அத்தியாயம் 3
"ஆபீஸ்ல அழகான பையன்னு எவ்வளவு சலிச்சு எடுத்தாலும் ப்ரணித் மட்டும் தான் அந்த லிஸ்ட்ல இருப்பான்.. அப்புறம் ஏன் டா அவனுக்கு மட்டும் லவ் செட் ஆக மாட்டுது?" அருண் பேனாவை விரல்களுக்கு இடையில் வைத்து சுழட்டியபடி ஆபீஸ் சுழலும் நாற்காலியில் ஆடிக் கொண்டு கேட்க,
"இந்த ஆராய்ச்சியை எல்லாம் வேலைல காட்டி இருந்தா நீ டிஎல்லாவாச்சும் ஆகி இருக்கலாம்" என்றான் அவன்புறம் திரும்பி விவேக்.
"அதெதுக்கு நமக்கு.. வந்தோமா ஜாலியா இருந்துட்டு கொஞ்சமா வேலையை பார்த்துட்டு போனோமான்னு இருக்கனும்.. என்ன டா ப்ரணி?" அருண் கேட்டதும்,
"எக்ஸக்ட்லி டா.. என்ஜோய் பண்ற வயசுல ஓவர் கமிட்மென்ட்ஸ் எதுக்கு?" என்றான் சிஸ்டமை சட்டவுன் செய்தபடி ப்ரணித்.
"காசு இருக்கவன் என்ன வேணா சொல்லலாம் டா" நியாயமாய் பேசினான் விவேக்.
"நான் கிளம்புறேன்.." என்ற ப்ரணித்தை,
"ஒன் மினிட் ப்ரணி!" என நிறுத்தினாள் ஹரிணி.
"ஹாய் ஹரி! யாஹ் டெல் மீ" ஸ்டைலாய் நின்று கேட்டவனைப் பார்த்து கொஞ்சமாய் பொறாமை தான் நண்பர்களுக்கு.
"என்ன டா இங்கிலிஷ்ஷு அவன் வாய்ல நாட்டியம் ஆடுது" விவேக் கேள்விக்கு,
"பொண்ணு ஹை கிளாஸ்ல.. ஆடத் தான் செய்யும்" என்றான் அருண்.
"கூப்பிடுறதை பார்த்தியா? என்னவோ ரொம்ப கிளோஸ்ன்ற மாதிரி ஹரியாம்.. அந்த பொண்ணு வேலைக்கு சேர்ந்தே ரெண்டு நாள் தான் ஆச்சு" விவேக் வார்த்தையில்,
"புகை வெளிய வருது டா.. கொஞ்சம் அடக்கி வாசி" என்றான் அருண்.
கண்களை நாலா புறமும் சுழற்றிய ஹரிணி "ஐ வாண்ட் டு டாக் டு யூ அலோன்" என்று கூற, அங்கே இருந்த இருவருக்கும் நன்றாய் புரிந்தது.
"நம்மள தான் டா கிளம்ப சொல்றா.." அருண் கூற,
"வெயிட் பண்ணு" என்ற விவேக் கண்டு கொள்ளாதவனாய் இருக்க,
"ஷால் வி கோ டு அ காபி ஷாப் அண்ட் டாக்?" ப்ரணி கேட்க,
"யாஹ் சூர்!" என்று கூறி அவனோட சென்றிருந்தாள் ஹரிணி.
"இவனுக்கு ஏன் லவ் ஒத்து வரலன்னு இப்ப தெரியுது டா" என்றான் அருண்.
"என்ன தெரியுது?" விவேக் கேட்க,
"லவ்வு மட்டும் தான் செட் ஆகல.. மத்தபடி அவன் பார்த்தாலே விழுந்துடுதுங்க.. தோ! இப்ப நான் வயித்தெரிச்சல் படுற மாதிரி எவனெல்லாம் பட்டு சாபம் விட்டானோ? சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடுமா?" அருணின் கேள்விக்கு,
"அது சரி.. இதாவது இவனுக்கு ஒர்க் அவுட் ஆகட்டும்.. வா கிளம்பலாம்" என்றபடி அருணோடு வெளி வந்தான் விவேக்.
"செட் ஆகிடும்னு நினைக்குற?" அருண் ஆகிவிடுமோ என்பதைப் போல கேட்க,
"வாய்ப்பில்ல... இவனுக்கு வாய்ல வாஸ்து எல்லாம் நல்லாருக்கு.. ஆனாலும் வளர்ப்பு சரியா இருக்கு.. காதலிக்கணும்.. கல்யாணமும் பண்ணிக்கணும்.. காதலிக்குற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கணும்.. இதெல்லாம் தான் அவனோட ரூல்ஸ்" விவேக் கூற,
"பதில் ஒன்னு தானே டா?" அருண் குழம்பினான்.
"இதுக்கு தான் நீ சிங்கிளா இருக்க பாய்.. சிலருக்கு தான் இந்த கேள்விக்கெல்லாம் ஒரே பதில்.. பலருக்கு பிக்கப்பு.. ட்ரோப்பு.. எஸ்கேப்பு தான் பதில்.. அவனே வந்து சொல்வான்" என்றவன் தன் பைக் நோக்கி செல்ல,
பேசி, சிரித்து ஹைஃபை அடித்து செல்லும் ப்ரணித், ஹரினியைப் பார்த்தபடி தன் பைக்கை உதைத்தான் அருண்.
"இவன் அழகா பொறந்துட்டு நமக்கு வேற பிரண்ட்டாகி தொலைஞ்சுட்டானே! ஓவரா டஃப்பு கொடுக்குறான்" நினைத்தபடி அருண் இருக்க,
"அந்த பக்கம் பார்த்தா மனசு கண்டதையும் நினைக்க தான் செய்யும்.. மூடிட்டு கிளம்பு.. நாளைக்கு பார்க்கலாம்" என்று பறந்திருந்தான் விவேக்.
சுற்றி இருந்த ஜோடிகளுடன் தாங்களும் ஒன்றாய் அமர்ந்திருந்தனர் ப்ரணித், ஹரிணி.
"சோ! யாஹ்.. சொல்லு ஹரி" கோல்டு காபியை கையில் வைத்துக் கொண்டு ப்ரணித் கேட்க,
"யூ ஆர் சோ ஹண்ட்ஸம் மேன்!" என்றாள் பார்வையால் கதை பேசி ஹரிணி.
"ம்ம்ஹ்ம்ம்! தேங்க் யூ.. அண்ட் யூ ஆல்சோ வெரி பிரெட்டி.." ப்ரணித் பார்வையில் வர்ணிக்கிறான் என அவள் நினைக்க, அவன் ரசிக்கிறான் என்பது தெரியவில்லை.
"ஓகே! லெட்ஸ் டேட்?" ஹரிணி இழுக்காமல் உடனே கேட்டுவிட, பார்வை மாறியது ப்ரணித்திடம்.
"ஓஹ் நோ! ப்ச்! நீ லவ் யூ சொல்லுவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணினேன்" ப்ரணித் தன் விருப்பமின்மையை தலையசைப்பில் காட்ட,
"கமான் ப்ரணி! எந்த காலத்துல இருக்க நீ?" அவனை கிண்டல் செய்துவிட்டவளாய் அவள் சிரிக்க,
"ஹ்ம்! மே பீ! பட் ஐ லவ் யூ" என்றான் உடனே..
"இந்த நகையை யாரு டி போடுவா.. இடும்பு பண்ணாத.. உன் அப்பா இன்னைக்கு பாத்து வீட்டுல இருக்காக" அன்னம் கல்யாணியை கோபமாய் கூற,
"அடுப்புல என்னத்த எரிச்சுட்டு இங்க வந்து காயுத? போயி உன் வேலை சோலிய பாரு.. பேத்திய நான் பாத்துகிடுதேன்" வடிவு கூறவும் தலையெழுத்தை நொந்து உள்ளே சென்றார் அன்னம்.
'இவுக பேச்ச மட்டும் அவ கேட்டுடுதாப்புல தான்.. நல்லா வாங்கி கட்டட்டும்' மாமியாரை கூறிக் கொண்டே வேலைகளை முடித்தார்.
ஏத்தா! அதான் அப்பன் சொல்லிட்டு போறான்ல.. வந்து வைய போறான்.. நகைய போடு" வடிவு கெஞ்ச,
"நானே கடுப்புல இருக்கேன்.. போயிரு அப்பத்தா! என்னத்த சொல்லுவேன்னு எனக்கு தெரியாது" கல்யாணி ஏக கடுப்பில் எச்சரித்தாள்.
"நான் போறேன்.. நீ இதை எல்லாம் போட்டு தயாரா இரு.. ஏட்டி அவன் இப்ப வந்துருவான்.. உன்னய காரணம் இல்லாம சொல்லுவனா?" வடிவு கூற,
"என்னத்த காரணம் சொல்லுவ? அதான் அந்த பைய வரலியாம.. நானும் கேட்டுகிட்டு தான இருந்தே என்றவள் பையன் என குறிப்பிட்டது மாப்பிள்ளையை.
"அதுக்கு மூஞ்ச தூக்கிட்டு வச்சுட்டு இருந்தன்னா உன் அப்பன் ஒரு வாரத்துக்கு ஐயனார் மாதிரி மூஞ்சோட சுத்துவான் டி"
"முதல்ல நீ வெளிய போ.. சும்மா எதையாவது சொல்லிக்கிட்டு.." என்றவள் என்ன செய்யலாம் என படு தீவிரமான சிந்தனையில் இருந்தாள்.
"நான் ஒன்னு சொல்லட்டா டி?" வடிவு மெதுவாய் கேட்க, கல்யாணி முறைக்கவும்,
"சொல்லுதேன் கேளு.. புடிக்கலையின்னா செய்யாத"
"சொல்லு.. அதான் நினைச்சிட்டியே" என்றாள்.
"அந்த பைய அம்மை அப்பனோட தம்பிக்காரனும் வாரானாம்.. நான் அவன்கிட்ட நைசா பேசி..."
"ஓடி போவ போறியா?"
"வாய ஒடச்சி ஒடப்புல போட்டுப்புடுவேன் டி.. சிவசாமி பொண்டாட்டிட்ட என்ன வார்த்த வருது" வடிவு பொங்கி எழ,
"சரி சரி சொல்லு பேசி?" என்று கேட்கவும்,
"அதாம் டி.. பேசிட்டு அவேன் அண்ணங் கடங்காரன் போனு நம்பர வாங்கியாரேன்.. நீ அவங்கிட்ட பேசி முடிச்சிரு" வடிவு கூற,
"இது சரியா வரும்னு நினைக்க?" என்றாள் யோசித்தபடி.
"இல்லினா வேற ரோசன (யோசனை) வச்சுருக்கியாக்கும்?"
"அது இருந்தா உனட்ட எதுக்கு நான் பொலம்பிட்டு தெரியுதேன்.."
"சரி டி.. செய்யுவோம்.. மத்தத பொறவு பேசுவோம்.. உன் அப்பனுக்கு தெரியாம எல்லாம் நீ நினைக்க மாதி நடக்கணுமுன்னா இப்படி எதையாவது பண்ணுனாதா.. இல்லின்னா உன்ன என்னைக்கு நான் பாக்க வாரது" என்றவருக்கு நினைக்கும் போதே கண்கள் கலங்க, கைகள் நடுங்கியது.
வாய் பேச்சு முதல் வாய் சண்டை வரை என இவளுடன் மல்லுக்கு நின்றே பழகிய அந்த கால பெண்மணிக்கு அவளை தன்னுடைய ஊரில் என்பதை விட தன் கண் பார்வையில் வைத்துக் கொள்வதே விருப்பம்.
"உடனே கண்ணுல தண்ணிய உடாத.. நான் எங்குட்டு போவ போறேன்.. நீ சொன்ன மாதி போய் நம்பர கொண்டார பாரு.. ஆனா கிழவி! எதாவது சொதப்பி வச்ச.. உனக்கு காரியம் பண்ணிட்டு தான் மறு வேல.." என்றவள் கூறியதை கவனியாதவர்,
"எம் புள்ள.. முடிவா தான் சொல்லுதியா? அவன் வேற சோதிகா புருசன் மாதி இருக்கான்.. இவன வுட்டா இவனே மாதி வேற ஒருத்தன் கிடைப்பானா உனக்கு?" நொடியில் குரங்கு மனம் புகைப்படத்தில் பார்த்த பிம்பம் மணத்தில் ஓடவும் வடிவு கேட்க,
"சோதிகா புருசன் எல்லாம் எனக்கு வேண்டாம்.. கண்ணுக்கு லட்சணமா இருந்தா தான் ஆச்சா? எனக்கு அப்படி எண்ணமெல்லாம் எதுவும் இல்ல அப்பத்தா.. இந்த ஊரவுட்டு ஒரு எட்டு தூரமா நான் போவக் கூடாது.. அம்புடு தான்" என்றவளை நெட்டி முறித்து நெற்றியில் இட்டுக் கொண்டார் வடிவு.
"வாங்க வாங்க!" அரசனின் குரல் சத்தமாய் துள்ளலாய் ஒலிக்க, வந்துவிட்டார்கள் என புரிந்து கொண்டாள் கல்யாணி.
"வாங்க எல்லாரும்.. வா டா ராசு.. எப்படி இருக்க? உன் பொஞ்சாதி எப்படி இருக்கா?" வடிவின் குரல் கேட்க,
"என்னத்த கேக்க சொன்னா என்னத்த கேக்குது பாரு" என தலையில் அடித்துக் கொண்டாள் கல்யாணி.
"கல்யாணி!" என உள்ளே வந்த அன்னம், நகை நட்டை எல்லாம் அணிந்து தயாராய் இருப்பவளைப் பார்த்து சந்தோசம் கொள்ளாமல் சந்தேகமாய் பார்த்தார்.
"என்னத்த டி பண்ணி தொலச்சிய ரெண்டு பேரும் சேந்து?" என்று மாமியாரையும் சேர்த்து கேட்க,
"என்னத்த பண்ணினா என்ன உனக்கு? நீ தான் என்னைய அனுப்பி வைக்க கிளம்பிட்டல்ல? போ போ! போய் காபிய கொண்டா.. நான் குடுத்துட்டு வாரேன்" என்றவளை என்ன செய்ய போகிறாளோ என பார்த்து வைத்து நின்றார் அன்னம்.
கல்யாணி காபியைக் கொடுத்துவிட்டு அங்கேயே நிற்க, மன நிறைவுடன் பார்த்துக் கொண்டார் ராணி.
"ஒரு போட்டோ எடுடா உன் அண்ணியை.. ஊருக்கு போய் அவன்கிட்ட காட்டலாம்" ராணி கூறவும்,
"அண்ணி!" என்ற அழைப்பில் திகைத்து கல்யாணி விழித்து திரும்பவும் அதை புகைப்படமாய் எடுத்து சேமித்துக் கொண்டான் ஸ்ரேயாஸ்.
"அவன் அப்படி தான் மா.. புடிச்சு போச்சுன்னா உடனே சேர்ந்துக்குவான்" சரவணன் கூற, பேச்சு பெரியவர்களுக்குள் தொடர்ந்தது.
கல்யாணி தன் அறைக்கு செல்லவும், டிங் என இரு கண்களில் ஒரு கண்ணை மட்டும் அடித்து ஸ்ரேயாஸை தன் பக்கமாய் வடிவு அழைக்க, பக்கென்று ஆனது ஸ்ரேயாஸிற்கு.
"ஹலோ!" கல்யாணியின் குரலுக்கு,
"யாஹ்! ஹூ இஸ் திஸ்?" என ப்ரணித் கேட்க,
"நான் கல்யாணி" என்றதும்,
"ஹே ஹாய் கல்யாணி.." என்றவனிடம்,
"நம்ம கல்யாணத்த பேச தான் கூப்ட்டேன்" என்று கூற,
"ஓஹ் எஸ்! பண்ணிக்கலாமே! ஐ லவ் யூ!" நூற்றி ஓராவது ஆளாய் கல்யாணியிடம் கூறி இருந்தான் ப்ரணித்.
தொடரும்..