• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 24

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 24

"மது எப்ப ஆபீஸ் வர்றா?" என்று அருண் கேட்க,

"அவ ஹஸ்பண்ட் அவளை சிங்கப்பூர் கூட்டிட்டு போயிருக்காங்க போல டா.. ஸ்டேட்டஸா போட்டு சாவடிக்குறா.. இன்னும் ரெண்டு மாசத்துக்கு அவ நம்பரை பிளாக் பண்ண போறேன்.." என்றான் விவேக்.

"அதை பிளாக் பண்ணிடலாம்.. வந்து கதை கதையா சொல்லுவாளே டா என் ஹஸ்பண்ட் அப்படி இப்படின்னு... அதுக்கு என்ன பண்றது?" என்று அருண் கேட்கவும்,

"அது ஈசி! காதுல பஞ்சை வச்சுக்க வேண்டியதான்.. அந்த லூசு கேட்குறதுக்கு ஆளு கிடைச்ச சந்தோஷத்துல எப்படியும் நம்மளை பேச விடாது.. நாமளும் தலையை மட்டும் ஆட்டினா போதும்" என்றான் விவேக்கும்.

"டேய்! வர்றான் பாரு!" என்று அருண் கூற, விவேக் திரும்பிப் பார்க்கவும் ஆபீஸ் உள்ளே வந்து கொண்டிருந்தான் ப்ரணித்.

"மார்னிங் டா! எப்படி இருக்கீங்க?" என்று ப்ரணித் கேட்க,

"நாங்க உயிரோட தான் இருக்கோம்.. நீ என்ன ஒரு வாரமா ஆளை காணும்.. எச்ஆர்க்கு அனுப்புற லீவ் லேட்டரை மட்டும் எங்களுக்கு போர்வட் பண்ணி இருக்க" என்று விவேக் கேட்க,

"அப்படின்னா உங்களுக்கு கூப்பிட்டு சொல்ல டைம் இல்ல.. நான் என் வைஃப் கூட பிஸின்னு அர்த்தம் மேன்! இது கூட புரியாம என்னன்னு வளர்ந்திங்க?" என்ற ப்ரணித் நாற்காலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றினான்.

"டேய்! இன்னைல இருந்து கல்யாணம் ஆனவங்க பிரண்ட்ஷிப் எல்லாம் கட் பண்ண போறேன் டா.. ஓவரா போகுது.." என்று விவேக் கூற,

"அதை விட ஈசி ரூட் ஒன்னு இருக்கு மச்சி! நீயும் கல்யாணம் பண்ணிக்கோ! சிம்பிள்!" என்றான் ப்ரணித்.

"நானா மாட்டேன்றேன்? என்னை இன்னும் குழந்தையாவே பார்த்துட்டு இருக்குது டா என் அம்மா" என்று கண்ணீர் வராமல் அழுதான் விவேக்.

"நீ வேற! என் அம்மா விட்டா எனக்கு சேரலாக் குடுக்கும் போல" என்றான் அருண்.

"அதுக்கெல்லாம் முக ராசி வேணும் கைஸ்! போங்க டா.. போங்க டா! போய் வேலையை பாருங்க!" என்று கூறிய ப்ரணித் குரலைப் போலவே அவனும் உற்சாகமாய் இருக்க,

"சார்! ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபார்மேஷன்! இது எங்களோட சீட்டு! உங்க பிளேஸ் அந்த பக்கம்!" என்று அருண் முகத்தில் கொட்டிய எரிச்சலோடு கூற,

"ஆமால்ல! ஓகே ஓகே! நான் லஞ்ச் டைம் மீட் பண்றேன் உங்களை" என்று எழுந்தவனை,

"டீ, காபி குடுக்குறதை எல்லாம் நிறுத்திட்டீங்களா அய்யா?" என்றான் விவேக்.

"ஓஹ் நோ! காபி டைம் நான் என் வைஃப் கூட பேசிட்டு இருப்பேன்.. டிஸ்டர்ப் ஆகும்ல.. இட்ஸ் ஓகே நான் என்னோட பிளேஸ்க்கே காபி வர சொல்லிடுறேன்" என்று பகுமானமாய் கூறி சென்றவனை அத்தனை வயித்தெரிச்சலோடு பார்த்தனர் இருவரும்.

"ஏன் டா! கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே நம்மளோட வந்து உட்கார்ந்தான்.. இவனெல்லாம் தேற மாட்டான்னு நினச்சேன்.. என்ன டா இப்படி கடுப்பேத்துறான்" என்று அருண் கூறவும்,

"புதுசா கல்யாணம் ஆன எவனையும் நம்ப கூடாது டா.. இன்னும் ஒரு மூணு இல்ல இல்ல ஒரு ஆறு மாசத்துக்கு அவன் கண்ணுலயே படக் கூடாது" என்றான் விவேக்.

"ஏன் டா! அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க போறியா!" அருண்.

"பண்ணி வச்சுட்டு தான் வேற வேலை பார்க்க போறாங்க.. நீ வேற வெந்த மனசுல கத்திய சொருகாம போய் வேலைய பாரு டா" என்று கூறி அமர்ந்தான்.

திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்திருந்தது. ஒரு வாரம் விடுமுறை என்றவன் இரண்டு வாரங்கள் முடிந்து அன்று தான் அலுவலகமே வந்திருந்தான்.

ஊட்டிக்கு செல்வதற்காக அவன் ஏற்பாடு செய்தது சட்டென உதித்த யோசனை தான்.

மனைவியுடன் ஊட்டி சென்று இரண்டு நாட்களை கொண்டாடியவனுக்கு திரும்பி வீட்டிற்கு வந்தால் அவளை தனியே விட்டுவிட்டு அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற எண்ணம்.

அதுவும் அவளுக்கானது தான். தான் இல்லாத இடத்தில் அன்னை தந்தையை தேடுவாளே! என யோசித்தவன் ஊட்டியில் இருந்து நேராய் அவளே நினைக்காத வண்ணம் அவள் வீட்டிற்கு அழைத்து சென்று ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான்.

அதற்காய் மீண்டும் இரண்டு நாள் விடுப்பு சேர்த்து கொடுத்தவன் தான் அதை நண்பர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தான்.

கல்யாணி வீட்டினருமே இதை எதிர்பார்க்கவில்லை. அத்தனை மகிழ்ச்சி வடிவு, அன்னம், அரசன் என அனைவருக்கும்.

ராணிக்குமே அதில் நிம்மதி தான். மகன் தான் நினைத்ததை விட எளிதாய் பொருந்தி புரிந்து கொண்டானே என்ற நிம்மதி.

அதை கணவனிடமும் கூறி கூறி மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அன்று இரவு மட்டும் கல்யாணி வீட்டில் தங்கியவன் அடுத்த நாள் மாலை கிளம்பி வீட்டிற்கும் வந்து சேர்ந்தனர்.

இந்த நாட்கள் கல்யாணி தன் கணவனை அவன் மனதினை என அதிகமாய் புரிந்து கொண்ட நாட்கள். அவன் அறியாமலே அவளுக்கு அவனை புரிய வைத்து உணர்த்தி இருந்தான்.

இத்தனையையும் முடித்துக் கொண்டு அலுவலகம் வந்தவன் தான் இருந்த சந்தோசத்தை கொஞ்சமாய் நண்பர்களிடம் காட்டி அவர்களையும் பொறாமை கொள்ள வைத்து விட்டு தன்னிடம் வந்து அமர்ந்தான்

"வாவ்! யாரு மொபைல் ம்மா இது?" என்ற ஸ்ரேயாஸ் அந்த புது மொபைலை கையில் எடுத்து அதன் பெயரைப் பார்க்க,

"அண்ணியோடது டா.. ப்ரணி வாங்கி கொடுத்திருக்கான்" என்றார் ராணி.

"நைஸ்!" என்றவனைப் பார்த்து கல்யாணி சிரிக்க,

"என்னோட பியூட்டி எப்படி இருக்காங்க அண்ணி?" என்றான்.

"அப்பத்தா நல்லாருக்காங்க.. உன்னைய கேட்டாங்க.. உனக்குன்னு பலகாரம் குடுத்து விட்டு நான் குடுத்தேன்னு சொல்லிருன்னு வேற சொன்னாங்க" என்றாள் கல்யாணியும்.

"இஸ் இட்? பியூட்டி சோ ஸ்வீட்டி!" என்றான்.

"ஆமா டா! அவங்க எல்லாரும் இருக்கும் போது இன்னும் கலகலன்னு இருந்துச்சு வீடு" என்றார் ராணியும்.

"அடுத்து ஊருக்கு போகும் போது சொல்லுங்க அண்ணி.. நானும் வர்றேன்" என்றான் ஸ்ரேயாஸ்.

"நீ வாரன்னா சரி.. அப்பத்தா எல்லாம் நல்லா தான் கவனிக்கும்.." என்ற கல்யாணி,

"ஆனா உன் அண்ணா அங்க வந்து என்னத்த பண்ணிச்சு தெரியுமா? ராணி ம்மா! நீங்க கேட்டிங்களா உங்க புள்ளைட்ட?" என்றதும் ஸ்ரேயாஸும் ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அதெல்லாம் ஒரு ஊருன்னு என்னை வேற கூப்புடுறிங்களே? ஆளை விடுங்க!" என்று சொல்லி தான் கல்யாணியைப் பெண் பார்க்க அனைவரும் சென்ற அன்று சொல்லி இருந்தான்.

கிராமம் என்றாலே கிண்டல் செய்து விலகி செல்பவன்
இப்பொழுதும் கல்யாணியிடம் என்ன பேசி அங்கே என்ன செய்து வைத்திருப்பானோ என்று இருவரும் விழிக்க,

"என்ன இப்படி பாக்கிங்க? எதாவது சொன்னாங்களா?" என்றாள் மீண்டும்.

"என்ன அண்ணி பண்ணினான்?" ஸ்ரேயாஸ் கேட்க,

"என்ன பண்ணினாங்களா? போனதுல இருந்து அடுத்த நாள் ஊருக்கு கிளம்புன வரைக்கும் உருண்டுட்டு தான் வந்தாங்க.. இதுல எனக்கு தெரிஞ்சா நான் கவலப்படுவேன்னு படுகேவலமா ஒரு சிரிப்பு வேற என்னையப் பாத்து" என்று அவள் கூறவும் ராணி மகனை நினைத்து அங்கும் இங்குமாய் விழிக்க, ஸ்ரேயாஸ் சிரித்தான்.

"ரொம்ப சொகுசா வளத்து வச்சுருக்கிங்க ராணி ம்மா அவரை.. ஸ்ரேவும் தான் இருக்கான்.. முதல் தடவ வீட்டுக்கு வந்த உடனே அந்த பிளாஸ்டிக் சேர்ல இருந்தது என்ன, அப்பத்தாகிட்ட பேசினது என்ன... ஏன்! மாமா? சரவணன் மாமாவும் சத்தமே இல்லாம தான இருந்தாங்க.. இவரு பண்ணுன அலப்பறைல எனக்கே எப்போம் டா அங்க இருந்து கிளம்புவோம்ன்னு ஆகி போச்சு.." என்றவள்,

"உஷ்!" என்று மூச்சுவிட, பாவமாய் ஸ்ரேயாஸைப் பார்த்தார் ராணி.

"இனிமே இங்கயே அவரை கீழ தரையில உக்கார, அங்கயே சாப்புடனு பழக்க போறேன்.. அப்போ தான் எங்க போனாலும் நெளிஞ்சுக்கட்டு வர மாட்டாரு.." என்றாள் முடிவாய்.

"சூப்பர் ஐடியா அண்ணி! நான் சப்போர்ட் பண்றேன் உங்களுக்கு" என்று ஸ்ரேயாஸ் கூறவும்,

"என்ன டா சூப்பரு?" என்று அவன் மண்டையில் ஒன்று விழ,

"ஆஹ்!" என்று தலையில் கைவைத்த ஸ்ரேயாஸ்,

"நீ எப்போண்ணா வந்த?" என்றான் திரும்பிப் பார்த்து.

திருட்டு முழியுடன் இருந்த கல்யாணியை நன்றாய் ப்ரணித் முறைத்து நின்றவன்,

"பரவாயில்லைங்க! நீங்க சாப்பிடுங்கன்னு பக்கத்து வீட்டுல போய் வுட் சேர் வாங்கிட்டு வந்தது நீ தான டி? நான் கேட்டேனா உன்கிட்ட? அங்க நான் பார்த்துக்குறேன்னு சொன்னதுக்கு கேட்காம விழுந்து விழுந்து கவனிச்சுட்டு.. அம்மாகிட்ட வந்து கதையா சொல்ற!" என்று அவளைப் பிடிக்க வர, அவன் கைகளுக்குள் சிக்காமல் ஓடியவள் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

"என்ன டா சீக்கிரம் வந்துட்ட?" இவர்களின் விளையாட்டை கவனித்து சிரித்த ராணி கேட்க,

"அதான் மேடம் ரீல் ஓட்டினாங்களே! அப்பவே வந்துட்டேன்.. அவ சொல்றானா நீங்களும் நம்பிடுவீங்களா? முன்னாடி சொன்னேன் தான்.. ஆனா இப்போ எப்படி அப்படினு கேட்க மாட்டிங்களா?" என்று ப்ரணித் கேட்க,

"நீங்க மாறிகிட்டே தான் இருப்பிங்கன்னு ராணி ம்மாக்கும் தான் தெரியுமே!" என்றாள் சமையலறை கதவருகில் நின்று ராணி.

"வாய் கூடிப் போச்சு பார்த்திங்களா ம்மா?" என்று அதற்கும் அன்னையிடம் கூறியவன்,

"நீ மேல வா.. பாத்துக்குறேன்!" என்று உதடசைக்க, பழிப்புக் காட்டினாள் அங்கேயே நின்று.

"கல்யாணி! அவனை இவ்வளவு தாங்காத! அப்புறம் தலைக்கு மேல ஏறிடுவான்.. அனுபவத்துல சொல்றேன்.. பொழச்சுக்கோ!" ராணி கூற,

"ம்மா!" என்று சிணுங்கினான் ப்ரணித்.

"போய் பிரஷ் ஆகிட்டு வா டா!" என்று ராணி கூறவும்,

"அப்பா எங்கே ம்மா?" என்று ப்ரணித் கேட்க,

"அப்பா பிரண்ட் வீட்டுல பக்சன் சொன்னாங்களே! அங்கே தான் போயிருக்காங்க.. வர லேட் ஆகும்" என்றார்.

"ஓஹ் ஓகே மா!" என்றவன்,

"எனக்கு ஒரு காபி! ரூம் சர்வீஸ்!" என்றவன் கூறி சென்ற பாவனையின் விஷமத்தை நன்றாய் அறிந்து கொண்டாள் கல்யாணி.

"ண்ணா! அம்மா எடுத்துட்டு வந்தா ஓகேவா?" என்று ஸ்ரேயாஸ் சிரிக்க,

"கூட நீயும் வந்தாலும் ஓகே தான் டா!" என்று கூறி சென்றான் அவன்.

"எதுக்கும் அசர மாட்டியே! அந்த கெத்தை மட்டும் விட்றாத ண்ணா!" என்று ஸ்ரேயாஸ் கூற,

"அதுக்கு பேரு வெட்டி சீனு!" என்ற ராணியைப் பார்து ஆம் என்று கூறி கல்யாணி சிரிக்க, உனக்கு இருக்கு என்ற பார்வையோடு அறைக்கு சென்றான் ப்ரணித்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
பார்க்கும் பார்வையில் உள்ளது
பார்வைகள் மாறிட
ப்ரணி மனதில் கல்யாணி இடம் பிடிக்க......
பாவையின் இதயத்திலும் தடம் பதித்த ப்ரணி.....
படிக்கவே அழகாய் ஒரு காதல்.....
 
  • Love
Reactions: Rithi