• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேல்விழியாள்- 27

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
233
63
Kumbakonam
அத்தியாயம் - 27

"எனக்கு பிடித்த பாடல். அது உனக்கு பிடிக்குமே." என்ற பாடல் காரில் ஒலித்துக் கொண்டிருக்க…

அதை ரசித்தபடி தாளம் போட்டுக் கொண்டே காரை ஓட்டினான் சந்தீப்.

அப்போது தான் பாவனாவை கவனிக்க. அவளோ சற்றுக் கலக்கத்துடனே வந்தாள்.

அவள் மனதை மாற்றும் பொருட்டு, அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான்.

" பவி… சின்ன வயசிலிருந்து நான் தான் உங்கள ஃப்ரெண்டா நினைச்சு, என்னோட எல்லா விஷயத்தையும் உங்கக் கிட்ட ஷேர் செய்து இருக்கிறேன்.

ஆனால் நீயும், விக்கியும் என் கிட்ட இருந்து எல்லாவற்றையும் மறைத்து தான் இருக்கீங்க. ஆனாலும் அந்த விக்கி பத்திரிக்கையில் எழுதினதை என் கிட்ட சொல்லவே இல்ல. அது எனக்கு வருத்தம் தான். மதி சொல்லித் தான் எனக்கே தெரியுது‌. அவள் விருப்பப் பட்ட படிப்பை படித்துவிட்டு அதற்கு தகுந்த வேலை செய்யலையே என்று எவ்வளவு கவலைப்பட்டிருக்கிறேன் தெரியுமா? ஊருக்கு போனதும் இருக்கு‌ அவளுக்கு கச்சேரி.

" ஓஹோ...நீ மட்டும் எல்லாத்தையும் சொல்லி இருக்கீயா." என தன் தோழிக்கு சப்போர்ட் செய்துக் கொண்டு பாவனா வர...

" அப்படி நான் என்னத்த உங்க இரண்டு பேர் கிட்டேயும் சொல்லாமல் இருந்திருக்கிறேன்."

" அது வந்து…" என்று ஆரம்பித்த பவி, பிறகு எப்படி சொல்வது எனத் தெரியாமல் விழித்து விட்டு முகத்தை திருப்பிக் கொள்ள…

அவள் எதை சொல்ல வந்தால் என்பதை உணர்ந்தவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டு, " பவி." என மென்மையாக அழைத்தான்.

அவனது குரலில் பவி திரும்பி பார்க்க, " நான் வந்து உன்னை விரும்பன விஷயத்தை மட்டும் தான் உங்கள் இருவரிடம் இருந்து மறைத்தேன். அதுவும்‍, படிக்கும் போது உன்னை தொந்தரவு பண்ணக் கூடாது என்று காரணத்துக்காகத்தான்‌… ஆனாலும் உன் ஃப்ரெண்டை நான் சும்மா விட மாட்டேன்." என.

பவியின் முகத்திலோ சிரிப்பு பொங்கி வழிந்தது.

"என்ன… உன் ஃப்ரெண்டை சும்மா விட மாட்டேன் என்று சொன்னதும், உன் முகத்தில் தனி தேஜஸ் தெரியுது? ம்… என்ன விஷயம்.விக்கிட்ட சொல்லட்டுமா? " என சிரிப்புடன் வினவ.

" ம்… சொல்லேன் சந்து. எனக்கென்ன பயம். நான் உன்னோட புது ஃப்ரெண்டை நினைச்சு தான் சிரிச்சேன். ஹா… ஹா… நேத்து நடந்ததை நினைத்துப் பார்த்தேன்." என.

சந்தீப்பின் முகத்திலும் சிரிப்பு வந்தது.

விஷயம் இது தான். விகாஷினியும், மகிழ்விழியும் ஒருவர் தான் என்று தெரிந்தவுடன், முதலில் விகாஷினியை சந்தித்தவன், பிறகு இவளிடம் வாலண்டிரியா வந்து மாட்டிக் கொண்டான்.

பாவனாவும், கிடைத்தது சான்ஸ் என்று மதியமுதனை ஓட்டித் தள்ளிவிட்டாள்.

' " ஏன் அத்தான். மகிழ்விழி யாரோன்னு நினைச்சு, நீங்க போட்ட கமென்டை நாங்க எப்படி கிண்டல் பண்ணுவோம் தெரியுமா? அது மட்டுமா மகிழ்விழியோட உங்களை சேர்த்து வச்சு, சந்தேகப்பட்டற மாதிரி இவ கேள்விக் கேட்டதும், அதுக்கு நீங்க பயந்து ஓடியதையும் நான் மறக்கவே மாட்டேன்." என அப்போது தான் உள்ளே வந்த விக்கியுடன் சேர்ந்து சிரித்தாள்.

" நான் ஒரு சிபிஐ ஆஃபிஸர். என்னையே இவ்வளவு டேமேஜ் பண்ணியிருக்கீங்க. உங்க இரண்டு பேரையும் சும்மா விட மாட்டேன்." என மதியமுதன் துரத்த…

அந்த இடமே ரணகளமாகியது. மதியமுதனும், பாவனாவின் மனதை மாற்றுவதற்காகவே, தனது இயல்பை விட்டு இறங்கி வந்தான்.'

சற்று நேரம் நேற்று நடந்ததை பற்றி பேசியவர்கள், பிறகு சிறுவயது நினைவுகளை பேசிக்கொண்டே ஒரு வழியாக ஏற்காடு வந்தனர்.

வழியில் சந்தீப்பின் எஸ்டேட் வரவும்," பவி… வர்றீயா…ஒரு ரவுண்ட் எஸ்டேடை சுத்திப் பார்த்து விட்டு வரலாம். வீட்டிற்கு போய்ட்டா, மறுபடியும் இங்கே வருவதற்கு அலுப்பாக இருக்கும்." என சந்தீப் வினவ.

" ஓகே… " என்று தயங்கியபடியே கூறினாள் பவி. அவளது தயக்கத்திற்கு காரணம், விதுனுடன் அவள் பேசிப் பழகி சுற்றிய இடம் என்று பார்த்தால் விதுனுடைய காஃபி எஸ்டேட் தான். இங்கு வரவும் பொட்டில் அடித்தாற் போல அந்த நியாபகம் தான் வந்தது.

சந்தீப்பிற்கு அது தெரியாதே! அதனால் கவலை இன்றி சந்தோஷமாக அவளைது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

" டேய் பைய்யா… என்னடா திடீரென்று இங்கே வந்து நிக்கிற‌. அதுவும் மருமகளோட வந்து நிக்கிற. பரிமளாவுக்காவது நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்தது தெரியுமா? இல்லையா?" என வழக்கம் போல தன் மகனைப் பார்த்ததும், சந்தோஷம் பொங்க சகுந்தலா கேலி செய்தார்.

" ஐயோ! மா… அத்தைக் கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கிறோம். பவி வேலை விஷயமா வந்துருக்கா. மாமா துணைக்கு என்னை அனுப்பினாங்க. நான் தான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லாமல் வந்தேன். நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு மா." என்றவன், பாவனாவை பார்க்க.

அவளோ, கலக்கத்துடன் சந்தீப்பை பார்த்தாள். சந்தீப் கண்களாலேயே மன்னிப்பை யாசித்தவன், " அம்மா... ஃபர்ஸ்ட் நீங்க வீட்டுக்கு போங்க. நான் பவியோட எஸ்டேட்டை சுத்திப் பார்த்து விட்டு, அவங்க வீட்ல வேலை இருக்கு. அதையும் முடிச்சிட்டு வரோம்."

" சரிப்பா… நான் போய் உங்களுக்கு டிபன் ரெடி பண்றேன். நீ பவியை ரொம்ப அலைய வைக்காமல், நேரத்தோடு வீட்டிற்கு கூட்டிட்டு வாடா. ஏற்கனவே உடம்பு சரியில்லாதவ. பார்த்து பத்திரம்." என்றவர், தனது வழக்கமான வாக்கிங்கை மகன், மருமகளுக்காக கேன்சல் செய்து விட்டு உற்சாகமாக வீட்டிற்கு கிளம்பினார்.

வீட்டிற்கு கிளம்பிய சகுந்தலாவை, கனிவுடன் பார்த்தவன், பவியின் கையை ஆறுதலாக பிடித்தான். "நீ ஒன்னும் நெர்வஸாகாதே ஃபீல் ப்ரீ." என்றவன் அந்த எஸ்டேட்டை அவளுடன் சேர்ந்து சுற்றிப் பார்த்தான். வழியில் பார்க்கும் ஒவ்வொரு தொழிலாளியிடமும் நலன் விசாரிக்க…

அவளோ, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் விதுனும், சந்தீப்பும் வந்து போயிக் கொண்டிருந்தனர்.

விதுன் ஒவ்வொரு முறையும் கூறுவான்," பவி செல்லம்… உன் முகம் எப்போதும் சிரிப்போடு தான் இருக்கணும். உன்னை விரும்ப ஆரம்பித்ததற்கு காரணமே, உன் வாடிய வதனத்தில் மகிழ்ச்சியை மலர வைக்கணும் என்பதற்காக தான்." என்பான். ஆனால் சந்தீப் வாய் வார்த்தையாக எதுவும் கூறாவிட்டாலும், அவனும் தன்னை தாங்குவதை நினைத்து, குழம்பிய மனதோடு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் சந்தீப் அடியெடுத்து வைத்ததை இன்னும் அவள் உணரவில்லை.

அவள் தன்னையேப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவன், " என்ன பவி. ரொம்ப போரடிக்குதா? இன்னும் அரைமணி நேரம் தான். போயிடலாம்." என்றுக் கூறி புன்னகைத்தான்‌.


சொன்ன மாதிரியே அரைமணி நேரத்தில் கிளம்பியவன், பாவனாவின் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான்.

காரை நிறுத்திய பிறகும் இறங்காமல் இருக்கும் பவியை யோசனையுடன் பார்க்க… அவளோ பதட்டத்துடன் இருந்தாள்‌.

அவளது உணர்வுகளை உணர்ந்தவன், மெல்ல அவளை தன் கைப்பிடியில் கொண்டு வந்து உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆங்காங்கே வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள், பாவனாவை கண்டவுடன் பேசிக் கொண்டிருக்க. அதற்குள் கிச்சனில் இருந்து சுடச்சுட காஃபி வந்தது‌. டிஃபன் என்ன செய்ய, என்றவர்களிடம், வேண்டாம் என்று தவிர்த்து விட்டு ஒரு வழியாக அவளது அறைக்கு வந்தனர்.

கைகள் நடுங்க, தனது கஃபோர்டில் பத்திரப் படுத்தி வைத்திருந்த அந்த கிஃப்ட் பாக்ஸை எடுத்தாள். அதைப் பிரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பல முறை கையிலிருந்து நழுவி, அவள் அமர்ந்து இருந்த மெத்தையில் விழுந்தது.

ஒரு வழியாக தன்னை சமாளித்துக் கொண்டு, பிரித்துப் பார்த்தாள். அதில் செல்ஃபோன், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் எல்லாம் தனியாக இருக்க, அதையெல்லாம் பார்த்தவளின் முகத்தில் அதிர்ச்சி.

யோசனையுடன் சந்தீப்பை பார்த்தாள். அவனோ நாகரீகமாக அவளே பார்க்கட்டும் என்று விட்டு,அந்த அறையைச் சுற்றி கவனித்துக் கொண்டிருந்தான்.

தொண்டை அடைக்க, வார்த்தைகள் வெளிவராமல் தவிக்க, மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு, " சந்து." என்று கதற…

அவளது குரலில் இருந்த பதட்டத்தைப் உணர்ந்து, அவளருகே பதறி ஓடி வந்தவன், "என்ன டா." என வினவ.

மெத்தையில் அவள் பிரித்து வைத்தவற்றை கை காட்டினாள் பாவனா.

அதைப் பார்த்த சந்தீப்பின் முகத்தில் இப்போது பரபரப்புத் தொற்றிக் கொள்ள. அங்கிருந்த ஃபோன் சிம்கார்டு எல்லாவற்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்தான்.

" பவி உன்னோட சார்ஜர் எங்க?"

" அது நான் எடுத்துட்டு வரலை சந்து."

" ஓ… காட். இங்கே வேற யாரும் வச்சிருப்பாங்களா."

" இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் சந்து."

" ஓகே. அப்போ நம்ம வீட்டுக்கு போகலாம் வா " . என்று அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு விரைந்தான்.

" வா மருமகளே…" என நாதன் ஆர்ப்பாட்டமாக அழைத்தார்.

கண்களில் உள்ள கலக்கத்தை மறைத்து, சிரித்த முகமாக தலையாட்டினாள்.

இங்கு சென்ற முறை மதி, சந்தீப் விரும்பியதை தெரிவித்த உடனே, சென்னைக்கு அழைத்து திருமணம் வரைக்கும் பேசி விட்டனர்.

பாவனாவிற்கு உடம்பு சரி இல்லாததால், நிச்சயம் இப்பொழுது வேண்டாம். திருமணத்தோடு செய்துக் கொள்ளலாம் என்று பேசி முடிவெடுத்து விட்டனர்.

சகுந்தலா, ஃபோனில் பாவனாவிடம் திருமணத்திற்கு சம்மதமா என்றும் கேட்டு அறிந்து இருந்தார்.

பாவனாவும், தன் தாய் தந்தையின் மகிழ்ச்சிக்காக சம்மதம் தெரிவித்து விட்டாள்.
ஏற்கனவே மதியமுதனும், தன் திருமணம் முடிந்தால் தான் செய்து கொள்வேன் என்று கூறியிருக்க... தன் அத்தை, மாமாவிற்காகவும் யோசிக்க வேண்டியிருந்தது. அதுவுமில்லாமல் சங்கரும் அவளிடம், ' இங்கே பாரடா… நீ இப்படி இருந்தா எங்களுக்கும் சங்கடமாக இருக்கும். எனக்கு நீயும் ஒரு மக மாதிரி. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும். நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்.' என்று வற்புறுத்தி கூறியிருக்கிறார்.

எல்லோருக்குமாக யோசித்தவள் திருமணத்திற்கு சரி என தலையாட்டி இருந்தாள்.


அதான் சகுந்தலாவும், நாதனும் மருமகள், மருமகள் என அழைத்தனர்.

வீட்டிற்குள் நுழைந்த இருவரும் எப்பொழுதுடா, தனியாக சென்று ஃபோனை பார்ப்போம் என்று முள்ளின் மேல் நிற்பது போல தவித்தனர். அப்படி என்ன அந்த ஃபோனில் இருக்கக் கூடும் என்று தெரிந்துக் கொள்ள நினைத்தனர்.

ஆனால் அதற்கு சகுந்தலாவும், நாதனும் விடவில்லை. முதலில் இருவரையும் சாப்பிட அமர செய்து, இவ்வளவு நாள் வெளியூரில் இருந்து வந்த சந்தீப்பைக் கூட கவனிக்காமல், வருங்கால மருமகளை கவனித்தனர்.

கிடைத்த சான்ஸை பயன்படுத்திக் கொண்டு, தனது அறைக்குச் சென்ற சந்தீப் ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு வந்தான்.

" இதை சாப்பிடு டா. உடம்புக்கு தெம்பாக இருக்கும். இது ஹெல்த்தி‌... " என்று இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு கவனிக்க.

அவளுக்கோ ஒரு வாய்க் கூட உள்ளே இறங்க மறுத்தது. அவளது தட்டில் வைத்துக் கொண்டே, என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க.

சந்தீப் அவளது ப்ளேட்டிலிருந்து, தனது ப்ளேட்டிற்கு கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டான்.

" டேய் பைய்யா. உனக்கு வேணும்னா நான் வைக்கிறேன். அவக் கிட்ட இருந்து எடுக்காதே." என சகுந்தலா கூற.

" மா… அவளுக்கு ஊர்ல இருந்து வந்தது டயர்டா இருக்கு. அங்க பாருங்க எப்படி முழிச்சிட்டு இருக்கா. வேணும்னா ஜூஸ் போட்டு குடுங்க‌."

அவளது முகத்தைப் பார்த்த சகுந்தலா, 'தன் மகன் கூறுவது சரி தான்.' என்று எண்ணிக் கொண்டு ஜூஸ் போடுவதற்காக கிச்சனுக்குள் நுழைந்தாள்.

பாவனாவும் சந்தீப்பை நன்றியுடன் பார்த்தாள். சந்தீப் தலையசைத்து விட்டு தனது உணவில் கவனத்தை செலுத்தினான்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தவன், " மா… பவியை மாடிக்கு அழைச்சிட்டு போறேன்." என்று கூறி விட்டு தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவனது அறைக்கு சென்றவன், சார்ஜரில் போட்டிருந்த ஃபோனை எடுத்து, வேகமாக ஓபன் செய்ய…

அதிகமாக அதில் எந்த தகவலும் இல்லை. ஃபைலில் வீடியோ ஒன்றும், ஆடியோ ஒன்றும் இருக்க. முதலில்
ஆடியோவை பிளே செய்தனர்.

அதில் விதுன்குமார், தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

" லுக் பாவனா… நீ இதனைக் கேட்டுட்டு இருந்தால், நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். ஏனென்றால் நான் உயிரோடு இருந்திருந்தால் உன்னை இந்த கிஃப்டை பிரிக்கவே விட்டிருக்க மாட்டேன். நானே பிரித்து இருப்பேன்.

தென் எனது பிறந்த நாள் வரைக்கும் உன்னை காத்திருக்கவும் வைத்திருக்க மாட்டேன். உன்னுடைய முகத்தில் என்றும் புன்னகையை தக்க வைத்திருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன்.

ஆனால், அதை விட எனக்கு இந்த சமுதாயம் பாதிக்கப்படக் கூடாது என்று தோணுச்சு. இந்த சமுதாயத்துக்கு நான் எதாவது நல்லது செய்யணும் நெனச்சிட்டு இருக்க, என்னோட பேரை பயன்படுத்தியே நிழலாக சில விஷயங்கள் நடைபெற்றிருக்கிறது. அதை கண்டும் காணாமலும் என்னால் விட முடியாது .

என்னோட ஃபார்ம்ஹவுஸ்லேயே சில இல்லீகல் பிசினஸ் நடந்துட்டு இருக்கு‌. அதை இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டுட்டேன். ஒவ்வொரு முறை பார்ட்டிக்கு போயிட்டு வரும்போது என்ன நடக்குதுன்னு எனக்கு புரியவில்லை. ஏதோ சரியில்லை என்று மட்டும் தோணுச்சு. நான் யாரை சந்தேகப்பட முடியும். அதான் லாஸ்ட் டைம் நடந்த பார்ட்டியில், யார் எது கொடுத்தாலும் குடிக்காமலே‍, வைத்து இருந்து விட்டு, குடித்த மாதிரி ஆக்ட் செய்துக் கொண்டிருந்தேன். எதையுமே அங்கு சாப்பிடாமல் இருந்தேன்.

அன்று தான் என்னைச் சுற்றி நடப்பவற்றை கவனித்தேன். துரோகியை கூடவே வச்சிக்கிட்டு இருந்திருக்கிறேன். அதுக்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும். ம் என்னென்னவோ நடந்து விட்டது. சரி விடு. அதையெல்லாம் வீடியோ எடுத்து விட்டேன். அது இந்த மெமரி கார்டுல இருக்கு. இதை பத்திரப்படுத்தி விட்டு தான், நான் இன்னும் விசாரிக்கணும். நான் விசாரிக்கும் போது, எனக்கு எதுவும் ஆனாலும் சரி எப்படியாவது இந்த எவிடென்ஸை சந்தீப்கிட்டயோ, இல்லை உங்க அத்தான் கிட்டயோ குடு. அவங்க பார்த்துப்பாங்க. நான் இரண்டு பேரையும் கான்டாக்ட் பண்ணேன், என்னால ரீச் பண்ண முடியல. இட்ஸ் ஓகே. நான் இப்போ கொஞ்சம் சுயநலமாக, உன்னைப் பற்றி நினைக்காமலே போறேன். பாய் பாவனா. அதே மாதிரி நீயும், என்னைப் பற்றி நினைக்காமல் இரு.' என்று கூறி இருந்தான்.

சந்தீப்பாலும், அதை எல்லாம் கேட்கவே முடியவில்லை. 'விதுன் எவ்வளவு தைரியமாக சாவை எதிர்கொண்டு முடிவெடுத்திருக்கிறான். தான் ஒரு வேளை ஏற்காட்டிற்கு வந்திருந்தால், ஒரு வேளை அவனை காப்பாற்றி இருக்கலாமோ! ' என்று எண்ணி குற்றவுணர்ச்சியில் தவிக்க‌.

பாவனாவோ, கதறி அழுதுக் கொண்டிருந்தாள். கதறி அழும் பவியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல், அவளை அணைத்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.