• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _15

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
இன்ஸ்பெக்டர் கையும் களவுமாக மாட்டிக் கொள்ள உடனடியாக கைது செய்யப்பட்டார்.

கரியனுக்கு போலீஸ் காவலுடன் மருத்துவம் பார்க்கப் பரிந்துரை செய்யப்பட்டது.
கோபிக்கு மனது நிம்மதியடைந்தது.

"ரொம்ப நன்றி சார் எங்கயோ இருந்து வந்து என் நண்பன் உயிரைக் காப்பாத்திட்டீங்க."

"இதுல என்ன இருக்கு தம்பி, எல்லாம் இறைவன் செயல்.என் உயிரைக் காப்பாற்ற அந்த தம்பி வந்த மாதிரிதான் இதுவும்"

"இருந்தாலும் நட்புனா இப்படி இருக்கணும் விட்டு கொடுக்காம
உங்களை நினைச்சு பெருமையாக இருக்கிறது"

"நன்றி சார், உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்"

"இப்படியே இரண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லிட்டு இருந்தா எப்படி வைத்தியம் பார்க்கிறது" என்று எஸ்.பி.நக்கலடிக்க ...

"உண்மையில் நாம் சாருக்கு தான் நன்றி சொல்லணும்" என்று எஸ்.பி.யை காட்ட ...
ஆளை விடுங்கப்பா "என்றதும் மூவரும் சிரித்தார்கள்.

இன்ஸ்பெக்டர் மூவரையும் முறைத்தபடி போனார்.

*******

கரியனுக்கு ஆபரேஷன் முடிந்து நல்லபடியாக குணமாகி வர ஆறுமாதங்கள் பிடித்தது

இந்தமுறை அவன் எழுதுவதாக இருந்த ஐ ஏ எஸ் எக்சாம் தவறவிட்டிருந்தான்

மகன் பிழைத்ததே பெரிய விசயம் என நினைத்தனர் கரியனின் பெற்றோர் மரிக்கொழுந்து கரியனை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டாள்.

கோபி கல்லூரி முடித்து பாரீனில் செட்டில் ஆகிவிட்டான்.

இன்ஸ்பெக்டர் கொலை முயற்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக வேலையிழந்து ஏழு வருட சிறை தண்டனை பெற்றார்.

சாதிய வன்மம் இன்னும் மேல்மட்ட ஆசாமிகள் இடம் விரவியே கிடக்கிறது.


முற்றும்


எழுத்தாளர் நாகா
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அருமை அருமை சகோ 👌

கலப்பு திருமண விளக்கம் மற்றும் சாதிய வன்மம் சமுதாயத்தில எப்படி இருக்குங்கிறதையும் அருமையா சொல்லி இருக்கீங்க 😍