• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💘காதல்💘 24

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
அதிகாலையே அலறிமணி வைத்து விறைவாக எழுந்து விறைவாக குளித்து விறைவாக கல்லூரிக்கு தயாராகிய ஸ்வாதியை அவள் குடும்பமே விசித்திரமாக பார்த்து வைத்தது.

காலை உணவை தவிர்த்துச் செல்லும் தன் மகள், வழக்கத்திற்கு மாறாக இன்று இரண்டு உணவு பெட்டி கேட்டு நிற்க, அவளை 'என்ன?' என்பது போல் பார்த்தார் ஸ்வாதியின் அன்னை பாரதி.

"ப்ரெண்டுக்கு ம்மா. இன்னைக்கு வேற நீ இட்லி, வடகறி செய்து வெச்சிருக்கே... அதான்..." என்று கூறியவளை நம்பாது பார்த்தார். அடுக்கலையில் ஸ்வாதி உரைத்த பதிலுக்கு கூடத்திலிருந்து மறுகுரல் வந்தது...

"ஓ... அதனால மட்டும் தானா? அப்போ உன் பாய் ப்ரென்ட் கேட்கலேயா!" என்று வினவி வம்பு செய்தார் அவள் தந்தை கண்ணன்...

"ப்பா..." என்று கண்டனக் குரல் எழுப்பினாள், இருந்த இடத்தில் இருந்தபடியே!

உடனே தனது பேச்சை மனைவி பக்கம் திருப்பினார் கண்ணன். "மா பாரதி எனக்கும் ரெண்டு பாக்ஸ் எடு மா. நானும் என் ப்ரெண்டுக்கு கொண்டு போறேன்." என்றார்.

"உன் ப்ரெண்டு நேம் என்ன சுவிம்மா?" என்று மீண்டும் மகளிடம் தாவினார்.

"ஹாம்..." 'வந்து... இப்போ நான் என்ன சொல்றது?' என்று மைண்டு வாய்ஸ் வடிவேலு கவுண்டர் கொடுத்தபோதும், இதழ்கள் தன்னைப்போல் உண்மையை உளறியது, "புவன்... ஐ மீன் புவனா... நான் அவளை புவன்-னு தான் அழைப்பேன்" என்று நாக்கு நடனமாடியபடி உரைத்தான்.

"நைஸ் நேம் இல்ல! பாரதி" என்று அவரே சிலாகித்துக் கொண்டு, "கேர்ள் ப்ரெண்டா? இல்லே பாய் ப்ரெண்டா? சுவிம்மா" என்று இப்போது மகளிடம் வினவினார்.

"This is too much ppa, and none of your business too." என்று மென்மையாக உரைத்தபடி தந்தையின் எதிரே வந்து அமர்ந்தாள்.

"Yeah yeah… it's not my business. உன் ஃப்ரெண்ட் உன் உரிமை" என்று கேலியாகவே உரைத்துவிட்டு,

"நான் என் கேர்ள் ப்ரெண்டுக்கு தான் கொண்டு போறேன் பாரதி" என்று அடுப்பறையில் இருக்கும் தன் மனைவிக்கு குரல் கொடுத்தார்.

"அப்பா.... கொஞ்சமாச்சும் பொறுப்பா ஒரு அப்பா மாதிரி பேசுங்க..." என்று கெஞ்சலாய் உரைத்தாள் மகள்.

"ஓ... ஓகே... ஆல்ரைட்" என்றவர் தொண்டையை சரி செய்து கொண்டு, கட்டை குரலில் "ஸ்வாதி... யாரவன்? புதுசா ஒரு பையன் கூட சுத்துறேயாமே! எனக்கு எதுவும் தெரியாது... என்னை ஏமாத்திடலாம்னு நெனச்சியா? அதான் நடக்காது... இனி ஒருமுறை உன்னை அவன் கூட சேர்த்து வெச்சு பார்த்தேன்! பார்த்த இடத்திலேயே ரெண்டு கொலை விழும்... ஜாக்கிரதை" என்று கடைசி வசனம் வரை வீராப்பாய் பேசிவிட்டு, இறுதியாக ஒரு வில்லன் சிரிப்பு வேறு சிரித்து வைத்தார்.

"ஐயோ அம்மா..." என்று கத்தியவள், தன் அன்னையைக் கண்டதும், "ம்மா... எப்படி ம்மா இவர் கூட இருபத்தி ஐந்து வர்ஷமா குப்ப கொட்டுறே!" என்றாள் சலிப்பாக...

"எல்லாம் என் தலையெழுத்து! நான் காலேஜ் படிக்கும்போதே கிருஷ்ணா-னு ஒரு பையன் என்னை லவ் பண்ணினான். கட்டினா என் அண்ணன் பார்த்த மாப்பிள்ளைய தான் கட்டுவேன்னு சொல்லி அந்த கிருஷ்ணனுக்கு நோ சொல்லி இந்த கண்ணனை கட்டிக்கிட்டேன்.

நீயெல்லாம் இருபத்தி அஞ்சு வர்ஷம் கழிச்சி வந்து என்னை பார்த்து இந்த கேள்வி கேட்பேன்னு அன்னைக்கே தெரிஞ்சிருந்தா அந்த கிருஷ்ணனுக்கே ஓகே சொல்லிருப்பேன்" என்று அவர் பங்கிற்கு அவர் சலித்துக் கொள்ள,

பதிலுக்கு கலகலப்பு குணம் நிறைந்த கண்ணனோ, "ஹாய் பாரதி, நான் கிருஷ்ணா... இங்கே யாரும் இவ்வளோ அழகா ஒரு அழகை பார்த்திருக்கமாட்டாங்க... ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ... அன்ட் இதை சொல்லியே ஆகனும்... நீ அவ்ளோ அழகு... 🎶 முன் தினம் பார்த்தேனே" என்று பாட்டுப்பாட தொடங்கினார்.

ஸ்வாதிக்கு தான் எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளலாமா என்று இருந்தது. தன் குரலை உயர்த்தி இருவரின் கவனத்தையும் தன் புறம் திருப்பினாள்.

"லிஸன் போத் ஆஃப் யூ, புவன் பாய் தான். ஆனாலும் ஃப்ரெண்ட் மட்டும் தான்... சீக்ரெட் மெய்ண்டெய்ன் பண்ற அளவுக்கு எங்களுக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்-ம் இல்லே...

சீனியருக்கு நம்ம ஊரு ஸ்டைல் சாப்பாடு எடுத்துட்டு போகனும்னு தோனுச்சு... அதான் இன்னைக்கு எடுத்துட்டு போறேன். டைம் வரும்போது நானே அவனை இன்ட்ரடியூஸ் பண்றேன். அதுக்குள்ள ரெண்டு பேருமா சேர்ந்து ஏதாவது கட்டு கதை கட்டிட்டு அவன் முன்னாடி என்னை அசிங்கபடுத்திறாதிங்க... அவ்ளோ தான் சொல்லிட்டேன்." என்று பெற்றோர் இருவரையும் மிரட்டிச் சென்றாள்.

பள்ளிக்கு தயாராகிக் கொண்டிருந்த ஸ்வாதியின் தம்பி ஷ்ரவன், தன் தமக்கை பேசிச் செல்வதை கவனித்துவிட்டு, தன் பெற்றோரைப் பார்த்து, "நீங்க பேரண்ட்ஸ்!!! அவ உங்க மகள்!!! தலையெழுத்து" என்று தன் தலையில் அடித்துக் கொண்டான்.

திடீரென பதின்பருவத்தவனுக்கு ஒரு யோசனை வர, உணவை அள்ளி வாயில் வைப்பதற்கு முன்பே, "ஆஹா... வாசமே வேற லெவல் ம்மா..." என்று புகழ்ந்தான்.

பாரதி பதிலேதும் கூறாமல் மற்றொரு இட்லியும், மேலும் கொஞ்சம் வடகறியும் வைக்கவே, அவன் முகம் பியூஸ் போன பல்பாக மாறியது.

‌‌ "ம்மா... இது இல்லே ம்மா...." என்று காது கிழிய கத்தினான்.

"கத்தாம என்னனு சொல்லித் தொலை டா"

"அது... அது வந்து... எனக்கும் ரெண்டு பாக்ஸ் கொடுங்களேன்" என்றான் பாரதியை காக்கை பிடித்துக் கொண்டே...

மகனின் பேச்சில் மாற்றம் தெரியவே, "எடு அந்த சீமாறை" என்றாரே பார்க்கனும், அடுத்த நிமிடம் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தான் ஷ்ரவன்.

அடித்துப் பிடித்து கல்லூரி வந்து சேர்ந்த ஸ்வாதி, முதுகலை மாணவர்கள் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்று புவனை தேடி இறுதியில் வெளி விளையாட்டரங்கில் கண்டு கொண்டாள்.

அவனும் அவளது வருகைக்காக தான் காத்திருந்தவன் போல வாசலின் மேல் ஒரு கண்ணை பதித்தபடி தான் அமர்ந்திருந்தான். எனவே அவளது வருகையை அவனும் கவனித்துவிட்டு இங்கே வந்து அமர்ந்து கொண்டான்.

வரிசையாய் அடுக்கடுக்காய் அமைக்கப்பட்டிருந்த அரைவட்ட படிகளில் அவன் மேல் படியிலும், அவள் கீழ் படியிலும் அமர்ந்து கொள்ள, முதலில் உணவு பெட்டகத்தை எடுத்து அவன் முன்னே நீட்டினாள் ஸ்வாதி.

இட்லி மற்றும் வடகறியின் அலாதி சுவையில் மெய் மறந்து, சுற்றம் மறந்து, உலகம் மறந்து ரசித்து உண்டான். அவனது முகத்தில் துளியும் சோர்வு இல்லை, நேற்று வரை இருந்த குழப்பங்களும் இல்லை. யார் மீதும் கோபமும் இல்லை, வேதனையும் இல்லை...

'இன்றைய நாள் தனக்கு இனிய நாளாக அமைந்தது போலத் தான் சீனியருக்கும் இனிய நாள் போல' என்று நினைத்துக் கொண்டாள் ஸ்வாதி.

"சீனியர் இன்னொரு ஹாப்பி நியூஸ்-ம் கொண்டு வந்திருக்கேன்!" என்று அவள் மகிழ்ச்சியாகவே உரைத்திட,

"என்ன?" என்றான் வாயில் உணவை திணித்தபடி...

"வேந்தன் சர் லவ்வரை பார்த்துட்டேன்... எனக்கு இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அவர் மித்துவை விரும்பலே... அதுவே போதும்" என்றாள் குதூகலமாய்...

உண்டு கொண்டிருந்தவன் அடுத்த கவளம் எடுத்து வைக்க மறந்தான். அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் "யாரு?" என்றான்.

அவனது இந்த கேள்விக்காகவே காத்திருந்தது போல், தன் திறன்பேசியில் சேமித்து வைத்திருந்த புகைபடத்தை காண்பித்தாள்.

அதிலிருந்தது வேந்தனே தான். உடன் இருந்தவள் யார் என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் ஏதோ ஒரு கஃபே-யில் அமர்ந்திருக்கின்றனர் என்பது மட்டும் நன்றாகவே தெரிந்தது.

வேந்தனின் கைகள் அந்த பெண்ணின் கைகளை அணைத்திருந்தது. அவனது கண்கள் கூட அவளுக்காக அன்பு பொழிந்தது. பெண்ணவளின் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்த போதும் புரிதலும், காதலும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

நொடிப்பொழுதில் அனைத்தையும் கவனித்து விட்டிருந்த புவன், பாதி உணவோடு கை கழுவிக் கொண்டான். இவ்வளவு நேரம் மறைந்திருந்த குழப்பம் மீண்டும் சூழ்ந்து கொண்டது அவன் முகத்தில்.

அவனை கவனிக்காத ஸ்வாதியோ "நேத்து போய் அந்த காலேஜ் வாசல்ல காவல் காத்ததுக்கு தக்க சன்மானம் தான் கிடைச்சிருக்கு... இனி மித்து மாதிரி நானும் டென்ஷன் இல்லாம இருப்பேன். ஒரு வழியா வேந்தன் சர் மித்துவே விரும்பலேனு மட்டும் ஊர்ஜிதம் ஆகிடுச்சு... நான் ஹேப்பி ப்பா" என்று சந்தோஷமாக மொழிந்து கொண்டிருந்தவள், அப்போது தான் சீனியரின் முக வாட்டத்தைக் கண்டாள்.

"புவன் என்னாச்சு? நீங்க ஏன் டல் ஆகிட்டிங்க?" என்று அவனிடம் விசாரிக்க, அவன் ஒரு புகைபடத்தை எடுத்துக் காண்பித்தான் அவனது திறன்பேசியில்.

"எ... என்னால... ந.... நம்... நம்பவே முடியலே சீனியர்.... இது.... இது... இது உண்மை தானா....?" என்று திக்கித் தினறினாள். இதழ்கள் கூட ஒட்டிக் கொண்டன.

அவள் வார்த்தைகள் தேடி புவனிடம் என்ன ஏது என்று விசாரிப்பதற்குள், புவனிடமிருந்த புகைப்படம் என்ன என்பதையும், அது அவனுக்கு எப்படி கிடைத்தது என்பதையும் ஒரு குறும்படம் பார்த்துவிட்டு வருவோம். வாங்க.....

"யாரை ஏமாத்த பாக்குறே! ஒருத்தன் வெள்ளையும் சொல்லையுமா தெக்கே இருந்து பாக்கெட் நிறைய பணத்தோட வருவான். சில்லறை மாத்தி தர்ற சாக்குல அவனை நாமம் போடலாம்னு கனா கண்டேயோ! எடு பணத்தை...

உன்னை எல்லாம் தோலை உரிச்சி தொங்கவிட்டு, உப்புக்கண்டம் போடனும்... ராஸ்கல்... எடுடா பணத்தை" என்று அந்த ஜனசந்தடி நிறைந்த கடைவீதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தபடி தன்னை ஏமாற்றியவனை துவைத்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார் ஞானம்.

சிறிது காலமாக ஆழிக்கு பதிலாக, மாலை நேர பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் புவன், அன்றும் அதே போல் தன் பணிக்கு சென்று கொண்டிருக்க, கடை வீதிக்குள் நுழைந்தபோதே ஞானத்தின் மிரட்டல் வார்த்தைகளைத் தான் அவன் செவிகளை நிறைத்திருந்தது.

இது மித்துவின் தந்தை என்று அறிமுகப்படுத்தி வைக்க அவனுக்கு மூன்றாம் நபர் தேவைப்படவில்லை. தென்னகத்தின் தோரணையும், பேச்சும், முக்கியமாக ஆழி தன் தந்தையை பற்றி கூறும்போதெல்லாம் உரைக்கும் Mr.முறுக்குமீசை என்பதற்கு ஏற்ப, கம்பீரமாக வளைந்து நின்ற அவரது மீசையும், முக ஒற்றுமையும் என அத்தனை பொருத்தமும் அச்சு பிசங்காமல் அவனது கற்பனையுடன் பொருந்தியிருந்தார் ஞானம்.

அந்நிய மாநிலத்தவன் முன்னிலையில் தங்கள் ஒற்றுமையை காட்ட நினைத்து ஊர்மக்களும் ஒன்று கூடிவிட, அங்கே சிலபல மொழி ப்ரச்சனைகளும் எழுந்தது.

கயவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஒருசிலர் தங்கள் திறன்பேசியில் நேரடி காணொளி பதிவு ஒருபுறமும், ஞானத்திற்கு ஆதரவாக மற்றொரு கூட்டம் அதே காணொளியை வேறொரு தலைப்பிலும் சமூக வலைதளங்களில் அரங்கேற்றினர்.

வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்திற்குள் புகுந்த புவன், கயவனின் செவிலில் நான்கு அறைவிட்டு அவனிடமிருந்த பணத்தை எடுத்து ஞானத்திற்கு சேர வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவனிடமே கொடுத்து விரட்டிவிட்டான்.

அந்த கயவனுக்காக தன் மேல் கை வைக்க வந்தவர்களிடம் 'ஸ்டூடன்ட்' என்றுரைத்து பயம் காட்டி, மிரட்டியதோடு, கூட்டத்தையும் விலக்கி விட்டிருந்தான் அவன்.

அனைவரும் கலைந்து சென்றபின், ஏதோ வெகுநாள் உறவு போல் இளித்துக் கொண்டே ஞானத்தை நெருங்கினான்.

"புவன்... மேரா நாம்" என்று தன் மேல் விரல் சுட்டிக்காட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, ஞானபாண்டியனோ "நன்றி" என்ற வார்த்தையோடு விளகிச் சென்றார்.

அவர் தமிழில் நன்றியுரைத்த விதத்தில், இப்போதும் அவரது முகத்தில் தன் தோழியை மட்டுமே காண முடிந்தது அவனால். மீண்டும் வேக எட்டுகள் வைத்து அவரை நெருங்கியவன், தனது கல்லூரி அடையாள அட்டையை எடுத்து காண்பித்தான்.

கல்லூரியின் பெயரைக் கண்டவுடன் ஞானத்தின் முகத்தில் ஒரு சந்தோஷம்...

"உங்களை பார்த்ததுல சந்தோஷம் தம்பி." என்று ஆரம்பித்துவிட்டு அவனுக்கு புரியுமோ என்னவோ என்ற சந்தேகம் எழ, சட்டென அமைதியடைந்தார்.

புவனின் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருக்க, அவரது எண்ணம் புரிந்து கொண்டவன்,

" I understand Tamil. can't speak" என்றான்.

அப்போதும் அவர் என்ன பேச என்று தெரியாமல் அமைதியாக நின்றிட, மீண்டும் புவன் தானாகவே ஆரம்பித்தான்.

"மித்ர ஆழினி, வெரி போல்ட் கேர்ள், லைக் யூ" என்றிட ஞானத்திற்கு பெருமை தாங்கவில்லை. ஆனாலும் மூளை குடைந்து 'எப்படி கண்டுபிடித்தான்' என்று. அதையே அவனிடம் கேட்டார்.

"தம்பி நீங்க இதுக்கு முன்ன என்னை பார்த்திருக்கிங்களா? நான் ஆழியோட அப்பான்னு உங்களுக்கு எப்படி தெரியும்!" என்றார் சந்தேகமாக,

"நோ அங்கிள்... பார்த்திருக்க இள்ளே... யூ அன்ட் மித்து காட் சேம் ஃபேஸ்...‌ யூ போத் யூசிங் தி சேம் வேர்ட்ஸ் ஆல்சோ 'தோழ உற்ச்சி.... ஒப்புகண்டாம் போட்டு..... ஊர்க்கா ஆக்கிடுவேன் இன்னா" என்று ஜிலேபியை பிய்த்து பூந்தியாக்கிய கதையாக, தமிழைக் கொன்று டமிலை‌(Tamil) வாழ வைத்திருந்தான்.

ஞானபாண்டியனுக்கும் அவனது தமிழ் தெளிவாகவே புரிய, முகம் மலர்ந்து சிரித்தார்.

"ஐ லைக் யுவர் முஷ்டாக் அங்கிள்" என்றிட, ஞானமும் இன்னும் கொஞ்சம் அதனை முறுக்கிவிட்டார்.

"ஷேல் வீ டேக் செல்ஃபி?" என்று அனுமதி கேட்டு அவருடன் இணைந்து சில சுயமிகள் எடுத்துக் கொண்டான்.

பேசிக் கொண்டே இருவருமாக இணைந்து புவனின் இருசக்கர வாகனத்தின் அருகே வந்துவிட, அவர் தன்னை இல்லம் அழைப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் விடைபெற்றான் அவன்.

"நல்லது தம்பி... உங்களை பார்த்ததுல ரொம்ப...." என்று விடைபெற நினைக்க,

"Uncle. Shall I drop you at home?" என்று அவனாகவே கேட்டு நின்றான்.

"வீடு பக்கம் தான் தம்பி... நான்... போ..." என்று நாகரிகமாக தவிர்க்க நினைத்தவரை முழுதாக பேசி முடிக்கவிடாமல் இடை வெட்டினான்.

"Come on uncle. I will drop you at home" என்று கை பிடித்து இழுக்காத குறையாக ஒற்றை காலில் தவமிருந்து ஞானத்தை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டான்.

இல்லத்தில் தன் தோழியை எதிர்க்கொள்ள வேண்டுமே என்ற பயம் எழுந்தபோதும், அவளது வீட்டை கண்டுபிடிக்க கிடைத்த வாய்ப்பை அவன் வீணடிக்க விரும்பவில்லை.

ஞானபாண்டியன் தன்னிடம் உள்ள சாவி கொண்டு கதவை திறக்க, "மித்து இல்லேயா?" என்றான் உள்ளுக்குள் மகிழ்ந்தபடி...

"இல்லேபா... அவளும் அவங்க அம்மாவும் பக்கத்துல கோவிலுக்கு போயிருக்காங்க. மாப்ளே இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவார்."

"ஓ.. ஓகே அங்கிள்‌.. யூ டேக் கேர்... ஐம் லீவிங்" என்று நல்லபிள்ளை போல் விடைபெற்றவன் மீண்டும், "அங்கிள்... கிங் மீ சம் வாட்டர்... ப்ளீஸ்" என்றிட, ஞானமும் இறுதியில் அவனை உள்ளே அழைத்தார்.

இருக்கையில் அமரச் செய்து, மேசையிலிருந்த தண்ணீர் குடுவையை எடுத்துக் கொடுக்க, சுற்றும் முற்றும் பார்த்தபடி தண்ணீர் அருந்திவன் கண்களில் பட்டது அந்த புகைப்படம். ஆழி மற்றும் அம்புதியின் திருமண புகைப்படம்.

ஞானத்திற்கு தெரியாமல் அந்த படத்தையும் தன் திறன்பேசியில் சேமித்துக் கொண்டவன், ஆழி வருவதற்கு முன்பே கிளம்பிவிட்டிருந்தான்.


தற்போது புவன் ஸ்வாதியிடம் காண்பித்தது, ஆழி மற்றும் அம்புதியின் திருமணப் புகைப்படம் தான்.

அதனைக் கண்ட ஸ்வாதி வாய்பிளந்து வினவினாள். "என்ன சீனியர் இது!!! என்னால நம்பவே முடியலே... மித்து ஹஸ்பண்ட் அப்படியே வேந்தன் சர் மாதிரியே இருக்கார்ல... ஒருவேளை டிவின்ஸ்-ஆ இருப்பாங்களோ!"

காதல் கரை எட்டுமா!!!