• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேனிற் பூக்கள் _5

writer naga

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 23, 2024
25
29
13
Chinna Rettaiyurani Ramanathapuram
வேனிற்பூக்கள் _4

ஆக்ஸிடென்ட் கேஸில் வந்த பாடிக்கு உயிர் வந்ததாகவும் அவரை அனுப்பி விட்டதாகவும் மார்ச்சுவரி வாட்ச்மேன் சொல்ல டீனிடம் கேட்டால் ..எஸ்.பியே அவரை அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டு நேராக எஸ்.பி.ஆபீஸ் வந்தார் இன்ஸ்பெக்டர் .

எஸ் பி மீட்டிங்கில் இருந்ததால் இன்ஸ்பெக்டர் காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் வந்திருந்த செய்தி கேட்டு எஸ்பி அவரை உள்ளே வரச் சொன்னார்

உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் எஸ்.பி.க்கு சல்யூட் அடிக்க "உக்காருங்க மிஸ்டர் "என்றார் எஸ்பி

"சார் நான் உட்கார வரல அந்த ஆக்சிடென்ட் கேஸ்ல அடிபட்ட அந்த ஆளு உயிரோட வந்ததாகவும் அவரை நீங்களே அனுப்பி விட்டதாகவும் சொல்கிறார்களே அது உண்மையா ?"

"பி கூல் மிஸ்டர் அது உண்மைதான் நான் தான் உங்களுக்கு சொல்லலாம்னு நினைச்சேன் கொஞ்சம் வேலை என்னால சொல்ல முடியல அதுவும் இல்லாம ஹாஸ்பிடல்ல இருந்து உங்களுக்கு போன் போட்டு நீங்க எடுக்கலைன்னு வேற சொன்னாங்க,
உங்க ஸ்டேஷனுக்கு நாங்க சொல்லச்சொல்லி இன்ஃபார்ம் பண்ணிட்டோம் "என்றார் .

"என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு ஒரு மெசேஜ் போட்டு இருக்கலாமே சார் "என்றார் இன்ஸ்பெக்டர்.

" சரிதான் மிஸ்டர் ஆனால் அது ஒரு பெரிய இடத்து விவகாரம் அதனால நானே நேர்ல போய் அதை ஓகே பண்ணிட்டேன் சோ யூ டோன்ட் வொர்ரி" என்றார்.

" ஓகே சார் அப்போ நான் கிளம்புறேன்" என்று சொல்லிவிட்டு "இந்த ஆளு பெரிய கடவுள்னு நினைப்பா அந்தந்த ஸ்டேஷனில் இருக்கிற ஒருத்தன் வேலையில்லாம இருக்கானா எஸ்.பி என்றால் எது வேணும்னாலும் செய்யலாமா ?"என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே கிளம்பி போனார்

அவர் வந்து வண்டியில் ஏறியதும் ஏட்டு கேட்டார் "எஸ்பி என்ன சார் சொன்னார் ?"

" நீ வேற டென்ஷன் பண்ணாதய்யா அந்த ஆளு ஏதோ கூலா பதில் சொல்றாரு ,அவனுக்கு உயிர் வந்தது
அனுப்பிட்டேனு."

"அவரு பார்த்துப் பாரு சார்"

"நாளைக்கு அவன் காணாமல் போனா யாரு பதில் சொல்றது, வர வர நம்ம ஸ்டேஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு ஆளாளுக்கு தண்டல் பண்றாங்க" என்று அவர் சொல்ல..

" சார் நமக்கு என்ன சார் பிரச்சனை?"

" யோவ் நீ போலீஸ்காரன் தானே உன் வீட்டில் பஞ்சாயத்துக்கு பக்கத்து வீட்டுக்காரர் பைசல் பண்ணா நீ ஏத்துக்குவியா அது மாதிரி தான்யா?"

நம்ம சரவுண்டிங்ல இருக்க கூடிய விஷயம் நமக்கு தெரியாம நடந்தா நாம்தான் பொறுப்பு"
" நமக்கு மேலே இருக்கவங்களாக இருந்தாலும் நம்மகிட்ட கேக்காம செஞ்சது தப்புதான்யா"

" என்ன சார் சொல்றீங்க எஸ் பி அவரு அவருக்கு இல்லாத அதிகாரமா ?"

" யோவ் அவருக்கு அதிகாரம் இருந்தாலும் நமக்கு இன்பார்ம் பண்ண வேண்டும் அல்லவா ?"
போன் பண்ணினதா சொன்னாங்க இல்ல இருக்கட்டும் ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே"என்றார்.

அதுவும் சரிதான் ஏதோ அவசரத்தில் பண்ணி இருப்பார் விடுங்க சார் நமக்கு என்ன ஒரு பிரச்சனை ஒழிஞ்சா சரிதானே" என்றார்.

"நீ திருந்தவே மாட்டியா போ, யாரு என்ன சொன்னாலும் எது கொடுத்தாலும் வாங்கிட்டு சும்மா இரு மத்தபடி அதனுடைய சீரியஸ் தெரிய மாட்டேங்குது"

"சாரி சார்" என்றபடி காரை ஓட்டினார்.

இன்ஸ்பெக்டர் "ஆக்சிடென்ட் ஆனவன அனுப்பிட்டேன்னு சொல்றாங்க ஏற்கனவே நாம அந்த ஊர்ல பிரச்சனை பண்ணி இருக்கோம் "
"நாளைக்கு அங்கிருந்து எவனாவது வந்து கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது"
" எஸ்பி அனுப்பிட்டாருன்னு சொன்னா அந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எவனாவது பிரச்சினை பண்ணா என்ன செய்வது?" என்று யோசித்துக் கொண்டே வந்தார்.

நடந்த களேபரத்தில் கிராமத்து மக்களை வேறு திட்டிட்டோம்
எஸ்.பி .நம்மிடம் கேட்காமலே அடிபட்டவனை அனுப்பிவிட்டார் .எங்கிருந்து பிரச்சனை வரப்போகுதோ தெரியலனு இன்ஸ்பெக்டர் சுந்தரம்
யோசித்துக்கொண்டு இருக்க ஃபோன் அடித்தது.

எடுத்து ஹலோ என்றவர்க்கு வியர்க்க ஆரம்பித்தது.

இன்ஸ்பெக்டர் சுந்தரம் நினைத்த மாதிரியே அடிபட்ட ஆளின் உறவினர் ஒருவர் உடலைக் கேட்டு தான் ஃபோன் செய்திருந்ததாக கூறினார்.

அவருக்கு என்ன சொல்வதென தெரியாமல் நேரில் வாங்க என்று சொல்லி போனைத் துண்டித்தார்.