அத்தியாயம் 26 எபிலாக்
"இது என்னது சிரே!" வடிவு கேட்க,
"அண்ணிக்கு தான் பியூட்டி.. ஹெல்த் ட்ரிங்க்..அம்மா தான் பிரிப்பார் பண்ணினாங்க" என்றான் ஸ்ரேயாஸ்.
"ஏன் நாங்கலாம் பண்ண மாட்டோமாங்கும்?" என்று அவர் கேட்க,
"நீங்க உங்க பேத்திக்கு பண்ணுங்க.. அம்மா அவங்க பேத்திக்கு பண்ணட்டும்.. சிம்பிள்" என்றான் ஸ்ரேயாஸ்.
"எல்லாரும் சாப்பிட்டீங்களா டா?" என்று ராணி கேட்க,
"ஆச்சு ஆண்ட்டி!" என்றாள் மது.
வீரன் புள்ளைங்கள கூட்டிட்டு வாரேன்னு சொன்னான்.. இன்னும் காணோம்" என வடிவு புலம்பியப்படி இருந்தார்.
"உன் அண்ணனை எங்கே டா?" விவேக் கேட்க,
"அண்ணி கூட மேல போனாங்க ண்ணா!" என்றான் ஸ்ரேயாஸ்.
"அப்ப இப்பத்துக்கு வர மாட்டான்" என்று அருண் கூற,
"அதுல உனக்கு என்ன டா பொறாமை?" என்றாள் மது.
"பொறாமை தான்.. வேறென்ன.. இல்ல பாஸ்?" என்று மது கணவன் கேட்க,
"சிங்கிளுக்குன்னு கடவுள் தனி உலகத்தை படைச்சிருக்கலாம் டா.. இவைங்களோட!" என்று விவேக் சலிக்க,
"உங்களுக்கு எல்லாம் எப்ப அப்பு கல்யாணம்?" என்றார் வடிவு.
"சும்மா இருங்க த்த!" என்று அன்னம் தடுக்க,
"ஆச்சி! பொதுவா தானே கேட்குறாங்க! விடுங்க ஆண்ட்டி!" என்று சிரித்தாள் மது.
"பண்ணி வச்சா மாட்டேன்னா சொல்றோம்? பொண்ணு கிடைக்கலைனா கூட பரவால்ல.. பொண்ணு தேடவே ரெடியா இல்லையே என்னை பெத்தவங்க" என்றான் விவேக்.
"இவனுக்கு முத்தி போச்சு.. ரொம்ப புலம்ப ஆரம்பிச்சுட்டான்" என்றாள் மது.
கீழே கலகலப்பாய் பேசி சிரித்தபடி அனைவரும் அமர்ந்திருக்க, மேலே மனைவியுடன் போராடிக் கொண்டிருந்தான் ப்ரணித்.
"இதை முதல்ல குடி அப்புறம் பேசலாம்" ப்ரணித் கூற,
"இப்போ இப்படி சொல்லுவீங்க.. பொறவு தூங்கு அப்புறம் பேசலாம்னு சொல்லுவீங்க.. பொறவு நேரமாகிட்டு அங்க போயிட்டு பேசலாம்ன்னு சொல்லுவீங்க.. என்னைய ஏமாத்த எண்ணலாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செஞ்சுட்டு ஊர சுத்த தான நினைக்கிங்க?" கல்யாணி கேட்க, பதில் கூறவில்லை ப்ரணித்.
"யோவ்! போயா!" என வெளியே கைகளை காட்ட,
"இப்ப என்ன தான் டி பண்ண சொல்ற?" என்றவனை பரிதாபமாய் பார்த்தாள்.
இன்று முதல் திருமண நாள்.. அவர்களின் வளைக்காப்பும் இதே நாளில் வந்திருக்க, அத்தனை மகிழ்ச்சி குடும்பத்தினருக்கு.
ஏழாம் மாதம் வளைகாப்பு கீழே இப்பொழுது தான் முடிந்திருக்க, சிறிது நேரம் ஓய்வு எடுக்க என வந்தவள் தான் ப்ரணித்திடம் பஞ்சாயத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.
"நீ சொல்லு... ஓகே ன்னா நானே வீட்டுல பேசுறேன்.. இல்லைனா கிளம்பு.. இப்படி அடம் பண்ணி என் குட்டிம்மாவை டார்ச்சர் பண்ணாத!" என்று அவள் வயிற்றில் கை வைக்க,
"கைய கடிச்சிருவேன்.. எடுங்க.." என்றவளுக்கு அவன் கேள்விக்கு மட்டும் பதில் கூற முடியவில்லை.
"இங்க பாரு கல்யாணி! நானும் இப்ப உன்கூட வர்றேன்.. இன்னைக்கு உன்கூடவே தங்குறேன்.. அப்புறம் ஒரு வாரம் தான்.. இப்டின்றதுக்குள்ள ஓடிடும்.. மறுபடியும் சட்டெர் டே, சண்டே வந்துடும்.. நானும் உன்னையும் என் குட்டிம்மாவையும் பார்க்க வந்துடுவேன்.. ஆனா பாரு! இங்க இருந்து கிளம்பும் போதும் கண்ணீர் மட்டும் வந்துச்சு..." என்று மிரட்ட,
"வராது! வராது!" என்றாள் அவளும்.
சரி என்று ஒரு வார்த்தை கூறினால் அவனே இரு வீட்டாரிடமும் பேசி ஒன்பதாம் மாதம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து விடுவான்.
ஆனால் அதையும் செய்ய மாட்டேன் இங்கிருந்தும் போக மாட்டேன் என்பவளை என்ன செய்ய? என அவன் விழிக்க,
கல்யாணிக்கு அன்னை, தந்தை, அப்பத்தா என அவர்களுடன் சில காலம் இருக்க போவதில் மகிழ்ச்சி தான் என்றாலும், ப்ரணியை விட்டு செல்வதில் அவள் கவலை மேலே இருக்க, மகிழ்ச்சியை இப்பொழுது முழுதாய் அனுபவிக்க முடியவில்லை.
இங்கேயே இருக்கிறேன் என்றும் கூற முடியவில்லை. மனம் அங்கேயும் இங்கேயுமாய் தள்ளாட இரண்டு நாட்களாய் அதை நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இன்று அதிகமாய் தொண்டைக் குழி அடைத்தது.
வார்த்தையால் கூறாமல் பார்வையால் அவனை பின் தொடருபவளை ஒரு நேரத்திற்கு மேல் அப்படியே விட மனமில்லாமல் மேலே அழைத்து வந்துவிட்டான்.
ராணி சரவணனின் திருமண நாளுக்கு வந்துவிட்டு சென்ற பின் ஒரே ஒரு முறை மட்டுமே கல்யாணியும் ப்ரணித்தும் போய் தங்கி விட்டு வந்தனர்.
திருமணமான ஆறாம் மாதமே நாள் தள்ளி சென்றதை கவனித்து வீட்டினரிடம் பகிர்ந்து கொள்ள, அடுத்த பயணம் தடைப்பட்டது.
அன்னம், வடிவு அடிக்கடி வந்திருந்து பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்றனர்.
அரசன் தோன்றும் போதெல்லாம் வந்து பார்த்துவிட்டு செல்வார்.
ஏழாம் மாதம் வளைகாப்பு என்பது ராணியின் விருப்பம்.. சிலருக்கு ஒன்பதாம் மாதம் ஆரம்பத்திலேயே நிறைய உபாதைகள் வரும் அந்த நேரம் சிறப்பாய் செய்து விட முடியாது என இப்பொழுதே நடத்தி இருந்தார்.
"சரி! கோச்சிக்காத! ரிலாக்ஸ்.. இதை குடி" என நீட்ட, என்ன என்றே பாராமல் ஒரே மடக்கில் குடித்து விட்டாள்.
அதில் சிரித்தவன், "நீ கோபமா இருக்கன்னு தெரியுது குண்டம்மா.. ஆனா யார் மேல கோபமா இருக்கன்னு தான் உனக்கே தெரியல" என்று கூறி வேறு சிரிக்க,
"பேசாம போயிருங்க! ஊருக்கு போறேன்.. கவல இல்லாம பல்ல பல்ல காட்டி வெறுப்பேத்திகிட்டு" என்றவள் நியாபகம் வந்தவளாய்,
"குண்டம்மான்னு சொல்லாதன்னு எத்தனை வாட்டி சொல்ல.. செய்யிறதையும் செஞ்சிட்டு.. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை அம்மையும் மவனும் இத குடி, அத சாப்புடுன்னு தந்துட்டு குண்டம்மாவா தெரியுதேனா.. இப்போமே இப்படி.. இன்னும் நான் ஊருக்கு போனேம்னா ஆத்தா என்னைய பொறக்க புள்ளக்கி ஆறு மாசம் ஆன பொறவு தான் அனுப்பும்.. அதுக்குள்ள இன்னும் என்னென்ன பேரு வச்சு.. என்னைய மறக்க போறீங்க பாருங்க.." என்றவள் மனநிலை நன்றாய் அறிந்து மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான் அவளருகில்.
"இளிப்பு வேற.. சகிக்கமாட்டாம! அப்படி எல்லாம் இல்ல டி.. உன்கூட தான் இருப்பேன்னு சொல்ல வாயி வருதா?" என்று அவளே கேட்க,
"உனக்கு நான் சொல்லனுமா இல்ல செய்யணுமா?" என்றான் அப்போதும் புன்னகைத்து.
"பாக்க தான போறேம் என்னத்த செய்யுதியன்னு" என்றவளை தோளோடு அணைத்தவன்,
"இவ்வளவு பேசினதுக்கே நீ ரெஸ்ட் எடுக்கணும்.. ஜஸ்ட் கீப் குயிட்.." என்றவன் தட்டிக் கொடுக்க, தூக்கம் சுத்தமாய் இல்லை என்றாலும் அவன் மேல் சாய்ந்து அமைதியாய் இருந்தாள்.
----------------------------------------------------------
"கல்யாணி எப்படி இருக்கா டா?" அலைபேசியில் ராணி கேட்க,
"உள்ளே கூட்டிட்டு போனாங்க ம்மா! இன்னும் எதுவும் சொல்லலை.. கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்!" ப்ரணித் கேட்க,
"பக்கத்துல வந்துட்டோம் டா.." என்றார் ராணி.
"ப்ரணித் மட்டும் இல்லாமல் வடிவு, அன்னம், அரசன், என அனைவருமே பயத்தில் நிற்க, யாருமே யாருக்குமே ஆறுதல் கூற முடியவில்லை.
முந்தைய நாள் கல்யாணியை பார்த்துவிட்டு செல்வதற்காக வந்திருந்தான் ப்ரணித்.
இரவு பத்து மணி அளவில் வலி இருப்பதை போல் தெரியவே மருத்துவமனை அழைத்து சென்றிருக்க, பிரசவ வலி தான் என்றும் இன்னும் வலி வர வேண்டும் என்றும் கூறி அடுத்த நாள் காலை பத்து மணி வரையுமே தவிக்க வைத்துக் கொண்டிருந்தனர் மருத்துவமனையில்.
"ண்ணா!" என்று ஸ்ரேயாஸ் வர,
"வாங்க அண்ணி!" என்றார் அன்னம்.
"என்னன்னே சொல்ல மாட்றாங்க ம்மா.. நீங்க கேளுங்க" என்று ப்ரணித் கூற,
"வலி வந்துடுச்சுன்னு உள்ள கூட்டிட்டு போனாங்க.. பரணி பயந்து தான் சொல்லுதாம்" என்றார் வடிவு. அவர் முகத்திலும் அப்பட்டமான கவலை.
"சரி சரி! ஒன்னும் இல்ல டா.. குழந்தை பிறந்ததும் தானே சொல்லுவாங்க.. வலி வர தான் செய்யும்.. வேற வழி இல்ல டா.. நீ பயப்படாத" என்று ராணி கூற, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான் ப்ரணித்.
பெண் குழந்தை ஏன செவிலியர் வந்து காட்டி செல்ல, குழந்தையை பார்த்தவன் உடனே கல்யாணியைக் கேட்க, அவளின் நலன் தெரிந்த பிறகே ப்ரணித்திற்கு இன்னுமாய் மகிழ்ச்சியும் நிம்மதியும்.
"காங்கிரட்ஸ் அண்ணா!" என்று ஸ்ரேயாஸ் அணைத்துக் கொண்டவன்,
"பியூட்டி! நீங்க பெரிய பாட்டி ஆகிட்டீங்க!" என்றான் வடிவிடம்.
"அதுக்கு பேரு பூட்டி டா!" என்று சரவணன் சிரிக்க,
"பியூட்டி இப்போ பூட்டி! நல்லாருக்குல்ல?" என்றவன் அந்த இடத்தை மாற்றி இருந்தான்.
குழந்தையை முதலில் ப்ரணித் கைகளில் தர, அதை கைகளில் ஏந்தியவன் எங்கே விட்டு விடுவோமோ என்று பயந்து பிடித்திருக்க, ஸ்ரேயாஸ் அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
"ம்மா! பூ மாதிரி வெயிட்லெஸ் ம்மா!" என்று கூற,
"அண்ணி இருந்தா இந்நேரம் உன்னை கலாய்ச்சிருப்பாங்க ண்ணா!" என்றான் ஸ்ரேயாஸ்.
குழந்தையை வடிவு கைகளில் கொடுத்தவன் கேட்டுக் கொண்டு உள்ளே செல்ல, இவன் பேசுவதை கேட்டு சிரித்தபடி தான் சாய்ந்திருந்தாள் அவள்.
"பொறந்த குழந்த என்ன முப்பது கிலோ வெய்ட்டா இருக்கும்" லேசாய் வலியில் முகம் சுருக்கினாலும் அவள் கேட்டுவிட,
"பேசாம இரு டி.. வலிக்குது இல்ல?" என்றான் அவன் அவள் கைகளைப் பிடித்தபடி.
"வயித்துல பேசி பேசி பொண்ணு தான்னு அவளே உங்ககிட்ட சொல்லி இருக்கா.. சரியான ஆளுங்க தான் ரெண்டும்" என்று இன்னும் பேச,
"ஷ்ஷ்! வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.
ரெண்டு மூணு நாள் மூச்.. உனக்கு நல்லா சரி ஆகணும்.." என்றான் அப்போதும்.
"அப்போ நீங்க அவகிட்ட பேச கூடாது.. சரியா?" கல்யாணி கேட்க,
"யாருகிட்ட டி பொறாம படுற?" என்றான் நெற்றி முட்டி.
"ஏற்கனவே பேரு வைப்பேன்.. செல்லம் கொஞ்சுவேன்னு சொல்லிக்கிட்டு இருந்திங்க.. ஏத்த மாதி பொண்ணு வேற.. இனிமே எங்க என்னைய கவினிப்பிங்க?" கல்யாணி.
"நல்லபடியா பாப்பாவோட ஊருக்கு வா.. யாரை கவனிக்கிறேன்னு தெரியும்.." என்றான்.
"இவ பொறக்கும் போது நீங்க ஊருல இருப்பிங்க.. என் கூட இருக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்.."
"என் பொண்ணு எனக்கு எல்லாம் சொல்லிட்டா.. எப்புடி?" என்று ப்ரணித் காலரை தூக்க,
"ரொம்பத்தான்!" என்று கூறும் நேரம் வடிவும் அன்னமும் என அனைவரும் உள்ளே நுழைந்தனர்.
இனி இவர்களின் பயணம் இன்னும் ரசிக்க கூடியாதாய் மாற்றி விடுவாள் ப்ரணித்தின் குட்டி தேவதை.
சுபம்..
-ரித்தி-