பிரிச்சது நீங்க தான்" என அப்பட்டமாய் குற்றம் சாட்டுபவளை இவன் பார்த்தபடி அமர்ந்திருக்க,

"அப்படி பார்த்தா... இல்லைனு சொல்லுவேனா? அன்னைக்கு மட்டும் நீங்க போன எடுத்து.." என மீண்டும் அதையே சொல்ல வர, அவள் இதழ்களை சிறை செய்திருந்தான் நொடியில்.

சில நிமிடங்களில் விடுவித்து இதழ்களுக்குள் சிரித்தவனை முறைத்துப் பார்க்க கூட அவன் புறம் திரும்ப முடியவில்லை.

"மறுபடியும் சொல்லு பார்க்கலாம் அந்த வார்த்தையை!" என்று வேறு அவன் கேட்க,

"ஏன் சொல்ல மாட்டேனா?" என்றாள் வேகமாய்.

"சொன்னா...." என்று இழுத்து, "சொல்லேன்!" என்று வம்பிழுக்க, புரிந்து கொண்டவள் இப்பொழுது நேராய் முறைத்தாள்.

அதில் புன்முறுவல் கொடுத்தவன், "கல்யாணி! உனக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா... இது தானே நிஜம்? உனக்கு நான் சொல்லனுமா? எவ்வ்ளோ தெளிவா பேசுவ..?" என்று கேட்க,

"ஆனாலும் என்னால முடியல" என்றாள் மீண்டும் அவன் மேல் சாய்ந்து கொண்டு.

"சரி டா மா! ஆனா உன்கிட்ட பொய்யா பேசி உன்னை கன்வின்ஸ் பண்ண விருப்பம் இல்லை.. ஆஃபிஸ் ஒர்க் மட்டும் இல்ல இப்போ நானும் ஒரு பேமிலிமேன்.. புரியுது தானே?" என்றவன்,

"ஆனாலும் மன்ந்த்லி ஒன்ஸ் உன்னை ஊருக்கு கூட்டிட்டு போக ட்ரை பண்றேன்.. என்னால முடியலைன்னா அம்மாவை கூட அனுப்பி வைக்குறேன்" என்றான் அவள் தோளில் கைகள் இட்டு மெதுவாய்.

"ஏன் என்ன தனியா விட மாட்டிங்களாக்கும்?" அவள் கேட்க,

"ஓஹ்! போலாமே! அதுக்கு இன்னும் டைம் இருக்கு.. உனக்கு இங்கே எல்லாம் பழகணும் இல்ல?" என்று கேட்க, அவளும் தலையசைத்தாள்.

"அழாத கல்யாணி! எனக்கு கஷ்டமா இருக்கு.. அண்ட் மறுபடியும் அந்த வார்த்தையையும் சொல்லாத.. டெய்லி போன் பண்ணி பேசு! வீடியோ கால்ல பேசலாம்.. அப்புறம் அத்தை, மாமா, ஆச்சி எல்லாரையும் வந்து போய் இருக்க சொல்லலாம்.." என்றவன்,

"அது மட்டும் இல்ல.. குழந்தை வந்துச்சுன்னா நீ என்னை அம்போன்னு விட்டுட்டு மாசக்கணக்கா அங்கே போய் தான் இருக்க போற" என்று காதுக்களுக்குள் கூற, ஜீவ்வென்று ஒரு உணர்வு அவளுக்குள் பரவி முகத்தை சிவக்க வைத்தது.

"இவ்ளோ இருக்கு அம்மு ம்மா! இப்பவே அழுதன்னா உன் ப்ரணி பாவம் இல்லையா?" என்று கேட்க,

"நீங்களா பாவம்? பேசி பேசியே என்னைய வாயடைக்க வைக்கிங்க.. போங்க!" என்று அவன் காதினை திருக,

"பேசி மட்டும் தானா?" என்றவன் சில வார்த்தைகள் அவள் காதினை கூசி சிவக்க வைத்தது.

"யோவ் போயா! எம்புட்டு கவலைல கிடக்கேன் உன் பேச்சைப் பாரு.. நான் ஆத்தாவை பாக்க போறேன்" என்றவள் கவலைகள் எல்லாம் எங்கோ ஒளிந்து முகம் எல்லாம் மலர்ந்து இருந்தது.

"சரி சரி! ஆனா இப்படியே போனீன்னா வேற என்னவோன்னு நினைச்சுக்குவாங்க.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போ!" என்றான் கள்ளத்தனமாய் புன்னகைத்து, அவள் முகம் பார்த்து அதில் தெரிந்த அழகைப் பார்த்து.

"உங்கள! திருந்தவே மாட்டிங்க!" என்றவள் அவன் சொன்னதற்காகவே குளியலறை சென்று முகத்தை நீரால் அடித்து கழுவி வர,

"உன் ஸ்கூல்ல சரியா சொல்லி தரலை போல கல்யாணி! முகம் கழுவினா அதுல இருக்குற சந்தோசம், வெட்கம் எல்லாம் குறைஞ்சிடுமா என்ன?" என்று வேறு அவன் கேட்க,

"அய்யோ! என்னமோ இருந்துட்டு போவட்டும்.. உங்ககிட்ட இருந்தா அது குறையுத மாதி தெரியல" என்றவளை புன்னகைத்து வேகமாய் அவன் பிடிக்க வர, அவனுக்கு அழகுக் காட்டி விட்டு வாசல்புறமாய் ஓடி விட்டாள் கல்யாணி.

கீழே ஓடி வந்தவளை அனைவருமே பார்த்தாலும் ராணி, சரவணன் மட்டும் பார்க்காததைப் போல திரும்பிக் கொள்ள, வாய் பிளந்து பார்த்தது வடிவு, அன்னத்தோடு அரசனுமே தான்.

அனைவரையும் பார்த்தவள் நன்றாய் அவர்களைப் பார்த்து சிரித்தபடி வர, இன்னுமே வடிவு மட்டும் ஆ என பார்த்தபடி இருந்தார்.

"வாய மூடு அப்பத்தா!" என மெதுவான குரலில் கூற, வடிவு எதுவோ கூற வரவும்,

"நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. பேசாம இரு.. என்னத்த சொல்லுவன்னு எனக்கு தெரியும்" என்றாள் மெல்லமாய்.

"அதை எல்லாம் கண்டுக்காத மாதிரி இருந்துக்கணும் வடிவு அம்மா.. முதல்ல என் மருமகளுக்கு சுத்தி போடணும்.. என் கண்ணு கூட பட்டிருக்கும்" என்றார் ராணி.

"என்ன ண்ணே அப்படி பார்க்கீங்க?" என அரசனிடம் ராணி கேட்க,

"ஒரே பொண்ணு! இத்தன மைலு தாண்டி குடுக்கோமேன்னு ஒரு பயம் இருந்துது த்தா! என் மவா சிரிச்சிகிட்டு வாரத பாக்கயில வேற என்ன வேணுமுன்னு இருக்கு" என்றார் அவர்.

சில நிமிடங்கள் கழித்து ப்ரணித் கீழே வர, அரசனிடமும் சரவனிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

"இந்த பய சிரே இல்லன்னா இந்த வீடு எனக்கு வீடா தெரியல த்தா! நான் வார நேரம்லாம் இனிம அவன வீட்டுல இருக்க சொல்லு" என்று வடிவு கூற,

"அவன் எங்க போக போறான்? நான் தான் நீங்க ஊருக்கு கிளம்ப நல்ல வண்டியா பார்த்து ஏற்பாடு பண்ணிட்டு வர சொன்னேன்" என்றார் சரவணன்.

கல்யாணி குடும்பத்தினர் கிளம்பும் நேரமும் வர, ஸ்ரேயாஸும் வந்து சேர்ந்தான்.

"பியூட்டி! நீங்களும் எங்களோட இங்கேயே இருங்களேன்" என்று ஸ்ரேயாஸ் கேட்க,

"இப்ப தான் டா அவங்களும் னே இல்லாம வீடு வீடா இல்லைனு சொன்னாங்க.. நீயும் அதையே சொல்ற" என்றார் சரவணன்.

"எங்க போவ போறேன் என் பேத்திய வுட்டுட்டு.." என்ற வடிவு,

"எய்யா பரணி! என் பேத்திய அடிக்கடி கண்ணுல காட்டுயா.. என் உசுரே அவ தான்.. கிழவிக்கு பேச்சு துணைக்கின்னு அவ பொறந்ததுல இருந்து என் கூடவே இருந்துட்டு இருந்தவ.. அங்கன போயி என்னத்த பண்ண போறேன்னே தெரியல" என்றார் வடிவு கண்ணீர் முகமாய்.

"ஆச்சி! எனக்கு எப்பல்லா லீவு கிடைக்குதோ அப்பல்லாம் கண்டிப்பா நான் கல்யாணியை கூட்டம் வரேன்.. நீங்களும் அடிக்கடி வாங்க.." என்றான் ப்ரணித்.

இடையில் நின்ற கல்யாணி கண்களை துடைத்தபடி நிற்க, இட வலமாய் தலையசைத்து கண்களால் கெஞ்சினான் ப்ரணித்.

"பார்த்துக்க த்தா! குற சொல்லுத மாதி நடந்துக்குட கூடாது.. நீ இங்கன சந்தோசமா இருந்தா தான் நாங்க அங்கன நல்லா இருப்போம்.. எங்களயே நினைச்சிக்கிட்டு இங்க கவனிக்காம இருக்க கூடாது" என அன்னையாய் மகளுக்கு சில அறிவுரை கூறி கிளம்பினார் அன்னம்.

"சந்தோசமா இரு த்தா.. அதான் எனக்கு வேணும்" என்ற வார்த்தையோடு விடைபெற்றார் அரசன்.

அவர்கள் கிளம்பிய பின்னும் ஏங்கியபடி இருந்தவளை ராணி அணைத்து தேற்றினார்.

"ப்ரணி! இவளை எங்கேயாவது வெளில கூட்டிட்டு போய்ட்டு வாயேன்.. அவளுக்கும் ஆறுதலா இருக்கும்ல?" என்று ராணி கேட்க,

"போலாமே! எங்கே போலாம்?" என்றான் கல்யாணியிடம்.

"நீ தான் டா சொல்லணும்.. அவளுக்கு என்ன தெரியும் இந்த ஊரை..?" என்று கேட்க,

"அப்ப பீச் போலாமா? எல்லாருமா போலாம்" என்றதும் கல்யாணியின் முகமும் மகிழ்வை தெரிவிக்க,

"கல்யாணம் ஆனாலும் குடும்பமா தான் சுத்துவேன்ற" என்று ஸ்ரேயாஸ் கிண்டல் செய்தான்.

"நான் ஏன் டா அப்படி பண்ண போறேன்.. நாளைக்கு நானும் என் ஆத்துக்காரியும் ஊட்டி போறோம்.. இதோ அதுக்கான டிக்கெட்ஸ்" என காட்டியவன்,

"அதனால நீங்க எல்லாம் பொறாமைல பொங்கிட கூடாதுல்ல.. சோ ஒன்லி பீச்" என்றவனை கல்யாணி அதிசமாய் பார்க்க,

"சொல்லவே இல்ல? இது எப்ப ண்ணா ரெடி பண்ணீங்க?" என்றான் டிக்கெட்டைப் பார்த்து.

"உனக்கும் கல்யாணிக்கும் தான் தெரியாது.. அம்மா, அப்பா, கல்யாணி பேமிலின்னு எல்லாருக்கும் தெரியும்" என்று வேறு அவன் கூற, அதற்கு இன்னும் ஆச்சர்யம் காட்டினாள் கல்யாணி.

"சும்மா! ஒரு சர்ப்ரைஸ்!" என்று கூறி அவன் கண் சிமிட்ட,

"கலக்குற போ ண்ணா! செம்ம பிளேஸ் ஊட்டி! என்ஜோய் அண்ணி!" என்றான் ஸ்ரேயாஸ்.

"சரி கிளம்புங்க மேடம்க்கு பீச்சை காட்டி அழுகையை நிறுத்தி கூட்டிட்டு வரலாம்" என கிண்டல் செய்து அனைவரையும் கிளம்ப வைத்தான் ப்ரணித்.

கடற்கரைக்கு சென்று மனைவியோடு கால் நனைத்தவன் அந்த உப்புக் காற்றில் அவளோடு கைகோர்த்து நின்றான்.

கணவனோடு ஆன முதல் வெளிப் பயணத்தை ரசித்த கல்யாணியுமே அங்கிருந்த பலத்தரப்பட்ட மக்களை கவனித்தபடி ப்ரணித்தோடு பேசிக் கொண்டு சில தூரங்கள் வரை சென்று வர, ஸ்ரேயாஸ் பெற்றோருடன் நேரத்தை செலவிட்டான்.

இரவு உணவையும் வெளியே முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரவும் தந்தை அழைத்து எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் எனக் கேட்டுக் கொண்டு ராணியுடன் அனைவருக்குமாய் பாலைக் காய்ச்சினாள்.

பாலுடன் அறைக்கு வரும் பொழுது தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான் ப்ரணித்.

"என்னத்த அப்படி யோசிச்சிகிட்டு இருக்கீங்க?" என்று கல்யாணி கேட்க,

"வேற என்ன இந்த நேரத்துல நினைக்க போறேன்" என்றவன்,

"உன்னை தான்.." என்றதும் அவள் முறைக்க,

"இல்ல உன் பேரை தான் செல்லமா ஷார்ட்டா எப்படி கட் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்றவன் அவள் சிரித்தை கவனிக்காமல்,

"கல்யாணி! கல்லு.. ஹாய் கல்லு" என்று கூறிப் பார்த்ததும் அவள் அவன் தலையில் கொட்டி,

"கல்லு, மண்ணுன்னு.. ஏன் கல்யாணின்னு கூப்புட அம்புட்டு கசக்குதோ துரைக்கு?" என்றாள்.

"ச்ச! ச்ச! நான் அப்படி சொல்வேனா என் செல்லத்தை? இருந்தாலும் ஒரு நேம்.. ஷார்ட்டா, க்யூட்டா இருந்தா நல்லாருக்கும்ல?" என்று கேட்க,

"ஓஹ் அப்படி! சேரி சேரி! யோசிச்சிக்கிட்டு இருங்க.. நான் தூங்கி முழிக்கேன்" என்று நகர,

"இங்க பாரு! உன் அப்பத்தாவை விட நீ தான் டி ரொம்ப மோசம்.. என்னையே கெஞ்ச வைக்குற" என்றவன்,

இன்று கெஞ்சுவதாய் இல்லை என்பதை போல அவளை தன்னோடு அணைத்திருக்க, எதிர்வினை இல்லாமல் அவனோடு இணைந்திருந்தாள் அவன் மனைவி.

"இந்த ஷார்ட்டு, க்யூட்டு பேரு எல்லாம் உங்க பொண்ணுக்கு வச்சுக்கங்க.. என் பேரை மாத்துனா நான் ராணி ம்மா ரூமுக்கு போயிருவேன்" என்றாள் அவன் அணைப்பில் இருந்தே.

"ஆமா! உன்னை போக விட்டு வேடிக்கை பார்க்க தான் நானும் காத்துட்டி இருக்கேன்.. படுத்தாத டி.. உனக்கு பேர் வேண்டாம் அப்படி தான?" என்றவன்,

"இரு இரு! என் புள்ளைய செல்லம் கொஞ்சுதத பார்த்து உன்னைய பொறாமைப்பட வைக்கல.. என்னை கேளு!" என்றவன் பேச்சில்,

"அப்படி மட்டும் நடக்கட்டும்.. அப்போ இருக்கு உங்களுக்கு" என்றவளை,

"ஆனாலும் உனக்கு நான் சொல்லி தந்த பாடம் நல்லா வேலை செய்யுதே கல்யாணி! அப்போ நமக்கு பொண்ணு தான்ற?" என்று அவள் முகத்தை நிமிர்த்தி கேட்க, அதில் அவனுள் இன்னும் ஆழமாய் புதைந்து கொண்டாள்.

தன் முகத்தை ஸ்பரிசித்தவனின் கைகளுக்குள் தன்னை கொடுத்தவளின் முழுவதையும் அவன் தனக்குள் சேகரித்துக் கொண்டான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
காதலும் அரவணைப்பும்
காட்டும் பிரணி அழகு....
வெட்கத்தை கூட
நக்கலாக பேசும் கல்யாணி பேரழகு..... 🤩🤩🤩🤩🤩
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
காதலும் அரவணைப்பும்
காட்டும் பிரணி அழகு....
வெட்கத்தை கூட
நக்கலாக பேசும் கல்யாணி பேரழகு..... 🤩🤩🤩🤩🤩
இல்ல😍
 

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
ரெம்ப ரெம்ப கியூட் கல்யாணி பொண்ணுக்கு செல்ல பேர் வைக்க சொல்லுற அளவுக்கு கியூட் 😍😍😍😍😍😍😍😍
அக்கப்போரு தான்