அத்தியாயம் 25
"அப்புறம்! நீங்க எப்ப குட் நியூஸ் சொல்ல போறீங்க?" மது கல்யாணியிடம் கேட்க,
"முதல்ல நீங்க சொல்லுங்க.. பொறவு எங்கட்ட கேளுங்க" என்றாள் கல்யாணி.
"டேய்! ஊர்ல பார்த்த கல்யாணியா இது? உன்னை மாதிரியே மாத்திட்டியே... புதுப்பொண்ணு வெட்கப்படும்னு பார்த்தா என்னை வெட்கப்பட வச்சுடும் போலயே!" என்றாள் மது.
"நீ வேற மது! பழகிப் பாரு.. அப்புறம் தெரியும் கல்யாணி யாருன்னு.. நான்லாம் ஒன்னுமே இல்லைன்னு சொல்லுவ" என்றான் ப்ரணித்.
"வடிவு அப்பத்தா பேத்திக்கு பேச தெரியாதுன்னு நினைச்சியளாக்கும்.. கல்யாணம் ஆன முத நாளே இவ்ளோ பேசி இருந்தேம்னா உங்களோட இவரும்ல தெறிச்சி ஓடி இருப்பாரு" என்று கல்யாணி சிரிக்க,
"ஆமா ஆமா! நீ பேசவே இல்லை பாரு..அன்னைக்கு ரூம்ல வெளில போறியான்னு கேட்டதுக்கு என்ன சொன்ன?" என்று கேட்க, கல்யாணி விழித்ததில் அப்படி சிரித்தாள் மது.
"நைஸ் கப்புள்!" என்று மது கணவன் கூற,
"இல்ல! பட் மை பாவ்ரிட் கல்யாணி தான்" என்றாள் மது.
"ப்ரணி! யூ ஆர் வெரி லக்கி! அண்ட் கல்யாணி யூ ஆல்சோ!" என்று மது கணவன் கூற,
"ஆமா கல்யாணி! ப்ரணியை பத்தி இப்ப உனக்கு நல்லஸ் தெரிஞ்சிருக்கும்.. ஆனா அவ்ளோ பண்ணுவான்.. அவன் வாயில இருந்து ஒரு வார்த்தை வரணும்னா நாங்க எல்லாம் தண்ணி குடிச்சு தண்ணி குடிச்சு தவிச்சு போயிடுவோம்.. அவனை எப்படி மாத்தி இருக்க தெரியுமா நீ?" என்று மது கேட்க,
"என் காதெல்லாம் புளிச்சு போச்சு.. இப்போ தான் விவேக் அண்ணனும் அருண் அண்ணனும் இவரை பத்தி பேசி தள்ளினாங்க.. ரொம்ப பெருமையா தான் ஆரம்பிச்சாங்க.. பொறவு தான் இவரு வண்டவாளமே வெளில வந்துது.. ஆபீஸ்ல வேலைய தவிர எல்லாத்தையும் பாத்துருக்காரு" என்று ப்ரணித்தை ஓரப் பார்வையால் முறைத்து கல்யாணி கூற,
"ஹாஹா! சொல்லிட்டானுங்களா? நிஜம் தான் ரொம்ப ரொம்ப நல்லவன்.. லவ் பண்ண பொண்ணு தேடினான்.. அது ஒன்னும் தப்பில்லையே! ஆனாலும் கடவுளுக்கு தான் எவ்வளவு சக்தி இல்ல பா?" என தன் கணவனிடம் கேட்க,
"எக்ஸாக்ட்லி மது!" என்றான் அவன்.
"நீங்க கூட பாக்குறதுக்கு ரொம்ப பொருத்தமா அழகா இருக்கீங்க ரெண்டு பேரும்.." கல்யாணி கூற,
"ஆஹான்! என்னை விட கலர் கம்மி தான்.. இருந்தாலும் மை லவ் ஆல்வேஸ் ஹான்ஸம்!" என்றவள் கணவனின் கண்ணங்களை கைகளால் கிள்ளிக் கொண்டாள்.
அதில் கல்யாணி வெட்கம் கொண்டு திரும்பிக் கொள்ள,
"இதெல்லாம் சாதாரணம்.. இவ நம்மளை எல்லாம் ஓட வச்சுடுவா" கல்யாணி முகம் பார்த்து ப்ரணித் கூற,
"லவ்வை எப்படி வேணா எக்ஸ்பிரஸ் பண்ணலாம் ப்ரணி! ஐ லவ் ஹிம்!" என்ற மது கணவன் தோள்களில் சாய்ந்து கொள்ள,
"சரி சரி கடுப்பேத்தாத! இதே மாதிரி யார் முன்னவாச்சும் இவளை நான் தொட்டேன்.. ஊர்ல ஆடுற சாமி இங்க வந்துடும்" என்று கிண்டல் செய்தான் ப்ரணித்.
ப்ரணித் கல்யாணி திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது.
அன்று பெற்றோரின் திருமண நாள் என்று ஞாயிறு விடுமுறை தினம் அன்று தன் நண்பர்களுக்கு வீட்டிற்கு அழைப்பு கொடுத்திருந்தான் ப்ரணித்.
காலையில் சரவணன், ராணியுடன் ஸ்ரேயாஸ் கோவிலுக்கு கிளம்பி சென்றுவிட, கல்யாணி செல்ல முடியாத சூழ்நிலையில் ப்ரணித் கல்யாணி வீட்டில் இருந்தனர்.
காலையிலேயே அருணும் விவேக்கும் வந்துவிட்டு வெளியில் செல்வதாய் கூறி சென்றுவிட, மது தன் கணவனுடன் மதிய நேரத்தில் வந்து சேர்ந்தந்திருந்தாள்.
கல்யாணி சமையல் முடித்து வைத்திருக்க அனைவருமாய் அமர்ந்து உணவருந்திவிட்டு பேசியபடி இருந்தனர்.
"வா மது! எப்படி இருக்கீங்க?" என்று ராணி வர,
"ஹாய் ஆண்ட்டி! ஹாய் அங்கிள்! ரொம்ப நல்லாருக்கோம்.. நீங்க எப்படி இருக்கீங்க?" என்றாள் மது.
"ஹேய் மது க்கா! எப்ப வந்திங்க?" என்று காரை பார்க் செய்து விட்டு வந்த ஸ்ரேயாஸும் இணைந்து கொள்ள,
"சாபிடுங்களா ராணி ம்மா?" என்றாள் கல்யாணி.
"ஆச்சு டா.. ஸ்ரே ஹோட்டல் கூட்டிட்டு போய்ட்டான்" என்றார் ராணி.
ப்ரணித் கண்ணசைவில் எதுவோ கேட்க, ஸ்ரேயாஸும் தலையசைக்க கல்யாணி அதை கவனிக்கவில்லை.
"தரிசனம் எல்லாம் நல்லாருந்துச்சா?" என்று அவள் கேட்கவும்,
"சீக்கிரமா போய்ட்டதால ரிலாக்ஸ்ஸா திருப்தியா இருந்துச்சு டா" என்றார் சரவணன்.
"காலையிலே போயிட்டீங்களே ராணி ம்மா.. பொறவு ஏன் இம்புட்டு நேரம்?" என கல்யாணி கேட்க, ராணி என்ன சொல்ல என ப்ரணித் பக்கம் திரும்பவும்,
"நான் தான் அண்ணி அவங்களை அப்படியே சுத்தி காட்டி கூட்டிட்டு வந்தேன்" என்ற ஸ்ரேயாஸை நம்பவும் செய்தாள் கல்யாணி.
"அப்புறம் மது! என்ன சொல்றாங்க ரெண்டு பேரும்?" என்று சரவணன் பேச ஆரம்பிக்க,
"சரி நான் நீங்க குடிக்க எதாவது எடுத்துட்டு வர்றேன்" என கல்யாணி நகர்ந்தாள்.
"அண்ணி! எனக்கு காபி அண்ணி! ப்ளீஸ்!" என்றான் ஸ்ரேயாஸ்.
"ஹ்ம் சரி!" என்று அவள் உள்ளே செல்ல,
"ஷ்ஷ்!" என்ற ஸ்ரேயாஸ் அனைவருக்கும் சைகையிலேயே என்னவோ கூற, அனைவருமாய் அங்கிருந்து கலைந்து அறைக்குள் சத்தம் இல்லாமல் செல்லவும் ப்ரணித் மட்டும் வாசல் பக்கமாய் சென்றான்.
சமையலறையில் வேலையாய் இருந்த கல்யாணி ஹாலில் அதிக சத்தம் இருந்ததும் இப்போது இல்லாமல் அமைதியாய் இருந்ததையும் கவனியாமல் பாலில் கவனத்தை வைத்திருக்க, வீட்டில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம்.
வரவேற்பு அறையில் அனைவரும் இருக்கிறார்களே என்ற நினைப்பில் கல்யாணி நகராமல் இருக்க, சில நொடி இடைவெளியில் மீண்டும் அழைப்பு மணி சத்தம் கேட்கவும் தான் புருவம் சுருக்கிய கல்யாணி வீடு அமைதியாய் இருப்பதை உணர்ந்தாள்.
அடுப்பை அணைத்து பாலை மூடி வைத்தவள் வெளியில் வர அங்கே யாரும் இல்லாமல் இருக்கவே சுற்றிலும் பார்த்தபடி கதவறுகே செல்ல, மீண்டும் அழைப்பு மணி சத்தம்.
"யாரு இந்த நேரத்துல கதவை பூட்டினது?" என்ற கேள்வியோடு கதவை திறக்க, அங்கே வடிவு, அன்னம், அரசன் உடன் ப்ரணித்.
"அப்..ப.. த்..தா" என்ற கல்யாணி சில நொடிகள் மூச்சே விடவில்லை.
"கல்யாணி!" என்று அன்னம் வர,
"ஆத்தா!" என்றவளுக்கு இன்னும் நம்ப முடியாத ஆனந்தத்தோடு அதிர்ச்சி.
அன்று ஊட்டியிலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டு வந்த பின் இன்னும் ஊருக்கு செல்லவில்லை.
இரண்டு மாதங்கள் தான் என்றாலும் கல்யாணிக்கு அதிகமாய் தன் வீட்டினரை தேட, அதை அவள் யாரிடமும் சொல்லிக் கொள்ளவும் இல்லை.
"எப்படி இருக்க த்தா!" என்ற அரசனின் கேள்விக்கு,
"நான் நல்லாருக்கேன் அப்பா.. நீங்க எப்படி சொல்லாம கொள்ளாம?" என கல்யாணி கேட்க,
"எல்லாத்தையும் வாசல்ல வச்சே கேட்பியா கல்யாணி! வீட்டுக்கு வந்தவங்களை உள்ள அழைக்கணுமா இல்லையா?" என்று உள்ளே இருந்து வந்தார் ராணி.
"அய்யோ ராணி ம்மா! எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. என்னத்த பண்ணுதேன்னே எனக்கு தெரியல.." என்றவள்,
"உள்ள வா அப்பத்தா, வாங்க ப்பா, வா ஆத்தா!" என அழைக்க, ஸ்ரேயாஸ், மது, மது கணவன், சரவணன் என அனைவரும் புன்னகையோடு பார்திருக்க, கல்யாணியை அவள் உணர்வுகளின் அலைப்புறுதல் கலைவதை என நேராய் கண்டு அவளையே பார்த்திருந்தான் ப்ரணித்.
"எப்படி அண்ணி எங்க சர்ப்ரைஸ்?" என்று ஸ்ரேயாஸ் கேட்க,
"என்ன?" என்றாள் அவள் புரியாமல்.
இன்னுமே அவர்கள் தானாய் இப்பொழுது தான் வந்திருப்பதாக அவள் நினைத்திருக்க,
"இன்னுமா உனக்கு புரியல? என்ன கல்யாணி.. ப்ரணி கூட சேர்ந்து இப்படி ஆகிட்டியே!" என்று சரவணனும் கிண்டல் செய்தார்.
யார் பேச்சுக்கும் பதில் கூறும் நிலையில் இல்லை அவள். இப்பொழுது என்ன கூற வேண்டும் என்ன பேச வேண்டும் என தெரியாமல் வார்த்தைகளே வராமல் நிற்க,
"போதும் விடுங்க! ரொம்ப தான் அவளை தவிக்க விடுறிங்க" என்ற ராணி,
"நாங்க தான் டா இவங்களை ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கூட்டிட்டு வர்றோம்.. எல்லாம் இந்த ப்ரணியால.. உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு அவன் தான் ஸ்ரே கூட சேர்ந்து பிளான் பண்ணி அவங்களை வர வச்சது" என்று கூற,
"நிஜமாவா?" என கணவனைப் பார்த்தாள், அவன் கண்களை சிமிட்ட,
"ராணி அண்ணி கல்யாண நாளுக்கு வர சொல்லி ஒரு வாரத்துக்கு முன்னயே உன் வீட்டுக்காரர் போனப் போட்டுட்டார்.." என்றார் அன்னமும்.
வீட்டினரை தேடியதை கூறாமல் இருந்தவள் நடப்பதை நம்ப முடியாமல் நிற்க,
"என்ன த்தா அப்படி நிக்குற? ஒரு சுத்து கூடினா மாதிக்கு இருக்கா இல்ல அன்னம்?" என மருமகளிடம் வடிவு கேட்க,
"ஆமா ஆத்தா நானும் அதை தேன் நினச்சேன்.." என்றார் அரசனும்.
"சரி சரி அவங்க பேசட்டும்.. நான் போய் எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வர்றேன்" என்று ராணி நகர,
"நானும் வர்றேன் ஆண்ட்டி!" என்று உடன் சென்றாள் மது.
"அப்பத்தா! எப்படி இருக்க நீ? குறைஞ்சிட்ட நீ.. என்னைய ரொம்ப தேடுனியோ?" என கல்யாணி கேட்க,
"எனக்கென்ன? நான் எங்க உன்னைய தேட போறேன்.. நீ என்ன எனக்கு நிதமுமா போனப் போட்ட? நான் என் சிரேய தான் தேடுனேன்.. ஒரு நாள் அவன் எனட்ட பேசாம இருந்தது இல்ல தெரியுமா?" என்று கேட்க, இது மற்றவர்களுக்கு புது செய்தி.
"அப்பத்தா! வீடியோ கால்ல ராத்திரி தினமும் பேசுதேன் தான? என்ன அப்பத்தா இப்படி சொல்லிட்ட? உன்னைய தேடாம இருக்குமா எனக்கு?" என கல்யாணி கவலை கொள்ள,
"உன்னைய தெரியாதா த்தா எனக்கு? பதிலுக்கு பேசுவன்னு நினச்சேன்.. நீ சின்ன புள்ள மாதி மூஞ்ச தூக்குத.. அம்புட்டு தேடினியாக்கும் எங்கள?" என்றார்.
இருந்த இடத்தில் இருந்து நகராமல் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாய் தன் வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்தாள் கல்யாணி.
மது சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தாள்.
"இப்ப வந்துடுதேன் ஆத்தா!" என்று கூறிய கல்யாணி தன் அறைக்கு மேலே செல்ல, லேப்டாப்பை திறந்து ஏதோ வேலையில் இருந்தான் ப்ரணித்.
உள்ளே வந்தவள் வந்த வேகத்தில் அவன் என்ன என திரும்பும் முன் கன்னத்தில் முத்தமிட்டு வேகமாய் வாசலை நோக்கி திரும்பி விட, அவள் கைகளைப் பிடித்திருந்தான் ப்ரணித்.
"அய்யோ விடுங்க நீங்க! நான் கீழ போனும்.." கல்யாணி வெட்கத்தில் அவனைப் பாராமல் கூற,
"கதவை திறந்து வச்சுட்டு.. சும்மா இருந்த என்னையும் சீண்டி விட்டுட்டு.. என்ன டி பண்ணிட்டு போற என்னை?" என்று கேட்க, நின்று அவன் புறமாய் மெல்ல திரும்பினாள்.
என்ன என புருவம் உயர்த்தி அவன் கேட்க, ஒன்றும் இல்லை என தலையாட்டி திரும்பியவளை அப்படியே அணைத்துக் கொண்டவன்,
"இப்ப சந்தோஷமா?" என்று கேட்க,
"உங்க கூட எப்பவும் சந்தோசமா தான் இருக்கேன்.. இப்போ ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. இதுக்கெல்லாம் நான் என்னத்த செய்ய போறேனோ?" என்றாள் அவன் நெஞ்சோடு முட்டி.
"அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.." என்றவன்,
"என்கிட்ட சொல்ல என்ன உனக்கு? அம்மா அப்பாவை பார்க்க போலாமான்னு ஒரு வார்த்தை கேட்டா என்னவாம் உனக்கு?" என்றான் அதட்டலாய்.
"கேக்கணுமுன்னு தான் வருவேன்.. உங்களுக்கு வேல இருக்கேமுல்ல? முடியாது பொறவு போவோம்முன்னு சொன்னா அது இன்னும் வருத்தம்.. அதான் கேக்காமயே இருந்துட்டேன்" என்றாள்.
"உங்களுக்கு எப்படி எல்லாரையும் கூப்புட தோணிணுது?" என்று கேட்க,
"நாம போய்ட்டு வரலாம்னு தான் பிளான்.. அப்புறம் லீவ் கிடைக்குறதுல கொஞ்சம் கஷ்டம்.. ஏற்கனவே அதிகமா எடுத்தாச்சா.. அதான் அம்மா அப்பா வெட்டிங் டே வரவும் ப்ளனை மாத்திட்டேன்.. இன்னொரு சர்ப்ரைஸ் தரவா?" என்று அவன் கேட்க,
"என்ன?" என்றாள் கண்கள் மின்ன,
"இன்னொன்னு குடு சொல்றேன்!" என அவன் கன்னத்தை நீட்ட,
"அய்ய! ஆசையப் பாரு" என்றாள்.
"ரொம்ப நல்ல பிள்ளையா இங்க தான் கேட்குறேன்.. நீயா சீண்டாத!" என்றவன் தானே எடுத்தும் கொடுத்தும்,
"இன்னும் நாலு நாள் இங்கே தான் எல்லாரும் தங்கப் போறாங்க" என்று கூற,
"என்னத்த சொல்லுதீங்க? நிசமாவா? இருங்க நான் போய் கேட்டுட்டு வர்றேன்" என்று நகரப் பார்க்க,
"இன்னொன்னும் கேட்டுட்டுப் போ!" என்றவன், அவள் நிற்கவும்,
"எப்படியும் நாலு நாள் உன்னை கையில புடிக்க முடியாது.. நாலு நாள் முடிஞ்சதும் அம்மா, அப்பா ராமேஸ்வரம் கிளம்புறாங்க.. ஸ்ரேயாஸ் டூர் போறான்.. சோ! அடுத்த ஒரு ஒன் வீக் நாம மட்டும் தான்.. இந்த நாலு நாள் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. ஆனா சேர்த்து அனுபவிப்ப" என்று கிண்டல் புன்னகையுடன் கூற,
"உங்களை!" என்றவள் வலிக்காமல் அவனை குத்திச் சென்றாள்.
தொடரும்..