• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள் - 21

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
அத்தியாயம் - 21

வாட்ச்மேன், அவருக்கு இருந்த பதட்டத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று கூறாமல் கேர் டேக்கருக்கு ஃபோன் செய்தவர், சீக்கிரம் கதவை திறங்க சார் என்றுக் கூறி விட்டு வைத்து விட்டார்.

"யார் வந்துருக்கா?" என்று கேசவ் கேட்க…

அந்தப் பக்கமோ, வாட்ச்மேன் ஃபோனை ஏற்கனவே வைத்து விட்டார்.

ஒன்றும் சத்தம் வராமல் இருக்கவே, " ச்சே…" என்று அலுத்துக் கொண்டவர், "மனுஷங்க நிம்மதியாக தூங்குவதே இந்த நேரம் தான். யாருடா இப்படி காலங்காத்தால வந்து கழுத்தறுக்கறா‌." என தனக்குள் புலம்பிக் கொண்டே வந்து கதவைத் திறந்தார் கேசவன்.

அங்கு நின்றிருந்தவர்களைப் பார்த்து, முகம் சுருங்கியவன், "வாங்க மா… நீங்க வர்றதா ஐயா சொல்லவே இல்லை. " என ஆச்சரியமாக வினவ‌…

அவரது முக மாற்றத்தை கவனித்தபடியே, " அங்கிள் … மொதல்ல வழி விடுங்க… எவ்வளவு நேரம் தான் இப்படியே வெளியேவே நிக்க வச்சு பேசிட்டு இருக்கப் போறீங்க. நைட் ட்ராவல் பண்ணி வந்தது டயர்டா இருக்கு. அப்புறமா உங்க என்கொயரியா ஆரம்பிங்க." என்ற விகாஷினி, மதியமுதனிடம் திரும்பி," வாங்க மதி…" என்று அழைத்து வந்து ஹாலில் அமர வைத்தாள்.

உள்ளே வந்த மதி, தன் பின்னே வந்த கேசவனிடம் கவனத்தை செலுத்த… "வணக்கம் தம்பி‌‌." என…

" ஐயோ! அங்கிள்… எதுக்கு இந்த பார்மலிட்டிஸ்…" என்றவன் அவரை லேசாக அனைத்து விடுத்தான்.

சந்தீப் எப்பொழுதும் போல சுவாதீனமாக உள்ளே நுழைந்தான்.

வாட்ச்மேன் மூவருடைய லக்கேஜ்களையும் எடுத்துட்டு வர…

" இங்கேயே வைங்க அங்கிள்…" என வாட்ச்மேனிடம் கூறியவள், பிறகு நன்றாக சோஃபாவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு, கேசவனிடம் திரும்பி, " இப்போ கேளுங்க அங்கிள்… " என்று சாவகாசமாக வினவ?

" அது ஒன்னும் இல்லை மா. நீங்க வரேன்னு சொல்லவே இல்லையே…" என்று இழுக்க…

" ஏன் அங்கிள்? எங்க வீட்டுக்கு நான் வருவதற்கு சொல்லிட்டு தான் வரணுமா? என்ன? " என வினவ…

" அப்படியெல்லாம் இல்லை மா. ரூம் ரெடி பண்ணி இருப்பேன். அதுக்காக தான் கேட்டேன். இதோ அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ண சொல்லுறேன். இந்த தம்பிக்கு கெஸ்ட் ரூமை ரெடி பண்ண சொல்லவா? " என்றவர், சந்தீப்பிடம் திரும்பி, " என்ன தம்பி உங்களை வீட்ல விட சொல்லவா? " என வினவினார்.

சந்தீப் பதில் சொல்ல வர, அவனை சைகையால் அமைதியாக இருக்கும் படி சொல்லியவள், அவளே இருவரிடம் கேட்டதற்கும் பதில் சொன்னாள். "அங்கிள் மாடியில் என்னோட ரூமையும், அண்ணாவோட ரூமையும் க்ளீன் பண்ண சொல்லுங்க. மதி அண்ணா ரூம்ல தங்கிப்பார். சந்தீப்பும் இங்கே தான் தங்கப் போறான். மதிக்கு துணையா இருப்பான்.

க்வீக்கா ரூமை ரெடி பண்ண சொல்லுங்க‌… இப்போ எங்களுக்கு குடிக்க காஃபி கொண்டு வாங்க." என்று ஒரு வழியாக அவரைப் பாடாய்படுத்தி அனுப்பி விட்டு, சந்தீப், மதியைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவளருகில் அமர்ந்து இருந்த மதி, மெல்ல அவள் பக்கம் சாய்ந்து, " ஹனி… இப்போ உன்னை பார்க்கும் போது, அப்படியே ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தோட இளவரசியைப் பார்க்கிற மாதிரி இருக்கு." என்றுக் கிண்டலடிக்க…

" ஹலோ… நாங்க பெரிய சாம்ராஜியத்தோட இளவரசி இல்லை என்றாலும், இந்த வீட்டோட இளவரசியாக்கும். என்ன பகைச்சுகாதீங்க… அப்புறம் உங்களுக்கு பிடிக்காத டிஷ் தான், டெய்லி சாப்பாட்டுல முக்கியமான மெனுவாக இருக்கும் ஜாக்கிரதை." என மிரட்டி கலகலவென நகைத்தாள்.

இவர்கள் வந்தது தெரிந்ததும் எழுந்து வந்த பணியாளர்கள் , தங்களது சின்னம்மாவின் புன்னகையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

இங்கிருந்து போகும் போது, புகை படிந்த ஓவியமாக சென்ற சின்னம்மா, இப்போ பழைய படி சிட்டுக்குருவியாக சிரிப்பதைப் பார்த்து எல்லோருக்கும் பரம திருப்தி.

மதியும்,விகாஷினியும் பேசிக் கொண்டிருக்க… இப்போது சந்தீப்பும் அதில் ஐக்கியமானான்.

"மதி… நீ எதை நினைத்து கவலைப்படாதே... எங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க… இங்கே ஒழுங்கா கவனிக்கலைனா நாம இங்கிருந்து அங்கே யெஸ்ஸாகிவிடுவோம்‌. யூ டோன்ட் வொர்ரி." என்றவன் ஹை... பை… கொடுக்க…

இருவரையும் முறைத்த விகாஷினி," சகு அம்மாவும், நான் சொல்றதை தான் கேட்பாங்க… ஜாக்கிரதை! " என மிரட்டி கொண்டிருந்தாள்.

அதற்குள் காஃபியை எடுத்துக் கொண்டு வந்திருந்த செல்லி, அவர்களுக்கு காஃபியை கொடுத்து விட்டு,விகாஷினியை நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள். பிறகு ஒவ்வொருவராக வந்து நலம் விசாரிக்க...

" நல்லா இருக்கேன்…" என்று எல்லாருக்கும் பதிலளித்தாள் விகாஷினி.

மதியை தன்னுடைய வருங்கால கணவர் என அறிமுகப்படுத்த…

" தம்பிய தான் தெரியுமே சின்னம்மா. போனமுறை பொண்ணுப் பார்க்க வந்த போதே எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார். ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்." என வாழ்த்த…

விகாஷினி புன்னகையுடன் மதியைப் பார்த்தாள்.

அதற்குள் ஒருவர், " தம்பி… எங்க சின்னம்மா ரொம்ப நல்லவங்க. நல்லா பாத்துக்கோங்க‌… " என.

" அட போங்க அங்கிள்… இன்னும் உங்க சின்னம்மாவுக்கே சப்போர்ட் பண்ணிக்கிட்டு… இன்னும் கல்யாணமே ஆகல… அதுக்குள்ள வாயை திறந்தா, சாப்பாடு கிடையாதுனு மிரட்டுறாங்க மேடம். என்னன்னு கேளுங்க…" என மதி கூற…

அங்கு மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

ரூம் க்ளின் செய்ய ஆட்களை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்றிருந்த கேசவன், கீழே கேட்ட சிரிப்பு சத்தத்தில் எட்டிப் பார்த்தார். யோசனையுடன், இருந்தவர், வேலையாட்களை சீக்கிரம் ரூமை ரெடி பண்ண சொல்லிட்டு கீழே இறங்கி சென்றார்.

காஃபியை அருந்திக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள் விகாஷினி. 'வீடு மெயின்டெய்னென்ஸ் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.' என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

" விக்கி மா… டிஃபனுக்கு, லஞ்ச்க்கு என்ன ரெடி பண்ணட்டும்." என்று பவ்யமாக வினவினார் கேசவன். எப்படியாவது விகாஷினியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக கேட்க.

விகாஷினியோ, " அங்கிள் தூங்கினால் எப்போ எழுந்திருப்போம் என்றே தெரியாது. அவ்வளவு டயர்டு. சோ… நாங்க ப்ரெஷ்ஷப் ஆகிட்டு வரோம். இப்ப என்ன இருக்கோ. அதை வைங்க. சிம்பிளா தோசை… மிளகாய் பொடி இருந்தாக் கூட போதும். சாப்பிட்டு படுத்தால் நல்லா ரெஸ்ட் எடுக்கலாம். அப்புறம் லஞ்ச் எங்களுக்காக எதுவும் ப்ரிப்பேர் பண்ண வேண்டாம். சகு மா அங்க வரச் சொல்லி இருக்காங்க. சோ… லஞ்ச் சந்தீப் வீட்டுல தான்…

தென் மதி ஏற்காடு சுற்றி பார்க்கணும்னு ஆசைப்பட்டார், அதான் நாங்க வந்தோம். சோ நாங்க அவுட்டிங் போயிட்டு டின்னர வெளில முடிச்சிட்டு நைட் தான் வருவோம். " என்றவள் மாடிக்கு சந்தீப்பையும், மதியையும் அழைத்துச் சென்றாள்.


விதுனின் அறைக்குள் நுழைந்ததும் சந்தீப் ஏதோ சொல்ல வர, விகாஷினியோ, சைகை செய்து அமைதியாக இருக்கும் படி செய்துக் காட்டியவள், தனது ஃபோனை நோண்ட…

" என்ன செய்ற விக்கி ? "

" ஹிடன் கேமரா எதுவும் இருக்கானு இந்த ஆப் மூலமா தேடுறேன் . ஏதாவது கேமரா நெட்வொர்க்வோடு கனெக்ட் ஆகி இருந்தா இந்த ஆப்ல தெரியும் " .

" ஓஹோ " என்ற சந்தீப், மதியைப் பார்த்து, கண்களால் அவளை ஜாடைக் காண்பித்தவன், நக்கலாக சிரிக்க…

மதியும் அவனோடு கூட்டு சேர்ந்துக் கொண்டு கலாய்த்தான். " மேடம் ஜர்னலிஸ்ட் என்று நிரூபிக்கிறாங்க… ரொம்ப ஜாக்கிரதையாக இருக்காங்களாம். குட் ப்ரெசென்ஸ் ஆஃப் மைண்ட். பட் இதுல செவன்டி பர்சென்ட் தான் கரெக்டா தெரியும். சம் டைம்ஸ் கேமரா நெட்வொர்க்வோடு கனெக்ட்டடா இருக்காது . சோ நீ ஃபர்ஸ்ட் அந்த டீவி ரிமோட் எடுத்துட்டு வா விக்கி."

"..."

" உன்னோட ஃப்ரென்ட் கேமராவ ஆன் பண்ணி அந்த ரிமோட்டோட இன்ஃப்ராரெட் லைட் தெரியற மாதிரி வெச்சி பவர் பட்டனை ஆன் பண்ணு " .

அது போலவே செய்தாள் விக்கி .

" போன்ல லைட் ஃபிளாஷ் ஆவது தெரியுது மதி. "

" வாவ் . சூப்பர் . அப்போ உன் போன் ஃப்ரென்ட் கேமரா இன்ஃபராரெட் ரேஸ்ஸ காட்டுது . சோ இத வெச்சி நாம ஈஸியா ஹிடன் கேமராவ கண்டுபிடிக்கலாம் " .

" எனக்கு ஒண்ணும் புரியல மதி . இது வெச்சி எப்படி கண்டுபிடிக்குறது . ஏன் பேக் கேமரா யூஸ் பண்ண கூடாதா ? " என விக்கி வினவ...

அதற்கு மதி பதில் கூறுவதற்குள், சந்தீப் பதிலளித்தான். " பேக் கேமரால எப்பவும் இன்ப்ரா ரெட் ரேஸ் (ஐஆர்) பில்டர் இருக்கும் சோ அத நாம யூஸ் பண்ண முடியாது . சில போன்ல ஃப்ரென்ட் கேமரால கூட ஐஆர் பில்டர் இருக்கும் . அந்த பில்டர் இருக்கா இல்லையா என தெரிஞ்சுக்க தான் , மதி உன்ன இப்போ டிவி ரிமோட் பட்டன் ப்ரஸ் பண்ணி லைட் போன்ல தெரியுதானு பார்க்க சொன்னான் . உனக்கு லைட் தெரிஞ்சது சோ உன் ஃபோனோட ஃபிரென்ட் கேமரால ஐஆர் பில்டர் இல்ல . இப்போ உன் பேக் கேமரா ஆன் பண்ணி ரிமோட் பட்டன பிரஸ் பண்ணு "

" லைட் வரல "

" அதான் மேட்டர் . இப்போ ஃப்ரென்ட் கேமரா வச்சு செக் பண்ணுவோம். சரி இப்போ நான் போய் கதவு , ஜன்னல் எல்லாம் மூடிட்டு வரேன் . நீ போய் லைட் ஆப் பண்ணு " .

" இப்போ எதுக்கு ரூம இருட்டு ஆக்கனும் சந்து " .

" ஹிட்டன் கேமரா பெரும்பாலும் நைட் விஷன் பொருத்தப்பட்டிருக்கும் அதாவது இருட்டுலையும் தெளிவா வீடியோ எடுக்குறதற்காக . அதனால கண்டிப்ப அது ஐஆர் லைட்டை பாஸ் பண்ணும் . ஐஆர் லைட் நம்ம கண்களுக்கு தான் தெரியாது பட் போன் ஃப்ரென்ட் கேமராவுக்கு தெரியும் . நம்ம ரூம்ம இருட்டாக்கிட்டு, உன் போன் ஃப்ரென்ட் கேமரா வெச்சி எல்லா இடத்தையும் பார்த்தா ஹிட்டன் கேமரா இருக்கா இல்லையானு கண்டு பிடிச்சிடலாம் . கேமரா இருந்தா போன்ல லைட் தெரியும் இல்லனா போன்ல நம்ம பார்க்குற இடம் மட்டும் தெரியும் "

" பிரில்லியன்ட் ஐடியா. நீங்க இரண்டு பேரும் போலிஸ் ஆஃபிஸர் என்பதை நிரூபிக்கிறீங்க. வெரிகுட்… " என்றவள், அந்த அறை முழுவதும் செக் செய்து விட்டு, தனது அறைக்கும் சென்று நன்றாக செக் செய்து விட்டு வந்தாள்.

மதியும், சந்தீப்பும் அமர்ந்து இருந்த சோஃபாவுக்கு எதிரே அமர்ந்து, சாவகாசமாக சந்தீப்பை பார்த்து,
"சரி, இப்ப நீ சொல்ல வந்ததை சொல்லு சந்து."

அப்பொழுது தான், தான் என்ன சொல்ல வந்தோம் என்று நினைவுக்கு வர, விக்கியிடம் திரும்பி, " விக்கி எதுக்கு நம்ம நைட் தான் திரும்பி வருவோம் என்று சொன்ன? அப்புறம் எப்படி இங்க தேட முடியும்?" என கோபமாக கேட்க…

"எல்லாம் காரணமாத்தான் சந்து… இப்ப நாம ஃப்ரெஷ்ஷாகிட்டு, நேரா கீழே போறோம். சாப்பிடுறோம்‌. தென் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லிட்டு, இங்கு வந்துடலாம். இன்ச் பை இன்சா இந்த ரூம்ல எல்லா இடத்தையும் சர்ச் பண்றோம்.

மதியம் வரைக்கும் நமக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள நாம கண்டுபிடித்தாலும் சரி, இல்ல இரவு வந்ததும் தேடி பார்க்கலாம்.

மதியம் சகு அம்மாவை பார்த்துட்டு, அதுக்கப்புறம் ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியது தான். கேட்டால் வெளியில் சுத்தி பார்த்துட்டு வந்தோம் என்று சொல்ல வேண்டியது தான்." என விக்கி கூற…

மதி வழக்கம் போல், அவள் போடும் திட்டத்தை ரசிக்க, சந்தீப் அதில் ஒரு ஓட்டையைக் கண்டு பிடித்தான்.

" ஹேய் விக்கி...யாராவது மாடிக்கு வந்து, நீ எங்களோட இந்த ரூம்ல இருக்கிறதைப் பார்த்துட்டா என்ன பண்ணுறது? அப்படி இல்லைணா, கீழே இருந்து நம்மளை வாட்ச் பண்ணிட்டு இருந்தா என்ன பண்றது? " என சந்தீப் வினவ...

" டேய் சந்து… நம்ம பழக்க வழக்கம் எல்லாம் மறந்துடுச்சா? நாம மாடில இருக்கும் போது, யாரும் மாடிக்கு வர மாட்டாங்க. கீழே இருந்து பார்த்தால் மாடியில் நடக்கிறது தெரியாது. பட் நமக்கு சந்தேகம் வந்தால், ரூமை விட்டு வெளியே வந்து கீழே நடப்பதை பார்க்கலாம். ஹாலில் என்ன நடந்தாலும் தெரியும்.அப்படி ஒரு செக்கியூர் இந்த பகுதிக்கு… அது உனக்கு தெரியாதா?"
என…

"ஆமாம் இல்ல... அதை மறந்துட்டேன். சரி அதெல்லாம் சரியா தான் இருக்கு. ஆனா எனக்கு இன்னொரு டவுட். மதியம் எங்க வீட்ல போய் நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்துட்டு வந்தோம்னா, நாம எங்க சுத்தி பார்த்தோம் என்று அந்த மாங்காமடையன் கேட்டால் என்ன பதில் சொல்றது?" என…

" யார் அது மாங்கா மடையன்?" விக்கி வினவ…

" வேற யாரு? எல்லாம் உங்க கேர் டேக்கர் தான்." சந்தீப் கூற…

கலகலவென நகைத்தவள், " சரியான பெயர் தான்… நீ சொல்றதும் சரி தான்… அவர் கேட்க தான் செய்வார்.நமக்கு உதவுற மாதிரி, நம்ம வாய்ல இருந்து ஏதாவது புடுங்குவார். " என்றுக் கூறியவாறே யோசித்தவள், " ஹாங் ஐடியா… நம்ம மூன்று பேரும் நல்லா ரெஸ்ட் எடுப்போம். இந்த ஏற்காடுல நமக்கு தெரியாத இடமா… ஏதாவது ஒரு ப்ளேஸைப் பத்தி மதிக் கிட்ட சொல்லிடுவோம். மீதியை மதி மேனேஜ் பண்ணிப்பார்." என ஈஸியா ஒரு சொல்யூஷனை விக்கி கூறினாள்.

"சூப்பர்…" என்று சந்தீப்பும் தலையாட்டினான்.

இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறையை பார்த்துக் கொண்டு இருந்தவன், திடீரென்று தனது காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான்.

**********************************

அவர்கள் மாடிக்கு சென்றவுடன்‍, தோட்டத்திற்கு வந்த கேசவன், யாரும் பார்க்குறாங்களா, என நோட்டம் விட்டுக் கொண்டே, தன் கையிலிருந்த ஃபோனில் ரூபக்கை அழைத்தவன், விகாஷினி, சந்தீப், மதியமுதன் வந்திருக்கிற தகவலை சொல்ல…

" வாட்… அங்க வந்துருக்காங்களா? உன்னை எதுவும் சந்தேகப்பட்டு விசாரிச்சாங்களா? " என படபடப்புடன் வினவ…

"இல்லை சார் … நானுமே பயந்துதுட்டேன். என் மேல டவுட்டு வந்துருச்சுன்னு… அப்படி எல்லாம் இல்ல… விக்கியோட வருங்கால கணவர், ஏற்காட்டை சுத்தி பார்க்கணும் என்று சொன்னாங்களாம். அதற்கு தான் வந்திருக்காங்க…"

" ஓஹோ… இப்ப என்ன பண்றாங்க…"

" இப்ப தான் சார் வந்தாங்க… ஃப்ரெஷ்ஷாகிட்டு வரேன் என்று போயிருக்காங்க. சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுக்க போறோம்னாங்க. மதியம் சந்தீப் வீட்டுக்கு போயிட்டு, அப்புறமா சுத்தி பாக்க போறோம்னு சொன்னாங்க."

" ஓகே… அப்போ அவங்க பின்னாடி ஃபாலோ பண்றதுக்கு ஆளைப் போட்டுடுங்க…"

" சார்… அவங்களை ஃபாலோ பண்ண ஆள் அனுப்பினா, ஈஸியாக கண்டுபிடிச்சுடுவாங்க… சந்தீப் போலீஸ் டிபார்ட்மென்ட். அதுவுமில்லாமல், வீட்ல அவரோட அப்பா, அம்மா மட்டும் தனியாக இருக்கிறாங்க டைட் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணியிருக்கிறார். அங்க யாராலையும் நுழைய முடியாது. இங்க நான் க்ளோசா வாட்ச் பண்ணுறேன். நீங்க கவலைப் படாதீங்க சார்." என…

" ஓகே கேசவ்… நீங்க எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்க." என்று ஃபோனை வைத்த ரூபக், ' எதற்கு இப்போ ஏற்காட்டிற்கு போயிருக்கிறார்கள். ' என யோசனையில் ஆழ்ந்தான்.

************************************

அப்போது தான் மதியமுதன் ப்ளூடூத்தில் எதையோ கேட்பதை கவனித்த விகாஷினி, என்ன என்பது போல் பார்க்க….

தன் போனில் ரெக்கார்ட் ஆனதை ப்ளே செய்து காட்டினான்.

கீழே யாருக்கும் தெரியாமல் பேசி விட்டோம் என்று கேசவன் மிதப்பாக நினைத்திருக்க‌…

அவன் பேசிய அத்தனையும், மேலே மூவர் கேட்டுக் கொண்டிருப்பதை அவன் அறியவில்லை.