நீண்ட நேரமாக தன் தோழிக்காக பஸ் தரிப்பிடத்திலேயே காத்திருந்தவளை, வினோதமாக வருவோர் போவோர் பார்த்துச் செல்வது, அவளுக்குள் பயத்தினையும், சங்கடத்தினையும் விதைக்க, பையிலிருந்த செல்போனினை எடுத்து அழைப்புத் தொடுத்து காத்திருந்தவள் அழைப்பினைத் தான், எதிர்புறம் யாரும் ஏற்கத் தயாராக இல்லை.
"இவளை நம்பி இவ்ளோ தூரம் வந்துட்டமே! இவள் என்னடான்டா, போனையே எடுக்கிறாள் இல்ல.. இப்போ என்ன செய்யிறது? இங்க ஆரையுமே தெரியாதே!" புலம்பியபடி அப்பாவியாய் அங்கும் இங்கும் பார்வையினை அலைய விட்டவளை நோக்கி வந்தான் அவன்.
"என்ன தங்கச்சி! ஆருக்காக இவ்வளவு நேரம் காத்திருக்கிறீங்கள்?" நீண்ட நேரமாக கவனித்திருந்திருப்பான் போல, தனக்குச் சாதகமான பதிலை அவளிடம் எதிர்பார்த்து காத்திருந்தான்.
"அது.... என்ர ப்ரெண்ட் வாரன் எண்டவா... அவாக்காகத்தான் பாத்துக் கொண்டிருக்கிறன்." அன்னியனிடம் கூறுகிறோம் என்று தெரியும், நீண்ட நேரமாக தன்னையே கவனித்துக் கொண்டிருப்பவனிடம் உண்மையினை கூறாது விட்டால், தன்னை தவறாக நினைப்பதுடன், மேலும் மேலும் கதையினை வளர்ப்பானோ என்ற பயத்தில் தன் நிலையினை கூறிவிட்டாள்.
அவன் எதிர்பார்த்த பதிலில்லை தான், இருந்தும் உண்டான ஏமாற்றத்தை தனக்குள்ளேயே மூடிக் கொண்டவன்,
"ஓ... அப்பிடியோ... சொல்லுறன் எண்டு பிழையா நினைக்காதீங்கோ... ஒரே இடத்தில ஒரு பொம்பிள பிள்ளை நிண்டா, பாக்கிறவேன்ர கண்ணுக்கு வேற மாதிரி தெரியும். அதால நீங்களே அவா வருவா எண்டு எதிர் பார்க்காம போகலாமே!" என்றான் நல்ல எண்ணத்தில்.
முன் பின் தெரியாத அவனது அக்கறை எரிச்சலை தான் உண்டு செய்தது. 'என்ர வேல எனக்கு தெரியும், உன்ர வேலய பாத்துக் கொண்டு பாே' என்று கூறத்தன் மனம் கூறியது. இருந்தும் நல்ல எண்ணத்தில் அவன் கூறுவது அவளுக்கு விளங்காது இல்லை. ஆனால் தோழி வீட்டுக்கு எப்படி? அவள் தான் காலையிலேயே தெளிவாக கூறிவிட்டாளே! அதை மீறி எப்படி வீட்டு வாசலில் சென்று நிற்பது?
"அது அண்ணா.... நான் வெளி ஊர். முன்ன பின்ன இந்த ஊர் பக்கம் வந்ததே இல்லை. அதால அவளின்ர வீடு எங்க இருக்கு எண்டு தெரியாது." என்றாள் தன் கோபத்தை வெளிக்காட்ட மனம் அற்று.
"வீடு எங்கயெண்டு தெரியாதோ! கிழிஞ்சுது. சரி வீடு தெரியாட்டிக்கி பரவாயில்ல.. அற்றஸ் தாங்கோ.. நான் வழி காட்டுறன்." என்றான் தன்னால் முடிந்த உதவியை செய்யும் விதமாய்.
"அது அண்ணா என்னட்ட அவளின்ர அற்றஸ் இல்ல... என்னை அவளே கூட்டிக்கொண்டு போக பஸ் ஸ்ரான்ட் வாரன் எண்டதும் நானும் அதை கேக்கேல.."
"நல்ல பதில் தங்கச்சி. படிச்ச பொண்ணு மாதிரியாம்மா கதைக்கிறாய்? தெரியாத இடத்துக்கு வரேக்க, எதுக்கும் ரெடியா வரோணும் எண்டது தெரியாதா?" என்றான் சற்று கோபத்தை வெளிக்காட்டி. என்ன தான் வேற்று மனிதனாக இருந்தாலும், பெண் பிள்ளை, அதுவும் ஊரின் நிலை தெரியாது கதைக்கிறாள் என்ற கோபம் அவனுக்கு.
"அது ஒண்டும் பிரச்சினை இல்லை அண்ணா.. நீங்கள் போங்கோ. அவள் எப்பிடியும் வந்திடுவாள்." அக்கறையாக விசாரிக்கிறான் என்று கொஞ்சம் இறங்கி கதைத்தால், அவளிடமே எகிறுகிறான் என்ற கோபம் சற்று எட்டிப்பார்த்தது.
"கொஞ்ச நேரமோ... இன்னும் கொஞ்ச நேரம் ஆனா இருட்டிடும். அதோட இந்த ஊர் எப்பிடி எண்டு தெரியுமா? எட்டு மணியை தாண்டினா, ஏன் எதுக்கு எண்டு் விசாரிப்பே இல்லாம. என்ன விலை எண்டு கேக்கிற ஊரம்மா இது. நீ என்னண்டா சாதாரணமா பதில் சொல்லுறாய்." என்றான் அந்த ஊரின் நிலவரத்தை உணர வைக்கும் விதமாய்.
அதுவரை கல் போல இறுமாப்பாக மார்பை இறுக பிடித்திருந்தவள் இறுக்கமோ, அவனது பேச்சில் பயத்தில் தளர்ந்து போக,
"என்னண்ணா சொல்லுறீங்கள்...? இந்த ஊர் அவ்வளவு மோசமாே?" என்றாள் இதுவரை கதைத்திடவே தெரியாத குழந்தை முதல் முதலில் கதைக்கும் போது, தயக்கத்தில் கதைப்பதுபோல் குரலே வெளிவராது.
"ஆ... ஊமையன் உயிர் போற அளவுக்கு ஊரெடுக்க கத்தினானாம் எண்டுறன்." என்றான் கோபமாக சம்மந்தமே இல்லாது.
"விளையாடாதீங்கோ அண்ணா... எனக்கு பயமா இருக்கு." என்றாள் அவனது கேலி பேச்சில் கவலையாக.
"பின்ன என்ன? என்ர வேலைய விட்டுட்டு உதவி செய்ய வந்தா, என்னையே அசிங்கப்படுத்திறியே..! என்னமோ போ.. நான் போறன்." என அவன் திரும்ப,
"அண்ணா அண்ணா கோபப்படாதீங்கோ.. இப்ப நான் என்ன செய்யட்டும்?" என்றாள் அதள பாதாளம் வரை சென்று.
"என்னை கேட்டா...? நானா உன்னை கூட்டிக் கொண்டு வந்தன். எந்த எண்ணத்தில வந்தியோ அதையே செய்!" என்றான் இன்னமும் இறங்கி வராது.
"ப்ளீஸ் அண்ணா.... இப்போதைக்கு உங்கள விட்டா எனக்கு யாரையும் தெரியாது. ஏதாவது உதவி செய்யுங்களன்.. ப்ளீஸ்..." என்றாள் கெஞ்சலாய். அவளது கெஞ்சலில் சற்று இளகியவன், தீவிரமாய் எதையோ யோசித்து விட்டு,
"உதவி செய்ய எனக்கும் விருப்பம் தான். ஆனா அவள் தான் உன்ர போன எடுக்க மாட்டன் எண்டுறாளே... உனக்கும் இந்த ஊரில யாரையும் வேற தெரியாது. பின்ன எப்பிடி நான் உதவி செய்ய ஏலும்? அது சரி அவசரமா இப்ப உன்ர பிரண்ட பார்க்கோணும் எண்டு என்ன அவசியம்" என்றான்.
அவன் கேட்டதும் சொல்ல முடியுமா? நடந்தவையினை சொல்லத்தான் அவன் என்ன அவ்வளவு வேண்டப்பட்டவனா? ஆனால் உதவி கேட்கும் நிலையில் இருப்பவள், சொல்லித்தான் ஆக வேண்டும்.
"அது..... அது.. எப்பிடி...?" அவசரமாய் யோசித்தவள்,
"இந்த ஊர்ல ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதான் அவளை பார்க்க வந்தன்."
"ஓ... அந்த வேலை இடத்தின்ர அற்றஸாவது இருக்கா? இல்லையா?" நக்கல் தான் வேறு எப்படி கேட்பது. படித்த பிள்ளை கூறும் பதிலா இது?
"கனக்க ஓட்டாதீங்கோ அண்ணா.... நான் ஒண்டும் விபரம் தெரியாதவள் இல்லை. எனக்கு அவளின்ர அற்றஸ் தேவை படேல, அதால கேக்கேல.. தேவை எண்டா நானும் கேட்டுட்டு வந்திருப்பன்." அவனது கிண்டலில் சற்றே கோபம் எட்டிப்பார்த்தது.
"என்னது தேவை படேலயோ... அப்ப எங்க தங்கிறது எண்டு வந்தியாம்.?" மீண்டும் அதே எள்ளல்.
"தங்க வேற வீடு ஏற்பாடு செய் எண்டு அவளிட்ட சொல்லியிருந்தன். அதான் பஸ்ராண்ட் வந்து நேரா அங்கயே போறதா இருந்தம். இவள் இப்பிடி செய்வாள் எண்டு யாருக்கு தெரியும்?" என்றாள் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதவள் போல் திமிராய்.
"வேற வீடாே...?" இமைகள் சுருங்கியது.
"ஓம்! வாடகைக்கு சின்னதா ஒரு ரூம் ஏற்பாடு செய்ய சொன்னன். அவளும் ஓம் எண்டாள்..."
"ஓ.... இப்ப அந்த வீட்டுக்கு பணம் குடுத்திட்டியா...?" என்றான் அவசரமாய் விழியினை விரித்து. ஏனென்றால் அவனுக்கு அது தானே தேவை.
"இல்லை... நான் வந்து தான் தாரன் எண்டு சொன்னனான்."
"சரி சரி! நான் ஒண்டு சொல்லுறன். பிழையா நினைங்காத... எனக்கு தெரிஞ்ச வீடு ஒண்டு இருக்கு. உனக்கு சம்மதம் எண்டா சொல்லு, கூட்டிக் கொண்டு போறன்." என்றவனை அவள் விநோதமாக பார்க்க.
"அது சரி! நல்லதுக்கு காலம் இல்லையே! இத பார், உன்ர பார்வையிலயே என்னை நீ சந்தேகமா பார்க்கிற என்டு தெரியுது. நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்டும் மோசமானவன் இல்லை. என்ர தொழிலே இது தான். என்னை நம்பி வெளி நாட்டில இருக்கிற ஒரு சில வீட்டுக்கு உரிமையானவங்க வீட்டின்ர திறப்ப தந்திருக்கினம். யாருக்கும் அவசரமா வீடு தேவைப்பட்டா வாடைகைக்கு வீட்டை விட்டு, வர காசில ஒரு தொகை காசை எனக்கு கமிசனா தாரம் என்டு. உள் ஊரில இருக்கிறவைக்கு வீடு தேவைப்படாது.
இந்த ஊர் எங்கட நாட்டோட தலை நகரம் வேற, அதால இங்க வெளி ஊர்ல இருந்து வேலை தேடி வாரவங்களும், உள்ளாச பயணமா வரவங்களும் தான் கூட, அவங்களுக்கு ஒன்டு ரெண்டு நாளுக்கு இருக்கிற வீட்டை வாடகைக்கு விட்டு, என்ர காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறன். என்ர கதைய உன்னால நம்ம ஏலாம இருக்கு என்டா, பார்!" கையில் இருந்த ஒரு தாெகை திறப்பு கொத்தை காட்டியவன்.
"இருட்ட இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. உனக்கும் என்னை நம்புற விட்டா வேற வழி இல்லை. ஒரு தரம் தான் நான் சொல்லுறத நம்பி பாரன். உன்னை உடன காசு தர சொல்ல மாட்டன். என்னோட வந்து வீட்டை பார். உனக்கு அங்க பாதுகாப்பு என்டு தோன்டினா, காச தா" என்றவனை நம்புவதை தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.
'அது தான் பார் என்டுறானே! பார்த்துட்டு நம்பிக்கை வரேல எண்டா, பேசாம கைய கழுவி விடுவம்' தனக்குள் சொனன்னவள், அரை மனதாகவே தலையசைத்தாள்.
அதற்காகவே காத்திருந்தவன் போல், "ஆட்டோ...." அங்கு நின்றிருந்த ஆட்டோவை அழைத்து அதில் ஏறிக்கொண்டான்.