• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தன் கண்ணாட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் அம்புதியை அதிர்ச்சியடையச் செய்திருந்தது.

"அவனவன் இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்காதானு ஏங்கிட்டு இருக்கானுங்க... நீங்க என்னடான்னா ப்ளான் போட்டு கொடுத்த என்கிட்டேயே ப்ளானே மாத்த சொல்லி கேக்குறிங்களே!" என்று தூக்கத்தில் உளறத் தொடங்கினாள்.

"தெரியும் டி... நீ இப்படி தான் வில்லங்கமா ஏதாவது யோசிச்சு தான் பண்ணிருப்பேனு..." என்று கோபத்தில் உரைத்தபோதும், அவளை ஒன்றும் செய்யத் தோன்றவில்லை அவனுக்கு. மாறாக அடுத்து ஏதேனும் பேசுவாளா என்று எதிர்பாத்திருந்தான்.

"உன்னால என்னை எப்பவும் புரிஞ்சுக்க முடியாது ஈஷ்... ஆனா என் அபு இப்போ இல்லேனாலும், கூடிய சீக்கிரமே என்னை புரிஞ்சுப்பார்" என்று தெளிவாகவே உளறினாள்.

முன்னதற்கும் பின்னதற்கும் சம்மந்தமே இல்லாமல் உளறிக் கொண்டிருந்தாலும், அவளது வார்த்தைகளில் ஏதோ ஒரு தாக்கம் கொண்டிருந்தான் அவளின் அபு...

ஒரு வகையில்‌ ஆழியை புதிதாகப் பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும்... இதழ்களில் புன்னகை கூட தானாக வந்து ஒட்டிக் கொண்டது.

'உண்மையாவே இவ என்னை பற்றி என்ன தான் நெனைக்கிறா? இவ ப்ளான் தான் என்ன? என்னை சோதிக்கிறாளா? இல்லை நம்புகிறாளா?' என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் ஆவல் மேலோங்க, இன்னும் என்ன தான் பேசுகிறாள் என்ற ஆர்வத்தில், அவள் அருகே நெருக்கமாய் அமர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

"முறுக்கு மீசை வெச்சு இருக்கிறதாலே அப்படியே அய்யனார்னு நெனப்பு Mr.ஞானத்துக்கு... கையில அருவா கிடைச்சா வெட்டி வீசிடுவாரு‌ பாரு!!!" என்று தன்னை மட்டும் எப்போதும் மிரட்டி நிற்கும் தந்தைக்கு அர்ச்சனைகளை வாரி வழங்கினாள் அவனின் அவள்.

அம்புதி இதழ் விரித்து சிரித்து விட்டான்... அவள் தெளிவாக ஒன்றிற்கு ஒன்று சம்மந்தமே இல்லாமல் தான் பேசுகிறாள் என்று புரிந்தது அவனுக்கு...

அதே நேரம், மனம் திறந்து வெளிப்படையாக பேச முடியாத அவளது உணர்வுகளைத் தான் இவ்வாறு உளறுகிறாள் என்றும் புரிந்து கொண்டான்...

இப்போது கேள்வி கேட்டால் நிச்சயம் அதற்கான பதில் வரப் போவது இல்லை என்பதையும் ஊகித்தவன், சும்மா வேணும் பேச்சுக் கொடுத்தான்.

"என்னெல்லாம் பேசுறே நீ! உன் அப்பனுக்கு மட்டும் இது தெரிஞ்சது!!! அவ்ளோ தான் டி... கொத்து பரோட்டா மாதிரி சும்மா கொத்தி போட்டிருவாரு உன்னை" என்று ஏற்ற இறக்கத்தோடு, அவளை விட மெல்லிய குரலில், அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் உரைத்தான்...

"மடத்தனமா பேசாதே டா, மடப்பையன் மருமவனே! இங்கே பேசினா அங்கே எப்படி கேட்கும்!!!" என்று அவளும் பதிலுரைக்க, அவளது பேச்சில் வாய் பிளந்து உறைந்தது என்னவோ அவளது அபு தான்.

ஒருவர் எவ்வளவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் கூட ஒரு போதும் தனது ரகசியங்களை உளற மாட்டார்கள் என்கிறது ஆய்வு அறிக்கை. அது தெரிந்து வைத்திருந்த அம்புதியுமே ஆழியின் முதல் உளறலிலேயே அவள் உறங்கவில்லை என்பதை கணித்துவிட்டான்.

'களவாணி கழுதே! என்னையே டா போட்டு பேசுற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா இவளுக்கு!' என்று அம்புதியின் மனம் குமுறியது ஒரு பக்கம்... அதேநேரம் ரசிக்கவும் செய்தது மறுபக்கம்...

நொடிக்குள் அவனாகவே அதிலிருந்து மீண்டு மீண்டும் அவளிடம் பேச்சு கொடுத்தான். "அதுக்கு தானே நான் இருக்கேன்... உன் அப்பா வாட்ஸ் ஆப் நம்பருக்கு ஒலியும் ஒளியும் அனுபிட்டா தெரிஞ்சிடப் போகுது..." என்று கூறி திறன்பேசியை எடுத்து, அதில் ஒளிப்பதிவு செயலியை உயிர்ப்பித்து தயாராக வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

அதற்குள் ஆழி ஆழ் உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்... இல்லை ஆழ் உறக்கத்திற்கு சென்றுவிட்டது போல் காட்டிக் கொண்டாள்... அடுத்து எந்தவித பேச்சு, மூச்சும் இல்லை அவளிடம்...

ஆழி எனும் துறுதுறு பெண்ணின் சேட்டைகளை ரசிக்கும் ரசிகனாகவும், அவளிடமிருந்து சேட்டை கற்கும் கற்போனாகவும் மாறிப் போனான் அம்புதி எனும் உபாத்தியன்.

‌ இனி இவளிடமிருந்த எந்த உளறலும் வரப் போவது இல்லை என்பது புரிந்திட, ‌'இவளுக்கு ஆக்ஷன் சீக்குவன்ஸ் தான் சரி' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, துரிதமாக செயல்பட்டு வலைதளத்தில் சில ஒலிப்பதிவுகளை தரவிரக்கம் செய்தான் தனது திறன்பேசியின் துணையோடு...

தனது இந்த வினைக்கு அவளது எதிர்வினை எப்படி இருக்கும் என்பதையும் ஊகித்திருந்தவன், அதனை எதிர்கொள்ளவும் தயாராகினான்.

பட்டும், படாமலும் மெதுவாக பெண்ணவளின் காதுகளில் செவிபேசியை அணிவித்து விட்டு, தான் முன்னமே தரவிரக்கம் செய்து வைத்திருந்த, இருளின் அமைதியும், அமைதியைத் தொடர்ந்து இரவு விட்டில்களின் சத்தமும், அதனை அடுத்து அதிக அதிர்வுடன் நரி ஊளையிடும் சத்தமும் ஒலிக்கச் செய்தான்.

அடுத்த நிமிடம் அலறியடித்துக் கொண்டு கண் விழித்து ஒரே தாவலில் அம்புதியின் மேல் தாவி அவன் கழுத்தோடு அணைத்து கட்டிக் கொண்டாள் அவனது அழகி... முன் கூட்டியே அவள் இதைத் தான் செய்வாள் என்று எதிர்பார்த்திருந்தவன், அவளை தன் மேல் தாங்கிக் கொண்டதோடு, படுக்கையில் சரிந்து விழாமல் பார்த்துக் கொண்டான்.

அதிர்ச்சியிலிருந்து மீளவே ஆழிக்கு சற்று அதிக நேரம் பிடித்தது. அதுவரை அம்புதியும் எதுவும் பேசாது, அவளையும் விளக்காது பொறுமை காத்தான்.

மிரட்சியிலிருந்து மீண்டவள், அணைத்திருந்த கைகளை சட்டென உறுவிக் கொண்டு அவன் அருகே அமர்ந்தாள். 'ஏன் இப்படி செய்திங்க?' என்று கலங்கிய பார்வை பார்த்தாள்.

அவனோ சற்றும் விறைப்பு குறையாமல், அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

'ஓவர் ஆக்டிங் பண்ணிட்டமோ' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, "உனக்கு என்ன வேலை கொடுத்தேன்! நீ என்ன பண்ணிட்டு இருக்கே!" என்றான் அம்புதி...

'அப்போ இன்னும் நம்ம ஆக்டிங்கே கண்டு பிடிக்கலேயா!' என்று மீண்டும் யோசித்தாள். அவளை யோசிக்க அனுமதிக்க கூடாது என்று நினைத்த அம்புதியோ, "நான் கேட்ட ஐடியா பத்தி யோசிக்காம என்னென்னமோ உளறி கிட்டு இருக்கே?"என்றான்.

‌ 'அப்பாடா இன்னும் கண்டு பிடிக்கலே... தூக்கத்துல உளறினதா தான் நம்பிட்டு இருக்காரு... அப்படியே இருக்கட்டும்... இருக்கட்டும்...' என்று உள்ளுக்குள் குதூகலித்தவள், மீண்டும் 'ஆனாலும் ஈஸ்வரி விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டாம என்னை விடமாட்டார் போலயே!' என்று நினைத்துக் கொண்டு அப்போதைக்கு வாய்க்கு வந்ததை உளறினாள்.

"நான் வேணுனா 'டாக்ஸி புக் பண்ணிக்கோ டி'-னு ஈஷ்-க்கு மெசேஜ் அனுப்பட்டுமா?" என்றாள் அவனது இடைவிடா முறைப்பைக் கண்டு...

"ஒன்னும் தேவையில்லே... கிடைச்ச ச்சான்ஸே யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்..." என்று முறைப்பு மாறாமல் உரைத்து, அவள் உளறலை நம்பியது போல் காட்டிக் கொண்டு மெத்தையில் குப்புற படுத்துக் கொண்டான்.

ஆழியும் தனக்கு தானே சபாஷ் சொல்லிக் கொண்டு, மீண்டும் தனது ஆஸ்கார் பெர்பாமென்ஸை தொடர்ந்தாள். "ஆனா நீங்க தானே, நான் செய்த காரியத்துக்கு நானே தான் வழி சொல்லனும்னு சொன்னிங்க" என்றாள்.

"லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து தூங்குறேயா?" என்றான் கட்டளை‌யாக...

பெண்ணவளுக்கு ஒருபுறம் தான் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி... மறுபுறம் இதனால் அம்புதியின் வெறுப்பை சம்பாதிக்கக் கூடுமோ என்ற பயம்...

அப்போதைக்கு தனது சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சற்றே உறக்கம் கொள்ள நினைத்தாள். ஆனால் தன்னவன் செய்த வேலையில் தன் காதுக்குள் நரிகளின் ஊளையிடும் சத்தம் கேட்பது போல் இருக்க விளக்கை அணைக்கவே அச்சம் கொண்டிருந்தாள்.

அம்புதியோ தன்னையே பார்த்து மழங்க மழங்க விழித்துக் கொண்டிருந்தவளை முறைத்தபடியே எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்துக் கொண்டான்...

வேறு வழி இல்லாமல் அவன் அருகே சென்று படுத்தவளுக்கு தூக்கம் மருந்துக்கேனும் பக்கம் வருவேனா என்றது. எதனிடமோ இருந்து தன்னை ஒழித்துக் கொள்வது போல் போர்வைக்குள் முழுமையாக தன்னை மறைத்துக் கொண்டு அத்தனை கடவுள் நாமத்தையும் உச்சரித்தாள் ஆழி.

அப்படியும் தூக்கம் வராமல் போகவே, அம்புதியின் புறம் திரும்பி படுத்திட, அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையில் ஒரு நொடி திடுக்கிட்டவள், விழிகளில் நீர் அரும்பியபடி 'செய்யிறதையும் செய்துட்டு பார்க்கிறதை பார்!' என்று மனதிற்குள் மொழிந்து கொண்டு, தானாகவே வாய் திறந்து "தூக்கம் வரலே!" என்றாள்.

அம்புதியோ மீண்டும் முறைத்துவிட்டு, மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான். சுற்றியிருக்கும் இருளைப் பார்க்க பார்க்க அவளுக்கு அப்படி ஒரு பயம்... கண்களை இறுக மூடிக் கொண்டு, சஷ்டி கவசம் கூறத் தொடங்கினாள்.

என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்த அம்புதிக்கே அவளைக் காண பாவமாக இருந்தது. அவள் புறம் திரும்பிப் படுத்து அவளது இரு கைகளையும் பிடித்து, தன் நெஞ்சோடு சேர்த்து வைத்து தன் இதயத் துடிப்பை அவளது கைகளுக்குள் பாய்ச்சினான்.

துதியை நிறுத்திவிட்டு, தன்னவனை விழி திறந்து பார்த்தாள். கண்கள் கொஞ்சம் கொஞ்சமா குளம் கட்ட, குற்றப்பார்வையால் அவனை சாடினாள்... 'எல்லாம் தெரிந்தும் இப்படி செய்துடிங்களே!' என்று... மறுநிமிடம் அவளது வதனத்தை தன் நெஞ்சில் தாங்கி தன் இதயத் துடிப்பை நேரடியாக கேட்கச் செய்தான்.

என்ன நினைத்து அவன் செய்தானோ தெரியாது! ஆனால் அவளுக்கு அவனது இதயத் துடிப்பு பல மடங்கு பலத்தைத் தந்தது... அவனது இதயத் துடிப்பு மற்ற எதனையும் யோசிக்கவிடாமல், நிம்மதியான உறக்கத்தையும் கொடுத்தது.

ஆழி தூங்கும் வரை விழித்திருந்தவன், அவள் உறங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டப் பின்னர் தான் அவன் விழி மூடினான்...

மறுநாள் காலை ஆழி எழுந்து கொள்ளும்போது அம்புதியின் குரல் குளியலறையிலிருந்து வந்தது.

பறக்கும் ராசாளியே

ராசாளியே நில்லு...

இங்கு நீ வேகமா

நான் வேகமா சொல்லு...

'சர் செம ஹாப்பி மூட்ல இருக்காரு போல... பைக் ரைட்... லாங் ட்ரைவ்... அதுவும் எக்ஸ் லவ்வர் கூட... சாங்-ஏ பயங்கரமா இருக்கே' என்று புன்னகை முகமாக நினைத்த போதும் கூட, வயிற்றெரிச்சல், நெஞ்செரிச்சலுடன் தான் அன்றைய நான் விடிந்தது அவளுக்கு...

குளித்து முடித்து வந்தவன், ஆழி படுக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்த போதும் துளியும் கண்டு கொள்ளாது அவளை வெறுப்பேற்ற வேண்டியே

வலி இருந்தும்…
சோகம் இல்லை…
உன் மேல்…
துளி கோபம் இல்லை…
பெண்ணே நீ இல்லாமல்…
ஹம்ம்ம்... ம்ம்ம்

முன்னாள் காதலி
என் முன்னாள் காதலி

ஹம்ம்ம்... ம்ம்ம்ம்

என்று பாடலில் ஆழியை கடுப்பேற்றும் வரிகளை மட்டும் பாடி மீதியை ஹம் செய்தபடியே கண்ணாடி முன் நின்று தன்னை சிரத்தை எடுத்து அழகுபடுத்திக் கொண்டான்.

பெண்ணவளோ அவனது திறன்பேசியை எடுத்து முதல் வேலையாக அவனது பேர்ட்டன் லாக்-ஐ மாற்றி வைத்துவிட்டு, அவன் ஹம் செய்த பாடலை ரிப்பீட் மோடில் போட்டுவிட்டு குளியலறை சென்றுவிட்டாள்.

முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உன் பொய்கள்…
தந்த தித்திப்பில்…
மயங்கிக் கிடந்தேன்…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உண்மைக் கசக்கும் வேளையில்…

மயக்கம் தெளிந்தேன்...

அவளை கடுப்பேற்ற நினைத்து பாட ஆரம்பித்தவன், இறுதியில் தானே அந்த பாடல் வரிகளில் கடுப்பாகி செயலியை நிறுத்த முயற்சித்தான்.

அலைபேசியின் திரையோடு சிறிது நேரம் சண்டையிட்டுப் பார்த்தவன் தோல்வியை மட்டுமே பல முறை தழுவிவிட, திறன்பேசியை மெத்தையில் விட்டெரிந்துவிட்டு சென்றுவிட்டான்.

குளித்து முடித்து வந்தவள், இன்னமும் பாடல் ஒலிப்பதைக் கேட்டு பரம ஆனந்தம் அடைந்தாள். பாடலை நிறுத்திவிட்டு, அவன் முதலில் வைத்திருந்த கடவுகுறியையே மாற்றி வைத்துவிட்டு, திறன்பேசியோடு வெளியே வர அங்கே அம்புதி இல்லை.

'முன்னாள் காதலியே ட்ராப் பண்ணுறதுலே அவ்ளோ ஆர்வம் போல' என்று இதழ் மட்டும் முனுமுனுத்துவிட்டு அடுக்களை நுழைய, எதிரே வந்த ஈஸ்வரியின் மேல் முட்டி நின்றாள்.

'இவ இன்னும் இங்கே தான் இருக்கா! அப்போ அபு எங்கே!' என்று சந்தேகம் எழ அதனையே ஈஸ்வரியிடம் வினவினாள்.

"அபு எங்கே?"

'அபு' என்ற ஆழியின் ப்ரத்யேக அழைப்பில் வாய்பிளந்து நின்றவள், மீண்டும் ஒருமுறை கூறும்படி "ம்ம்ம்?" என்றாள்.

"அம்புதி மாமா எங்கே?" என்று மாற்றியிருந்தாள் ஆழியும்...

ஆழியை ஒருமுறை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு, "மாமா-வுக்கு இன்னைக்கு தான் ஈ.எம்.ஐ கட்ட வேண்டிய கடைசி நாளாம்... அதான் அவசரமா கிளம்பி போயிட்டாங்க" என்றாள்.

அம்புதி ஈஸ்வரியை அழைக்காமல் சென்றதில் ஈஸ்வரிக்கு வருத்தமோ இல்லேயோ, ஆழிக்கு நிறைந்த வருத்தமே! அதுவும் அவள் முகத்தில் தெரியவே ஈஸ்வரி அவளை விசித்திரமாய் பார்த்தாள்.

காதல் கரை எட்டுமா!
 
Top