• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
முன் கதை சுருக்கம்: ஈஸ்வரியும் அம்புதியும் காஃபேயில் கை கோர்த்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஞானம் தன் இரு மகள்களையும் ஊருக்கு அழைக்கிறார். ஆழி தந்தையின் சொல்படி அவருடன் கிளம்ப, ஈஸ்வரி அம்புதியுடன் அவனது இல்லம் செல்கிறாள்.

புவன் ஈஸ்வரியை சந்தித்துப்பேச முயல, முதலில் போக்குகாட்டியவள் பின் சம்மதித்து அவனிடம் நடந்தவற்றை உரைக்கிறாள். இங்கே ஆழி தன் அண்ணன் விகாஸிடம் மனம் திறந்து பேசுகிறாள்.
ஆக மொத்தம் FB ஆரம்பிச்சுடுச்சு

27

சுடு செம்மணல் பின்னங்காலில் பட்டு பிடறியில் தெரிக்கும் அளவிற்கு, தன் பெற்றோரை நோக்கி வேகமாக ஓடி வந்தான் அந்த மூன்றரை வயது பாலகன்.

வந்த வேகத்தில் நிற்க கூட நேரம் எடுத்துக் கொள்ளாமல், அன்னையவளிடம் "ம்மா... பாப்பா வேணும்... பாப்பா வேணும்..." என்றான் அவசரகதியில்.

தாயவளோ மகனின் திடீர் ஆசையில் அவனை வெறித்து பார்த்திட, தந்தையவனோ "என் மகனுக்கு கூட என் ஆசை புரியுது... நீ எப்போ தான் புரிஞ்சுப்பேயோ!" என்று அப்பாவியாய் உரைத்து, ஏக்கப் பெருமூச்சுவிட்டான்.

காளி அவதாரம் எடுத்து கணவனை வாய் மூடச் செய்தவள், "எங்கே வந்து என்ன பேசிட்டு இருக்கே! கொஞ்சமாவது அறிவு இருக்கா?" என்று சில நல்ல வார்த்தைகள் உபயோகித்து அவன் காதையும் கடித்து வைத்தாள்.

கணவனை கவனிக்கும் பணியில் மூழ்கியவள், தன் அருகில் நின்றிருந்த சின்ன மாமியாரின் செயலை கவனிக்கத் தவறினாள், அந்த அன்(வம்)புக்கார மருமகள் கவிதா.

"என் ராசாக்கு தங்கச்சி பாப்பா மேல ஆசை வந்திடுச்சா!" என்று பேரனின் கன்னம் வலித்து கொஞ்சியவர், "யம்மாடி கவிதா, என் பேரனுங்களுக்கு சீக்கிரம் ஒரு ராசாத்திய பெத்து போடு..." என்று பேரனை ரசித்தபடியே மருமகளுக்கு கட்டளையிட்டார்.

'நான் என்ன ஆடா இல்லே மாடா? குட்டி போட... ஏதோ பசு மாடுகிட்டே கன்னுக்குட்டி பெத்து போட சொல்ற மாதிரிலே இந்த கிழவி என்னை சொல்லுது' என்று மனதிற்குள் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் கறித்துக் கொட்டிவிட்டு, மீதி கடுப்பைத் தான் வார்த்தைகளாக உருமாற்றினாள்.

"உன் புள்ள இருக்க லட்சணத்துக்கு பொட்டபுள்ள ஒன்னு தான் கொற பாரு... இன்னொருவாட்டி இப்படி பல்லை காட்டிக்கிட்டு சொல்லிப்பாரு, முன்னாடி நீட்டிகிட்டு நிக்கிற அந்த நாலு பல்லையும் தட்டி உன் கையிலேயே கொடுக்குறேன்" என்று கணவனை முறைத்துக் கொண்டே, தன் மகனின் காதில் விழாதபடி, மாமியாரை மிரட்டினாள்.

மருமகளின் மிரட்டளில் பம்மியவர், மகனின் ஆதரவு கிடைக்குமா என்று ஓரக்கண்ணால் மகனைப் பார்த்தார் தெய்வஜோதி.

"கொஞ்சம் வாயே மூடிட்டு சும்மா இருங்களேன் சின்னம்மா... அவ வாயிலேருந்து வரப்போற 'சரி'ன்ற ஒத்த வார்த்தைக்காக ஒருமணி நேரமா போராடிட்டு இருக்கேன். குறுக்க புகுந்து காரியத்தையே கெடுத்திடுவ போல..." என்று மகன் அவன் பங்கிற்கு கொஞ்சம் கறித்துக் கொட்டினான்.

அதன் பிறகு அந்த தெய்வம் வாய் திறப்பாரா என்ன! ஆனால் எதிரே நின்றிருந்த பேரன் வாய் திறந்தான்... அதில் அனைவரின் வாயும் அடைபட்டது.

"ஏய் கெழ்வி... தங்கச்சி பாப்பா யாரு கேட்டா? என்கு... என்கு பொண்தாத்தி பாப்பா வேணும். அதான் இப்வே கலியாணம் கட்டிக்க போறேன்." என்று அழகாய் உதடு பிதுக்கி, பொங்கிடத் துடித்த கண்ணீரை அடக்கி, மழலை மொழி பேசி மூவரின் வாயையும் பிளக்கச் செய்தான் பாலகன்.

'யார் இந்த தெய்வம்? மாமியாரையே ஆட்டிப்படைக்கும் இந்த கவிதா யார்? பாப்பா கேட்டு வந்த பாலகன் யார்?'

உங்கள் கணிப்பு சரி தான். வாங்க ஒரு முன்னோட்டம் பார்த்துட்டு வரலாம்.

நடராஜன்- பரஞ்சோதி தம்பதியருக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் போகவே, பரஞ்சோதியின் தங்கை தெய்வஜோதியை நடராஜனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர் அவர்கள் குடும்பத்தார்.

அன்றைய காலகட்டத்தில் +1(PUC) படித்தால் அது பெரிய படிப்பு. அதனை படிப்பதற்கே பல அடி உதைகளுக்கு நடுவே படிக்கச் சென்றவர் தான் தெய்வஜோதி. 'படித்தே தீருவேன்' என்ற அவரது வீம்பிற்காகவே விழுந்த அடிகள் தான் அதிகம். இந்த திருமணத்தால் அந்த படிப்பும் பாதியிலேயே தடைபட்டது.

பரஞ்சோதிக்கு இந்த திருமணத்தில் கணவனின் சதி இருக்கிறதோ என்ற சந்தேகம் தோன்ற, அதனை தெளிவுபடுத்திக் கொள்ளும் தெளிவு அவரிடம் இல்லாமல் போனது.

தன் கணவன் தன் தங்கை மீது மோகம் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தபோதும் அவரால் கணவரை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் போகவே, வேறு வழியில்லாமல் தங்கையை சரிகட்டத் தொடங்கினார்.

'இரண்டே வருட தாம்பத்திய வாழ்க்கையில் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று எப்படி முடிவு செய்தாள் தன் தமக்கை' என்று அக்காவின் மேல் சந்தேகம் கொண்டார் தெய்வஜோதி.

தெய்வஜோதியின் 'காத்திருப்போம்' என்ற கூற்று எவர் காதிலும் விழவில்லை. நாட்டு வைத்திய முறைக்கு தமக்கையே முன்வரவில்லை. இறுதியில் தன் தேடலின் முடிவாக மாமனின் ஆசையையும் அறிந்து கொண்டார் அவர்.

தன் பெற்றோர் உட்பட, அனைவருக்கும் இது தெரிந்த போதும், 'தன்மையாக மணந்து கொள்ளத் தானே கேட்கிறார்!' என்று நடராஜனை பெரிய மனிதனுக்கு இணையாக பேசி கௌரவித்தனர்.

பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்தினாலேயே நியாயம் பேசும் தகுதியை இழந்துவிடுகிறார்கள் அவர்கள். இது தெய்வஜோதியின் மனதில் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது.

பேசவே உரிமையற்ற இடத்தில், தன் காரியத்தை செயல்படுத்திக் காட்டி தான் புரியவைக்க முடியும் என்ற முடிவோடு சில வேலைகளை யாருக்குமே தெரியாதபடி செய்யத் தொடங்கினார் தெய்வஜோதி. அதன் முதல் கட்டமாக, அடுத்த ஒரு வருடத்தில் அவர்கள் இல்லத்தில் மழலைச் சத்தம் ஒலிக்கத் தொடங்கியது.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் அதனை வளர்த்துக் கொடுத்தவர், மீண்டும் கணவனிடம் குழைந்தபடி தனக்கு சாதகமாக மேலும் பல வேலைகளை செய்து கொண்டார்.

தன் மகனின் பத்தாவது மாதத்தில் கணவரிடம் சில விடயங்களைப் பேசித் தீர்த்திட வேண்டும் என்ற முடிவோடு எதிரே வந்து நின்றார்.

கள்ளுக் கடையில் உள்ளிறக்கிய போதை பத்தாதென்று வீட்டில் வைத்து அருந்துவதற்குத் தனியாக ஒரு குவளையும் வாங்கி வந்து, அதனுடன் தன் மாலைப் பொழுதை இனிமையாக கலித்தவர், தன் எதிரே வந்து நின்ற இரண்டாம் தாரத்தைப் பார்த்து சருக்கத் தொடங்கினான்.

கையசைத்து அருகே அழைத்து மனையாளின் தோளை மென்மையாக வருடிக் கொடுக்க, வெடுக்கென உதறிவிட்டார் தெய்வஜோதி. குடி போதையில் அதனை உணர முடியாமல் மீண்டும் வன்மையாக அரவணைக்க முற்பட்டான் நடராஜன்.

மீண்டும் உதறித் தள்ளிவிட்டு, "என் அக்கா-னால குழந்தை பெத்துத் தர முடியாது, அவ மலடினு சொல்லி தானே என்னை கட்டிக்கிட்டே... இப்போ என்ன சொல்றே?" என்று ஒருமையில் அதிகாரமாகவே வந்தது அவரது கேள்வி.

"என்னடி... பேச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு! ஆம்பள நான் எத்தனை கல்யாணம்-னாலும் செய்துப்பேன். யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது... ஆனா நீ பொட்டச்சி, கூப்பிட்டா வந்து படுக்க வேண்டியது மட்டும் தான் உன் வேலை" என்று எகத்தாளமாக பதில் கூறினான் நடராஜன்.

"இனி நீ எத்தனை பேரை கல்யாணம் செய்துகிட்டாலும், இன்னொரு பிள்ளை பெத்துக்க முடியாது" என்று தெய்வஜோதியும் ஏளனமாக பதில் கூற, நடராஜன் உறைந்தது ஒரு நொடி தான்.

தெய்வஜோதியின் கன்னத்தில் பளார் என அரைந்தவன், "பிள்ளை பெத்துக்க முடியலேனாலும் நான் ஆம்பளை தான் டி... படிச்சிட்டோம்னு திமிர்ல பேசுறேயோ!" என்றான் சிங்கத்தின் உருமலுடன்.

"அப்படி தான்னு வெச்சிக்கோயேன். இன்னும் எத்தனை முறை என்னை அடிச்சாலும், உனக்கு புள்ளனு ஒன்னு இருந்தா அது என் அக்காவுக்கு பிறந்த உன் மகன் ராஜேந்திரன் மட்டும் தான்." என்று செருக்காக உரைத்தார்.

நடராஜன் கோபத்திலும் செய்வது அறியாது கையைப் பிசைந்தபடி தெய்வஜோதியை முறைத்திட, அந்த தெய்வம் மீண்டும் வாய் திறந்தது, "பொண்டாட்டினு இருந்தாலும் அதுவும் என் அக்கா மட்டும் தான்" என்று தலை உயர்த்தி பெண் சிங்கமாய் கர்சித்தார் தெய்வஜோதி.

நடராஜனுக்கு 'இவள் ஏதோ சதி செய்திருக்கிறாள்' என்று மூளைக்குள் ஓடியபோதும் அவரிடம் அதனை கேட்க ஆண் என்ற கர்வம் தடுத்தது.

வெற்றிப் புன்னகையோடு தொடர்ந்தார் தெய்வஜோதி. திருமணமான நாளிலிருந்து தான் கருத்தடை மருந்து உட்கொண்டதையும், இப்போது பரஞ்சோதிக்கு மகன் பிறந்த பின் கணவனுக்கு ஆண்மை குறைப்பை ஏற்படுத்தும் மருந்தை உணவில் கலந்து கொடுத்ததையும் விவரித்தார்.

கோபம் பொங்கி எழ மனையாளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வர, கள்ளுண்டதின் காரணமாக இரண்டு அடிகளுக்கு மேல் அவன் உடல் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தெய்வஜோதி வெகு எளிதாக கணவனை கையாண்டு திண்ணையில் படுக்க வைத்தார்.

தமக்கையிடம் சென்று, அவர்களது திருமண பதிவு சான்றிதழ், மகன் ராஜேந்திரனின் பிறப்பு சான்றிதழ் இரண்டையும் கொடுத்து பத்திரப்படுத்தக் கூறினார்.

"மாமா இனிமே பல்லு பிடிங்கின பாம்பு தான் க்கா. அவருக்கு பயந்து நீ வாழ்ந்தது எல்லாம் போதும். இந்த ரெண்டும் உன்கிட்ட பத்திரமா இருக்குற வரை அவரால உன்னையும் எதுவும் செய்ய முடியாது, உன்னை மீறியும் எதுவும் செய்ய முடியாது. அதுக்கு ஏத்த மாதிரி போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு தான் போவேன்" என்றிட

"எங்கே போவே?" என்று இடை மறித்தார் தமக்கை.

"எனக்குன்னு ஒரு வேலை தேடிக்கப் போறேன்.. அப்பப்போ உன்னையும் ராஜாவையும் பார்த்துட்டு போக வருவேன். நீங்க நல்லா தான் இருக்கிங்கனு எனக்கும் தெரியனுமே!" என்று தமக்கையின் வாழ்க்கையை நேராக்கிவிட்டு,

தான் கூறியது போலவே நெல்லையில் ஒரு பாலர்பள்ளி ஆசிரியையாய் பணிபுரிந்தபடி, அங்கேயே தங்கிக் கொண்டார். அவ்வபோது வந்து மகனையும், தமக்கையையும் பார்த்து சென்றார்.

இப்போது ஊர் கண்களின் முன் 'அவர் தான் பிள்ளை பெற முடியாதவள். அதனால் நடராஜன் அவரை ஒதுக்கி வைத்துவிட்டான்'.

தன் இழி நிலையை வெளியே உரைக்க முடியாத நடராஜனும், கர்வமாகவே அந்த கட்டுக்கதைகளை ஏற்றுக் கொண்டான். நாளடைவில் குடி பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, மரணத்தையும் பரிசாக பெற்றுக் கொண்டான்.

கணவனின் இறப்பிற்குப் பின் தன்னோடு கிராமத்திலேயே வந்து தங்கும்படி தங்கையை அழைத்தார் பரஞ்சோதி. அதற்கும் மறுப்பு தெரிவித்து தமக்கை மற்றும் மகனை நெல்லை அழைத்தார் தெய்வம்.

ஆனால் பதினைந்து வயதை எட்டிருந்த ராஜேந்திரன், அதனை மறுத்துவிட்டான். சொந்த ஊரில் செய்யும் சேட்டைகளைப் போல் வெளியூரில் செய்ய முடியாது அல்லவா! அதுவும் தெய்வஜோதியிடம் வளர்ந்தால் நிச்சயம் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிந்தவனாயிற்றே!

ராஜேந்திரன் சிறு வயதில் அன்னை பிள்ளையாக இருந்தபோதும், வளர வளர தந்தையின் குணங்கள் அவனுக்குள் ஒட்டிக் கொள்ள, சண்டியரைப் போல் வலம் வரத் தொடங்கினான்.

கணவனுக்கு யாரும் அறியாவண்ணம் தண்டனை கொடுத்த வீரத்தாயவளால் மகனுக்கும் அதே வழியை கடைபிடிக்க மனம் வரவில்லை. அன்பால் திருத்த முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் அதே அன்பால் தோற்கடிக்கப்பட்டு நின்றார்.

அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பதற்காகவே ராஜேந்திரன் கண்ணில் அகப்பட்டவள் தான் கவிதா. அதிலும் அழகி வேறு. சந்தனத்தில் ஊற வைத்த சாதிமல்லி அவள்.

அப்பேற்பட்ட அழகி ஒருவள் எவரும் அறியா வண்ணம் தன்னை ரசிக்கிறாள் (அதாம்பா சைட் அடிக்கிறது) என்ற நினைப்பே கவிதாவின் மேல் காதல் பெருக்கெடுக்க காரணமாக அமைந்தது ராஜேந்திரனுக்கு.

பஞ்சாயத்து தலைவருடன் இணைந்து அவர் கொடுக்கும் சில சிறிய வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து முடித்துக் கொடுத்து அதற்குண்டான பணத்தைப் பெற்றுக்கொண்டு நேரே கள்ளுக்கடைக்குச் செல்லும் ராஜேந்திரன் மேல் காதல் எந்தளவு இருந்ததோ, அதே அளவு கோபமும் இருந்தது கவிதாவிற்கு.

அதனாலேயே பார்வை பரிமாற்றத்தோடு மட்டுமே நிறுத்திக் கொண்டாள். ஆனாலும் முதலில் காதலை வெளிப்படுத்தியது கவிதா தான். அதுவும் அசாத்திய சூழ்நிலையில்.

கவிதா பன்னிரண்டாவது முடித்து தேர்வு முடிவுகள் கூட அறிவிக்கப்படாத நிலையில் அவளை பெண்பார்க்க வருவதாக அவள் அன்னை உரைக்க, நடுராத்திரியில் ராஜாவைத் தேடி வந்தாள்.

"நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க... அவங்க என் வீட்டு வாசல்ல கால் எடுத்து வைக்கிறதுக்குள்ள உனக்கும் எனக்கும் பரிசம் முடிஞ்சிருக்கனும்" என்று கூறிச் சென்றுவிட்டாள்.

பிறகு சொல்லவா வேண்டும் அந்த சண்டியனின் சண்டியத்தனத்தை! திருமணத்தையே முடித்திருந்தான் அவன்.

அவசர விடுப்பு எடுத்துக் கொண்டு கிராமத்திற்கு வந்த தெய்வம், கவிதாவின் காதலைக் கேட்டு உள்ளம் குளிர்ந்தபோதும் ராஜாவின் செயலில் மனதில் பயமும் கவ்விக் கொள்ளவும் செய்தது.

மருமகளிடம் "நீ தான் ம்மா அவனை மாத்தனும்... அவனை மனுசனா மாத்துற சக்தி உன் ஒருத்தி கையில தான் இருக்கு." என்று வழக்கமான மாமியாராக சொற்பொழிவாற்றிட,

"உன் மேல செம்ம காண்டுல இருக்கேன். இதுக்கு மேல வாய் திறந்தே வயசுல மூத்தவேனுலாம் யோசிக்கமாட்டேன்" என்று முஷ்டியை மடக்கி முறைத்து நின்றாள்.

தெய்வம் அதிர்ந்தே போனார்.

காதல் கரை எட்டுமா!
 
Top