ஆழி மற்றும் அம்புதியின் திருமணப் புகைப்படத்தைக் கண்ட ஸ்வாதி வாய்பிளந்து வினவினாள். "என்ன சீனியர் இது!!! என்னால நம்பவே முடியலே... மித்து ஹஸ்பண்ட் அப்படியே வேந்தன் சர் மாதிரியே இருக்கார்ல... ஒருவேளை டிவின்ஸ்-ஆ இருப்பாங்களோ!" என்றாள்.
ஸ்வாதியின் கேள்வியில் ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று யோசிக்கத் தொடங்கினான் புவன். பின் அவனாகவே ஒரு முடிவுக்கு வந்து இடவலமாக தலையசைத்து "இருக்காது" என்று உறுதியாக மறுத்தான்.
"எதை வெச்சி இருக்காதுன்னு சொல்றிங்க? மித்துவோட கொழுந்தன்னு சொல்லிக்கிறது அவருக்கு ஷை-யா ஃபீல் ஆகலாம். அதனால ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருதர் தெரியாத மாதிரி நடிச்சிருக்கலாம்!" என்று ஆழி கல்லூரிக்கு வந்த முதல் நாளையும், அன்று வேந்தன் தன் உதவி நாடியதையும் மனதில் வைத்து ஒரு அனுமானத்தில் உரைத்தாள்.
"அப்படினா நேத்து நடந்ததை என்னனு சொல்றது! மித்துவுக்கு காயம் பட்டதுக்கு வேந்தன் ஏன் துடிக்கனும்! நீ சொல்ற மாதிரி யோசிச்சா வேந்தன் தன் அண்ணன் வொய்ஃப் கிட்ட மிஸ் பிகேவ் பண்றானா? அந்த மாதிரி உன்னால வேந்தனை யோசிச்சு பார்க்க முடியுமா?" என்று 'தன்னாலேயே அப்படி கற்பனை செய்ய முடியவில்லை' என்பதை சொல்லாமல் சொல்லியிருந்தான்.
"ஆமால... வேந்தன் சர் அப்படி பட்டவர் கிடையாது தான்." என்று உரைத்தவள் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொண்டாள். முன்னைவிட பல குழப்பங்கள் சூழ இருவரும் விடை தெரியாது முழித்துக் கொண்டிருந்தனர்.
சற்று தீவிரமாகவே சிந்தித்திருந்த ஸ்வாதி "சீனியர்..... ஒருவேளை அண்ணன் அந்த பொண்ணையும், வேந்தன் சர் நம்ம மித்துவையும் விரும்பியிருப்பாங்களோ! இது தெரியாம வீட்ல ரெண்டு பேரையும் ஜோடி மாத்திவிட்டுட்டிங்களோ!" என்றிட,
அவளது தலையிலேயே நறுக்கென கொட்டு வைத்தான் புவன். "சீரியல் பைத்தியமே! ஒழுங்கா யோசிக்கிறதுனா யோசி... இல்லே சும்மா இரு..." என்று திட்டவும் செய்தான்.
தலையை தேய்த்துக் கொண்டே, புருவங்களை சுருக்கி, "உங்களுக்கு எப்படி சீனியர் தமிழ் சீரியல் தெரியும்? அதை பார்த்து தான் தமிழ் கத்துகிட்டிங்களா?" என்றாள் நக்கலாக...
புவன் விடுத்த முறைப்பில் சற்று நேரத்திற்கு கப்சிப் என வாய் மூடி அமர்ந்து கொண்டாள் ஸ்வாதி.
"எனக்கென்னவோ வேந்தன் தான் ஆழி ஹஸ்பண்டா இருக்கும்னு தோனுது" என்று புவன் தன் சந்தேகத்தை உரைக்க,
"இப்போ நீங்க சொல்ற மாதிரி யோசிச்சா வேந்தன் சர் டபில் கேம் ஆடுறவர் மாதிரி இருக்காதா? மித்து-வை கல்யாணம் செய்துகிட்டு, அந்த பொண்ணை ஏன் விரும்பனும்! ஒரு நிமிஷம் இருங்க...." திடீரென மூளையில் அறிவு சுடர் எரிந்தவளாய்,
"மித்து நேத்து அவ சிஸ்டர் அந்த யுனிவய்சிட்டினு தானே சொன்னா! அப்போ வேந்தன் கூட இருந்தது மித்துவோட சிஸ்டர் தானா?" என்றாள் புதிதாய் ஞானம் பிறந்தவளாய்.
"எனக்கும் அப்படி தான் தோனுது... எப்படி யோசிச்சாலும், வேந்தன் மேல தான் ஏதோ தப்பு இருக்கு. அதான் மித்து அவரை விட்டு விலகிப் போறா" என்று தாங்கள் கண்ணில் கண்டவற்றை வைத்து கதை கட்டினர்.
ஒரு பெருமூச்சு இழுத்துவிட்டுக் கொண்ட புவன், "எதுவா இருந்தாலும், இன்னைக்கே மித்துகிட்ட இது பத்தி பேசி ஆகனும்... அவ என்ன நெனச்சாலும்! எப்படி சமாளிச்சாலும்!" என்றான் உறுதியாக...
"சீனியர் இன்னைக்கு மித்து லீவ்... மறந்துட்டிங்களா? அவ பேரண்ட்ஸ் இன்னைக்கு தானே ஊருக்கு போறாங்க!"
புவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது, "ஓ காட்..." என்று நொந்து கொண்டவன், "சரி நீ க்ளாஸ் ரூம் போ..." என்று அவளை மட்டும் விரட்டினான்.
"அப்போ நீங்க?"
"ஒரு சின்ன வேலை இருக்கு"
"என்னனு சொல்லிட்டு செய்ங்க" என்றாள் அழுத்தமாக
"ஆஃபிஸ் ரூம் போய், வேந்தன் வருவானா இல்லேயானு கேட்க போறேன்..."
"சப்போஸ் வரலேனா?"
"வரலேனா...." என்று இழுத்து நிறுத்தியவன், ஸ்வாதியை கூர் பார்வை பார்க்க, அவளோ "நானும் வர்றேன்" என்றாள் பிடிவாதமாய்...
அடுத்த நிமிடம் இருவரும் சென்று நின்றது கல்லூரியின் அலுவலக அறையில் தான். கடைநிலை பணியாளரை அழைத்து விசாரிக்க, அவரும் "வேந்தன் இன்று விடுமுறை" என்ற செய்தியை தெரிவித்தார்.
தோழியை சந்தித்தே ஆக வேண்டும் என்ற பரபரப்பில் புவனும் விடுப்பு எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் செல்லப் போவதாக உரைக்க, ஸ்வாதியும் அவனுடன் இணைந்து கொண்டாள்.
நடைமேடை கண்டறிந்து இருவரும் வந்து சேர அங்கே ரயிலின் ஜன்னல் அருகே வேந்தனும், அந்த பெயர் தெரியா பெண்ணும் நின்று உள்ளே அமர்ந்திருந்தவர்களிடம் கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வலது பக்கம் சற்று தள்ளி, உணவு பொட்டலம் அடங்கிய காகித பையை கையில் பிடித்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் ஆழி.
புவன் ஆழியை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சட்டென தன் நடையை நிறுத்தினாள் ஆழி. பலத்த அதிர்ச்சி என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், அவள் அதிர்ந்து நின்றது உண்மை. ஆழியின் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்க, அவள் பார்வை சென்ற திக்கை புவனும், ஸ்வாதியும் கண்டனர்.
அவர்களது பார்வையில் வேந்தன் என்பவன், அந்த பெயர் தெரியா பெண்ணை தோளோடு சேர்த்து அணைத்து தன் அருகே நிற்க வைத்தான். அது என்னவோ நடைபாதை வழிப்போக்கன் அந்த பெண்ணின் மேல் உரசிடாமல் செல்வதற்கு தான் செய்திருந்தான் அவன்.
ஆனால் என்னவோ நண்பர்கள் இருவரும் ஒரேபோல் மீண்டும் தோழியை திரும்பிப் பார்த்தனர். அவளுமே தன் பார்வையை அவ்விடம் விட்டுப் பிரித்து வேறு புறம் திருப்பினாள்.
அதற்கு மேல் அங்கே நடப்பதை பார்க்க விரும்பாதவனாய், விறைந்து ஆழியை நெருங்கினான் புவன். தன் நண்பன் தன் அருகே நெருங்கிய போது தான் ஆழியும் அவனை கவனித்தாள்.
"இங்கே என்ன...." என்று அவள் கேட்டு முடிப்பதற்குள், ஸ்வாதியுடைய மற்றும் தன்னுடைய திறன்பேசியில் இருந்த புகைப்படங்களை ஒரே நேரம் அவள் கண் முன்னே தூக்கி காண்பித்து, "ரெண்டுல எது உண்மை?" என்றான் கடுமையான குரலில்...
ஏற்கனவே தன் நட்பு இல்லம் வரை வந்து சென்றதை தன் தந்தை மூலம் அறிந்து கொண்டவள், அவனுக்கு உண்மை தெரிய வெகு நாட்கள் தேவைப்படப் போவதில்லை என்பதை புரிந்து கொண்டாள். ஆனால் இவ்வளவு விரைவில் மாட்டிக் கொள்வோம் என்று தான் அவள் அறிந்திடவில்லை.
கஃபே-யில் அமர்ந்திருந்த காதலர்கள் சந்திப்பு அவளுக்கும் புது செய்தி தான். எனவே அதனை பார்வை எடுக்காமல் பார்த்துவிட்டு, மீண்டும் ரயிலின் அருகே நின்றிருந்த இருவரையும் பார்த்து மகிழ்வான புன்னகை ஒன்றை சிந்தினாள் ஆழி.
ஆழியின் அமைதி இப்போதும் புவனுக்கு பல குழப்பங்களைத் தான் ஏற்படுத்தியது... "சொல்லு மித்து... ரெண்டுல எது உண்மை?" என்று ஸ்வாதி தன் பங்கிற்கு வினவிட,
"ரெண்டுமே தான்" என்று பதிலுரைத்தாள் சர்வ சாதாரணமாக...
ஆனால் அவளுக்குள்ளும் பயப் பந்தை உருளவிடும் விதமாக அவள் அருகே வந்து நின்றார் அவள் தந்தை ஞானபாண்டியன்.
தந்தையைக் கண்டதும் மிரண்டு விழித்தவள், ஒன்றும் பேச நா எழாமல் தலை குனிந்தாள். ஞானமும் அங்கே வந்து நிற்கும் போதே கஃபே காதலர்கள் புகைப்படத்தை தான் முதலில் கண்டார்.
ஆழியை முறைத்து விழிக்க அவளோ கவிழ்ந்த தலை நிமிரவில்லை. தன் உத்தம புத்திர மருமகனை திரும்பிப் பார்க்க, அவனோ வெகு இயல்பாக ஈஸ்வரியின் கைகளை பிடித்துக் கொண்டு மும்பரமாக பேசிக் கொண்டிருந்தான்.
மகள் தலை கவிழ்ந்து நின்றிருக்கும் நிலையில் அவளுக்கு இது மட்டும் இல்லாமல் இன்னும் பல விடயங்கள் தெரிந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டார் ஞானம்.
எதார்த்தமாக இவர்களின் பக்கம் தலையைத் திருப்பிய அம்புதி, அங்கே புவனையும், ஸ்வாதியையும் கண்டு குழப்பம் கொண்டான். ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு உணர்த்த அவர்கள் அருகே நெருங்கினான்.
"நீங்க காலேஜ் போகாம இன்னேரத்துல இங்கே என்ன பண்றிங்க?" என்று வினவியபடி அருகே அவர்கள் வந்தான் அம்புதி வேந்தன். உடன் இணைந்து ஈஸ்வரியும் வந்து நின்றாள்.
ஞானபாண்டியன் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அவர் கையில் இருக்கும் திறன்பேசியை பரித்து பார்க்கத் தூண்டியது அம்புதியை. அதனையும் தயங்காமல் செய்தான் அவன்.
அதில் தானும், ஈஸ்வரியும் கை கோர்த்து அமர்ந்திருப்போம் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரயில் புறப்பட தயாராகியதன் அடையாளமாய், பலத்த ஹாரன் எழுப்பப்பட, உள்ளே அமர்ந்திருந்த வெங்கடா எழுந்து வந்து ரயில் படிகட்டில் நின்று என்ன நடக்கிறது என்று பார்த்தார்.
அம்புதி தன்னை முறைப்பவர்களை கொஞ்சமும் கண்ணிமைக்காது பார்த்துவிட்டு, இறுதியாக தன் மனையாளின் மேல் தன் பார்வையை பதித்தான்.
ஞானபாண்டியன், அத்தனை பேர் முன்னிலையிலும் யாரையும் எந்த கேள்வியும் கேட்க விரும்பாது, தன் மகளிடம் மட்டும் "போயி ட்ரெய்ன்-ல ஏறு" என்று ஆணையிட்டார்.
ஆழிக்கு அதிர்ச்சி தான் என்றபோதும் தன் தந்தையைத் தவிர வேறு எவரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. ஞானத்தின் "போ" என்ற கண்ணசைவு கட்டளைக்கு அடிபணிந்து தன் அன்னையுடன் சென்று நின்று கொண்டாள்.
இவ்வளவு பெரிய முடிவை ஞானம் நொடியில் எடுத்திருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியே! அதனை அப்படியே பின்பற்றும் ஆழியின் செயல் அதனினும் பேரதிர்ச்சி தான்.
ஞானம் ஈஸ்வரியை பார்த்து "உனக்கு வேற தனியா சொல்லனுமா!" என்று மிரட்ட அவளோ அசைவது போல் கூட நடிக்கவில்லை. சிலை போல் நின்றிருந்தாள்.
அதில் பலத்த ஏமாற்றம் கொண்டது ஞானம் தான். "உன்னையும் என் பொண்ணா நெனைச்சி தான் இந்த நிமிஷம், இந்த நொடி வரைக்கும் பார்த்து பார்த்து செய்துட்டு இருக்கேன். ஆனா இனிமே நான் தான் என்னை மாத்திக்கனும்" என்று வருத்தத்திலும் கம்பீரம் குறையாது, குரல் கலையாது உரைத்தவர், இறுதியாக வாய் திறந்து அழைக்கவும் செய்தார்.
"என் கூட வா... எதுவா இருந்தாலும் பேசி முடிவெடுக்கலாம்"
ஈஸ்வரி அப்போதும் தைரியமாக மற்றொரு காரியம் செய்திருந்தாள். அம்புதியைவிட்டு சற்று தள்ளி நின்றிருந்தவள், இப்போது அவனை நெருங்கி அவன் பின்னால் சென்று நின்றாள்.
இரு பெண்களின் முடிவும் அங்கிருந்த அனைவரையும் வெவ்வேறு விதமாக பாதித்திருந்தது.
அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாகியது புவனும், ஸ்வாதியும் தான். இடம், பொருள் அறியாது செயல்பட்ட, தங்கள் அவரசத்திற்கு கூலி தான் தங்கள் தோழியின் வாழ்க்கையை மாற்றிவிட்டது என்ற குற்றவுணர்வு.
அம்புதிக்கோ 'திருமணமானவள் கணவனை விடுத்து தந்தையுடன் செல்ல தயாராகிவிட்டாள்... காதல் கொண்டவள் காதலன் நிழலில் வாழ ஆயத்தமாக இருக்கிறாள்.' என்ற சலிப்பு...
வெங்கடேஸ்வரிக்கோ 'இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது. நாகரீகத்தின் அபாரமான வளர்ச்சி என்றா! இல்லை பண்பாட்டின் அபத்தமான தாழ்ச்சி என்றா! இது அத்தனைக்கும் தன் மகளின் வாழ்க்கை அல்லவா கேள்விகுறி ஆகிவிட்டது' என்ற துக்கம்.
ரயில் நகரத் தொடங்க, ஞானம் தன் வளர்ப்பு இருவரையும் பார்த்தபடி ரயிலில் ஏறிக் கொண்டார். தன் மகளைவிட, சொந்தத்தை தானே பாலூட்டி சீராட்டி வளர்த்தேன். 'வளர்த்த கிடா மாரில் பாய்கிறது' என்பது போல் நடந்து கொண்டார்களே! என்ற வருத்தம்.
அம்புதியின் பார்வையோ சற்றும் மாறவேயில்லை. இறுதி வரை ஆழியின் மேல் மட்டுமே நிலைத்து நின்றிருந்தது. அவளோ தன் தந்தையைத் தான்டி கடைக்கண் பார்வை கூட வீசவில்லை.
காதல் கரை எட்டுமா!!!