• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை - 02

நிலமதி ராஜி..


வந்து முப்பது நிமிடங்களையும் தாண்டி இருந்தது...
ஆனால் அவன் தான் நிமிர்ந்து பார்த்த பாட்டை காணோம்.

அகரனும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அந்த ஆதி காலத்து டப்பா ஃபோனில் மட்டும் தான் அவனது மொத்தக் கவனம் முழுவதும் இருந்தது.


அவனுக்கு அந்த தி க்ரேட் மது வர்ஷனை சத்தம் இட்டு அழைக்கத்தான் தோன்றியது.

ஆனால் அந்தளவிற்கு தைரியம் இருக்க வேண்டுமே...!

'நான் வந்தது இவனுக்கு தெரிஞ்சிருக்குமா? இல்லன்னா தெரியாதா...?' என்று எண்ணினாலும், எங்கே தான் அவனை அழைக்கப் போய், அவன் பார்த்துக் கொண்டு இருக்கும் முக்கியமான வேலை, தன்னால் கெட்டு, அதில் எதாவது நஷ்டம் ஏற்பட்டு விடுமோ! என்ற பயத்தில் தயங்கியே நின்று கொண்டான்.

பாவம் அவன் முதலாளியின் முக்கிய பணி எதுவென்று அவனுக்கு தெரியாது அல்லவா...? தெரிந்திருந்தால் அவன் மனநிலை என்னவாகி இருக்குமோ...!



நின்றதில் பாதி நேரம், தன் முதலாளியை சைட் அடிக்கவும் தவறவில்லை அவன்.....

அழகன் தான்.. அலை அலையான கேசம்.. அதையே ஜெல் போட்டு பந்தல்கட்டாக மாற்றி வைத்திருந்தான்.
அது கூட அவனுக்கு கொள்ளை அழகுதான்.. பரந்த நெற்றியினை ஒன்றான இணைக்கும் புருவங்கள்.
உணர்வுகளுக்கு தகுந்தால் போல் ஒன்றாகவே ஏறி இறங்கும் இரட்டையர்கள் அவர்கள்.

குட்டியான விழிகளில், குண்டு மணி போல அடர்ந்த கருப்பு மணிகள். காண்போரை தூரவே நிறுத்தி வைக்கும் ஸ்கேனர் போன்ற கூரிய பார்வை.

பெண்களுக்கு இருப்பது போல செதுக்கி வைத்த அழகான நாசி.. அதன் கீழ் தடித்த அழுத்தமான இதழ்களில், அவனுக்கு வேண்டியவர்களை தவிர, மற்றவர்களுக்காக மலர்ந்திடுவேனா? என அடம்பிடிக்கும் உதடுகள்.


முகத்தின் உரோமங்கள் கூட ட்ரீமரின் உதவி கொண்டு, செதுக்கி வைத்திருந்தான்.

தினமும் உடற்பயிற்சி செய்வதானாலோ என்னமோ....! கட்டிளம் காளையாய் முறுக்கேரிய உடற் கட்டு.
அவனது மேல் தட்டு ஆடை வடிவமைப்பிற்கு, கன கட்சிதமாய்ப் பொருந்தும்.


கருப்பும் இல்லாமல் அதிகப்படி வெள்ளையும் இல்லாது,
இலங்கை ஆண் மகன்களுக்கே உரித்தான, அம்சமான கலர் கொண்ட ஆனழகன் அவன்.

தன் முதலாளியின் ஆளுமையான தோற்றத்தைக் கண்டு வியக்காத நாளே இல்லை அகரன்.

எதிரே நின்று அவனை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் விட்டு விடுவானா என்ன...?

ஆனாலும் என்ன செய்வது.? ஒரு ஆணை இன்னொரு ஆண் எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டு இருக்க முடியும் என்ற சலிப்பு தோன்றாமலும் இல்லை..

அதை வாய் திறந்து சொல்லவா முடியும்?


எதோ சிந்தனையில் உலன்று கொண்டு இருந்தவனைக் கலைத்தது வர்ஷனது "ஓஒஹ் ஸிட்..." என்ற சலிப்பான வார்த்தை..

மிகவும் ஆதங்கமாக வந்த வார்த்தையில், அகரன் தான் மிகவும் பதறி விட்டான்.

"என்ன ஆச்சு சார்..?" என்று பதட்டமாக கேட்டவனை, சோகமாக ஏறிட்டவன்,

"போச்சு அகரா... எல்லாமே போச்சு.. நான் எவ்ளோ கஷ்டப் பட்,டு இதைப் பண்ணேன் தெரியுமா?

ஆனா ப்ச்...' என்று கவலை அப்பிய முகத்துடன் சொன்னவனை, அதை விட சோகமாக ஏறிட்டான் அகரன்.

"அச்சோ சார்..! நீங்க இப்படி சோகமா இருக்காதிங்க.. இந்த தடவை இல்லன்னா என்ன? அடுத்த தடவை நீங்க ஜெயிக்க தான் போறிங்க." என்றவன், விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் சொன்னவனை பார்க்கும் போது சுவாரஷியம் கூடிப்போனது அவனுக்கு.

"நான் நாலாவது லெவல் கூட முடிச்சிட்டேன். இன்னும் ஒன்னே ஒன்னு தான்... அதுக்குக் கிட்டப் போகும் போது.. அந்த வளர்ந்து கெட்ட பாம்பு... முட்டுச் சந்தில போய் முட்டிக்கிச்சு" என்று எரிச்சலுடன் சொன்னவனை புரியாது பார்த்தான் அகரன்.

"என்ன....! பாம்பா...?" என்று வாய் விட்டே கேட்டவன், கண்களை சுருக்கி அவனைக் கேள்வியாகப் நோக்கினான்.

அவன் கேள்விக்கு பதில் சொல்லும் முகமாக..


"ஆமா...! உனக்கு தெரியாதா..? இந்த நோக்கியா ஃபோனோட ஸ்பெஷல் கேம்..

ஸ்நேக் கேம் இருக்குல.. அது தான் நான் இப்போ விளையாடிட்டு இருந்தேன்.. சின்ன வயசுல விளையாடினது...

ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போ தான் விளையாடுறேன்.. அதுவும் இப்பிடி போச்சு..." என்று ஏதோ சீரியஸான விஷயம் பேசுபவனைப்போல சொல்லிக்கொண்டு போனவனது பேச்சில்,

அகரனுக்கு தான் மூக்கு நழுவி கீழே விழுந்தது போல் ஓர் பிரம்மை.

கூடவே கோபமும் வந்து ஒட்டிக்கொண்டது.

இல்லாதவனுக்கு கோபம் ஒன்று தான் குறை என்றது போல், தன் கோபத்தை முதலாளியிடம் காட்ட முடியாது, பெருமூச் ஒன்றை வெளியேற்றியவன்,


உதட்டைப் பிதுக்கி, அதை அவனிடம் காட்டாமல் முகத்தை மறு பக்கம் திரும்பிக் கொண்டான்..

அவன் செய்கையை கண்டவனுக்கு ஏனோ அது குஷியாகிப் போகவே....

'பய புள்ள கடுப்பாயிட்டான் போல'

அவனைக் கடுப்பேபேற்றிப் பார்ப்பதில் ஏனோ அவனுக்கு ஓர் அலாதி இன்பம்.


அவனது கோவத்தைப் பார்க்கும் போது, அவன் கன்னங்களை பிடித்து ஆட்டி... 'சோ கியூட் பாப்பா...' என்று கொஞ்ச வேண்டும் போல தோன்றும் வர்ஷுவிற்கு,

அகரன் ஆணழகனா? என்று கேட்டால் ஆம்... என்ற பதிலை தவிர வேறு எந்த பதிலுமே கூற முடியாது. அது அவன் மேல் பொறாமை கொள்பவர்களும் மறுத்திட மாட்டார்கள்.

வர்ஷீவிற்கு தம்பி இருந்தால், எவ்வாறு இருப்பானோ.... அப்படியே இருப்பான்.
ஆனாலும் அவனை விட கூடுதலான நிறம் தான்.

உடை கூட அவனுக்கு உரிய சீருடை தான் அணிவான்.
அது கூட அவனுக்கு அழகாய் தான் இருக்கும்.

என்ன... வர்ஷுவை விட எளிமையானவன்.
ஏழ்மையானவன் என்று அவன் தோற்றத்திலே புரிந்து கொள்ளலாம்.

அவன் உடற் பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக் கோப்பாய் வைத்திருக்கிறான் என்றால், இவன் உழைப்பின் மூலம் உடலை முருக்கேற்றி வைத்திருந்தான்.


முதல் தடவை இவனைப் பார்க்கும் போது, எதுவும் தோன்றவில்லை தான்.

ஆனால் அவன் கீழே கிடந்த தன் வாலட்டை எடுத்துக் கொடுத்த நேர்மை அவனுக்கு பிடித்து இருந்தது.

அதனால் மட்டுமே வேலைக்கு வைத்தான்.. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அவனை அடிக்கடி கம்பனியில் காணும் போதும், அவன் செய்கைகள், அவன் நேர்மை, கண்ணியம் புத்திக் கூர்மை...

ஆம்...! புத்திக் கூர்மை தான். எந்த ஒரு வேலையையும் கொடுத்த உடனே புரிந்து கொள்வான்.

அத்துடன் அதை மிக விரைவிலே செய்து முடிப்பவன்.

என்ன...? இன்று வரை தன் சுய சம்பாதித்யத்தை தவிர, யார் உதவியையும் நாடியது இல்லை.. இவ்வாறு அவன் நல்ல குணாதிசயங்களில் கவரப்பட்டவன், நாளடைவில் அவனை தனது குட்டித் தம்பியாகவே எண்ண ஆரம்பித்தான்.

ஆனால் இது வரை ஒரு முறை கூட, தனது நேசத்தை இருவரும் காட்டிக்கொண்டது இல்லை,


ஏதோ சொல்லப் படாத காதலர்கள் போல தங்கள் நேசத்தை பொத்தி வைத்திருந்தனர்.


அவனுக்கோ முதலாளி என்ற நேசமும், தன் அம்முவிற்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே! என்று அவன் கலங்கி நிற்கும் போது, அந்த சமயத்தில் தனக்கு ஒரு வேலை கொடுத்து, பெரும் உதவி செய்தான் என்ற பணிவும் அவனிடம் என்றால்,

முதலாளியிற்கோ.... அவன் குணத்தில் கவரப்பட்டு இருந்தாலும், சிறு வயதில் தன் தாயிடம் கேட்ட குட்டித் தம்பி, இத்தனை காலம் கழித்து இப்போது கிடைத்திருக்கிறான் என்ற உணர்வு,

சிறு வயதில் அவன் நண்பர்களின் சகோதரர்களை பார்த்து, அவனுக்கும் தம்பி வேணும் என்ற ஆசை எழும்.

ஆனால் அவனுக்கு கிடைத்ததோ ரோஜா மொட்டுப் போல ஒரே ஒரு தங்கை தான்.
பெயர் கவிநிலா.. அதனால இன்று அகரனைப் பார்த்ததும் அவனுக்கு தன் தம்பியை போலவே தெரிந்தது.


கோவமாய் நின்றவானை மேலும் வெறுப்பேற்றிப் பார்க்க ஆசை தான்.
ஆனால் வேலை நேரத்தில் என்ன விளையாட்டு..? என நினைத்தவாறு, தொண்டையை செருமி அகரன் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்.

அது வேலை செய்தது போல.

இருந்தும் தன் கடுப்பை மறைத்துக் கொண்டான்.

இந்த சின்சியர் சிகாமணிக்கு வேலை எப்பவும் நேர்த்தியாக இருக்க வேண்டும்.

அந்த நேரத்தில் யார் அரட்டை அடித்தாலும், அதில் தலையிட மாட்டான். அது தனக்கு வேலை தந்த முதலாளியாக இருந்தாலும் கூட,

"இப்போ எதுக்கு சார் என்னைக் கூப்பிட்டீங்க?" என்று பவ்யமாக அவன் கேட்க,

அவனையே ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்த வர்ஷன்,


" என்ன மிஸ்டர் தார்ஷன் குட்டி... வேலைக்கு வாரத்துக்கு முன்னாடி, எதாவது பார்ட் டைம் வர்க்கா..?
சாகசம் எல்லாம் பண்ண போறிங்க போல" என்றான் மாறா பார்வையோடு.

அவன் கேள்வியில் குழம்பி போனவனோ,.

"சா...ர்! என்ன சொல்றிங்க..? அப்படி எந்த வேலையும் நான் பார்க்கல்லையே" என்று கேள்வியாய் அவனைப் பார்த்து நின்றவனிடம்,



ஓ....! என்று தாடையை தடவி யோசிப்பது போல பாவனை செய்தவன்,

"அப்போ.... திருடனா ஒர்க் பண்ற... கரெக்ட் ஆ...?" என்றான் ஏதோ சிதம்பர ரகசியத்தை கண்டு கொண்டவன் போல, கண்களை பிரகாசமாக்கி.

ஆனால் அவனது வேடிக்கை பேச்சினை தான், அகரனால் ரசிக்க முடியவில்லை... எதைக் கொண்டு அடித்தால் தன் கோபம் தீரும் என்றிருந்தது.

அவனும் என்ன தான் செய்வான்..? எந்த விடயத்திலும் நேர்மை தவறாது வாழும் அவனை, திருடன் என்று சொன்னால், கோவம் வராதா...?

"சார்....! நான் எதை திருடினேன் என்று என் மேல இவ்ளோ பெரிய பழியைத் தூக்கிப் போடுறிங்க?" என்று கோவமாய் அவன் கேட்டாலும்.. பாவம் விசுவாசியிற்கு கண்ணே கலங்கி விட்டது.


இதுவரை யாரும் தராத பட்டத்தை இவன் தந்து விட்டானே என்ற ஆதங்கம்.



இம்முறை அவன் கண்ணீரை கண்டு, முதலாளி தான் பதறிவிட்டான்.

விளையாட்டு வினையானதை எண்ணி.

இருந்தும் தான் கெத்தை விட்டுக் கொடுக்காதவன்,

"அப்புறம் எதுக்கு டா இன்னைக்கு காலேல அந்த வீட்டு செவத்துல தொங்கிக்கிட்டு இருந்த?" என்றான்.

'நானா...? எந்த வீட்டு சுவற்றில..? அதுவும் காலேல..?' என சிந்தித்தவனுக்கு, அப்போது தான் நினைவே வந்தது.

"ஓ...! அதை சொல்லுறீங்களா...? என்றவன் அந்த நிகழ்வை எண்ணி மெலிதான புன்னகை ஒன்றை இதழுக்கும் வலிக்காமல் சிந்தியவன்..


"சார்...! அது நான் என்னோட அமுதாவை.." என்று சொல்ல வந்தவன், ஒரு முறை கடைத் தெருவில் அவளைப் பார்த்த போது பெயர் சொல்லி அழைத்தமைக்கு, தெரியாதவர்கள் முன்னே எதற்க்கு பெயர் சொல்லி அழைத்தாய் என்று அவள் ஒரு நாள் முழுக்க தன்னிடம் பேசாமல் இருந்ததை நினைத்துப் பார்த்தவன் சட்டென்று,

"அது.. அம்முவைப் பார்க்கப் போயி இருந்தேன் சார் ... அன்னைக்கு அவளைப் பார்க்கும் போது, மாதுளம் பழம் கேட்டா..., அது தான் நேத்து ராத்திரி போகும் போது வழியில கண்டேன். வாங்கிட்டுப் போனேன்.

அதை தான் காலேல அவங்க வீட்டு சுவர் ஏறி குடுத்துட்டு வந்தேன்." என்று சொன்னவனை.. கூர்மையாய் ஏறிட்டவன்,

"என்ன சார் லவ்வா...? எத்தனை நாளா இது நடக்குது..? காதலிக்காக, சுவர் ஏறி குதிக்கிற அளவு போயாச்சா..? பாத்து பா... அடி வாங்காம இருந்தால் சரி தான்." சிரித்தவாறு சொன்னவனை கொலை வெறியுடன் ஏறிட்டவன்,

"சார்..! அவ ஒன்னும் என் லவ்வர் கிடையாது,.. நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஃபிரண்ட்ஸ்..

எங்க நட்பு அவ சித்திக்கு பிடிக்கல, அது தான் நான் அப்டி பண்ணேன்.. அப்புறம் அவ எனக்கு அம்மா மாதிரி. இன்னும் ஒரு தடவை இப்படி பேசாதீங்க" என்று கோபமாய் சொல்லி விட்டு, அவன் பதிலுக்கு கூட காத்திறாமல், விறு விறு என்று சென்றுவிட்டான்.

எப்போதும் போல இப்போதும் அவன் கோவத்தை ரசித்தவன்,


"இந்த கியூட் பாப்பாக்கு அவன் அம்முனா ரொம்ப பிடிக்கும் போலவே.. அவ எவ்ளோ இவன் மேல கேர் எடுத்து பாத்திருந்தா, இவன் அம்மாவோட இடத்தை அவளுக்கு கொடுத்து இருப்பான்.." என்று அந்த சிந்தனையிலே உலன்று கொண்டு இருந்தவன் சிந்தையை கலைத்தது.. அவன் செல்போன் சிணுங்கள்.

அதன் பின் அவனும் அவன் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான், இடையிடையே அந்த முகம் தெரியாத அம்முவின் நினைவு வராமலும் போகவில்லை..


இங்கு கோவமாய் வெளியே வந்த அகரன்..


"சே.. இனிமே அம்மு பத்தி யார்கிட்டயும் சொல்ல கூடாது.. எப்படி எங்க உறவ அவரு தப்பா சொல்லலாம்?" என்று புலம்பியவன், சிறிது நேரத்தில் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவன் அப்படி தான் வேலையில் எப்பவும் கவனம் சிதறாதவன்,.. காரணம் அவன் தான் நேர்மையான விசுவாசி ஆயிட்டே..







இங்கு தோட்டத்தில் அமர்ந்து அகரன் கொடுத்த மாதுளம் பழம் ஒன்றை ரசித்து உண்டவள், மற்றையதில் கை வைக்கப் போக... எங்கு இருந்து தான் அவள் சித்தியிற்கு மூக்கு வேர்த்ததோ,


அவளை அழைத்துக் கொண்டு தோட்டம் வரைக்குமே வந்து விட்டாள்..


அவள் சத்தம் கேட்டதும் அருகில், புதர் போல வளர்ந்து கிடந்த செடியின் உள்ளே அந்த பழத்தை பத்திரப் படுத்தியவள், குப்பையையும் அதே இடத்தில் பதுக்கி வைத்து விட்டு, பூக்களைப் பறிப்பது போல திரும்பிக் கொண்டாள்.


அவள் அருகிலே வந்த அவளது சித்தியோ..

"அடியே....! உன்னய தேடி எங்க எல்லாம் அலைய வேண்டி இருக்கு. இங்க என்னடி பண்ணிட்டு இருக்க..?' என்றார் அதட்டலாக,

"அது.. அது... இங்க.. சாமிக்கு.. பூ.." என்று கைகளில் உள்ள பூவை அவள் காட்டியதில் சற்று சாந்தமானவள்..

"சரி இந்த பூவை எல்லாம், பூஜை ரூம்ல வெச்சுட்டு.. எனக்கு ஒரு காப்பி கொண்டு வா..." என்று அவர் அந்த இடத்திலே நின்று கொண்டதில்.. இவள் தான், விட்டால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டாள்.

இருந்தாலும் அவளுக்கு பயம் தான், தான் மறைத்து வைத்துள்ள பழத்தை தன் சித்தி கண்டால் என்ன நடக்கும் என்று.
 
Last edited: