• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

🌱துளசி : 01🌱

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
372
63
Tamil Nadu, India
சென்னை உயர் நீதிமன்ற வளாகம் அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நேரம் ஊசி விழுந்தால் கூட எதிரொலிக்கும் அளவு நிசப்தம்.

நீதி வழங்க தயாரானார் நீதியரசர். இருதரப்பு வாதங்களை கேட்ட பின் "திரு நல்லான் அவர்களின் தரப்பில் நியாயம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது எனவே அவரை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிய சொத்துக்கள் பத்திரப் பதிவுகள் அனைத்தும் உடனடியாக ரத்தாகிறது."

"அத்துடன் ஆக்கிரமிப்பில் இருக்கும் அவரது சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையிடுகிறது. "

" இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தரப்பில் மிகச் சிறப்பாக வாதாடி நியாயத்தை நிலைநாட்ட உதவி புரிந்த செல்வி துளசி அவர்களுக்கு இந்த நீதிமன்றம் தனது பாராட்டுக்களை தெரிவிக்கிறது. " என்று அறிவித்தவுடன் கோர்ட்டு அதிரும் வண்ணம் கைதட்டல்களும் பாராட்டுகளும் எதிரொலித்தன.

பெரியவர்களுக்கும் கண்களிலிருந்து தரதரவென நீர் வழிந்தது. உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்த அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது துளசியின் கரங்களைப் பிடித்துக் கொண்டார்.. ஆனால் துளசியின் கண்களோ தன்னை பெற்ற தந்தையை விட தன்னை வளர்த்த தந்தையான தயாநிதியையே தேடியது. அவளின் இரு புறமும் தோள் அணைத்துக் கொண்ட தோழர்களான ஹரிணியும் ஹரி கீரனும் சந்தோஷ மிகுதியில் திக்குமுக்காட கோர்ட்டை விட்டு வெளியே வந்தால் துளசி…

வெளியே வந்தவளிடம் சென்ற நல்லான் அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டு "அம்மா இனிமேலாவது என் கூடவே வந்துவிடு அம்மா நான் செஞ்சது தப்புதான் என்னை மன்னித்துவிடு இயற்கை வஞ்சித்தது புரியாம உன்னை அவமான சின்னமா நினைத்ததற்கு இப்ப நான் சரியான பாடம் கத்துக்கிட்டேன் தயவு செஞ்சு வாம்மா" என கெஞ்ச ஒரு மெல்லிய சிரிப்புடன் அவர் கரங்களை ஒதுக்கி, " அப்பா இத்தனை நாள் என்ன ஆதரிச்சு படிக்க வச்சு ஆல் ஆகிவிட்டது தயா அப்பாதான் அவரை விட்டுட்டு எப்படி நான் வரமுடியும்? அது மட்டும் இல்ல பா இன்னைக்கு நான் பெரிய வக்கீலா இருக்கறதுனால உங்க கேச ஜெயிச்சு கொடுத்த என்ன கூப்பிடுறீங்க…"

"அந்த அறியா வயசுல உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் புரியாமல் தவிச்சுகிட்டு இருந்த போதும் எல்லாரும் பேச்சையும் கேட்டு என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டுட்டீங்க நான் மட்டும் அன்னிக்கு தயா அப்பா கையில் கிடைக்காமல் தப்பான கரங்களில் கிடைத்திருந்தால் என் நிலைமை என்ன கொஞ்சம் யோசிச்சு பாருங்க…"

"இதுக்கப்புறமாவது என்ன மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் உதவி செய்யணும்னு நினைக்கிறேன் அதற்கான என் பணியை நான் துவக்கி இருக்கேன் தயவு செஞ்சு நான் இங்கே இருக்கேன் அப்பா என்ன விட்டுடுங்க." என்றாள் ஆம் துளசி ஒரு திருநங்கை…….
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,188
498
113
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
தென்கட்சி கோ. சுவாமிநாதன் அய்யாவின் ஒரு பக்க கதையில் சிந்திக்க சிரிக்க வைப்பார் அதே போல ரெம்ப short and sweet ஆன படைப்பு அனு சகி சூப்பர் 👍👍👍👍👍👍