• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழி 9

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 9

"எம்த்தா இது என்னது இது? மண்டபம் தான? அரண்மன மாதில்ல இருக்கு.." வடிவு கேட்க,

"அப்படி தான் செட் பண்ணி இருக்காங்க ஆச்சி.." என மண்டபத்தின் வெளிப்புறத்தை சுட்டி காண்பித்தாள் ரெஜினா.

"கூறில்லாத பயலுவ.. கல்யாணத்துக்கு செலவு பண்ண சொன்னா கல்யாணத்த பண்ண மண்டவத்துக்கே மொத்த செலவையும் பண்ணி இருப்பானுவ போல"

"ப்ச்! பேசாம வா அப்பத்தா!" என கல்யாணி கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"இங்குன ஒன்னும் சரி இல்ல புள்ள.. இத பாக்கயா ஓடியாந்தேன்.. அம்மாம் பெரிய மேடையில தெரியாதது இந்த திரையில தெரியும்னு மாட்டி இருக்கானுவ.. பட்டப்பகல்ல இவ்வளவு வெளிச்சமா கண்ணு கூசுத மாட்டுக்கு லைட்டுவ.. பொண்ணு மூஞ்சே தெரியாத மாட்டுக்கு அம்புட்டு பவுடரு"

மொட்டு மொட்டுவென ஒரு இடத்தில் அமர பிடிக்காமல் வடிவு எதாவது கூறிக் கொண்டே இருக்க,

"இங்கே எல்லாம் கல்யானம்னா இப்படி தான் ஆச்சி.. எல்லாமே ஆர்ட்டிஃபிஷியல் தான்.. இந்த கிஃப்ட்ட மட்டும் குடுத்துட்டு நாம வெளில எங்கயாச்சும் போய்ட்டு வரலாம்" என்றாள் ரெஜினா.

"நான் வரல ரெஜி.. நீ போயி குடுத்துட்டு வா.. நானும் அப்பத்தாவும் இங்கன இருக்கோம்" கல்யாணி கூற, வடிவும் மறுத்துவிட்டதால் தோழியுடன் கொடுத்துவிட்டு வருவதாக சென்றுவிட்டாள் ரெஜினா.

"பேசாம வீட்லயே இருந்துருக்கலாம் போல.. உன் மருமகள உசுப்பேத்தி இங்கன வந்த என்ன என்னத்த செய்ய" என கல்யாணி கேட்க,

"வர வர என் கண்ணு சரியாவே தெரிய மாட்டுக்கு த்தா.. எங்கன பாத்தாலும் என் கண்ணுக்கு சோதிகா புருசன் தான் அம்புடுதான்" கல்யாணி பேசியதை விடுத்து வடிவு கூற,

"மனசு நினைக்கிதத தான் கண்ணுல காட்டுமாம்.. உன்னைய யாரு அவன நினைக்க சொன்னது" என்றவளும் திரை பக்கம் பார்த்தபோது அவன் தான் தெரிந்தான்.

"அப்பத்தா! அது அவன் தான!" என்று கல்யாணி கேட்க,

"அப்போ உன் மனசிலயும் அவன் தானாக்கும்?" என்று வடிவு கிண்டல் செய்ய,

"ஏ லூசு அப்பத்தா! அங்கன பாரு ராணி அம்மாவ" என்ற திக்கில் விவேக், அருணுடன் ப்ரணித் பரிசினை மணமக்களிடம் கொடுக்க, அவர்கள் அருகே ராணியும் சரவணனும்.

"யாத்தே! நிசத்துல இன்னும்ல நல்லாருக்கான்.." வடிவு கூற,

"மூஞ்சி! இவன் எப்டி இங்கன?"

"இது அவே ஊரு டி.. அவே உன்னைய கேட்டாலும் தகும்"

"அப்பத்தா!" என பல்லைக் கடித்தவள்,

"முதல்ல வா இடத்த காலி பண்ணுவோம்" என்று எழுந்து கொள்ள,

"அவியல பாத்துட்டு ஓட சொல்லுத.. நல்லாவா இருக்கும்?" என்ற வடிவு ஒரு முடிவிற்கு வந்திருந்தார் தெளிவாய்.

"ஆன்! போயி வேணா நலம் விசாரிச்சுட்டு வாறியா?"

"விசாரிக்க தான் டி போறே.. பின்ன பாத்துட்டு அப்படியே போனா நல்லாருக்குமாக்கும்" என்றவர் கல்யாணி பேச்சை காதில் வாங்காமல் ராணியை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்.

"அடியே அப்பத்தா!" என்று எவ்வளவு கத்தியும் பயனில்லை கல்யாணிக்கு.

அங்கே அவ்வளவு பேசி முடித்து வடிவு ராணியை நோக்கி நகர ஆரம்பிக்க, அங்கே மேடையில் இருந்த ராணியுமே கல்யாணியை கண்டு கொண்டார்.

வேறு வழியும் இல்லை.. வடிவு சென்ற திசையிலேயே கல்யாணியும் நடக்க, இவர்களை நோக்கி சரவணனை இழுத்துக் கொண்டு வந்து விட்டார் ராணி.

முகம் முழுதும் புன்னகையாய் தங்களை பார்த்ததும் சந்தோஷத்தில் ஓடி வந்தவரைப் பார்த்து கல்யாணியும் புன்னகை செய்தாள்.

"கல்யாணி! நீ எப்படி இங்க? எதிர்பார்க்கவே இல்ல.. ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்களை இங்கே பார்த்ததுல.. நீங்க எப்படி இருக்கீங்க ம்மா? எங்க அண்ணனையும் அண்ணியையும் காணும்?" என முறை வைத்து முறையாய் ராணி அழைத்து கூட்டத்தில் அன்னத்தையும் அரசனையும் தேட,

"நாங்களும் உங்கள இங்கன நினைக்கல.. எப்படி இருக்கிய? நாங்க தான் வந்தோம். பொண்ணு உங்களுக்கு சொந்தமோ?" என வடிவு கேட்டார்.

"நம்ம ப்ரணி கூட தான் மது ஒர்க் பன்றா.. எல்லாரும் பிரண்ட்ஸ்.. ப்ரணி கூட வந்திருக்கான்.. எங்க கூட தானே வந்தான்" என்று ப்ரணித்தை தேட, வடிவும் அவனை சந்தித்து பேச தயாரானார்.

கல்யாணி மட்டும் கடனே என நிற்க,

"நல்லாருக்கியா மா? நீங்க எப்படி இங்கே?" என பேச்சுக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார் சரவணன்.

"ம்மா! என்ன நீங்க சொல்லாம இங்கே வந்து நிக்கிறீங்க.. லஞ்ச் மேல.. நீங்க போய் சாப்பிட்டு வந்து கிளம்புங்க.. நான் வர டைம் ஆகும்" என்று ப்ரணித் பேசியவன் வடிவை கவனிக்கவில்லை.

"அதை விடு டா.. இங்கே பார்த்தியா யார் வந்திருக்காங்கன்னு?" என்று மகிழ்ச்சியுடன் கூற, திரும்பி வடிவையும் தந்தை பேசிக் கொண்டிருந்த கல்யாணியையும் பார்த்தவன் விழிக்க,

"உனக்கு ஆச்சி டா.. இப்ப ஊருக்கு போயிருந்தோம்ல.. அங்கே தான் இருக்காங்க.." என்று வடிவை அறிமுகப்படுத்த,

"ஹாய் ஆச்சி! எப்படி இருக்கீங்க? எப்ப ஊர்லேருந்து வந்திங்க?" என நல்ல விதமாகவே பேசினான்.

"நல்லா இருக்கேன் ய்யா.. நீ எப்டி இருக்க?" என்று வடிவு முகமெல்லாம் புன்னகையாய் கேட்க, காதில் புகை வந்தது கல்யாணிக்கு.

"ம்ம் நீங்களே பாருங்க.. எப்படி இருக்கேன்?" என கைகளை விரித்து பற்களை காட்டி நின்றவன் முதுகில் அடித்த ராணி,

"பெரியவங்ககிட்ட இப்படியா பேசுவ?" என கேட்க,

"எது இது தான் பெருசா?" என நினைத்தாள் கல்யாணி.

"அப்புறம் இது அவங்க பேத்தி.. அன்னைக்கு பேசினேன்ல கல்யா..." என்று ராணி பேசிக் கொண்டிருக்க,

"ப்ரணி!" என தூரத்தில் இருந்து அழைத்துவிட்டான் விவேக்.

"டூ மினிட்ஸ்!" என அவர்களிடம் சைகை செய்த ப்ரணித்,

"ஹலோ!" என கல்யாணியிடம் மரியாதைக்கு கூறியவன்,

"சாரி ஆச்சி! வீட்டுக்கு கண்டிப்பா நீங்க வரணும்.. பிரண்ட்ஸ் கூப்பிடுறாங்க நான் கிளம்பறேன்.." என வடிவிடம் கூறியவன்,

"ம்மா! நீங்க சாப்பிட்டு வந்து எனக்கு கால் பண்ணுங்க.. பை ப்பா.. ஆச்சி பை" என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

'எப்டி ஆ'னு பாக்குது பாரு.. காணாதத கண்டது மாதி' என வடிவை முறைத்துப் பார்த்தாள் கல்யாணி.

"அவங்களுக்கு எங்களை தெரியாதா?" ப்ரணித் கிளம்பிய அடுத்த நொடி வாய் கொள்ளாமல் கல்யாணி நேராய் ராணியிடம் கேட்டுவிட,

"அறிவு கெட்ட கழுத! எத எப்டி கேக்கணுமுன்னு தெரியாது" மெதுவாய் என்றாலும் பேத்தியை வடிவு அதட்ட,

"என்ன ம்மா நீங்க.. அவளை ஏன் திட்டறீங்க.. அவ கேட்டதும் சரி தானே?" என்ற ராணி,

"இன்னும் அவனுக்கு தெரியாது டா மா.. சொல்லக் கூடாதுன்னு இல்ல.. அதான் அம்மா அப்பா வர்றாங்க இல்ல.. இன்னைக்கே பேசி முடிச்சிடலாம்" என நல்லவிதமாயே ராணி கூறிய போதும் கல்யாணி முகத்தில் தெளிவில்லை.

புதிதாய் பார்ப்பது போல பார்த்த ப்ரணித் பார்வையும் மிக மிக சாதாரணமாய் அவன் கூறி சென்ற ஹெலோவும் என சர்வ நிச்சயமாய் அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதை பறைசாற்றியது.

ஏன் எப்படி என எதுவும் தெரியாமல் முதலில் குழம்பியவளுக்கு சிறு நம்பிக்கை ஊற்று அவன் சம்மதம் இன்னும் தெரிவிக்காத தெரியாத நிலை எண்ணி.

ஆனாலும் ஏன் அன்று தொலைபேசியில் அப்படி பேசினான்? பார்க்கவும் அப்படி அவ்வளவு மோசமாய் எல்லாம் தெரியவில்லையே!

நேரில் பார்ப்பதற்கும் நினைத்ததற்குமான பல வித்யாசங்கள் அவள் மனதில் உலா வர எந்த தெளிவும் இராமலே விடைபெற்றாள் ராணியிடம்.

ரெஜினா இன்னும் பரிசு கொடுப்பதற்கான வரிசையில் தோழியுடன் நின்றிருக்க, அங்கே வடிவுடன் அமர்ந்தாள் கல்யாணி.

"இப்டியாடி மூஞ்சில அடிச்ச மாதி பொசுக்குன்னு கேப்பாவ? என்ன நினைப்பாக குடும்பத்த, உன்னையனு ரோசிக்க வேணாம்?" என்று வடிவு வசைபாட,

"அதவுடு அப்பத்தா! நியூச கேட்டியா? இன்னும் உன் சூரியாக்கு பொண்ணு பாத்த விஷயமே தெரியாதாம்.. இதுல இருந்து என்ன தெரியுது?" என்றாள் கல்யாணி.

"என்ன தெரியணும்? புள்ள பெத்தவங்க பேச்ச மீறாத புள்ளனு தெரியுது.. நீயும் தான் இருக்கிய.. உன் பேச்சுக்கு வேற தாளம் போட்டுக்குட்டு தெரியுதேன் இம்புட்டு நாளும்"

"அது எப்படி கிழவி நாளுக்கு நாப்பது முடிவு எடுக்க? உன்னைய நம்பி எல்லாம் ஒரு வேல ஆவாது.. எப்டி? பெத்தவக பேச்ச கேக்க புள்ளயா? அதான் புள்ளைக்கு தெரியாம பொண்ணு பாத்தாகளா? எங்கயோ இடிக்கிது அப்பத்தா.. எனக்கென்னவோ நான் நினச்சது தான் கஷ்டமே இல்லாம நடக்க போவுதுன்னு மனசு சொல்லுது" என்றாள் நம்பிக்கையாய் கல்யாணி.

"வாயில விளக்கெண்ணைய ஊத்த.. நாப்பது முடிவுனு இல்ல.. இனிமேட்டுக்கு ஒரே முடிவு தான்.. இந்த புள்ளைய தான் நீ கட்டுத" வடிவு காறாராய் கூற,

"ஓஹ் அந்த அளவுக்கு வந்துட்டியா நீ? பாத்துருவோமா யார் நினைக்கிதது நடக்குன்னு பாத்துருவோமா?" என்றாள் கல்யாணியும்.

ப்ரணித் அன்னை தந்தையை வீட்டிற்கு வழியனுப்பி வைத்துவிட்டு நண்பர்கள் அருகே வரவிருந்தவன்,

"என்ன பிரச்சனை?" என்றான் இருவரையும் பார்த்து.

"வாய்யா! அம்மைய எங்க?" வடிவு முகமெல்லாம் பல்லாய் கேட்க,

"அம்மா இப்ப தான் கிளம்பினாங்க ஆச்சி.. எதாவது பிரச்சனையா?" என்றவன் அக்கறையாய் தான் கேட்டான்.

இவன் வரும் பொழுதே கல்யாணியும் வடிவும் முடியைப் பிடித்துக் கொள்ளாத குறையாய் கையை நீட்டி ஒருவரை ஒருவர் பேசிக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி செல்ல நினைத்தவன் அவர்களிடமே வந்துவிட்டான்.

"நீ தான் பிரச்சனையே!" கல்யாணி முணுமுணுக்க,

"இவ என் பேத்தி! எதுத்து எதுத்து பேசிகிட்டு கிடக்கா.. அதான் பெத்தவக பேச்ச நல்ல புள்ளயா கேளுன்னு சொல்லிகிட்டு இருக்கேன்" என்று வடிவு கூற,

"ஆச்சி!" என்று விழித்தவன்,

"நீங்க பேசுறது புரியுற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு" என்று சிரித்தவன்,

"உங்க நல்லதுக்கு தானே ஆச்சி சொல்றாங்க கேளுங்க" என்று கல்யாணிக்கும் இலவச ஆலோசனை வழங்கிவிட்டு அவள் பேசாததை எல்லாம் நினைக்காமல் கல்யாணி வடிவை முறைத்தபடி இருந்ததை மட்டும் பார்த்துவிட்டு விடைபெற்றான் வடிவிடம்.

"எம்புட்டு பாசமா பேசிட்டு போவுது!" பேத்திக்கு புரிய வைக்க,

"லூசு! உண்ம தெரியாம பேசிட்டு போவுது.. நீ பல்ல காட்டுத.. எனக்கு இனி எந்த வேலையும் இல்ல.. எல்லாம் அவன் செயல்" என சென்ற ப்ரணித்தை கல்யாணி காட்ட, இருக்குமோ என்ற பயந்த பார்வை வடிவிடம்.

"யாரு டா அது? அதுக்குள்ளேயேவா?" அருண் நமட்டு சிரிப்புடன் கிண்டல் செய்ய,

"டேய்!" என்று முறைத்த ப்ரணித்,

"அம்மாக்கு தெரிஞ்சவங்க டா.. கிராமத்துல இருந்து வந்திருக்காங்க" என்று கூறியதோடு அதை மறந்துவிட்டான்.

தொடரும்..