ஓடி களைத்த புவனும், ஆழியும் மரத்தடியில் நின்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, ஓடாமலேயே களைத்து இருவரையும் பார்த்து மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருந்தாள் இன்னொருத்தி...
"உனக்கு ஏன் டி இப்படி மூச்சு வாங்குது? எதும் ரன்னிங் ரேஸ்ல பார்ட்டிசிப்பேட் பண்ணினேயா என்ன?" என்றாள் ஆழி மூச்சிறைத்தபடி.
"அடியேய் உன்னே!" என்று ஆழியின் கையிலிருந்த புத்தகத்தைப் பரித்துக் கொண்டு அவளை அடிக்க விரட்டினாள் ஸ்வாதி.
"நீ இந்த குண்டுமணி குள்ள வாத்து கூட ஓடி பிடிச்சு விளையாடினதுக்கு அவரு என்னை வெளியே அனுப்பிட்டாரு டி... எல்லாம் உன்னால தான் டி" என்று மரத்தைச் சுற்றி ஓடி வந்த ஆழியை திட்டிய படி விரட்டிக் கொண்டிருந்தவள், புவனின் முரட்டுப் பிடியில் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நின்றாள் ஸ்வாதி.
'இவன் என்ன கொம்பு சீவிவிட்ட ஜல்லிக்கட்டு காளை மாதிரி மூக்கு வழியா புகை விட்டுட்டு நிக்கிறான்!' என்று யோசித்தவளுக்கு சற்று நேரம் கழித்து தான் மூளைக்குள் அறிவு ஒளி மின்னியது சீனியருக்கு தமிழ் புரியும் என்று.
"சீனியர்-னு ஒரு பயம் இல்லே உனக்கு... குண்டுமணி! குள்ள வாத்து! என் முன்னாடியே இவ்வளோ பேசுறேயே! நான் இல்லாத நேரம் என்னை என்னவெல்லாம் சொல்லிருப்பே! பென்ச் மேல ஏறி நில்லு... கையை தலைக்கு மேலே தூக்கு" என்று சுத்த மராத்தியில் அதிகாரம் செய்தான் சீனியர் என்ற முறையில்...
"புவன் ப்ளீஸ் புவன்... ஏதோ அவ மேல இருந்த கோபத்துல உங்களையும் அப்படி சொல்லிட்டேன்... என்னை விட்டுடுங்க ப்ளீஸ் புவன் ... ப்ளீஸ்....." என்று காலில் விழுகாத குறையாக, விட்டால் அழுது விடும் அளவிற்கு கெஞ்சினாள் ஸ்வாதி.
"பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா உனக்கு... எல்லாம் இவளால தான்..." என்று ஆழியைப் பார்த்து முறைத்து விட்டு, மீண்டும் ஸ்வாதியிடம் திரும்பி "நேம் சொல்லி அழைச்சதுக்கு பனிஷ்மெண்ட்-ஆ பென்ச்ல முட்டி போடு" என்றான்.
ஸ்வாதியின் விழிகள் குளம் கட்டி விட்டிருந்தது. "சாரி சீனியர்..." என்றவள் கண்களை கசக்கிக் கொண்டு, "அவ என்ன சொன்னாலும் நீங்க ஒன்னுமே சொல்லமாட்டிங்க... நான் தெரியாம சொன்னதுக்கு என்னை மட்டும் திட்டுறிங்க... பனிஷ் பண்றிங்க.... ஹேங்...ஹே...ஹே..." என்று ஒப்பாரி வைத்தாள்.
"ஏய்... ஏய்... மூச்.... ஒரு சத்தம் வரக் கூடாது... சொன்னதை மட்டும் செய்..." என்று கண்களை உருட்டி மிரட்டினான்.
புவனின் மிரட்டலில் கைகளால் வாயை மூடிக் கொண்டு, அவன் கூறியது போல் கல் இருக்கையில் ஏறி நின்றாள்.
அதற்கு, "ஏய் சுவி... இறங்கு டி கீழே" என்று தோழியின் கை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்திக் கொண்டு, "என்ன சீனியர்... ஓவரா தான் மிரட்டுறிங்க... ரொம்ப டீஸ் பண்ணினா பிரின்சிபில் சர் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவோம்" என்று தோள் கொடுக்கும் தோழியாய், தன் பாலின நட்புக்காக எதிர்பாலின நட்புடன் சண்டைக்கு நின்றாள் ஆழி.
அப்போதும் சீனியர் ஸ்வாதியைப் பார்த்து முறைத்தபடி, "பொழச்சு போ... பிரின்சிபல்-க்கு பயந்தோ! இல்லே இந்த வீர தமிழச்சி பயந்தோ! இல்லே..." என்று வஞ்சியை வஞ்சப்புகழ்ச்சியில் மொழிந்துவிட்டு, ஸ்வாதியை புருவம் சுருக்கி உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நொடிக்குள், ஒரு பார்வை பார்த்தான்.
இரு பெண்களும் அந்த பார்வையை கருத்தில் கொள்ளவில்லை. புவனிடம் விடைபெற்று திரும்பி நடக்கத் தொடங்கினர்.
சீனியரோ சற்று தூரம் அவர்களை செல்ல அனுமதித்து விட்டு, ஸ்வாதி பெயரை சத்தமாக அழைத்தான். இருவரும் மீண்டும் இணைந்து வர, "நீ மட்டும் வா" என்றான் ஆழியின் முறைப்பை தாங்கியபடி.
ஸ்வாதி குழப்பமாக தோழியைக் காண, "போ... நான் இங்கேயே இருக்கேன்... ஒன்னும் செய்யமாட்டான். சும்மா ரெண்டு மிரட்டு மிரட்டிட்டு விட்டுடுவான்" என்று தோழனைப் பற்றி நன்கு அறிந்தவள், தோழிக்கு தைரியம் அளித்து அனுப்பி வைத்தாள்.
ஸ்வாதி தன்னை நெருங்கவும், "உன்னால ஒரு காரியம் ஆக வேண்டியது இருக்கு... லன்ச் ப்ரேக்-ல என்னை கேட்டின்-ல வந்து பாரு... மித்து இல்லாம... தனியா வா" என்றான்.
"அய்யய்யோ... நான் இங்கேயே பென்ச்-ல நீங்க எவ்ளோ நேரம் நிக்க சொல்றிங்களோ நிக்கிறேன். கேன்டின்லேலாம் எல்லார் முன்னாடியும் நிக்கவும் முடியாது, திட்டு வாங்கவும் முடியாது என்னால..." என்று கூறிக் கொண்டே கல் இருக்கையில் அவசரமாக ஏறி நின்றாள்.
புவனுக்கோ இதயம் அதி வேகமாக துடிக்கத் தொடங்கியது... அந்த படபடப்போடு மித்ராவை திரும்பிப் பார்க்க, தூரத்திலிருந்து அவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆழி... "ஏய்... லூசு... என்ன காரியம் பண்ணிட்டு இருக்கே... கீழே இறங்கு மொதோ..." என்று திட்டிக் கொண்டே ஸ்வாதியின் கை பிடித்து கீழே இறக்கி நிற்க வைத்தான்.
மீண்டும் ஆழியைத் திரும்பிப் பார்க்க, புவனை முறைத்தபடி வேக எட்டுகள் வைத்து அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
வலக்கர விரல்கள் கொண்டு புருவத்தை நீவி விட்டபடி "உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்... பேச மட்டுமே செய்யனும்... வர்றேயா? இல்லேயா? டக்குனு சொல்லு டைம் இல்லே" என்றான் ஆழி வந்து கொண்டிருந்த திசையைப் பார்த்து...
சீனியரின் முகத்தில் தெரிந்த பதற்றம் ஸ்வாதியை சம்மதிக்க வைத்திருந்தது. "வர்றேன்" என்றாள் நிதானமாக...
"மித்து இங்கே தான் வர்றா... என்னனு கேட்டா ஏதாவது சொல்லி சமாளி... நான் என்ன சொன்னாலும் கண்டிப்பா நம்ப மாட்டா... நீயும், நானும் மீட் பண்ற ப்ளான் அவளுக்கு தெரிய கூடாது..." என்று படபடத்தான், சன்னமான குரலில்...
அதேபோல் வந்தவளும் குழப்பமாய், "என்னாச்சு? திரும்பவும் ஏறி நிக்க சொன்னியா புவன்?" என்று முதல் கேள்வியை தோழியிடமும், இரண்டாம் கேள்வியை சீனியரிடமும் வினவினாள்.
ஸ்வாதி அவசரமாக மறுத்தாள். "அதெல்லாம் இல்லே மித்து... இனிமே நானும் சீனியரை பேர் சொல்லியே அழைக்கலாம்னு சொன்னாரு... நான் தான் 'வேண்டவே வேண்டாம்... இன்னேக்கு ஃபுல்லா பென்ச் மேல கூட ஏறி நிக்கிறேன்... இனிமே பேர் சொல்லி அழைக்கவே மாட்டேன்னு' கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்" என்று சமாளித்தாள்.
புவனை ஒருமாதிரியாக பார்த்த போதும், ஸ்வாதியின் புறம் திரும்பி அவளையும் நம்பாத பார்வை பார்த்தாள் ஆழி.
ஆழியின் பார்வை ஸ்வாதியின் மேல் சந்தேகமாகப் படிவதைக் கண்ட புவனும், "ஏய் மித்து... அவளை மொதோ இங்கே இருந்து கூட்டிட்டு கிளம்பு... ஒரு ஃப்ரெண்டிலி ரிலேஷன்சிப் மெய்ன்ட்டெய்ன் பண்ணலாம்னு நெனச்சா ரொம்பா தான் திமிர் பண்ணுறா!" என்று ஸ்வாதி உரைத்த பொய்யை உண்மையாக்க மேலும் சில பொய்களைக் கூறி வெற்றியும் பெற்றான்.
சீனியரின் பேச்சினால் ஆழிக்கு, ஸ்வாதியின் மேல் நம்பிக்கை வரவே, ஸ்வாதியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள். பற்றா குறைக்கு "உண்மையாவே புவன் ஃப்ரெண்டிலியா சொல்லிருந்தா அதை அக்செப்ட் பண்ண வேண்டியது தானே சுவி? ஏன் அப்ஜெக்ட் பண்றே?" என்று செல்லும் வழியில் கேள்விகளை கேட்டு இன்னும் பல பொய்களை பெற்றுக் கொண்டாள் ஆழி.
சற்று தூரம் சென்றபின் ஸ்வாதி திரும்பிப் பார்க்க, புவன் மதிய உணவு வேளையில் சிற்றுண்டியகத்தில் காத்திருப்பதாக சைகை செய்ய, ஸ்வாதியும் 'வருகிறேன்' என்பதற்கு அடையாளமாய், ஆழியின் முதுகுபுறம் கட்டைவிரல் உயர்த்திக் காண்பித்துச் சென்றாள்.
சீனியரிடம் கூறியது போலவே, சிற்றுண்டியகத்திற்கு தனியாக வந்தாள் ஸ்வாதி. அவளுக்கு முன்னதாகவே அங்கே காத்திருந்தான் புவன்.
"சொல்லுங்க சீனியர்" என்றபடி அவன் எதிரே சென்று அமர்ந்தாள்.
"ம்ம்ம்... சொல்றேன்... மொதோ சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு வா" என்றான்.
'நீ ஓ.சி-ல சாப்பிடுறதுக்கு தான் என்னை லன்ச் டைம்-ல அழைச்சியா ராசா!' என்று மனதின் மொழி வெளியே கேட்கும் அளவிற்கு இளித்து வைத்தாள்.
"எனக்கு எதுவும் வேண்டாம் சீனியர்... உங்களுக்கு ஏதாவது ஆர்டர் பண்ணிட்டு வாங்களேன்... நான் வெய்ட் பண்றேன்" என்றாள் தாராள மனதுடன்.
அவளது எண்ணம் புரிந்தவனாய், எழுந்து சென்று, அவளுக்கு ஒரு ஐஸ் கிரீமும், அவனுக்கு உணவும் வாங்கி வந்து அமர்ந்தான். இப்போது பனிகூழ்-ஐ வாங்கிக் கொள்ள அவள் தான் தயங்கினாள்.
தான் ஒன்றும் நினைத்துக் கொள்ளவில்லை என்று கூறி கட்டாயப்படுத்தி ஐஸ் க்ரிமை அவள் கையில் தினித்தான் புவன்.
பொறுமையாக உண்டபடி, "மித்துவை ஏன் அந்தாளு வெளியே அனுப்பினான்?"
ஸ்வாதிக்கு அதிர்ச்சி! யாரைக் கூறுகிறான்? என்ற சந்தேகம் வேறு... "யாரை கேட்குறிங்க? வேந்தன் சர்-யா?"
"ம்ம்ம்... அவன் தான்"
"என்ன சீனியர்!!! அவரு நம்ம ப்ரஃபசர்! அவரை போய் மரியாதை இல்லாம அவன், இவன்-னு சொல்றிங்க!"
"மரியாதை கொடுக்கனும்னு தோனும்போது கொடுத்துகிறேன்... இப்போ என்ன நடந்தது சொல்லு... மித்துவை ஏன் வெளியே போக சொன்னான்? அப்பறம் கொஞ்ச நேரத்துலேயே உன்னை?" என்றான்.
"மித்து ரெக்கார்ட்ஸ் எழுதலே... அதான் வெளியே அனுப்பிட்டாரு"
"ம்ம்ம்... நீ என்ன பண்ணினே! உன்னை ஏன் அனுப்பனும்? மித்துவுக்கு செக்யூரிட்டியா உன்னை அனுப்பினானா?" என்றான் முன்னைவிட காட்டமாக,
"நீங்களும், மித்துவும் மரத்தை சுத்தி ஓடினதை வேடிக்கை பார்த்தேன். அதை அவரும் பார்த்துட்டு, 'இங்கே உக்கார்ந்து பார்க்கிறதை விட பக்கத்துல உக்கார்ந்து பாரு... நல்லா தெரியும்... கெட் லாஸ்ட்'னு சொல்லி வெளியே அனுப்பிட்டாரு"
"அது மட்டும் இல்லாம, 'நீயும் அதுங்களோட சேர்ந்து மரத்தை சுத்தி விளையாடு... ஷேம் லெஸ் ஃபெல்லோஸ்'னு சொல்லவும் பசங்க எல்லாம் சிரிச்சுட்டாங்க" என்று முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு உரைத்தாள்.
இப்போது புவனும் சிரிக்க, எதிரில் அமர்ந்திருந்தவள், திட்டவும் முடியாமல் சீனியர் என்ற பயமும், கோபத்தில் எழுந்து செல்லவும் முடியாமல் பனிகூழும் கட்டிப்போட்டுவிட கொஞ்சமே கொஞ்சம் அவனை பார்த்து முறைத்தாள்.
"அந்தாளு சொன்ன மாதிரி மரத்தை சுத்தி தானே விளையாடினே! அப்போ ஒபிடியன்ட் கேர்ள் தான் நீயும்" என்று தன் சிரிப்பின் காரணத்தை கூற, பெண்ணவளின் கண்கள் முறைத்தபோதும் கூட இதழ்கள் மலர்ந்திருந்தது.
"Something strange is happening" என்று புவன் அதி தீவிரமாக சிந்தித்தபடி உரைத்தான்.
"Nothing strange. But.... வேந்தன் சர் தான் சரியில்லே." என்று மீண்டும் முகத்தை தொங்கபோட்டுக் கொண்டு பதில் கூறினாள். ஆனாலும் பனிக்கூழை வாய் திறந்து வழித்துச் செல்வதற்கு எந்த சோகக் கதையும் தடையாக இருப்பதை அனுமதிக்கவில்லை அவள்.
'அப்படியா?' என்பது போல் "ம்ஹூம்?" என்று கேள்வியாய் 'ம்ம்' கொட்டினான்.
ஸ்வாதியும் வேந்தனின் நடவடிக்கைகளையும், தனது சந்தேகங்களை வரிசையாக அடுக்கி வைத்திட, புவனோ "எனக்கு மித்து மேல தான் டவுட்!" என்றுரைத்து ஸ்வாதியை மிரள வைத்தான்.
கொஞ்சம் கொஞ்சமாய் ரசித்து உண்டு கொண்டிருந்த பனிக்கூழின் பெரிய விள் மொத்தமாய் வாய்க்குள் சென்றுவிட, அதனை விழுங்கவும் முடியாமல், வெளியேற்றவும் மனமில்லாமல் வாய் திறக்க முடியாமல் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி...
"ஏன்?" என்று ஒருவழியாக வாயில் போட்டதை உண்டு முடித்து வினவினாள்.
சீனியரும் ஆழியைப் பற்றி தான் கவனித்தவற்றையும், அவள் மேல் ஏற்பட்ட சில சந்தேகங்களையும் கூறினான். மேலும்,
"மித்து பேரண்ட்ஸ் or ஹஸ்பண்ட் யாரையாச்சும் மீட் பண்ணனும்! அது தான் எப்படின்னு யோசிச்சுட்டு இருக்கேன். எப்படி கொக்கி போட்டாலும் பிடி கொடுத்து பேசமாட்டேங்கிறா! அவ ஃபேமிலி பத்தின எந்த டீடெய்ல்ஸ்-ம் வாய் திறந்து சொல்ல மாட்டேங்கிறா!" என்று தனது தோல்வியை நினைத்து வருத்தமாகக் கூறினான்.
ஸ்வாதியின் மனமோ இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தது. வேந்தனை எளிதாக சந்தேகித்தது போல் தோழியை சந்தேகிக்க முடியவில்லை. சீனியர் உரைப்பதை நம்பினால் தானே சந்தேகம் என்பதற்கு நூலளவேனும் இடமளிப்பதற்கு...
தனது சந்தேகங்களை ஆழியிடமே கேட்டுவிடலாம் என்றால், அவள் எப்படியும் விளக்கம் கொடுக்கப் போவதில்லை என்ற நிதர்சனமும் உள்ளமதை சுட்டது.
வேந்தனிடம் தான் கேட்க முடியுமா என்ன? 'நான் உன் விரிவுரையாளன்' என்று காண்பிக்கும் விதமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு.... அவள் மேல் இருக்கும் கடுப்பை இவள் மேல் காண்பிக்கவும் வாய்ப்பு உண்டு என்ற உண்மை அவனிடம் கேட்கும் தைரியத்தை பரித்திருந்தது.
"இங்கே என்ன டி பண்றே?" என்ற ஆழியின் குரலில் திடுக்கிட்டவள், தான் மாட்டிக் கொண்டோம் என்பது புரிய, 'சீனியருக்கும் ஆழிக்கும் நடுல சிக்கி.... செத்தேன் நான்' என்ற மன பொறுமலோடு மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தாள்.
காதல் கரை எட்டுமா!!!