அத்தியாயம் 4
கண்ணடித்து ஸ்ரேயாஸை வடிவு அழைக்க கொஞ்சம் அதிர்ந்தவன் பின் புன்னகைத்து அவர் பக்கமாய் எழுந்து சென்றான்.
"ஹாய் பியூட்டி!" என்று அவன் வடிவை அழைத்து வைக்க, நெளியும் வடிவைப் பார்த்து ராணியும் சரவணனும் புன்னகைக்க, அன்னம் தன் மாமியாரைப் பார்த்து வாய் மூடி சிரித்தார்.
'என்ன வாய் பேசுவிக.. சமஞ்ச புள்ளையாட்டம் நெளியுதத பாரேன்' தன்னோடு சிரித்து அன்னம் நினைத்துக் கொள்ள,
"ஸ்ரே! என்ன விளையாட்டு இது பெரியவங்ககிட்ட?" என்று சரவணன் கண்டித்தார்.
"ய்யோ ப்பா! பியூட்டி என்னை எப்படி கூப்பிடுச்சுன்னு தெரியுமா? இந்த ஷை எல்லாம் சும்மா.. இல்ல பியூட்டி?" என்று கேட்க,
"இளசா இருக்கியன்னு கொஞ்சம் அசால்ட்டா கூப்புட்டு வுட்டேன்.. நீ ஊருக்கே சொல்லுத" என்றவர் கேட்க வந்ததை அப்படியே விட்டுவிட உள்ளே கேட்டுக் கொண்டிருந்தவள் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
"பார்த்திங்களா? பியூட்டி செம்ம ஸ்ட்ரோங் அண்ட் போல்ட்.. சொல்லு பியூட்டி எதுக்கு கண்ணடிச்சு கூப்பிட்டீங்க?" என்று ஸ்ரேயாஸ் கேட்க,
சபை அமைதியாய் இவர்களை கவனித்துக் கொண்டிருக்க என்ன சொல்லவென விழித்தார் வடிவு.
"அட சும்மா சொல்லு பியூட்டி!"
"உன்னைய எதுக்கு கூப்டுவாவ? எல்லாம் உன் அண்ணங்காரன விசாரிக்க தான்.. உன்னைய மாதி வாய் நீளமா அவனுக்கும்?" வடிவு விசாரனையை ஆரம்பிக்க,
"ஏத்தா! அதாம் பையன் போட்டோவ காட்டுனாவ இல்ல.. கண்ணு தெரியலையோ?" என்றார் ராசு.
"பொறு டா.. அதான் கேட்டுகிட்டு இருக்கேம்ல? போட்டோவ பாத்தாக்க அதுல பேச்சு எப்படி இருக்கும்னுட்டு தெரிஞ்சுதாக்கும்?" என்றார் அவரை பேச விடாமல்.
"விடுங்க ராசு ண்ணே! எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கட்டும்" சரவணன் கூறவும்,
"நீ சொல்லு சிரே!" வடிவு கூறவும் அனைவரும் பக்கென்று சிரிக்க,
"ஏன்ன்ன்? இப்போ என்னத்த நான் சொல்லிட்டேன்னு சிரிக்கிக?"
"பியூட்டி! என் பேரு ஸ்ரே.. கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்"
"இந்தா பாரு! நக்கல் நையாண்டி எல்லாம் எனட்ட காட்டாத.. என்னத்த பேர வச்சுருக்கான் உன் அப்பன்.. புரியாத பாசையில.. என் பேத்தி பேர் தெரியுமா? கல்யாணி.. கூப்புட எவ்வளவு நல்லா இருக்கு.. ஆமா அவன் பேரு என்னது? அதாது வாயில நுழையுமா?" வடிவு நக்கல் செய்து பேசிக் கொண்டிருக்க,
"அது வாயில நுழைஞ்சா என்ன வயித்துல நுழைஞ்சா என்ன? கிழவிய.." என உள்ளிருந்து கடுப்பாகிக் கொண்டிருந்தாள் கல்யாணி.
"அது சரி! சென்னைல பியூட்டிக்கு புரியுற போல பேர் வச்சு காலேஜ் போனா என்னைப் பார் என் பேரை பார்னு நிக்க வேண்டியது தான் இல்லப்பா?" என்ற ஸ்ரேயாஸ்,
"அண்ணனோட டீடெயில்ஸ் தெரியனுமா உங்களுக்கு?" என்றவன் வடிவின் முறைப்பில்,
"அண்ணா பேரு ப்ரணித்.. ஐடி ஃபீல்ட்டு.. இன்னொன்னு என்னவோ கேட்டீங்களே! ஹான்! வாய் நீளமா? அது..." என்று இழுத்தவன்,
"ஏன்ப்பா! என் வாய் நீளமா இல்ல அண்ணா வாய் நீளமா?" என்று கேட்க,
"உன்னய மாதி எல்லாம் பேசுனாம்னா பொண்ணு கிடையாது அவனுக்கு.. சொல்லி வையி" என்றதும்,
"அய்யோ பியூட்டி! அவன் என்னை மாதிரி இல்ல.. என்னை விட ஜாஸ்தி.. கொஞ்சம் அடமன்ட்"
"கொஞ்சம் அரமெண்டலா? தெரிஞ்சா என் பேத்திக்கு கேட்டு வந்துருக்கீங்க?" என்று வடிவு அங்கே ஆட்டமாய் ஆடிக் கொண்டிருந்தார்.
அவருக்கு விளக்கம் கொடுத்து முடிக்கவே படாதபாடு பட்டாலும் சலித்துக் கொள்ளவே இல்லை ஸ்ரேயாஸ்.
"எங்களுக்கு இந்த சம்மந்ததுல மனப்பபூர்வமான சம்மதம்.. நீங்களும் ஒரு நல்ல நாள் பார்த்து சென்னைக்கு வாங்க.. அங்கே உங்களுக்கு எல்லாம் திருப்தியா இருந்தா..." என்று ராணி கூற,
"எல்லாம் என்ன எல்லாம்? மாப்ளய ஒருவாட்டி நேருல பாத்துட்டு வந்துட்டா உனக்கு நிம்மதியா போகும்ல? அதத்தான் தங்கச்சி சொல்லுது" என்றார் ராசு.
"போவலாம்.. ஆனா எல்லாரும் போவணும்னா.. நான் பாத்துட்டு என்னைக்குன்னு சொல்லுதேனே!" என்று அரசன் கூற,
"நீங்க குடும்பத்தோட கண்டிப்பா வரணும்.. எல்லாம் நல்லபடியா முடியும்னு நாங்க நம்புறோம்" ராணி கூற,
"ராணி எப்பவும் சரியான முடிவு தான் எடுப்பா.. அவளுக்கு இந்த சம்மந்தமும் ரொம்ப விருப்பம்.. இதுக்கு அப்புறம் நீங்க தான் சொல்லணும்" சரவணன் கூற,
"என்னத்தா! ஒருக்கா சென்னைய பாத்துட்டு வந்துருவோமா?" தாயிடம் அரசன் கேட்க, அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் கல்யாணி.
நிச்சயம் அவளுக்கு தெரியும் வடிவு ஊரை சுற்றிப் பார்க்கவேனும் சரி என்று கூறி இவள் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவார் என்று.
நினைத்தது தவறில்லை என்று நிரூபித்து இருந்தார் வடிவு.
"சந்தோசமா போய்ட்டு வருவோம்.. எம் பேத்தி வாழப் போற வீட்ட நான் பாக்காமலா?"
வடிவு தன் மகன் சபையில் தன் முடிவைக் கேட்டு தன்னைப் பெருமைப் படுத்தியதாலா இல்லை கல்யாணி நினைத்தைப் போல ஊர் சுற்றிப் பார்கவா! ஏதோ ஒரு காரணத்தில் உடனே மனதை மாற்றிக் கொண்டிருந்தார் வடிவு.
"எப்புடித்தான் சட்டு சட்டுன்னு மனசு மறுதாகலோ! அங்க ஒருத்தி இவிகள நம்பி தான் கிளம்பி உக்காந்துருப்பா" தன் மகளை சரியாய் கணித்து இருந்தார் அன்னம்.
"ரொம்ப ரொம்ப சந்தோசம்.. அப்போ நீங்க அங்கேயே தங்க நாங்க ஏற்பாடு பண்றோம்" சரவணன் கூற,
"இல்ல இல்ல! அது சரி வராது.. அன்னமும் எப்படியும் வரணும்.. கல்யாணியையும் தனியா விட்டுட்டு வர முடியாது.. அதுனால அங்க அன்னத்தோட சித்தப்பா பையன் ஒருத்தன் இருக்கான்.. அங்கயே நாங்க தங்கி வந்துக்குவோம்.. எதுவும் நினைச்சிக்காதிய" அரசன் கூற,
"பரவால்லய மனுசனுக்கு நம்மளையும் கூட்டிட்டு போவணும்னு நினைப்பு வந்திருக்கு" எப்போதும் போல நினைத்து மட்டும் கொண்டார் அன்னம்.
"கை நனைக்கும் முன்ன பொண்ணோட போய் எப்புடி தங்குததுன்னு அரசன் நினைக்கான்.. அதுவும் சரித் தான.. ராசு கூற,
"பியூட்டி சென்னை வரப் போகுதா! அப்ப சென்னை ரெண்டாக வாய்ப்பிருக்கு.." ஸ்ரேயாஸ் கூற,
"இங்குன பாரு! என்னையவே பேசிகிட்டு திரியாத.. நான் அங்கன வரையில என்னென்ன வேணுமுன்னு சொல்லுதேன்.. வாங்கி வையி.. பொறவு பொண்ணு கிடைக்காது உன் அண்ணங்காரனுக்கு" வடிவு கூற,
"ப்ரோக்கு பொண்ணு கிடைக்குதோ இல்லையோ! எனக்கு நீ வேணும் பியூட்டி! அதுக்காகவே எல்லாம் செய்யுறேன்" ஸ்ரேயாஸ் கூற,
"ச்சீச்சீ! என்ன வார்த்தைய சொல்லுத! நான் சிவசாமி பொண்டாட்டில!" என்ற வடிவு அங்கே சிரிப்பு சத்தம் கேட்கவும்,
"இவனே இப்புடின்னா இவன் அண்ணங்காரன் எப்புடி இருப்பானோ!" என்று கூறிய போது தான் கல்யாணிக்கு நம்பர் வாங்கித் தருவதாய் கூறிய வாக்கும் சென்னைக்கு செல்ல சம்மதம் கூறிய வாக்கும் நியாபகம் வர, கல்யாணியின் காளி அவதாரமும் கண்முன் வந்தது.
'இன்னைக்கு என் ஜோலிய முடிச்சிருவாளே!' நினைத்துக் கொண்டவர் சபையில் கொடுத்த வாக்கை மீற முடியாமல் அமைதியாகிப் போனார்.
"சரிங்க! அப்ப நாங்க காத்திருக்கோம்!" என்று கூறி சரவணன் குடும்பமாய் வெளியேற,
"மரியாதை தெரிஞ்ச குடும்பமா இருக்கு.. ரெண்டாது பையன் துருதுருன்னு தான் இருக்கான்.. மாப்ளயையும் பாத்துட்டு வந்து முடிவு பண்ணிக்குவோம்.. உன் சித்தப்பா மவனுக்கு போனப் போட்டு அடுத்தவாரம் ரெண்டு மூணு நாளைக்கு நாம வாரதா சேதி சொல்லிரு.." என்ற அன்னம் சென்னைக்கு அடுத்த வாரம் செல்வதை முடிவு செய்து கூறிவிட்டு செல்ல,
"யாத்தே! அவள எந்த மூஞ்ச வச்சுக்கிட்டு பாப்பேன்.. எல்லாத்தையும் கேட்டுகிட்டுல்ல இருப்பா" என்ன வடிவு கல்யாணி அறையையேப் பார்த்தபடி நிற்க,
பார்த்த அன்னமும் "நீங்களாச்சு! அவளாச்சு!" என்பதைப் போல உள்ளே சென்றுவிட்டார்.
"என்னடா அவனைப் போய் உத்து உத்து பாத்துட்டு இருக்க.." விவேக் அருணிடம் கேட்க,
"இல்ல! நேத்து அந்த பொண்ண கூட்டிட்டு போனானே! ஏதாச்சும் வாய திறக்குறானான்னு தான் பார்த்துட்டு இருக்கேன்" என்றான் அருண்.
"கேட்டாலே பாதி உண்மையை தான் சொல்வான்.. இப்டி குறுகுறுன்னு பார்த்தன்னா உனக்கும் ஐ லவ் யூ தான் சொல்வான்" என்று விவேக் கிண்டல் செய்ய,
"அதுவும் சரி தான்.. பிரேக் டைம்ல டீடெயிலா கேட்டுடணும்.. இல்லைனா தல வெடிச்சுடும்" என்றான் அருண்.
தீவிரமாய் வேலையில் ஈடுபட்டு இருந்தான் ப்ரணித்.
ஓய்வுக்கான அந்த சில நிமிடங்களில் வளாகத்திற்கு உள்ளாகவே சுற்றுவது வழக்கம் நண்பர்களுக்கு.
அருண் விவேக்குடன் வந்து அழைக்க, "நான் வர்ல டா!" என்றவன் வேலை செய்யும் வேகம் இருவரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வைத்தது.
"டேய்! டென்ஷனா இருக்கியா என்ன?" விவேக் கேட்க,
"ஹ்ம்! லைட்டா" என்றான் மறையாமல்.
"சரி! கீபோர்ட் போய்டாம.. வந்து பார்த்துக்கலாம் வா" விவேக் அழைக்க,
"ப்ச்!" என்றவன் நாற்காலியில் ஒருமுறை முழுதாய் சாய்ந்து நிமிர்ந்தான்.
"என்னடா அதிசயமா அப்செட் எல்லாம் ஆகுற?" அருண் கேட்க,
"வீட்ல யாரும் இல்ல டா செம்ம காண்டா இருக்கு" என்றான் கொஞ்சம் மட்டும் உண்மையாய்.
பாதி உண்மை தான்.. வீட்டில் அன்னை இருந்திருந்தால் நேற்று நடந்ததில் எதுவும் இப்பொழுது நியாபகம் இல்லாத அளவுக்கு பேசி தீர்திருப்பான்.
"இருக்கட்டும்.. ஆனா அதுக்கு மட்டும் காண்டான மாதிரி இல்லயே! அந்த முருங்கைக்காய் எதுவும் சொல்லிச்சா என்ன?" ஹரிணியை அவ்வாறு விவேக் கேட்க,
"ஹ்ம்!" அதற்க்கும் மறைக்காமல் உண்மையைக் கூறினான்.
"சரி பார்த்துக்கலாம் வா டா.. இதுக்கெல்லாம் உட்கார்ந்து இப்படி வேலை செஞ்சா பேட்ஜ குத்தி ஃபாரின் அனுப்பிடுவானுங்க.." என்றபடி இழுத்து சென்றான் விவேக்.
"டென்ஷன்னா லீவ போட்டு லோங் டிரைவ் போனும்.. அதானே பசங்க பழக்கம்.. நீ பண்றத எவனாச்சும் பாத்தான்னா அவ்வளவு தான்" என்ற விவேக், காபிக்காக டோக்கனுடன் செல்ல,
"என்னவாம் அந்த டிரம்ஸ்டிக்கு?" என்றான் அருண்.
"எல்லாம் சொல்றது தான்.. ரிஜெக்டடு.. ஆனா அவ சொன்னது தான்!" என்று டேபிளில் தட்டோ தட்டென்று தட்ட,
"ப்ச்! அம்மா எப்ப வர்ராங்க டா?" என்று பேச்சை மாற்றினான்.
"மார்னிங் வந்துடுவாங்க.." என்று கூறவும்,
"ஹாய் டா!" என்று வந்து அமர்ந்தாள் மது.
"ஹே மது! நீ எப்ப வந்த? கவனிக்கவே இல்ல?" என்று காபியுடன் விவேக் வர,
"ஒன் வீக் லீவ்ல கொஞ்சம் புஷ்டி ஆயிட்டா பாரேன்" என்று அருணும் கூற,
"அதை விடுங்க டா.. ஆமா சார் நேத்து சதம் அடிச்சிட்டார் போல" என்று ப்ரணித்தைப் பார்த்து கண் சிமிட்டினாள் தோழி மது.
தொடரும்