சென்னை
ஈசிஆர் சாலை முடிந்து புறநகரில் பணக்காரர்கள் வசிக்கும் பங்களாக்கள் அமைந்திருந்த பகுதி அது! நகரத்து பரபரப்பு இல்லாமல் வெகு அமைதியாக இருக்கும்! வீட்டிற்கு காவலுக்கு வேட்டை நாய்களும், கூர்க்காக்களும் உண்டு! எந்த வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதை மதில் கதவுகளில் உள்ள பெயர் பலகையை பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும்!
Happy Home ஆனந்தனின் பெரிய மாளிகை அங்கு தான் இருந்தது!
அதென்ன Happy Home ? அது அவருடைய தந்தை நாதன் கன்ஸ்ட்ரக்ஷன் என்று நடத்தி வந்த நிறுவனத்தை, அவர் பொறுப்பேற்றுக் கொள்ள தொடங்கிய, பிறகு, அவர் வைத்த பெயர்! அதுவே அவரது பெயரோடு அடைமொழியாக சேர்ந்து விட்டது!
காலை உணவிற்காக வந்து அமர்ந்தார் அந்த ஆனந்தன், அவரை அடுத்து வந்து அமர்ந்தான் அந்த வீட்டின் மூத்த மகன் ரிஷிகேசவன்!
"எங்கே, உன் செல்ல மகன்? நான் ஊரிலிருந்து வந்து இரண்டு நாட்களாகிறது! அவன் என் கண்ணிலேயே படவில்லையே? துரை எங்கானும் சுற்றுலா கிளம்பிவிட்டானோ?" என்றவாறு மனைவி பரிமாறிய உணவை உண்ண ஆரம்பித்தார் ஆனந்தன்,
"அது...அவன், ராத்திரி நண்பன் பிறந்த நாள் பார்ட்டி என்று கொஞ்சம் லேட்டாக வந்தான், " என்ற அனிதாவின் குரலில் தடுமாற்றமும், தவிப்பும் தொனித்தது!
"அவனுக்கு, எப்போதான் பொறுப்பு வரும்? படிப்பு முடிஞ்சு இரண்டு வருஷமா,சதா ஊரை சுற்றிக் கொண்டிருக்கிறான்! ஆபீசுக்கு வந்து என்கூட பிஸினஸை பார்த்துக்கலாம் தானே? நீயாவது எடுத்து சொல்ல மாட்டியா அனு?? என்றார் ஆதங்கத்துடன் !
அனிதா, என்ன பதில் சொல்வது என்று திணறிய போது,
"அவன் கொஞ்சம் நாள் சுதந்திரமாக இருந்துவிட்டு போகட்டுமே அப்பா! அதுதான் நான் உங்க பிஸினஸை பார்த்துக்கிறேனே?" என்று குறுக்கிட்டான் ரிஷி!
"ம்ம்.. நீயும்,உன் அம்மாவும் சேர்ந்து அவனை இன்னும் குட்டிச்சுவர் ஆக்காமல் இருந்தால் சரி! "என்று சாப்பிடுவதில் கவனமானார்!
ஆனந்தனுக்கு கட்டுமானத் தொழில் மட்டுமல்ல, இன்னும் தொழில்களும் உண்டு! அவர் ஒரு தொழில் அதிபர் என்றால் மிகையல்ல! அவர் கால் பதிக்காத தொழில்களே இல்லை எனலாம்! இந்தியா தவிர வெளிநாடுகளிலும் அவரது தொழில்கள் பரவி இருக்கிறது! அதன் காரணமாக அவர் பாதி நாட்கள் ஊரில் இருக்க மாட்டார்!
அனிதாவிற்கு, வீடுதான் உலகம்! பிற பணக்கார பெண்களைப் போல லேடீஸ் கிளப், பப்,கிட்டி பார்ட்டி, சோசியல் சர்வீஸ் என்று சுற்றுகிற வழக்கம் இல்லை! யாருக்கும் நன்கொடை என்று பணத்தை அள்ளித் தரும் குணமும் இல்லை! ஆதாயமில்லாமல் எதிலும் தலையை கொடுக்க மாட்டார்! அவருக்கு விலை உயர்ந்த நகைகள், உடைகள் மீது தீராத காதல் உண்டு! கணவரும் மகனுமாக சம்பாதிப்பதை அவர் அதில் தான் செலவழிப்பது! கணவரும் சரி, மகனும் சரி அதில் தலையிடுவது இல்லை! பெண் பிள்ளை இல்லாத வீடு! வரப் போகும் மருமகளுக்கு சேர்க்கிறார் என்ற எண்ணம்!
அனிதாவின் கீழ்தான் அந்த வீட்டு நிர்வாகம் முழுவதும் இயங்குகிறது! வேலை ஆட்களின் உதவியோடு சமைப்பது, தோட்ட வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது! கணவர் பிள்ளைகளின் தேவைகளை கவனிப்பது, கோவிலுக்கு சென்று வருவது என்று அவருக்கு நேரம் சரியாக இருக்கும்!
இப்போது அனிதாவிற்கு மூத்த மகனின் கவலை தான் மனதை வருத்திக் கொண்டிருக்கிறது!
ரிஷி,கல்லூரி படிப்பை முடித்து விட்டு, மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றான்! அதன் பிறகு அவன் திரும்பி வந்ததும் கோவையில் நல்ல வேலை கிடைத்தது! ஆனந்தனுக்கும் மகன் வெளியே வேலை பார்ப்பது முதலில் பிடிக்கவில்லை தான்! அதன்பிறகு மகனின் கூற்றை ஆதரித்து வெளி அனுபவத்தை வளர்த்துக் கொள்வது நல்லது என்று மறுக்கவில்லை!
கோவையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவன் வேலை பார்த்தான்! அதன் பிறகு திடுமென ஒரு நாள் அந்த வேலையை விட்டுவிட்டு வந்து நின்றான்! அவன் வந்தபோது உடன் அவனது நண்பன் வசந்தனும் வந்திருந்தான்! அவன்," ரிஷிக்கு அங்கே ஏதோ மிஸ் அன்டர்ஸடாண்டிங் ஆயிடுச்சு போல! ரொம்ப அப்செட்டாக இருக்கிறான்! அதை அவன் மறக்க நினைக்கிறான்! அதனால, கோவை வேலைப் பற்றி எதையும் அவன்கிட்டே பேசாதீங்க! அவனாக எப்போ பேசுறானோ அப்போ கேட்டுக்கோங்க! இப்போதைக்கு அவன் போக்கில் விட்டுடுங்க!" என்றிருந்தான்!
ஆனந்தனும் மகன் வீடு வந்ததே போதும் என்று மேற்கொண்டு காரணகாரியங்களைப் பற்றி கேட்கவில்லை! சொந்த கம்பெனியில் அவனுக்கு ஒரு பதவியை போட்டு கொடுத்துவிட்டு அவனுக்கு வழிகாட்டியாக இருந்துகொண்டு அவரது மற்ற தொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்!
எப்போதுமே ரிஷி, அமைதியானவன் தான்! ஆனால் அவன் கோவையில் இருந்து திரும்பிய பிறகு அந்த அமைதி அதிகரித்துள்ளதாக அனிதாவிற்கு தோன்றியது! இப்போது எல்லாம் அவன் அளந்து தான் பேசுகிறான்!
தந்தையுடன், மெல்ல மெல்ல மற்ற தொழில்களையும் கவனிக்க தொடங்கிய பிறகு, அவனும் அவ்வப்போது வெளியூர் சென்று வருவது வழக்கமாகி இருந்தது!
சின்ன மகன், ரகு! கல்லூரி படிப்பை முடித்து, அதன் பிறகு அந்த கோர்ஸ், இந்த கோர்ஸ் என்று மேலும் ஒரிரு வருடங்களை கடத்திவிட்டு நண்பர்களுடன் ஏதோ செய்கிறேன் என்று ஊரை சுற்றுகிறான்! அவன் ராஜா வீட்டு கன்னுக்குட்டி போல, நண்பர்களுடன், பார்ட்டி சினிமா, அவ்வப்போது வெளியூர் சுற்றுலா, என்று மிகவும் ஜாலியாக இருக்கிறான்! அப்படித்தான் அவன் தந்தையின் எண்ணம்!
அனைவரும் அங்கே உணவு உண்டு கொண்டிருக்க, அவனோ இன்னும் தூக்கத்தில் சுகமாக கனவு கண்டு கொண்டிருந்தான்!
அனிதா, நினைவு வந்தவராக, "என்னங்க, நம்ம ரிஷிக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து சீக்கிரமாக கல்யாணத்தை முடிக்கணும்! தரகர் போன் பண்ணினார், இன்னிக்கு இரண்டு வரன்களோட வர்றதா சொன்னார்! நீங்க இன்னிக்கு வீட்டுல இருக்க முடியுமா? என்றார் !
"ஆமா அனு, நானும், ரிஷி, கல்யாண விஷயமா உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்,என் பிரணட் கனகசபை இருக்கானே, அவனுக்கு தெரிந்த குடும்பமாம்! வசதி குறைவு தான்! பொண்ணு பார்க்க அழகாக இருப்பாளாம்! இரண்டு டிகிரி முடிஞ்சிருக்கா, வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்று ஏதோ ஸ்கூலில் வேலை பார்க்கிறாளாம்! பொண்ணு பார்க்க ஏற்பாடு பணணட்டுமானு கேட்டான்! நான் உன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்றேன் என்று விட்டேன்! நீ என்ன சொல்றே அனு? நான் இந்த வாரம் ஃப்ரீதான்" அவர் பேசிக் கொண்டிருக்கையில் ரிஷி, அவசரமாக சாப்பிட்டு முடித்து, கை கழுவ எழுந்து சென்றான்!
மகனை பார்வையால் தொடர்ந்தவாறு,இந்த வாரம் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குங்க! என்று கணவனுக்கு பதில் சொல்லிவிட்டு,"ரிஷி, என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சுட்டு அன்னிக்கு எங்க கூட கிளம்பத் தயாராக இருக்கணும், எந்த சாக்கு போக்கும் சொல்லக் கூடாது" என்றார் அனிதா, கட்டளை போல..
பொதுவாக அனிதா, கட்டளையிடுவதில்லை! மிக அபூர்வமாகத்தான், அந்த விஷயம் முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக சொல்வார்!
"அம்மா, ப்ளீஸ் எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாமே" என்றான் ரிஷி, கெஞ்சலாக..
ரிஷியும் இப்படி கெஞ்சுகிறவன் இல்லை! வேண்டாம் என்றால் அதை அழுத்தமாக மறுக்க முடியாதபடி சொல்லிவிடுகிறவன் தான்! ஆனால் அன்னையின் அந்த குரலுக்கு பணிந்து போய் விடுவது தான் அந்த வீட்டில் வழக்கம்! இப்போது அதை மீற வேண்டியிருக்கிறதே என்ற சங்கடத்துடன் தாயிடம் தன் மறுப்பை தெரிவித்தான்!
அனாதாவின் முகம் இறுகிவிட்டது! "இப்போ வேண்டாம்னா? எப்போ பண்ணிக்கிறதா இருக்கிறே? உனக்கு இந்த வசதி குறைவான பெண் வேண்டாமா? அப்படி என்றால் பெரிய இடத்து பெண்ணாக பார்க்கட்டுமா? அவரது குரலில் லேசாக நக்கல் இருந்தது! கடந்த வருடங்களில் அவனது மறுப்பை கேட்டு, பழக்கப்பட்டவருக்கு உண்டான மனத்தாங்கல் !
"ப்ளீஸ், அம்மா!"
"என்ன விஷயம் ரிஷி? உனக்கு கல்யாண வயது ஆகவில்லையா?
எங்களுக்கும் காலாகாலத்துல பேரன் பேத்தியை கொஞ்சணும்னு ஆசை இருக்காதா?"
சிலகணங்கள் அங்கே பலத்த அமைதி நிலவியது! ரிஷி தீவிரமான முகத்துடன், பெற்றோரை பார்த்தான்! அதன் பிறகு ஒரு முடிவிற்கு வந்தவனாக, " அப்பா,அம்மா இப்ப நான் சொல்றதுதான் முதலும் கடைசியுமான என் முடிவு! என் வாழ்வில் கல்யாணம் என்பது கிடையாது! எனக்கு அதில் நாட்டமும் இல்லை! உங்களுக்கு பேரன் பேத்திய கொஞ்சணும்னா, நம்ம ரகுவுக்கு கல்யாணம் பண்ணுங்க, எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை! இதுக்கு பிறகும் என்னிடம் கல்யாண பேச்சை எடுத்தால், உங்களுக்கு ஒரு, பிள்ளை தான் இருப்பான்! " என்று அழுத்தமாக சொன்னவன், நில்லாமல் தன் வேகநடையுடன் வெளியேறி விட்டான்!
அனிதா, அதிர்ந்து கண்களில் நீருடன் நின்றார்! ஆனந்தனுக்கும் மகனின் பேச்சில் மிகுந்த அதிர்ச்சி தான், ஆயினும் அவர் தன்னை உடனடியாக மீட்டுக் கொண்டு," அனு, இந்த தண்ணீரை முதலில் குடிம்மா! என்று மனைவிக்கு தண்ணீரை புகட்டினார்! மெல்ல தன்னுணர்வு பெற்றவராக," என்னங்க இவன் இப்படி சொல்லிட்டுப் போறான்? அப்படி என்னங்க ஊர் உலகத்தில் கேட்காததையா நான் கேட்டேன்? என்று அழுகையில் குலுங்க,
"நான் அவன்கிட்டே பேசுறேன்மா, நீ உன்னை வருத்திக்காதே! ரிஷி மனசுல ஏதோ பிரச்சினை ஓடிட்டு இருக்குனு தோனுது! அதனால உனக்கு ஒரே விஷயம் தான் நான் சொல்ல நினைக்கிறது, அவன் ஏதும் காதல் விவகாரத்தில் மாட்டியிருந்தால், அவள் யாராக இருந்தாலும் நீ ஏற்றுக்கொள்ள தயாராக இருந்துக்கோ"!
"காதலா? நம்ம ரிஷியா? என்னால நம்ப முடியலைங்க! அப்படியே ஒரு வேளை அவன் யாரை விரும்பினாலும் எனக்கு சம்மதம் தான்! என் பிள்ளை இப்படி பட்ட மரமாக நிற்கிறதை பார்க்க என்னால முடியாது!" என்றார் தீர்மானமாக !
மனைவியின் முதுகை தட்டிக் கொடுத்துவிட்டு, மகனைப் பற்றிய யோசனையில் எழுந்து சென்றார் ஆனந்தன்!
🩵🩷🩵
அனிதா கணவரிடம் என்னவோ தைரியமாக சொல்லிவிட்டார்!
அதிலும் ரிஷிக்கு ஒரு காதல் இருக்கும் என்று அவரால் நம்பமுடியவில்லை!
கணவரைப் போல மகனும் தொழிலில் பெயர் சொல்லும்படி வளர்ந்து நின்றபோது ஒரு தாயாக பெருமையாக இருந்தது!
ஆனால் அவனிடம் கல்யாண பேச்சை எடுத்த போது, அதற்கு அவன் பிடி கொடுக்கவில்லை! அப்போது அவன் தொழிலில் தீவிரமாக இருந்தான்! அதனால் சற்று விட்டுப் பிடிக்க எண்ணினார்! ஆனால் அதன்பிறகு திருமண பேச்சை எடுக்கும்போது பேச்சை திசை திருப்பிவிடுவதும், எந்த பெண்ணின் படத்தை காட்டினாலும் யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்வதுமாக இருந்தான்! அதன் பிறகு வெளியூர் பயணங்களை அதிகமாக மேற்கொண்டான்! வீட்டில் இருக்கும் நேரம் வெகுவாக குறைந்து போயிற்று! அப்போது எல்லாம் வேலைப் பளுவில் இருப்பவனை தொந்தரவு செய்ய மனம் வராது! அவன் வீட்டோடு இயல்பாக வாழ வைக்க வேண்டும் என்றால் அவனுக்கு ஒரு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்ற தீர்மானம் வலுப்பெற்றது!
அதனால் தான், இன்றைக்கு கணவர் இருக்கும் போதே மகனது கல்யாண பேச்சை எடுத்துவிட்டார்!
ஆனால் மகன் பேசிய பேச்சு ? அவருக்கு பேரதிர்ச்சியாகிவிட்டது!
ஒரு வேளை மகனுக்கு பெண்களை பிடிக்காமல் போய் விட்டதோ? என்று அவர் கலங்கிப் போனார்!
அப்படி அல்ல அவனுக்கு ஏதேனும் காதல் விவகாரம் இருக்கும் என்று கணவர் சொன்னதும் தான் சற்று ஆறுதல் உண்டானது! அதே நேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லை , அப்படி எவளையாவது ஊர் பெயர் தெரியாத அன்னக்காவடியை இழுத்துக் கொண்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று உள்ளம் பதறத்தான் செய்கிறது! ஆனால் மகன் அப்படி செய்ய மாட்டான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டார்!
கணவர் மகனிடம் பேசட்டும், அதுவரை இந்த விஷயத்தை ஆறப் போடுவோம் என்று நினைத்தார்!
அடுத்தவர் மனம், அது கணவன் மனைவியாகவே இருந்தாலும் எண்ணங்களை நம்மால் கணிக்க முடியாத போது, பிள்ளையின் மனதுக்குள் இருப்பதை எப்படி கணிப்பதாம்?