• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

😍மங்கையவள்😍

Hariuma

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
25
10
3
Nagapatinam
வைகறைப் பொழுதினிலே
கண்விழித்து வேலை தொடங்கி,,
சேவை பல செய்து...

காரிகையவள் இந்தப் புவியை
உலா வரும்
நேரத்திலோ,,
அந்த தென்றல் கூட சுகமாகிறது ....‌
மங்கையோடு கலந்து அந்த இயற்கையும் புனிதமாகிறது....

ஆயிரம் துன்பங்கள்....
அடக்க முடியாத அழுகை.....
அல்லும் / பகலும்
தீராக் குழப்பம்.......
ஆயினும் புன்னகை கொள்ளும் சுரிகுழலவள்......

விழிகளில் ததும்பும் நீரும் கூட
இதமாய் அடங்கிவிடுகிறது அவளது கண்களுக்குள்ளேயே......


எத்தனை எத்தனை இடர்பாடுகள் வந்தாலும்,
சிரித்தே கடந்து சென்று..,
வாழ்வை இயல்பாய் கடக்க
காரிகையவள் செல்லும் பாதைகளோ
கரடு/முரடு தான்.....

செல்லும் வழி எங்கும்
முள்ளும் / கல்லும் ..
காலைக் குத்திக் கீரிட
சற்றும் அயராத துணிச்சலோடு ,
பாதையை பயணிக்கும்
பாவையின் அஞ்சா நெஞ்சமும்‌...
வீரியமும் அவளின் வெற்றிக் கோப்பைக்கே....

எளிதல்ல ...

பேதையவள் கையில் கோப்பையைதூக்க,
ஆளும் சினத்தை அடக்கி ......
தன் நேர்கொண்டபார்வை தனிலே....

எதிரிகளையும் நட்பாக்கி.....
கடுஞ்சூழல்களையும் இனியதாய் மாற்றியமைத்து எதார்த்த பெண்ணாகவே,,,



தன் கனவுகளையும் நனவாக்கி
மடந்தையவள் இலட்சியத்தில் இடம் பெயர்ந்து காட்சி அளிக்கும் போதே...,,
அவள் புனிதமாய் தெரிகிறாள்.‌....

" மீசையில்லா பாரதியாய்....!"


😍தோழி உமா😍
 

Attachments

  • 20210804_160300.png
    20210804_160300.png
    243.6 KB · Views: 76
  • Like
Reactions: Saranya writes