• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

03. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
முகத்தினை அலசி விட்டு வந்தவர்கள் நேராக அடுப்படியில் நுழைந்தார்கள்.

இரவுச் சமையல் முடித்து, உண்ட பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு வர நேரம் எட்டு என்று காடந்திருந்தது.



"நாளைக்கு எனக்கு காலேஜ் இருக்கு.. அதுக்கு தயாரகணும்" என்றவள் கல்லுாரிக்கு தேவையானவற்றை ஒழுங்கு படுத்தலானாள்.

"சைலு.... படிப்பு படிப்பு என்டுறியே! இப்பவும் என்னதான் அப்பிடி படிக்கிற.?
ஒரு தடவை அம்மா உன்னை கோவிலில் கண்டதாயும், நீ ஏதோ ஸ்கூல்ல படிப்பிக்கிறதாவும் சொன்னங்களேடி! அப்போ அது பொய்யா?" என்றள்.





" இல்லையே...! முன்னாடி தொண்டர் ஆசிரியரா கொஞ்ச காலம் ஸ்கூல்ல வேலை பார்த்தன்.... இப்போ முழு ஆசிரியரா மாற முயற்சி பண்றேன்..

அதுதான் இங்க கொண்டு வந்து போட்டுட்டாங்க. மூன்று வருசம் இங்கே தான் குப்பை கொட்டணும்.... ஒன்றரை வருசம் தள்ளியாச்சு இன்னும் ஒன்றரை வருசம் கடத்திட்டேன்னா, ஊர்ல நல்ல ஸ்கூல் பார்த்து சேந்திட வேண்டியது தான்.

நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு? நாக்கே செத்து போச்சுடி." என்றாள் பாவமாக சைலு.

"அது சரி தின்னி பண்டாரம்... திங்கிறதிலையே குறியாயிரு.. சமயலை மட்டும் கத்துக்காத." என்று கேலி செய்தவள்,

"இன்னைக்கு ஏன் காலேஜ் போகல? எதாச்சும் விடுமுறையா என்ன?" என்ற தூஷாவின் கேள்வியில் கண்ணை உருட்டியவள்,



"எந்த லீவ்வும் இல்லடி..! நான் தான் போகல... டவுன்ல சி்ன்ன வேலை இருந்திச்சு, அதை பார்க்க போகேக்க தான் உன்னை கண்டன். அதுவும் நல்லதுக்கு தான்... இல்லன்னா நீ என்னாகி இருப்பியோ!" என்றவாறு தனது நாளைய பொருட்களை சரி பார்த்தவள்,


"நிறைய யோசிக்காத, எல்லாம் தான் நல்லா முடிஞ்சுதே! நீ அந்த கட்டிலிலே தூங்கு. நான் இதில் தூங்கிறேன்." என்று போர்வையை இழுத்து தலை வரை மூடிக்கொண்டு தூங்கலானாள்.


சில வினாடி அவளையே பார்த்து கொண்டிருந்தவள் விளக்கை அணைத்து விட்டு, தானும் படுத்து கொண்டவளுக்கு கடந்த கால, கசந்த நினைவுகள் கைது செய்ய அதிலே உலன்றவள் அழுது ஓய்ந்து திரும்பி படுக்கும் போது தான், தோழியை பார்த்தாள்.


எந்த கவலையும் இன்றி குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தவளை பார்க்க பொறமையாக இருந்தது.

'இவளுக்கு மட்டு எங்கே இருந்து தான் தூக்கம் வருதோ..? இன்று இவள் மட்டும் இல்லை என்றால் என்னவாகி இருப்பேன்.' என்று நினைக்கும் போதே அவளால் கற்பனை கூட பண்ணி பார்க முடியவில்லை.


இன்று நடந்த சம்பவங்களை நினைத்தவளுக்கு திடீர் என்று அவன் முகம் நினைவில் வந்தது. கூடவே ஆத்திரமும்.




"என்ன மனுஷன்?
அந்தம்மாவை பாட்டி என்டு வேற கூப்டானே... அவங்களும் அந்த நெட்டாங்க பாத்து... ரதனோ.. புதனோ... அப்பிடி எண்டு தானே கூப்பிட்டாங்க.
அவனுக்கு என்ன பெரிய மன்மதன் எண்டு நினைப்பா...?


ஏதோ தீண்ட தகாதவள் போல என்னமா என்ன இழுத்து தள்ளி விட்டன். எரும நெட்டாங்கு....
இதில என்ன கேட்டுட்டு இருக்கிற...? வாங்கி குடுக்க வேண்டியது தானே எண்டு கேள்வி வேற.
ஏன்...? நான் வாங்கி காெடுக்க அவன் வீட்டு சொத்த என் பெயரிலையா எழுதி வைச்சிருக்கான்.

யோசிக்க வேண்டாம் நான் வாங்க போயிட்டா... அந்த நேரம் பாட்டிக்கு ஏதாவது ஒண்டு நடந்துது எண்டா என்ன செய்யிறது எண்டு? அவ்வளுக்கு பாட்டிக்க முடியேல எண்டா யாரையாசும் விட்டு வாங்கி குடுத்திருக்க மாட்டேனா என்ன?
ஏதோ கட்டின பொண்டாட்டி கணக்கா அதிகாரம எல்லோ பேசுறான்.


அவ்ளோ பாசமா இருக்கிறவன், எதுக்கு பாட்டியை தனியா அனுப்பணும்? யாரோ தடியனாமே!

இவர் மட்டும் பெரிய ஆணழகன்.... தடி மாடு.' உள்ளே பொருமியவள் இன்னாரு மனமோ,

அவனுக்கு என்ன...! ஹிந்தி பட ஹீரோ வாட்டம் அழகா தானே இருக்கான்... நீ ஏதோ அவன்ல குறை இருக்கீற மாதிரி பேசுற...
இருகட்டுமே..! அழகாவே இருகட்டும்.. ஆனா மனசு நல்லமில்லையே.


கத்தரிக்கா கூடத்தான் பார்வைக்கு வெளிய அழகா இருக்கும்... வெட்டிப் பார்க்கிறப்பாே தானே தெரியுது உள்ள எவ்ளோ சூத்தை எண்டு.

"அவனும் அவன் முகர கட்டையும்... என முனுமுனுத்தவளுக்கு கடைசியாக அவன் பார்த்த பார்வைய அர்த்தம் புரியவில்லை.

'முன்ன பின்ன அவனை பார்த்தது கூட இல்லையே! எதுக்கு இந் கோபம்? அப்படி அவனுக்கு நான் என்ன செய்திட்டேன்?"
என்று பலவாறு சிந்தித்து கொண்டிருந்தவள், அப்படியே உறங்கியும் போனாள்.

அதே நேரம் அவனும் இவள் நினைவிலே இருந்தான்.


காலையில் தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்த ரதன் கையில், தேனீர் கோப்பையை திணித்து விட்டு.


"ஏன் ரதன்? எப்போ பாரு ஓடிட்டே இருக்கிறியே! கொஞ்சம் லேட்டா தான் போன என்ன?சாப்பிட்டு போப்பா" என்றவாறு அவன் அருந்திய தேனீர் கோப்பையை, பெற்று கொண்டாள் அவன் அன்னை வசந்தா.

எப்போதும் போல் சாப்பிட அழைத்து விட்டு, சாப்பாடு போடுகிறாளோ, இல்லையோ!

சமயம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கும் வயசாகிட்டு போகுது... உனக்காக இல்லாட்டியும், எனக்கு எண்டு ஒத்தாசைக்காக மருமகளை கொண்டு வாடா...!" என வசந்தா புலம்பலை இன்று நேற்று கேட்பவன் இல்லையே அவன்.

"இல்லம்மா..! இன்டைக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு.... அத முடிச்சிட்டு, வெளியவே சாப்பிடுறேன்." என்றவன் நி்ன்றால் ஆபத்து என்று கார் சாவியை எடுத்து கொண்டு ஓடியே விட்டான்.


வழமையான தனது கார் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, அந்த பெரிய சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்தான்.


அவனை கண்டதும் பரபரப்பானது அந்த அடுக்குமாடி கொண்ட சூப்பர் மார்கெட்.
அவனோ வேக நடையுடன் நேராக சென்று தனது அறையில் முடங்கியவன், மேசை மீதிருந்த பைல்லில் கவனத்தை செலுத்தலானான்.


அவனுக்கு கொடுக்க பட்ட அறையானது அந்த சூப்பர் மார்க்கெட்டிலே ஒதுக்கு புறமாக, முழுவதும் கண்ணாடி தடுப்புக்களிலான சூப்பர் மார்கெட் என்றபடியால், அவனது அறைக்கு மாத்திரம் கறுப்பு கண்ணாடி தடுப்புகள் பொருத்த பட்டிருந்தது.

உள்ளிருந்து பார்த்தால் மாத்திரம் வெளியில் என்ன நடக்கிறதென்று பார்கலாம். கூடவே வீதியையும்.

பைல்லில் கவனத்தை பதித்தவன், அதில் குழப்பமாக, ஏதோ சிந்தனையில் தலையை நிமிர்த்தியவன் பார்வையோ எதார்த்தமாக சாலையில் பதிந்தது.

அங்கு சாலையை வெறித்தபடி பஸ்தரிப்பிடத்தில் இருந்த இளம் பெண்ணை கண்டான்.
சாதரணமாக அவன் எந்த பெண்ணையும் பார்த்தறியாதவன், இன்று அவனையும் மீறி, ஏதோ ஓர் உந்துதலில் அவள் மேல் பார்வையை நிலைக்க விட்டான்.


எதையோ பெரிதாக இழந்தவளாட்டய் முகத்தை சோகமாக வைத்திருந்தவளை பார்ததும் மனம் பாரமாகிப் போக,

"யாரிவள்..? இதுவரை இந்த பகுதியில நான் இவளை பாத்தது கிடையாதே! எதையோ இழந்தவள் போல இவ்ளோ காலையிலே இங்க வந்து நிற்கிறாளே!" என்று அவளை முழுதாய் ஆராய்ந்தவன் பார்வையில் பட்டது அவளது பெட்டி.



"ஓகோ...! வெளியூர் போல... அது தான் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை." என்றவாறு மீண்டும் தனது வேலையில் கவனமானான்.
சில நிமிடங்கள் கழிய, மீண்டும் அவள் நிற்கின்றாளா? என்று அங்கு பார்வையை பதித்தான்.

கண்களில் நீரோடு, சிறுமியிடம் சிரித்தவாறு சைகையால் அவள் பேசியது அவன் கண்ணின் பட்டது.
அவன் மனமும் பாரமாக உணர,

"எதுக்காக இப்படி அழுகிறாள்? ஒரு வேளை யாரையாவது நம்பி பெத்தவங்கள விட்டுட்டு ஓடி வந்துட்டாளோ...? அவனும் இவள வர வைச்சு ஏமாத்திட்டானோ...!" அவன் எண்ணங்களுக்கு தீணி போடுவது போல், கையில் பெட்டியுடன், நீண்ட நேரம் காத்திருப்பாள் போல தோன்றிய மறு கனமே,


வீதியில் மாட்ட பட்டிருந்த சூப்பர் மார்க்கெட்டன் சிசிரீவி புட்டேச்சை ஆராயலானான்.

அதில் ஆறு நாற்பதிலிருந்து அவள் பொட்டியை இழுத்து கொண்டு வந்து பஸ் தரிபிடத்தில் நிற்பது தெரிந்தது.



"ஆக இவ்வளவு நேரம் நிற்கிறாள். என்ன பெண் இவள்? நிச்சயமா யாரையோ நம்பி தான் ஏமாந்திருப்பாள்...


இல்லாட்டிக்கி கையில் பெட்டி.. கண்ணில தண்ணி...., முகத்தில் சோகம்... எதுக்காக ஒரு இளம்பெண், அதுவும் பொது இடத்தில் ரொம்ப நேரமாக நிற்கணும்?
அவளது தோற்றமே காட்டி கொடுக்கிறதே அவளது ஏமாற்றத்தை.

'நல்லா அனுபவிக்கட்டும். இவ்வளவு காலம் பெத்து படிக்கவைச்சு, வளர்த்தா... யாரோ தெரியாத ஒருத்தன், உன்னை எனக்கு புடிச்சிருக்கு எண்டு வந்ததும், எதையும் யோசிக்காமல் பெட்டியை தூக்கிகொண்டு யாருக்கும் தெரியாமல், அவங்கள ஊரார் மத்தியில அவமான படவைச்சிட்டு ,தெரியாத ஊருக்கு ஓடி வந்திடவேண்டியது.' என்று மனதுள் அர்சித்தாலும்,, அவள் நிலையை எண்ணி கவலை கொள்ளத்தான் செய்தான்.

மீண்டும் அவள் என்ன செய்கிறாள் என்று கண்ணாடித்தடுப்பு வழியே அவளை ஆராய்ந்தான்.

சிரித்த படி சிறுமிக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவள் பார்வையோ, எதையோ உண்ணிப்பாக கவனிப்பதையும், உடனே பதறியபடி எதிர் சாலை கடந்ததையும் கவனித்தவன்,


"ஏன் இவ்வளவு பதட்டமா ஓடினா...?" என்று எட்டிப்பார்த்தவன், ஒரே திசையில் கோவில் இருந்ததினால் அவனால் அங்கிருந்தபடி கவனிக்க முடியவில்லை.



ஆனால் ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவன், தனது அறையை விட்டு வெளியே வரும்போது, அங்கு இரு இளைஞர்கள் பொருட்களை அடுக்குவதை கண்டு, அவர்களையும் தன்னுடன் அழைத்து சென்றான்.

வெளியே வந்து அவள் சென்ற திசையை பார்த்தான்.

அவள் யாரையோ தாங்கி பிடித்து, கல்லில் அமர வைப்பது தெரிந்தது.
அவள் அவரை மறைத்தபடி நின்றதால், அவர் முகம் தெரியாமல் இருக்கவே, அருகில் சென்றான்.

மயங்கிச் சரிந்தது தனது நண்பன் ரவியின் பாட்டி விஜயலஷ்மி என்று தெரிந்ததும்,


"பாட்டி..." என்று அலறினான்.
அவன் கத்திய வேகத்தில், துஷா திரும்பி பார்த்ததும் தான், அவள் பஸ் தரிப்பிடத்தில் நின்ற காட்சி நினைவில் வர, அவளை உதறி தள்ளி ஏசவும் செய்தான்.

யார் எப்படி இருந்தால் என்ன என்று இருப்பவன், இன்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்று உணரகூடிய நிலையில் அவனில்லை.

ஏதோ நம்பியவர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்ற எண்ணமே அவனுக்கு.
போகும் போது கூட அவளை முறைத்து விட்டு சென்றதன் காரணமும் அது தான்.


பாட்டியை வீட்டில் விட்டவன், மீண்டும் வந்து பார்க்கும் போது அவளில்லை. ஏதிலோ ஏமாந்த உணர்வு தோன்றினாலும், அதை உதாசினம் செய்து தன் வேலையில் கவனமானான்.


ஏனோ அந்த நினைவு இப்போது தாக்க,


'எதுக்கு அவளை நான் ஏசினன்...? அவ வாழ்கை அவ கெடுத்துக்கிறா... இல்ல வாழ்ந்திட்டு போறா, உனகென்ன?' என்று சுய சிந்தனையில் உழன்றவன் அப்படிய உறங்கியும் போனான்.



பறவைகளின் பாட்டிசைக்க... ஆலயமணி தாளமிட, ஆதவனவன் தனது ஆயிரம் பொற்கரங்களால் பூமியினை ஆரத்தழுவி முத்தமிட்ட அந்த ரம்மியமான காலை பொழுதது.

பரபரப்புடன் தயாராகிக் காெண்டிருந்தாள் சைலு.

"என்ன மச்சி! கால்ல சில்லு பூட்டின மாதிரி ஓடி திரியிற.. எப்பவுமே கடைசி நேரம் தான் எழும்பி தயாராகுவியா?

சரி சொல்லு... நான் உனக்கு என்ன உதவி செய்யனும்..?" என்றாள்.



"அம்மா தாயே! இப்பவாச்சும் கேட்டியே! கொஞ்சமாக டீ போட்டு தர முடியுமா?" என்றாள் இது தான் சாக்கென்று.


"எல்லாம் என் விதி மச்சி! உனக்கு அடிமையா வேலை செய்ய வேண்டி கிடக்கு.
சரி கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆடாச்சே! தலையாட்டித்தானே ஆகணும்" என்றவாறு கிச்சன் பக்கம் சென்றவளிடம்...



"இப்பவே பழகிக்க மச்சி! அப்புறம் வாக்க பட்டு போற இடத்தில, அம்மாவ தான், உன் மாமியாரு திட்டுவாங்க.


என்னத்த புள்ள வளத்திருக்காங்களோ...! சுடுதண்ணி கூட வைக்க தெரியாத பெண்ணா கிடக்கெண்டு.... அதான் ட்ரைனிங் தாரன் மச்சி! சந்தர்பத்தை பயன்படுத்திங்கோ." என்றாள் சைலு.



"அடியே வாயாடி! எங்களுக்கெல்லாம் தெரியும். முதல்ல நீ பழகிக்கோடி!" என்று விட்டு கிச்சன் சென்றவள் இரண்டு கப்களுடன் வந்தாள்.
ஒன்றை அவளிடம் நீட்டியவள், மற்றதை தான் அருந்தலானாள்.

இருவரும் அருந்திக்கொண்டிருக்கும் போதே,

"ஆமா துஷா! எங்க போயி உன்னோட சொந்தக்காறங்கள தேடப்போற?" என்றாள்.


" எங்க தேட முடியும்! ஊரும் புதுசு... வீட்டிலையே இருந்தாலும் தேட முடியாது... எனக்கொரு உதவி செய்யிறியா மச்சி." என்றாள் பாவமாக
"என்னடி சொல்லு! உனகில்லாததா?"


"இல்ல மச்சி! இப்பிடியே இருக்க முடியாது... ஏதாச்சும் வேலை செய்யலாம் என்டு யோசிக்கிறன்... இங்க தனியா இருக்கவும் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.

ஏதாச்சும் வேலை கிடைச்சா பொழுதும் போகும். சொந்தக்காரங்கள தேடினது போலவும் இருக்கும். அப்பிடியே என் சிலவுக்கும் உதவிய இருக்கும் மச்சி.


யாராச்சும் உனக்கு தெரஞ்சவங்க இருந்த கேட்டு சொல்லேன்."

"என்னா மச்சி விளையாடுறியா?
உங்க வீட்டில தெரஞ்சிது... நான் கைமா தான். அதவிட உன் படிப்புகேத்த வேலையெல்லாம் என்னால எடுத்து தர முடியாதும்மா." என்றாள் சைலு மறுப்பாக.,


"ப்ளீஸ்டி... முடியாது எண்டு மட்டும் சொல்லிடாதா."கெஞ்சலில் இறங்கிவிட்டாள் துஷா.


"ஓகே ஓகே டி! ரொம்ப கெஞ்சா... ஈவ்னிங் வந்து சொல்லுறேன். ஓகே வா...? என்றவள், தனது கைபையை தூக்கிக் கொண்டு,

"மதியத்துக்கு சாப்பாட்டுக்கு சொல்லி இருகிறன். பக்கத்து வீட்டு ஆன்ட்டி வருவாங்க... வாங்கி சாப்பிடு. நான் வர மூன்டு மணியாகும்... தனிய இருக்க கஷ்டமா இருந்தா, அவங்க கூடவே அவங்க வீட்டில போயிடு... நான் வந்து கூப்பிடுறன் சரியா?" என்றவள் சென்று விட்டாள்.


காஃபி கோப்பையை கழுவி கிச்சனில் வைத்தவள், அறை கதவை பூட்டி விட்டு கட்டிலில் வந்து விழுந்தாள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு இளவரசி போல் அவள் கோட்டையில் எப்படி இருந்தவள், இன்று இந்த அறையில் அதுவும் தனிமையில்,


இதே சில காலங்களுக்கு முன்னர் கண்ணீர் என்றால் என்ன விலை எனக்ககேட்டும் அளவுக்கு, அவளது பெற்றோர் உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷங்களையும் தேடி வந்து, உனக்கு தான் எல்லாம் வைத்துக்கொள்! என தந்து விட்டு,

இப்போது எல்லாவற்றையும் தாம் போகும் போதே, சிறு குழந்தையிடம் இருந்து, பகிரங்கமாக பறித்து கொண்டு செல்வதை போலல்லவா சென்று விட்டார்கள்.

இருபத்து மூன்று வருடங்களாக சிந்தாத கண்ணீரை, இப்போது மொத்தமாக அல்லவா சிந்த விட்டுச் சென்று விட்டார்கள்.
நினைக்க நினைக்க அவள் மனமும் கண்களும் ஓய்வில்லாமல் தன் பணியை சரிவர செய்தது.


ஏனோ ஒரு நாள் தந்தையுடன் சேர்ந்து தாயை கேலி செய்து அழவைத்த நாளும் நினைவில் வந்தது.

அவளது பதினேழவது வயதில் உயர் தரம் படித்துகொண்டிருந்தாள். அன்று விடுமுறை ஆகையால், வீட்டில் இருந்தவள் சிறுது நேரத்தில் பொழுது போகாததால் தாயுடன் சிறிது விளையாடுவோம். என்று நினைத்தாள்.

சமையல் அறையில் வேலையாக இருந்தவளின் கவனத்தை கலைத்தது அவள் கணவன் சுதாகரின் கோபமான குரல்.


"சாந்தி............
சாந்தி..........
அடியோ சாந்தி! இவ்வளவு சத்தமா காட்டு கத்து கத்துறேன்.. ஏனென்று கேக்கிறாளா பாரு? எல்லாம் நான் குடுத்த இடமடி." என்று கோபமாய் வந்த குரலில் பயந்தவள்,



"என்னாச்சு இவருக்கு?
போகேக்க நல்லாத்தானே இருந்தாரு... அதுவுமில்லாம திருமணமாகி இவ்வளவு ஆண்டுகளில் ஒரு நாள் அதிர்ந்த பேசாதவர், இன்று ஏதோ மனம் படபடக்க,

"என்னாச்சுங்க..? இதோ வந்திட்டேன்." என்று வெளிய எட்டிப்பார்த்தாள்.


தந்தையின் பேன்ட் சர்ட் அணிந்தவள், தலை முடியை மறைக்க தொப்பி அணிந்து மறைத்து விட்டவளை , முதலில் கணவன் என்றே நம்பிவிட்டார் சாந்தி.



" எதுக்குங்க இவ்ளோ டென்ஷன்?" என்று அருகில் வந்தவள் கண்டவருக்கு, கணவனை அப்படியே வார்ததை போல இருந்தவளை பார்க்க சந்தோஷமாக இருந்தாலும்,
அவள் தன்னை பெயர் சொல்லி அழைத்ததையும், தன் கணவனே இது வரை தன்னை உறுக்கி ஒரு வார்த்தை பேசியதில்லை..

'தன் மேல் இதுவரை எந்த கோபமுகம் காட்டாத கணவன், தன்னை ஏசுவதைப் போல எப்படி இவளாள்?' என்று தோன்றும் போதே கோவம் தலைக்கேறியது.



"என்னடி கொழுப்பா?" என்று அவளை கையில் வைத்திருந்த கரண்டி கொண்டு அடிக்க கையினை ஓங்கினார்.
தாய்க்கு போக்கு காட்டிவிட்டு வீட்டை சுத்தி ஓட தொடங்கினாள் துஷா. அதே நேரம் அங்கு வந்த சுதாகர்,

"என்ன...? அம்மாவும் பொண்ணும் சமையலை விட்டுட்டு, ஓடி பிடிச்சு விளையாடுறிங்களா?" என்று கேட்டவாறு உள்ளே வந்தார்.
முதலி்ல் கணவன் முன் நின்றவள் சாந்தி தான்,


" உங்க மகள் செய்த காரியத்தை பாருங்க" என்று அவள் புறம் கை காட்டியவள்,
அவள் தன்னை உறுக்கியதையும் சேர்த்து கூற;



மகளிடம் "அம்மா செல்வது உண்மை தானா?" என்று கண்களாலே கேட்டார்.
அவளும் ஆமோதிப்பதாய் தலை சாய்த்து தந்தையை பார்த்து கண்ணடித்தாள்.
மகளின் செயலிலிலே, தாயிடம் நடத்திய குறும்பையும் ரசித்த சுதாகர்.


"ஏன் சாந்தி! எதுக்கு பெயர் வைச்சிருக்காங்க? கூப்பிட தானே! அத தான் என் பொண்ணு செய்திருக்கா,
இது பெரிய குற்றம் போல என்னட்ட வந்து சொல்லிட்டு இருக்க". என்றதும், மகளின் தவறை திருத்தாமல், தன்னை குற்றம் சொல்வதை தாங்க முடியவில்லை சாந்தியால்.

அப்போதைக்கு தன்னை சரி செய்து கொண்டவள்,


" அப்பாவும் மகளும் ஒண்டு சேர்ந்து எதையாவது செய்யுங்க. நாளை ஏதாவது ஒன்டெண்டா, என்னை வளர்ப்பு பிழை என்று சொல்லட்டும்.. அப்ப கவனிச்சுக்கிறன்."என்று கூறியவர் சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார்.


"அப்பா...! அம்மா கோவமாக போறாங்க, போய் சமாதனப்படுத்துங்க. இல்ல எண்டா சாப்பாட்டில் உப்பை அள்ளி போட்டுடுவாங்க" என்று தந்தையை துரத்தினாள் மகள்.

சமையல் அறை சென்ற சுதாகர், "சாந்தி! இனண்வைக்கு என்ன சமையல்? வாசம் மூக்க பதம் பாக்கிறதே" என்று சமாதான அம்பான முதல் அம்பை எய்தார்.
ஆனால் அது இலக்கு தவறி வேறு புறம் செல்ல,
அவளோ முகத்தை திருப்பி கொண்டு, சமையலை தொடர்ந்தாள்.


"என்ன சாந்தி கோவமா?
அவ சின்ன பொண்ணு... ஏதோ பொழுது போகமல் விளையாடியிருக்கா.... அவளை எப்படி கண்டிக்கிறது...?
என்னையும் உன்னையும் விட்டா, அவளுக்கு யார் இருகாங்க சொல்லு? இண்டைக்கு விடுமுறை.... எங்கேயாவது நான் போக போகிறேன் எண்டே அடம்பிடித்தாளா?

இல்லையே எங்கட பேச்சுக்கு மரியாதை தந்து தானே சொல்பேச்சு கேக்கிறாள்.
இதெல்லாம் அந்தந்த வயசில செய்ய வேண்டியதம்மா.... கண்டித்து அடக்கி வைக்க கூடாது" என்றார் சுதாகர்.

"அதுக்காக....? என் பெயர் சொல்லி கூப்பிட்டது பத்தாது எண்டு.. அடியே சாந்தி எண்டே அதட்டல் வேற...
இது வரை நீங்கள் கூட அப்பிடி கூப்பிடேல.... எங்க அது நீங்கள் தானோ கோவமா கூப்பிடுறீங்கள் எண்டு கொஞ்ச நேரத்தில பயந்துட்டேன் தெரியுமா?
ஆனால் அவளை கண்டிக்காம, அவளுக்கு வக்காளத்து வாங்குகுறீர்கள்.


பெத்து வளர்த்த, சகோதரம், சொந்தம் யாரும் வேண்டாம்... நீங்கள் தான் வேணும் எண்டு உங்களுக்கு பின்ன வந்தன் பாருங்கோ... எனக்கு இதுவும் தேவைதான்.

உங்கள் பிள்ளையா? நானா எண்டு வாரப்ப, அவள் பிழையே செய்தாலும் அவள் பக்கம் தானே நீங்கள்." என்று கண்கள் குளமாக சொன்ன மனைவியை இறுதி டார்த்தையில் கோவம் வந்தாலும் தன்னை நிதானப்படுத்தியவர்.

"என்ன சாந்தி இது? சின்ன பிள்ளை கணக்கா பெத்த மகள்கிட்டையே சண்டைக்கு நிற்கிற.


அதுவும் இல்லாம... இது என்ன தேவையில்லாத வார்தைகள்.
நான் மட்டும் என்ன..? என்ர குடும்பத்தோட சந்தோஷமாகவா இருகிறன்?
நானும் நீ மாட்டுந்தான் வேணும் என்டு, என்மேலஉயிராய் இருந்த பெத்தவங்களையும், சகோதரனையும், ஏன் அந்த ஊரே வேண்டாம் என்று உதறி தள்ளி விட்டு வரவில்லையா?


நீவேற... நான் வேறு எண்டு பிரிச்சு பேசுகிற... இப்போ என்ன? உன் பொண்ண கண்டிக்கனும்.... அவ்வளவு தானே?..." என்றவர் அவ்விடம் விட்டு வெளியே வந்தார்.

தந்தையின் உடையில் இருந்து, தன் உடைக்கு மாறியவள், டீவியில் ஔிபரப்பான பாடலுடன் தானும் சேர்ந்து பாடியபடி இருந்த மகளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார் சுதாகரன்.


"என்ன துஷி குட்டி! டீவில பாட்டு பாக்கிறீங்களா?"

"ஆமாப்பா....! புது சாங்க்கா போகுது. எல்லாமே எனக்கு பிடிச்ச சாங்க்ப்பா... அதான் பாத்திட்டிருக்கேன்" என்றாள்.
அவளின் குதுகல பேச்சில், அவள் கையை தனது கைக்குள் வைத்து கொண்டவர், அதை தடவியவாறு,


"அம்மாவுக்கும் பொண்ணுக்கும் நடக்கிற தகராறில அப்பாவ மாட்டி விட்டுட்ங்களே செல்லம்..." என்றார் கவலையாய்,


"இல்லப்பா...! வீட்டில சும்மா இருக்க பொழுது போக மாட்டாண்டிச்ச,.... அதான் என்ன சொய்லாம் எண்டு யோசிச்சன்.... அப்ப தான் ,இந்த ஐடியா வந்திச்சு.

எப்டி நடிந்தேன்பா? உங்கள போலவே இருந்தேனா?" என கேட்டவளிடம்.


"ம்ம் நல்ல ஐடியா தான்! அப்பிடியே அப்பா போலவே இருந்தா என் துஷி குட்டி.
ஆனா அம்மா தான்டா பாவம்!

சரியா கவலை படுறாங்க. அப்பா கூட அம்மாவ அப்படி அதட்டினதில்லையா.... ரெம்ப உடைஞ்சிட்டாங்க.... இனி இப்படி அம்மா மனசு நோகிற போல எதுவும் செய்யாதடா சரியா?" என்று எடுத்த கூற,


"சரிப்பா...! நான் சும்மா விளையாட்டுக்கு தான்பா செஞ்சன். ஆனா அம்மா இவ்ளோ வேதனைப்படுவாங்க எண்டு தெரியாதுப்பா... சாரிப்பா" என்றாள் மகள் வருத்தத்துடன்.

"என் அப்பா பொண்ண பத்தா அப்பாக்கு தெரியாதா? நீ விளையாட்டுக்கு தான் செய்திருப்ப" என்று அவளை அணைத்து நெற்றியில் முத்தம் வைத்தார் சுதாகர்.


"சரிப்பா.. நீங்க இருங்க, நான் அம்மாவ சரி பண்ணிட்டு வாரேன்." என்று அடுகளையில் நுழைந்தாள்.


அவள் வரும் அரவம் அறிந்த சாந்தி, அவசரமாக கண்களை துடைத்து கொண்டாள்.
அதை கவணித்தவள்,


"அம்மா" என்று அழைத்தவாறு பின்புறம் வந்து கட்டிக்கொண்டவள்,


"அம்மா செல்லதுக்கு துஷிகுட்டி மேல கோவமா?
சும்மா தான்மா விளையாடினேன். அது உன்னை கஷ்டப்படுத்தும் எண்டு தெரிஞ்சிருந்தா அப்பிடி செய்திருக்க மாட்டேன்மா. சாரிம்மா!" என்று கெஞ்சலானாள்.

அவள் கெஞ்சலை தாங்காது,
"போடி அங்கால... வந்திட்டா சாரி பூரி எண்டுட்டு, அப்பனுக்கும் பொண்ணுக்கும் என்ன அழவைக்கிறது, அப்புறம் வந்து கெஞ்சிட்டு இருக்கவேண்டியது" என்று கத்தியவள்,


"இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் காணும், போய் அப்பாவ கூட்டிட்டு வா! சமையல் முடிஞ்சிது சாப்பிட எடுத்து வைக்கிறேன்." என்றாள் எல்லாம் மறந்தவராய் அவள் அன்னை.


"அப்போ என்னில கோவமில்லையே.!" என்றாள் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு.

"என் பொண்ணுமேல என்னால கோவபட முடியுமா?
அது சின்ன வருத்தம்டா! அது கூட என் பொண்ணு, என்ன கட்டி பிடிக்கிற வரைதான். இப்போ அது இல்லடா" என்று அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தமிட்டாள்.

திடீரென கேட்ட அழைப்பு மணியில் தன் சந்தோஷ காலத்தில் உலன்ற நினைவுகளிலிருந்து மீண்டு வந்தவளோ...


'இந்த நேரத்தில் யாராக இருக்கும்?' என கடிகாரத்தை பார்க, அது பத்து என்று காட்டியது.


சைலு வர மூண்டு மணி ஆகும் எண்டு சொன்னாளே.... அப்படி எண்டா யாரா இருக்கும்?' என்ற சிந்தனையில் இருந்தவளை தொடர்ந்த அழைத்தது வாயில் மணி.