• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேவாள் :அத்தியாயம் 3

மோகனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
87
38
18
Guduvanchery
அனைவரும் ரகுமானுடன் மாறன் அனுமதிக்க பட்டு இருந்த மருத்துவமனைக்கு சென்றனர்….

"ஒன்னும் பயப்படற அளவுக்கு இல்லை மாறன் ஒரு நாள் இங்க ரெஸ்ட் எடுத்துட்டு நீங்க கிளம்பலாம்…."

"தேங்க்ஸ் டாக்டர்…"மாறன்

"உங்க தேங்க்ஸ் உங்களை காப்பாத்தின கடவுளுக்கு தான் சொல்லணும்… உங்களை தூக்கிட்டு வந்தவங்க சொன்னது தான் இது… நீங்க விழுந்த இடத்துல பெரிய பாறை இருந்து இருக்கு… அதுல உங்க தலை படாம இருந்தது அதிசயம்ன்னு சொன்னாங்க…டேக் கேர் மாறன்…"

அவனின் ஒட்டுமொத்த எண்ணங்களும் அந்த தைரியமான பெண்ணை பற்றியே இருந்தது… முகம் அந்த முகம்… என்ன யோசித்தும் முகம் கண் முன் வராமல் கண்ணாம்பூச்சி காட்டியது..

அவனின் தீவிர யோசனையை தடை செய்யும் விதமாய் ஒட்டுமொத்த குடும்பமும் அறைக்குள் நுழைந்தது…

அதில் இவன் கண்களுக்கு முதலில் பட்டது ரகுமான் தான்…

ஆம் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முன் வந்து நின்று இருந்தான்…

"அண்ணா….அண்ணா உனக்கு விபத்துன்னு கேள்வி பட்டதும் என்னால அந்த ரூம்ல இருக்க முடியலண்ணா…. இப்போ எப்டி இருக்கு?"

"ஹே ரகு கொஞ்சம் பொறுமையா கேளு டா… நா நல்லா இருக்கேன்… ஒன்னும் பயப்பட தேவையில்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு…"

"அம்மா அழாதீங்க டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க…." அவரின் கைகளை பிடித்துக்கொண்டு கூறினான்..

லதா "ரொம்ப பயந்துட்டோம் டா மாறா…" வார்த்தைகளையும் தாண்டி தெரிந்தது அவரின் பயம்..

"ப்ளீஸ் மா அழாதீங்க… அப்பா சொல்லுங்க அம்மாக்கு…"

"என்ன டா சொல்றது…. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… நா போய் டிஸ்சார்ஜ்க்கு ஏற்பாடு செய்றேன்…" சேது கூறிவிட்டு வெளியே சென்றார்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் மாறனிடம் என்ன நடந்தது என கேட்டு அவனை படுத்திக்கொண்டு இருந்தனர்…

வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை எனும் விதத்தில் சமையல் வேளையில் ஈடுபட்டு இருந்தாள் மமதி…

பெரியவர்
எவ்வளவு எடுத்து கூறியும் கையில் உள்ள காயத்தை பற்றி எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் ஹாஸ்பிடலில் இருந்து வர போகும் மாறனுக்காக ஜூஸ் பிழிந்து கொண்டே ரகுமானை பற்றி யோசித்து இருந்தாள்…

அதே நேரம் மான்விழி இல்லத்தை நோக்கி தனது ஓட்டத்தை தொடங்கி இருந்தாள்…

மாறனை ஹாஸ்பிடலில் பேசி வீட்டிற்கு அன்றே அழைத்து வந்து விட்டார் சேது….

இப்பொழுது மாறனை விட்டுவிட்டு ரகுமானை பற்றி விசாரித்து கொண்டு இருந்தனர்….

அவன் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருந்த பதிலையே கூறி இருந்தான்…

"மேற்கொண்டு டிரீட்மென்ட்க்கு ஆஸ்திரேலியா போகணும்னு அப்பா சொல்லிட்டு இருந்தாரு பெரிப்பா… எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல….சீக்கிரம் உடம்புல பலம் வரணும்னு வேண்டிகிட்டே இருந்தேன்….

இன்னைக்கு என்னமோ எழுந்து நடந்தே ஆகணும்னு ஒரு உந்துதல்… சட்டுனு எழுந்துட்டேன்… வெளிய வந்து பாத்தா எல்லாரும் அழுதுட்டு இருகாங்க… எனக்கு ஒன்னுமே ஓடல அண்ணா… நீ எங்களுக்கு எவ்ளோ முக்கியம்… ஜாக்கிரதையா இருக்க வேணாமா? யார் எப்படி போனா நமக்கென்னன்னு இருந்து இருந்தா இப்டி ஆகி இருக்காதே….பெரிதாக பேசி முடித்தான்…"

அவனுக்கு ஏற்கனவே செய்தி வந்து இருந்தது… அட்டெம்ப்ட் பைலியர் எனவும் அந்த இடத்தில் கூட இருந்தது மாறனும் வேறு ஒரு நபரும் என...

அனைவரும் அவனை பெருமையாக பார்த்து இருந்தனர்… மாறன் யோசனையாகவும் மமதி கொலைவெறியுடனும் இருந்தனர்….

மாறனுக்கு தன்னை காப்பாற்றிய பெண் யார் என தெரியாமல் மண்டை காய்ந்தான்… கட்டாயம் தன்னுடன் விழுந்த நபருக்கு தெரிந்து இருக்கும் என நினைத்தவுடன் அவன் இப்பொழுது எப்படி உள்ளான் என கேட்காத தன் மடத்தனத்தை தானே நொந்து கொண்டான்

பின் மருத்துவமனைக்கு அழைத்து தன்னுடன் அனுமதிக்க பட்ட அலுவலரின் உடல் நிலை குறித்து தெரிந்து கொண்டான்…

அவருக்கு சில இடங்களில் சிராய்ப்பு தவிர வேறு அடிகள் இல்லை எனவும் அவரையும் டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும் கூறினர்…

பின் கீழ் இறங்கி வந்து அனைவரிடமும் பொதுவாக பேசி கொண்டு இருந்தான்...

பின்னர் மமதி செய்து வைத்த உணவை உண்டு அனைவரும் தத்தம் அறை சென்று சேர்ந்தனர்…

மமதி வேலைகளை முடித்து விட்டு அவுட் ஹவுஸ் சென்று தன்னை சுத்த படுத்தி வேறு (மாறு) உடை அணிந்து வெளியே கிளம்பினாள்…

"அம்மா மமதி இன்னைக்கு ஒரு நாள் வீட்ல ரெஸ்ட் எடுக்க கூடாதா?"

"இல்லை சாமி அங்கிள் ரெஸ்ட் இப்போ இல்ல என் வேலை முழுதாய் முடியும் வரை என் மனமும் மூளையும் ஓய்வு எடுக்க விடாது… நா போய்ட்டு வர்றேன்…"

அவர் பதில் கூறும் முன் சாலையில் இறங்கி நடக்க தொடங்கி இருந்தாள்….

" என்ன சொல்றீங்க மமதி இது உண்மையா? " மமதியின் மேல் அதிகாரி

" எஸ் சார் இன்னிக்கு அவன் அட்டம்ட் ஃபெயிலியர் ஆனதும் அவனால தாங்கிக்க முடியாமல் வெளியே வந்துவிட்டான்…"

" நமக்கும் இது தானே வேணும் மமதி" கொஞ்சம் ஆர்வம் மேலோங்க கேட்டார்...

" ஆமா சார் ஆனா இதுக்கு மேல அவனை கவனிக்க வெளியேவும் ஆள் போட வேண்டியிருக்கும்"

" அதை நான் பார்த்துக்குறேன் நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க"

"கண்டிப்பாக சார்" என தொடர்ந்து தான் செய்ய போவதை சுருக்கமாக சொல்லி முடித்தாள் தன் உயர் அதிகாரியிடம் ..

அவர் இவளுக்காக என்னவும் செய்ய துணிந்தவர் அதாவது தன் அதிகாரத்தையும் தாண்டி செய்வார்..

தன் கையடக்க செல்பேசியில் பேசி விட்டு இன்னும் சற்று தொலைவு நடந்து கொண்டே இருந்தாள் மமதி….

"டேய் அண்ணா" குட்டி மமதி

"மம்மு குட்டி நீ இப்போ வளர்ந்துவிட்ட டா இப்பவும் அண்ணாவை டேய் சொல்லுவியா?" மமதியின் தாய்

"அம்மா அஞ்சு வயசுலாம் ஒரு வயசு அவ இஷ்டப்படி கூப்பிடட்டும் விடுங்க"

இவர்கள் தன்னிடம் தான் பேசுகிறார்கள் தனக்காகத் தான் பேசுகிறார்கள் என்பதெல்லாம் இல்லாமல் தன் அப்பா தனக்கு கொடுத்த ரொட்டியின் பெரும்பகுதியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்

"பாருடா நீ அவளுக்காக பேசிட்டு இருக்க உன் பங்கையும் சேர்த்து சாப்பிட்டு கிட்டு இருக்கா"

"அம்மா அதை கேட்கத்தான் டே அண்ணா கூப்பிட்டேன் நீ தான் அடுத்து என்ன பேசவே இல்லையே" மம்மு

" நீ பிழைத்துக்குவ டி.. இவனை நினைச்சா தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு…"

" நீ கவலை படாதே மா நான் அண்ணனையும் சேர்த்து பார்த்துக் கொள்வேன்"

எந்த நேரத்தில் எதைக் கூறினாளோ .. அவள் மட்டுமே அவள் அண்ணனை பார்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது..

ஆம் அடுத்து வந்த மழை நாட்களில் குடிசைப் பகுதியில் புகுந்த மழை நீரால் இவர்கள் வசிப்பிடம் ரோட்டின் ஓரம் ஆகிவிட்டது…

அங்கேயும் சில நாட்கள் தான் இருக்க முடிந்தது... அங்கிருந்தும் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள்…

இப்படியே பல இடங்களில் தஞ்சம் புகுந்து நாட்களை ஓட்டிக் கொண்டே இருந்தனர்…

அதற்கும் ஒரு முற்றுப் புள்ளியாய் ஊரில் நடந்த ஒரு கலவரத்தில் சும்மா இருந்த மமதியின் தாய் தந்தையரை போலீஸ் பிடித்துச் சென்றது…

மமதியும் அவள் அண்ணனும் அங்கிருந்தவர்களை விசாரித்துக்கொண்டு காவல் நிலையம் சென்று சேர்ந்தனர்…

இவர்களுக்கு யாரிடம் என்ன கேட்பது எது கேட்பது என எதுவும் தெரியவில்லை... நெடு நேர காத்திருப்புக்குப் பின் வயதான காவல்காரர் ஒருத்தர் இவர்களை கண்டு என்ன என விசாரித்தார்…

மமதி தான் அந்த காவலரிடம் தன் அம்மா அப்பாவை வண்டியில் இங்கு கொண்டு வந்ததாக சொன்னாள்…

அவர் இப்பொழுது யாரையும் வெளியே விட மாட்டார்கள் நீங்கள் சென்று நாளை காலை வருமாறு கூறினார்…

இப்போது சென்றாலும் தங்க இடம் இல்லை என புரிந்த பிள்ளைகள் அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டனர்..

சிறிது நேரத்தில் தன் அண்ணனை மடியில் சாய்த்து உறங்க வைத்திருந்தாள்…

பின்னர் தானும் அப்படியே உறங்கி விட்டாள்…

காலைப்பொழுது வந்துவிட்டதை சூரியன் அவர்களின் முகத்தில் கதிர் ஒளியை வீசி தெரிவித்தார்…

இருவரும் கண்விழித்த தருணம் ஆங்காங்கே சில பேச்சுக் குரல்கள் கேட்டுக்கொண்டு இருந்தது…

' சாப்பாட்டுல விஷம் வெச்சுட்டாங்கப்பா அதான் ஒன்னும் தெரியாத அப்பாவி ஜனங்க செத்து போய்ட்டாங்க'

'அட அதெல்லாம் ஒன்னும் இல்ல இந்த போலீஸ்காரங்க அடித்தே கொன்று விட்டதாக சொல்லிக்கிறாங்க …'

' உண்மையான காரணம் என்ன தெரியுமாப்பா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவங்களோட போராட்டத்தை அதிகப்படுத்துவதற்காக அவங்களுக்குள்ளாவே ஒரு சிலரை தேர்ந்தெடுத்து இந்த மாதிரி செஞ்சிட்டதா சொல்றாங்க…'

'எது உண்மையோ பொய்யோ இப்ப ஜனங்க நிறைய பேர் இறந்தது உண்மைதானே…'

'ஆமாம்பா கேள்வி கேட்க ஆள் இல்லாத அப்பாவி ஜனங்கள மட்டும் தான் இப்ப எல்லாம் எல்லாமே செய்கிறார்கள்…'

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டாலும் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என பிள்ளைகள் இருவருக்குமே புரியவில்லை…

சிறிது நேரத்தில் அரசு அமரர் ஊர்தி சில காவல்நிலைய வளாகத்திற்குள் வந்தது…

அதில் வரிசையாக நேற்று இரவு இறந்ததாகக் கூறப்பட்ட ஒவ்வொருவரின் சடலங்களை வெளியே கொண்டு வந்து ஏற்றினர்…

அப்பொழுதுதான் மமதி தன் பெற்றோரின் சடலத்தையும் அங்கு கண்டாள் ... தன் அண்ணணையும் கூப்பிட்டு அங்கு காண செய்தாள்…

பின் இருவரும் அழுத அழுகை அங்கு இருந்த அனைத்து மக்களையும் காவலர்களையும் துக்கம் கொள்ள செய்தது…

பின் அந்த அமரர் வாகனத்திலேயே இருவரும் அரசு மருத்துவனை சென்று இருவருக்குமான இறுதிச் சடங்கை செய்து முடித்தனர்…

அன்றைய பொழுதை மருத்துவமனையிலேயே கடத்திவிட்டு இரவு தங்களின் வழக்கமான இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தனர் அதாவது வழக்கமாகத் தங்கும் சாலையோரத்தில் வந்து சேர்ந்தனர்…

ஏற்கனவே அங்கு தங்கியிருந்தவர்கள் நடந்த கலவரத்தால் இடத்தை காலி செய்து இருந்தனர்… அதனால் இவர்கள் இருவரும் தனியாக இருந்தது சிலரின் கவனத்தை ஈர்த்தது…

அதில் இருந்த ஒருவன் இவர்களை நோக்கி வந்தான்…" தம்பி,பாப்பா என்ன ரெண்டு பேரும் இந்த தனியா நிக்கிறீங்க வீட்டுக்கு போகலையா.." அவன் உதடுகளில் இருந்த கரிசனம் கண்களில் இல்லை… கண்களில் ஆசை மின்னியது..

"எங்களுக்கு வீடு இல்ல அங்கிள் அம்மாவும் அப்பாவும் கூட இன்னைக்கு தான் இறந்து போயிட்டாங்க…" அழுது கொண்டே சஜன் தான் கூறினான்...

'அட இவங்க நமக்காகவே அனுப்பப்பட்ட பசங்க போல தெரியுது' என மனதில் குது களித்துவிட்டு வெளியே "ஐயோ அப்போ உங்களுக்கு யாருமே இல்லையா.." என கேட்டு இருந்தான் அந்த கொடியவன்… வேறு எப்படி அவனை கூறுவது எங்கோ நல்லபடியாக வாழ வேண்டிய சின்ன சிறு பிள்ளைகளை தன் சுய லாபத்திற்காக பிச்சை எடுக்க விடுபவனை...

"இல்லங்க அங்கிள்" கர்ம சிரத்தையாக பதில் கூறிக்கொண்டு இருந்தான் சஜன்..

"அப்டின்னா எங்க கூட வரீங்களா" கண்கள் பலபலக்க கூட்டினான் அவன்..

"எங்க?" சஜன் இப்பொழுது தான் அவனின் முகத்தை தெரு கம்ப விளக்கு வெளிச்சத்தில் கண்டான்...

"உங்கள மாதிரி நிறைய குட்டி பசங்க எங்க கிட்ட இருக்காங்க அவங்கள நாங்கதான் பாத்துக்குறோம்" என்னமோ அனாதை ஆசிரமம் நடத்துவன் போல் பெருமையாக கூறினான்

"ஓ அப்படின்னா நாங்களும் வறோம் அங்கிள்…" சஜனுக்கு அவனின் புன்னகை முகம் தங்களை காப்பாற்ற வந்த நாயகனாக கண்டான்..

இப்படி இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே இவனுடன் வந்த சிலர் சில பிள்ளைகளை அடித்துக் கொண்டிருந்தனர்…

அதைக்கண்ட மமதி தன் அண்ணனுக்கு சைகை காட்டி தமிழில் அவர்களிடம் செல்ல வேண்டாம் என கூறினாள்…

அதை சரியாக புரிந்து கொண்ட சஜன் மமதியின் கைகளை பிடித்து கொண்டு...

அடுத்த சில நிமிடத்தில் ஓட்டம் பிடித்து இருந்தனர்…

இதை எதிர்பாராத அந்த கொடியவன் இவர்களின் பின்னால் ஓடி வந்தான்…

அங்கு கிளம்ப தயாராக இருந்த மும்பை டு சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடைசி பெட்டியில் ஏறி இருந்தனர்….

ரயில் இவர்களின் தள்ளாடமான வழக்கையை சீர் செய்ய காத்திருந்தது...

தொடரும்....
 

மோகனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
87
38
18
Guduvanchery
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️அய்யோ சின்ன வயசுலயே மமதி, சஜன் ரெண்டு பேரும் கஷ்டப்பட்டிருக்காங்களே 😢😢😢😢😢
என்ன பண்றது... எல்லோருக்கும் எல்லாமே கிடைச்சுடறது இல்லியே 😍