• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

01.Miss மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
நிசப்தமான இரவை ஆளும் நிலவின் மகிமையை வெறித்த வண்ணம் நின்று கொண்டிருத்தாள் அவள் வெறுமையோடு அதே சமயம் மனதில் எண்ணில் அடங்காத கனவையும் சுமந்தவாறு...


"ஏன்டி பனியிலே நின்னுட்டிருக்க உள்ளே வா..." என்று அவளுடையே கையை பிடித்து இழுத்தான் ரிஷி ஆனால் அவளோ கொஞ்சமும் அசைந்த பாடில்லை....

"சம்மூ உன்னை தான் என்னாச்சு எதுக்கு வந்த கம்பனி அப்பாயின்மென்ட் ஆடரை வேணான்னு சொன்ன அது எவளோ பெரிய கம்பெனி தெரியுமா? உன்னோட திறமைக்கு நாற்பதாயிரம் தரேன்னு சொல்றாங்க அதையே ஏன் தூக்கி போட்டே சித்தி உன் மேல செம்ம கோவத்திலே இருக்காங்க...."


"அண்ணா எனக்கு ஒருத்தன் வேலை கொடுத்து அதிலே அவனுக்கு கீழே வேலைப் பார்க்க எனக்கு சுத்தமா விருப்பம் இல்லை நான் எனக்குன்னு ஒரு சிம்மாசனத்தை உருவாக்கனும் அப்போ தான் அண்ணா நான் நானாயிருக்க முடியும்..." என்றால் மனதில் ஏற்ப்பட்ட வலியோடு...

"நீ சொல்றது கனவுலே நல்லாயிருக்கும் ஆனா நிஜத்தோட ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு துளி பேஸன்டேஜ் கூட நடக்க வாய்ப்பு இல்லை...."

"முடியும் அண்ணா என்னாலே கண்டிப்பா முடியும் என்னாலே ஜெயிக்க முடியும்..." என்றவள் தன்னம்பிக்கையோடு சொன்னாள்...

"சரி உன் வழிக்கே வரேன் அப்பிடியே நீ சொல்ற மாதிரி ஒரு சிம்மாசனத்தை உருவாக்க அஞ்சு வருஷமாவது ஆகும் அதுக்குள்ளே உனக்கும் வயசாகிடும் ஏன் உனக்கு இருக்கிற ஒரே ஒரு அக்காவும் கிழவியாகிடுவா இப்போ கூட அவளோட உழைப்புலே தான் நீ படிச்ச சாப்புடுற ஆனா அவளோட சம்பளம் குடும்ப செலவை பார்க்கவே சரியா இருக்கு ஆனா நீ வேலைக்கு போய் உழைச்சன்னா ஒரு அஞ்சு மாசத்துலே உன் அக்காக்கு சீரும் சிறப்புமா கல்யாணம் பண்ணி வைக்க முடியும் கொஞ்ச நாளா உன்னோட அம்மா வெளிநாட்டுக்கு போய் உழைச்சு போட்டாங்க நீங்க பசி கெடக்காம வாழ்ந்தீங்க ஆனா இப்போ அவங்களாளே அதே தெம்போட வேலை செய்ய முடியாம தானே வீட்டிலே வந்து இருக்காங்க அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது..." கிட்ட தட்ட கோபமாகவே கத்தி விட்டான் ரிஷி.


"ரிஷிண்ணா எனக்கு புரியிது ஆனா என்னோட கனவை களைக்க விருப்பமில்லை என்ன ஆனாலும் சரி நான் எடுத்த முடிவுலே இருந்து ஒரு துளி கூட விலக மாட்டேன்..." என்று தெளிவாக கூறியவளை முறைத்தவன்...

"உன்னையே திருத்தவே முடியாது உன்னோட இந்த அடம்பிடிக்கிற குணம் அது இன்னும் எது எதுலே கொண்டு போய் விடுமோ தெரியலே என்னமோ பண்ணு போ..." என்றவன் அங்கிருந்து சென்று விட இவளும் அதில் கோவமுற்று அறைக்குள் வந்து புகுந்துக் கொண்டாள் இரவு உணவை தவிர்த்து...

விடியலின் அழைப்பில் இமைகளை திறக்க முடியாமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள்....

"அடியேய் கனகா வெளியிலே வாடி..." என்ற அவரது குரலில் திடுக்கிட்டு எழுந்தாள் சம்யுக்தா.

கோர்ட் சூட் அணிந்து உயர்ரக காரில் வந்து இறங்கியபடி கத்தி கொண்டிருந்தார் வீரேந்திரன் அவர் பக்கத்தில் மார்டன் அழகி ஒருத்தி உடன் இருந்தாள்....

அவள் ஆடையிலும் அதிக பட்ஷ மேக்கப்பிலும் முகம் சுளித்தாள் சம்யுக்தா...

"பார்த்தியாடி உன்னைவிட எவ்வளவு அழகுன்னு இவதான் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டவே என்னோட பொண்டாட்டி…" என்றதும் கனகா அவமானத்தோடு தலை குனிய ரோஷக்காரியும் கோபகாரியுமான சம்யுக்தா பொங்கி எழுந்தாள்....

"டேய் வீரேந்திரா நீ இங்க இருந்து போகலே உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…" என்றவளை
தடுத்தாள் சம்யுக்தாவின் அக்காவான மோனிகா.

"அக்கா நான் அமைதியா இருக்கனும்ன்னா இந்த
ஆளை இங்கயிருந்து போக சொல்லு இல்லை அப்பறம் யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன்…" எரிமலை வெடிக்க தயாராவது குமுறியவளை கண்டு அவளின் கோபத்தை நன்கு அறிந்த கனகாவும் மோனிகாவும் வீரேந்திரேனை பாவமாக பார்த்து கொண்டு நின்றனர்.

"என்னடி புள்ளையே பெத்து வெச்சிருக்க சரியான ஓடுகாலி என்னையே எதிர்த்து பேசுறா…" என்று கனகாவின் கொண்டையை பிடித்து சுவற்றில் அடிக்க அவரது நெற்றி புடைத்து ரத்தம் கண்டியது இதை பார்த்தவளை அதற்கு மேல் தடுக்க முடியவில்லை இருவருக்கும் பொங்கி எழுந்தவள் அந்த நிகழ்வை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மாடல் அழகியின் மேல் அடி இடியாய் இறங்க அவள் அங்கயே மயங்கி விழுந்தாள்...


"டேய் இது உனக்கு தர வேண்டியேது என்னதான் இருந்தாலும் நீ என்னையே பெத்தவனாச்சே என் அம்மா சொல்லிருக்கா அப்பனுக்கு கை நீட்ட கூடாதுன்னு அதான் அடங்கி உன்னை சும்மா விடுறேன் இதுக்கு மேல இனி இங்க வந்த மவனே அவளுக்கு விழுந்தது உனக்கு விழும் போடா வெளியே கல்யாண வயசுலே பொண்ணு வெச்சிட்டு நாய் வப்பாட்டி வெச்சிக்கிட்டு திறியிறான் த்தூ வெட்கம் கெட்ட பொம்பள அலையான்...." என்று காரி உமிழ்ந்து மிரட்டியவளை கண்டு அவரை அறியாமலே எச்சைக் கூட்டி விழுங்கினார் அதை வெளிக்காட்டாமல் "இரு உன்னை உன் அக்கா அதோட நீ கடவுளா நினைக்கிறே உங்க அம்மாவே என்ன பண்ணுறேன்னு…." என்று கோபத்தோடு விழுந்து கிடந்தவளை தூக்கிக் கொண்டு சென்று விட்டான் மோனிகா சம்யுக்தாவின் தந்தையவன்....


நடந்ததை நினைத்து கனகாவும் மோனிகவும் கண்ணீர் விட சுற்றி முற்றி அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

"சும்மா அழுறதை நிறுத்துங்க ரெண்டு பேரும் இவன் என்ன இன்னைக்கு நேத்தா இப்பிடி நடந்துக்கிறான் அவனுக்கு இது எத்தினாவது பொண்டாட்டியோ…" என்றாள் வெறுப்பாக,

"அம்மா நீங்க குண்டாகிட்டிங்க கட்டாய கல்யாணம் சொத்து பத்து இல்லைன்னு தானே ரெண்டு குழந்தைங்களே கொடுத்திட்டு இன்னொருத்திக் கூட
போனான்... அந்த கேவலமானவனை நினைச்சு ஒப்பாரி வைக்கிறீங்க...." என அவர்களை காண சலிப்பாக இருக்க மீதி கோவத்தை அவர்கள் மேலும் காட்டினாள்.


"சட்ட படி பிரிஞ்சும் அவர் வழியை பார்த்திட்டு போகாமே ஏன் தான் நம்மலே கஷ்டப்படுத்தி பார்க்கிறாரோ…" என்று அம்மாவின் காயத்திற்கு களிம்பை தடவியவாறே சொல்லிக் கொண்டிருந்தாள் மோனிகா.


"ச்சே... எல்லாம் நம்ம தலையெழுத்து அக்கா வரவேன் போறவன் எல்லாம் பார்த்திட்டு போறான் அசிங்கமா
இருக்கு….. அம்மா அந்த ஆளு கேவலமான வேலையை பார்த்திட்டு ஒரு கம்பெனி, பணம், வசதின்னு இருக்கிறதாலே ரொம்ப திமிரா கவுரவமா சுத்திக்கிட்டு இருக்கான் அதுக்காக எந்த தப்புமே பண்ணாமே இந்த சமுகத்துலே நீங்க தலை குனியிறது எனக்கு பிடிக்கலம்மா யாருமே இல்லாம தனியாளா நின்னு எங்களை வளர்த்து பார்த்துக்கிட்ட அந்த நிமிர்வு எப்பவும் உங்ககிட்ட இருக்கனும்னு நான் ஆசைப்படுகிறேன்…" என்றவள் அவரை தேற்றி விட்டு குளித்து முடித்து வெளியே வந்தவள்.


"நான் கொஞ்சம் வெளியே போறேன் அக்கா நீ அம்மாவே பார்த்துக்கோ இதோ வரேன்…" என்றவள் நேராக சென்றது அவள் பெரியம்மா வீட்டிற்கு தான் தாத்தா பாட்டிக்கு பிறகு எப்போதும் துணையாக இருப்பது கனகாவின் அக்காவே அவர்களின் செல்லப்பிள்ளை சம்யுக்தா...

பெரியம்மா என்று வீட்டிற்குள் நுழையே அட வாடாம்மா… என்று அவளை பாசமாக அணைத்து கொண்டார் உதய்.

"என்ன பெரியப்பா டியூட்டிக்கு போறீங்களா?...."

"ஆமாம் டா கண்ணு உன்னை நேத்து வர சொன்னா இன்னைக்கு தான் வரே…" என்றவர் அவள் கையில் ஒரு பையை திணித்தார்...

"என்ன பெரியப்பா சாக்லேட்டா…" என்று அதை வாங்கி கொண்டவள் "ஆமா பெரியம்மா அண்ணா எல்லாரும் எங்கே?…"

"அவ கிட்ஷன்லே வேலை பார்த்திட்டு இருக்கா அவன் இன்னும் எந்திருக்கலே தூங்கிட்டு இருக்கான் நீ போய் பாரு நான் போக டைம் ஆகிட்டு வரேன்…" என்று அவளின் தலையை செல்லமாக தடவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட இவளும் தன் அண்ணன் அறைக்குள் நுழைந்தாள்....


ரிஷிண்ணா எந்திரிடா… என்று அவனை எழுப்ப அவனோ மேலும் பெட்சீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினான்...

ஒரு தலையனையை எடுத்து அவன் மேல் போட்டு அடித்தவள் அவன் போர்வையை பிடித்து இழுத்தாள்....

"ஹேய் விடு நான் உன்னோட கோவம் நீ என் கூட பேசாதே இங்கயிருந்து போ…" என்றவனிற்கு முதுகில் ஒரு அடியை வைத்தவள்.

"நீயும் உன்னோட கோவமும் நேத்து நைட் கோவமா பேசிட்டு போய்ட்டு அடுத்த அஞ்சு நிமிசத்துலே எனக்கு பிடிக்கும்னு பிரியாணி வாங்கி குடுத்திட்டு போன என் பாசக்கார அண்ணாவோட கோபம் எப்பிடின்னு எனக்கு தெரியுமே…" என்றாள் அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு...

"அய்யோ அக்காகிட்ட சொல்ல கூடாதுன்னு தானே சொன்னேன் இவ கண்டுப் பிடிச்சிட்டாளே...." என்று மனதிற்குள் நினைத்தவன் சிறு பிள்ளையாய் எங்கோ பார்த்தபடி அவளை கண்டுக்காமல் கோவமாக இருப்பது போல் நடிக்க இது சரிபட்டு வராது என்றவள்.


"உடனே.... அண்ணா எனக்கு பசிக்கிது நைட் நான் பிரியாணி சாப்பிடலே காலையிலே இருந்து ஒரு காபிக் கூட குடிக்கலே தெரியுமா?..." என்று பாவமாக மூஞ்சை வைத்து கொள்ள அவளது பசிக்கிறது என்ற வார்த்தையில் மனம் கோவத்தை தூர தள்ளி விட்டு இருக்க "அய்யோ சம்மூ நீ சாப்பிடலையா சரி வா வா…" என்று அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்து சென்றவன்.

அம்மா செய்த சாப்பாடை எடுத்து வைத்தான் சாப்பிடு என்று......

"எப்பிடிண்ணா நான் என்ன பண்ணினாலும் என் மேல கோவமே பட மாட்டீங்கிற நான்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா?..."

"ரொம்ப யாருக்காகவும் எதுக்காகவும் என் தங்கச்சி கவலைபடுறது பிடிக்காது அதனாலே தான்...." என்றவனின் பேச்சில் மட்டும் இல்லாமல் மனதிலும் அவள் எங்கோ உயர்ந்து தான் இருந்தாள்....

"அண்ணா நீ இன்னைக்கு வேலைக்கு போகலே…"

"இல்ல இன்னைக்கு லீவ் எடுத்திருக்கேன் அம்மாவே செக்கப்புக்கு கூட்டிட்டு போகனும்…"

"ஆஹ் ஓகேண்ணா அப்போ நான் வீட்டுக்கு போறேன்…" என்றவள் சாப்பிட்டு முடித்து கிளம்ப போனவளை தடுத்தான்....


"ஆமா உன் மூஞ்சி ஏன் ஒரு மாதிரியா இருக்கு என்னாச்சுடி…" என்று அவளை கவனித்தப்படி கேட்க அதுவா இன்னைக்கு என்று தொடங்கி தன் அப்பா வந்ததையும் அவர் நடந்துக்கிட்டதையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

"அவரு திரும்பவும் வந்தாரா ஆமா எதுக்கு என்கிட்ட
சொல்லயில்லை நீ...."

"அண்ணா அதை விடுண்ணா எப்பவும் நடக்கிறது தானே…"

"அதுவும் சரி தான் ஆமா எனக்கு ஒன்னு மட்டும் புரியலே சம்மூ நீ எதுக்கு கம்பெனி ஆரம்பிக்க நினைக்கிற…"

"உனக்கே தெரியும் நாங்க சின்ன வயசுலேயிருந்து எவளோ கஷ்டபடுறோம்னு என் அம்மா எங்க ரெண்டுப் பேரு‌க்கும் ஒரு வேளை சாப்பாட்டை தரதுக்கு எவளோ கஷ்டப்படுவாங்கன்னு கண்கூடா பார்த்தவ நான்… நாங்க எல்லாரும் எங்கயாவது ஒரு வீட்டுக்கு போனா கூட அப்பாவோட நடத்தையை வெச்சு எத்தனை பேர் எங்க மேல தப்பா பேசி தப்பாவா நடந்துக்க பார்த்தாங்க…" என்றவளின் குரலில் வேதனையும் ஆத்திரமும் சொல்ல முடியாத அளவு உள்ளடங்கி இருந்தது.... அவள் கையை ஆதரவாக பற்றி நம்பிக்கை கொடுக்க மேலும் பேசினாள்.

"இப்பிடி எளக்காரமா பார்த்த எல்லார் முன்னாடியும் தலை நிமிர்ந்து வாழனும் என் அம்மாவை அசிங்கப்படுத்தின அந்த மனுஷன் ரொம்ப வருத்தப்படனும் எங்க அம்மாக்கு பண்ண துரோகத்துக்கு அது மட்டும் இல்லை அவனையும் சேர்த்து தான் சொல்றேன்…" என்றவனிற்கு புரிந்தது அது யார்? என்று அதனால் ஏதும் சொல்லாமல் அமைதியானான் "இங்கே பணமும் பதவியும் இருந்தா தான் மனுஷனுக்கு மதிப்பே நான் பட்ட அவமானத்துக்கு மத்தியிலே இதுக்கு எல்லாம் நான் ஒரு பெரிய இடத்துலே வளர்ந்து நிக்கனும் அண்ணா அதுக்கு நான் எடுத்த வழி தான் இந்த பிஸ்னஸ் அதுலே நான் சாதிக்காம விடப்போறது இல்லை…" என்றவளின் கனவு எனும் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.


கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்குப் பிறகு...
சார்லி சாப்ளின்.
 
Top