• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _11

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
பூக்கள் _10

கரியனை அடித்துத் தூக்கிய கார் நிற்காமல் போக...கோபி ஆம்புலன்ஸ் வரவழைத்து ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்தான்.

ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க இன்ஸ்பெக்டர் வந்து கரியனைப்பார்த்துவிட்டு எப்படி நடந்தது என்பதைக் கேட்டு எழுதிக்கொண்டார்.

டாக்டரை அழைத்து கரியனை விரைவில் குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போதுதான் உண்மை தெரியும் "என்றதும் டாக்டர் ஓகே சார் என்றார்.

கோபி ஆக்ஸிடென்ட் முன்னால் நடந்ததைச் சொல்ல "அவனை அடையாளம் காட்ட முடியுமா ? என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்

"நல்லா ஞாபகம் இருக்கு சார் ஆனால் அவன் எந்த ஊர்னு எப்படி தெரியும் அதைவிட நடந்தது பொதுக்கூட்டம் அங்கே வந்தவங்க யார் என்னனு கண்டுபிடிக்க முடியாது.‌ஆனால்.."

"என்ன ஆனால் ?"

"அவன் கரியனின் சாதிக்காரன் என்று மட்டும் தெரியும்"

"அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்றீங்க தம்பி ?"

"அன்னைக்கு நடந்தது அவங்க சமுதாய மாநாடு அதோடு கரியனும் இவனுக எங்க ஆளுங்க இவனுக பிரச்சனை பெரிசாக்கிடுவாங்கனு சொன்னான்
ஒருவேளை அதனால் இந்த ஆக்ஸிடென்ட் நடந்திருக்குமா ?"

"இல்லை தம்பி வாய்ப்பில்லை.குடிபோதையில் நடக்கிற சிறு சண்டைக்கு இப்படி கொலை செய்யுற அளவுக்குப் போகாது இதில் வேற ஏதோ காரணம் இருக்கிறது"

"சரி நீங்க கரியனைப் பார்த்துக்கோங்க
அப்புறம் அவன் வீட்டுக்கு தகவல் கொடுத்தாச்சா ?"

"இல்ல சார் "

"என்னப்பா நீங்க முதலில் அதைப் பண்ணியிருக்க வேண்டாமா ?" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார்.

சாரி சார் இப்பவே சொல்லிடுறேன் என்று கோபி கரியனின் பேமிலிக்குத் தகவல் தர கரியனின் அம்மா அப்பாவோடு மரிக்கொழுந்தும் ஓடிவந்தாள்.

"என்னாச்சுப்பா எம்புள்ளைக்கு ?" என்று கரியனின் அம்மா கதறியழ ‌..

"இங்க பாருங்கம்மா இது ஹாஸ்பிடல்
கொஞ்சம் அமைதியா இருங்க ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்குனு" நர்ஸ் சொல்ல..

"நீங்க போங்க சிஸ்டர் நான் பேசிக்கறேன் என்று கரியனின் அம்மா பக்கம் திரும்பி அவனுக்கு ஒன்னுமில்லைமா சின்ன அடிதான் "

"நான் எம்புள்ளைய பார்க்கணும்"

"கொஞ்சம் அமைதியா இருங்க மா டாக்டர் பாத்துட்டு இருக்காங்க" என்றான் கோபி.

கண்களில் நீர் வழிய என்ன பேசுவதெனத் தெரியாமல் நின்றுகொண்டு இருந்த மரிக்கொழுந்து
டாக்டர் கரியனைப் பார்த்துவிட்டு வெளியில் வர ஓடிச்சென்று "ஐயா எம்மாமனுக்கு என்னாச்சு "என்று கேட்டாள் .

"கொஞ்சம் பொறுமையா இருங்க மா
அவனுக்கு ஒன்னுமில்லை கார் அடிச்சுத் தூக்கியதில் போய் விழுந்ததால் ஏற்பட்ட காயந்தான் வேற ஒன்றுமில்லை "

"கொஞ்சநேரத்தில் கண்விழித்து விடுவான் அப்புறம் போய் பாருங்க" என்று அவர் போக..

ஆத்தா மகமாயி தலையோடு வந்தது தலைப்பாகையோடு போக வச்சிட்ட என்று சாமியை வேண்டினாள் கரியன் அம்மா.

அப்பாடா மாமாவுக்கு ஒன்னும் இல்லை என்று நிம்மதிப்பெரு மூச்சை விட்டாள் மரிக்கொழுந்து

அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு கொரியன் கண்விழித்து விட்டான் என்று நர்ஸ் வந்து சொல்ல அனைவரும் உள்ளே போனார்கள்.

"இங்க பாருங்க யாரும் சத்தமா பேசக்கூடாது பேஷண்ட் ரெஸ்ட் எடுக்கணும் சீக்கிரம் பேசிட்டு வெளியில் வந்துடணும் டாக்டர் அப்புறம் திட்டுவார் "என்று சொல்லிவிட்டு அவள் நகர...

"கோபி கரியனிடம் இப்ப எப்படி இருக்கு ?" என்று கேட்டான்.

"தலை பாரமா இருக்கு ஏதோ அடிச்சுப்போட்ட மாதிரி இருக்கு நான் எங்க இருக்கேன் என்ன ஆச்சு?" என்று கேட்டான்.

கரியனுக்கு அப்ப நடந்தது தெரியல.
சம்திங் ராங் இப்ப இதைப்பத்தி பேசினால் நல்லது இல்லை என்று யோசித்தவன்...

"ஒன்னுமில்ல கரியா மயங்கி விழுந்துட்ட அதான் சேர்த்திருக்கோம்" என்று சொல்ல மரிக்கொழுந்து கோபியைப் பார்த்தாள்

கோபி மரிக்கொழுந்துவிடம் ஏதோ சாடை காட்டினான்.

"அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் வாங்க வெளியில் போவோம் " என்றான்

அனைவரும் வெளியில் வர.. "மரிக்கொழுந்து நீ அவன்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வாயேன் "என்றதும்
ஏதோ சொல்ல வருகிறான் என்று புரிந்து கொண்டாள்

மற்றவர்கள் போனதும் கரியனிடம் மரிக்கொழுந்து பேச ஆரம்பித்ததும்
கரியனின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது .

அவனை தாங்கிப்பிடித்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள அவனது காதுகளில் இருந்து இரத்தம் லேசாக வரத்தொடங்கியது.

அதைக் கண்டதும் மா....மா .......என்று கத்தினாள்

அது வெளியில் நின்றுகொண்டு இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்க உள்ளே ஓடி வந்தார்கள் .

கரியன் அப்படியே சரிந்து கிடந்தான்.

***********


"உண்மையாகவா சார். ?"

"ஆமா கோபி ."

"நம்பவே முடியல சார்."

"எனக்கும் நம்ப முடியல இருந்தாலும் இதான் உண்மை ."

"பாவம் சார் கரியன் அவனென்ன செஞ்சான் ? ஏழையாக தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தது தப்பா ? "

"கோபி நீ நினைக்கிற மாதிரி இது சாதிப் பிரச்சனையே இல்லை "

"என்ன சார் குழப்புறீங்க ?"

"கொஞ்சம் கேளு கோபி ."

"சொல்லுங்க சார்‌."

"நீ கரியன் கூட பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சியா ? "

"ஆமா சார் இப்ப எதுக்கு அது ?"

"சொல்லு எப்பவாவது காம்ப்படிசன்னு கேரளா போயிருக்கானா?"

"நிறைய தடவை மாநில போட்டினு போயிருக்கான் "

"அங்கதான் இந்த பிரச்சினை"

"என்ன சார் சொல்றீங்க?அதுக்கும் இந்த ஆக்ஸிடென்ட்க்கும் என்ன சம்பந்தம்?"

"இருக்கு ,அங்க நடந்த போட்டியில் ஆக்ஸிடென்ட் செஞ்ச அந்த ஆளோட பையனை கரியன் தோற்கடிச்சு இருக்கான் அதுமட்டுமின்றி அன்னைக்கு நடந்த சண்டைல அந்த பையனோட உயிரும் போயிருக்கு "

"ஐய்யய்யோ அப்புறம் எப்படி சார் அந்த பையன் இறந்தான் ? "

"இறக்கல கொன்னுட்டாங்க"

"யாரு சார் கொன்றது ?"

"வேறு யாரு நம்ம கரியன்தான் ."

"சா....சார்.....விளையாடாதீங்க
அபாண்டமாக பழியும் போடாதீங்க ."

"அவன் அப்படிப்பட்ட பையன் இல்லை "

"நானும் அப்படித்தான் நினைச்சேன் "

"சார் அவன்மேல் உங்களுக்கு தனிபட்ட கோபம் அதனால் தான் இப்படி அபாண்டமாக பழியும் போடுறீங்க ?"

"இங்க பாரு கோபி உண்மை புரியாம உளறாத , எனக்கும் கரியனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை இல்லை அந்த பிரச்சனை கூட அந்த அரசியல்வாதியோட செட்டப் தான் ."

"என்ன சார் நடக்குது இங்க ?"

"சீக்கிரம் அதற்கு விடை கிடைச்சுடும் கரியன் எழுந்தால்..."

"சார் அப்போ கரியன் லைஃப்?"

"அது கரியனின் வாக்குமூலத்தில் இருக்கு."

"என்ன தான் சார் பண்றது இப்போ ?"

"இன்னொன்று அந்த பையனை இரண்டு பேர் சேர்ந்து தான் கொன்னுருக்காங்க அந்த பையன் யாருனு தெரியணும் "

"என்ன சார் புதுப்புது கதையா சொல்றீங்க ?"

"கதையில்ல கோபி .எங்கேயோ கேரளாவில் இருக்கவன் தமிழ்நாடு வந்து அதுவும் கரியன் வீட்டுமுன்னாடி ஆக்ஸிடென்ட் ஆகவேண்டிய அவசியம் என்ன?"

"சரி இறந்ததாகச் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகவேண்டிய அவசியம் என்ன?"

"இங்கதான் எனக்கு சந்தேகம் அதுமட்டுமின்றி எனது ஸ்டேஷன் சரவுண்ட்ல நடந்த பிரச்சனைக்குள் எஸ்.பி.ஏன் உள்நுழையணும் அவனைத் தப்ப விடணும்னு யோசிச்சேன் அங்கதான் இன்னும் பல தகவல் கிடைச்சது ."

"நீ கரியனைப் பத்திரமாகக் பார்த்துக்கொள் . அவனை கொலைகூட செய்யத் துணிவார்கள் அவன் சாதியை வைத்து இல்ல.அவனது சாதனையை வைத்து.
இதில் யாரோட தப்புன்னு கண்டிபிடிக்கறதுக்குள்ள எது வேண்டுமானாலும் நடக்கலாம்."

"இந்த உண்மைகள் உனக்குத் தெரியும்னு காட்டிக்காத உனக்கும் பிரச்சனை"

"அப்போ ஏன் நான் சொன்னேன்னு தானே யோசிக்கிற இப்போதைக்கு நீதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவணும் அதான்."

"கண்டிப்பாக சார் என் பிரண்ட் தப்பு பண்ணியிருக்க மாட்டானு நம்புறேன்"

"அப்படி இல்லாமலிருந்தா நல்லதுதான் .இதைப்பத்தி யாரிடமும் காட்டிக்காதே அவனிடம் கூட கேட்காதே"
என்று சொல்லிவிட்டுப் ஃபோனை துண்டித்தார்‌ இன்ஸ்பெக்டர்.

"இதென்னடா புதுக்கதை கரியனுக்கு இதில் சம்பந்தம் இருக்குமா ? என்ன நடக்குமோ ?
இனி தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்."

இப்படி யோசித்துக்கொண்டு இருக்க மரிக்கொழுந்து வந்து" என்ன அண்ணா பண்றீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை மா அவன் இப்படி கிடக்கானேனு கவலை .
சரியா நான் வீட்டுக்கு போயிட்டு வாரேன் ."

"யாராவது அவனைப் பார்க்க வந்தா உடனே எனக்கு போன் பண்ணு."
"யாரையும் அவனைப் பார்க்க விடாதே."

"சரிண்ணா ,ஏன் பிரச்சனையா ?"

"இல்லமா டாக்டர் யாரும் பார்க்க கூடாதுனு சொல்லியிருக்காங்க "

"சரிண்ணா "என்றதும் கோபி வீட்டிற்குப் புறப்பட்டான்.

சரியாக அவன் பாதிவழி வரும்போது மரிக்கொழுந்து ஃபோன் போட்டாள்‌

**********************"


கோபி ,கரியனைப் பார்க்க யார் வந்தாலும் தனக்கு ஃபோன் செய்யுமாறு மரிக்கொழுந்திடம் சொல்லிவிட்டுப் போக.. பாதிவழியில் மரிக்கொழுந்து ஃபோன் செய்ய பைக்கை நிறுத்திவிட்டு ஃபோனை அட்டென்ட் செய்து ...

"சொல்லுமா என்ன ஆச்சு யாரும் வந்தார்களா ?"

"இல்லண்ணே "

"பின்ன எதுக்கு ஃபோன் பண்ணின
மாமாவுக்கு மறுபடியும் இரத்தம் கசியுது தூக்கித்துக்கிப் போடுது எனக்குப் பயமா இருக்கு நீங்க வர்றீங்களா? "என்று அழுதுகொண்டே சொல்ல...

"சரிமா நீ சீக்கிரம் அங்கிருக்கிற நர்ஸ்கிட்ட சொல்லு நான் வந்துடுறேன்" என்று பைக்கை திருப்பிக்கொண்டு
ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான்.

இதென்னடா கொடுமை ஒரு பிரச்சினை வந்து முடியுறதுக்குள்ள மற்றொரு பிரச்சினை கரியன் கண்ணு திறக்காம யார் குற்றவாளினு தெரியாது

இப்ப என்ன பண்ணுவது என்று யோசித்தபடி வந்தான்.

மரிக்கொழுந்து நர்ஸைக் கூப்பிட்டுச் செய்திசொல்ல அவசரமாக டாக்டர் வரவழைக்கப்பட்டு ஆபரேஷனுக்கு தயார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அவனைக் காப்பாற்றனும்னு டாக்டரிடம் சொன்னதால் பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல்
கரியனின் அம்மாவிடம் வந்து கையெழுத்து கேட்க ...

"எம்புள்ளைக்கு என்னாச்சு எதுக்கு ஆபரேஷன் நல்லா இருக்கான் சொன்னீங்க எம்புள்ளைய ஏதோ பண்ணப் பார்க்குறீங்களா ?" என்று கலாட்டா செய்ய கோபி வந்து சேர்ந்தான்.

நிலவரத்தைப் புரிய வைத்து
"நீங்க பயப்படாம கையெழுத்து போடுங்கம்மா ஒன்னும் ஆகாது லேட் பண்ணினா பிரச்சனை ஆகும்"
என்று சொல்ல அரைமனதோடு அவள் கையெழுத்து இட்ட மறுகணமே ஆபரேஷன் ஸ்டார்ட் ஆனது ‌
வெளியில் கோபியோடு அனைவரும் காத்திருக்கத் தொடங்கினர்‌.

அந்நேரம் பார்த்து ஒரு கேரளாக்காரன் அங்கு வந்தான் .கோபிக்கு சந்தேகம் வர இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போட்டான்

இன்ஸ்பெக்டர் விரைந்து வந்தார்

********************