• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

03. சித்திரமே சொல்லடி

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
"நீங்க ஏதோ கேட்டிங்கல்ல... சொல்லுங்க." என்றாள் அவர்களிடம் திரும்பி.


"அது சாதனா மேடத்தை...." என பூவிகா இழுக்க.


"சரி.... என்ன விஷயமா வந்திருக்கிறீங்கன்னு சொல்லுங்க?" என்றாள் அவள் குரலில் எந்தவித அழுத்தமும் இன்றி மிகவும் மென்மையாக.


"இல்ல மேடம்.... நாங்க அவங்க கூடத்தான் பேசணும்." என்றனர் இருவரும் ஒரே சேர,

இருவரையும் சிறு புன்னகையுடனே ஏறிட்டவள்,
"நீங்க தேடி வந்த சாதனா நான் தான்." என்றாள் எந்த வித ஆர்ப்பரிப்பும் அற்று.


"நீங்களா....?" என்ற அதிர்ச்சியோடு சட்டென இருவரும் எழுந்து நின்க,



"எதுக்கு இதெல்லாம்? எப்பவும் போல சகஜமா இருக்க பாருங்க. கடவுள் மேலான மரியாதையை மட்டும் வெளிகாட்டுங்க. மனுஷங்களுக்கான மரியாதை மனசில இருந்தாலே போதும்." என அவர்களை அமரும்படி கூறினாள்.


"ஆனா நீங்க...... இந்த வயசில......." இன்னமும் அதிர்ச்சியில் வார்த்தைகளை கோர்க்க முடியாது தடுமாறிப்போனான் நிமல்.


இருக்காத பின்னே...! சமூகத்தொண்டு, அதற்கு விருது வழங்கி கௌரவிப்பது என்றதும் அவன் எதிர்பார்த்தது எப்படியும் ஐம்பதை கடந்த பெண்ணாகத்தான் இருக்க கூடும் என்று. ஆனால் இங்கோ இவள் நான் தான் சாதனா என்றால் யார் தான் அதிர்ச்சிக்குள்ளாக மாட்டார்கள்..?


உண்மையும் தானே... இவள் வயதை ஒத்த பெண்கள் அனைவரும். காலத்துக்கு ஏற்றாப்போல் தம்மை மாற்றிக்கொண்டு, தம்முடைய வாழ்க்கையினை இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கையில், இப்படி ஒருத்தி இந்த வயதிலேயே, சமூகத்தொண்டு, கடவுள் பக்தி என்று சாமியார் போல் வாழ்கிறாள் என்றால் நம்பமுடியுமா?


அதுவும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவிக்கும் அளவிற்கு அவள் சமூகப்பணி இருந்திருக்கிறது.

அவனது பேச்சிலுள்ள தடுமாற்றம் கண்டவள்,


"ராம்ண்ணா...... தண்ணி எடுத்துட்டு வரீங்களா....?" அவருக்கு கேட்கும்படி உரக்கத்தான் குரல் கொடுத்தாள். ஆனால் அதில் அதிகாரமோ, அழுத்தமோ இல்லை. மாறாக ஒரு குழந்தையிடம் வேலை வாங்கும் போது எத்தனை தணிவு இருக்குமோ அதே மென்மை.



அவர் கொண்டு வந்து கொடுத்த தண்ணீர் செம்பினை அவளிடம் நீட்ட, அதை வாங்கி பருகிவிட்டு ஓரமாக செம்பினை வைத்தவன்,


"சத்தியமா நான் இதை எதிர்பார்க்கல மேடம். நான் சாதனா மேடம்னதும், வயசான ஒருதங்க தான் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா இந்த சின்ன வயசில...." என மீதியை கூறமுடியாது அவன் தடுமாற,


உதட்டில் அரும்பிய புன்னகையினை மறையாது சிறிதாய் உதடு பிரித்தாள்.


புன்னகைக்கும் மொழி உண்டு என்பதை போலியற்ற அந்த இதமான புன்னகையில் உணர்ந்து கொண்ட நிமலன் விழிகள் ஏனோ அவள் உதட்டோடே ஒட்டிக்கொண்டது.

"நானும் உங்ககூட உக்காந்து பேசலாமா...?"


"என்ன மேடம் இப்பிடி கேட்டுட்டிங்க..? ப்ளீஸ்....." முத்திக்கொண்டாள் பூவிகா.


ம்ம்... என இதழ் பிரித்து புன்னகைத்தவள், இதுவரை தரையில் அமர்ந்தே பழக்கமில்லாதவளாட்டம், ஒற்றை காலினை நீட்டிய வாங்கில், மறுகாலினை மடிச்சு சுவற்றோடு முதுகினை உரசியவாறே அமர்ந்ததும், நிம்மதி பெருமூச்சு ஒன்றினை வெளியேற்றிவிட்டு, மீண்டும் அதே புன்னகையினை உதிர்த்தவள்,


"கால நீட்டியே இருக்கிறதனால மரியாதை குறைவுன்னு தப்பா எடுத்துக்காதிங்க. இதுவரைக்கும் உங்கள மாதிரி தரையில உக்காந்து பார்க்கல. அது முடியாதுன்னு தெரிஞ்சும் ஏன் ரிஸ்க் எடுப்பான்...." என்றவள்,


"என்ன கேட்டிங்க மிஸ்டர் ............" என பெயர் தெரியாது தடுமாற,


"நிமலன் மேம்.... இவ பூவிகா.... நாங்க தமிழ் ஊற்று யூடியூப் சேனல்ல இருந்து வரோம். உங்க அனுமதியோட உங்கள பேட்டி காணலாமா...?"


"கண்டிப்பா நிமலன்." என்றாள் தடையோதும் கூறாது.


நடப்பது எதையுமே நம்பமுடியவில்லை நிமலனால். அவர்கள் கேள்விப்பட்டவற்றிலிருந்து எல்லாமே எதிர்மறையாக இருக்கும் போது எப்படி நம்புவது.


"ஒரு நிமிஷம் மேடம். என கொண்டுவந்த கேமெராவை எல்லாம் ஆன் செய்து, சற்று தூரத்தில் மூவரும் தெரிவதைப்போல் ஆங்காங்கே பொருத்திவிட்டு, முன்னைய இடத்தில் வந்து அமர்ந்தவன்...


"எங்க சேனல் நிர்வாகி உங்களை பேட்டி எடுக்க சாென்னதும்.... உங்களைபத்தி தேடினேன். பட் எந்த தகவலும் கிடைக்கல..... எங்க சேனல் எம்டியுமே அதை தான் சொன்னாரு.


இது வரைக்கும் நீங்க எந்த பத்திரிகைக்கோ, தொலைக்காட்சிக்கோ பேட்டி குடுத்ததில்லையாமே.... அப்பிடி இருக்கிறப்போ, எப்பிடி மேடம் நாங்க கேட்டதும் ஒத்துக்கிட்டிங்க? அப்பிடின்னா அவங்க சொன்னது உண்மையில்லையா...?" என்றான் தன் தொழிலுக்கு மரியாதை கொடுத்து பேட்டி காணும் பாணியில்.


இடம் வலமென தலையினை அசைத்தவள்...

"உண்மை தான். எனக்கு இந்த இலவச விளம்பரம் எல்லாம் தேவையில்ல... அதோட அதெல்லாம் எனக்கு பிடிக்காது. அதனால மீடியாவை கண்டாலே தூர நின்னுடுவேன்." என்றாள் அலட்டிக்கொள்ளாது.



"அப்பிடின்னா எங்கள மட்டும் ஏன் அனுமதிச்சிங்க மேடம். எங்களையுமே திருப்பி அனுப்பி வைச்சிருக்கலாமே!"


"ம்ம் கண்டப்பா.... உங்களோட ஆசையும் அது தான்னா அதை ஏன் கெடுப்பான்...?"


"ஐய்யைய்யோ மேடம்.... நான் சும்மா காரணம் தெரிஞ்சுக்கலாம்னு........" என்றவனுக்கு எங்கே தன் அதிகபிரசிங்கி தனத்தினால் யாருக்கும் கிடைக்காத நல்ல வாய்ப்பை கெடுத்துக்கொண்டோமோ என பதற,


அவன் பதட்டத்தை கண்டு மெலிதாக புன்னகைத்தவள்,


"நானும் சும்மா விளையாடினேன். என்னை பத்தி இவ்வளவு தெரிஞ்சும், எத்தனையோ ஊர் தாண்டி, ஏதோ ஒரு நம்பிக்கையில வந்திருக்கிற உங்களோட நம்பிக்கையை பொய்யாக்க முடியுமா..? என்னோட மறுப்பு உங்க நம்பிக்கையோட சறுக்கலா இருக்க கூடாது.


அதுவுமில்லாம எல்லாதுக்கும் ஒரு காலம் நேரம் என்று ஒன்று இருக்கும்ல.... என்னையும் இந்த உலகம் தெரிஞ்சுக்க இது தான் காலம்ன்னா யாரால மாத்த முடியும்..?


ஆரவாரமற்ற நிதானமானதும், நிதர்சனமான பதிலுமே இருவருக்குள்ளும் ஓர் அமைதியை உண்டாக்கியது. இந்த வயதில் இப்படி ஒரு தெளிவு. காரணமே அற்று அவள்மீது மதிப்பு உண்டானது.



"ஓகே மேடம். நீங்க சொல்லுற மாதிரி உங்களுக்கான காலம் இது என்று எடுத்துப்போம். முதல் முதலா உங்களை எல்லாருக்கும் தெரியப்படுத்திறதில தமிழ் ஊற்றுக்குத்தான் பெருமை.


ஆனா.... இப்போ என்னோட கேள்வி எல்லாம், இந்த வயசில உங்களால எப்பிடி இந்த தொண்டுகள் எல்லாம் செய்ய முடியுது...?"


"இதுக்கெல்லாம் வயசு இருக்கணும்ன்னு அவசியம் இல்லையே.... மனசில கொஞ்சமா இரக்க குணம் இருந்தா போதும். இதெல்லாம் சாத்தியமாகும்."


"ஆனா எப்பிடி..... இதுக்கெல்லாம் பொறுமை ரொம்ப அவசியம், அது முதிர்ச்சியினா மட்டும் தான் சாத்தியமாகும். இளம் பருவத்தில இருக்கிற உங்களால எப்பிடி இது சாத்தியமாகுது..... மனசு அலை பாயாதா...?"


"நல்ல கேள்வி நிமலன். என்னை தெரிஞ்ச நிறையப்பேரோட கேள்வி இது... இதுவரைக்கும் என்னோட பதில் புன்னகை ஒன்றாத்தான் இருந்திட்டிருந்திச்சு.
இப்போ அதுக்கான விளக்கத்தை சொல்லியே ஆகணும்.


எண்ணம் தான் மனசு. என் எண்ணம் என்னை மீறி எங்கேயும் போகாது. அப்புறம் சில விஷயங்கள் முதிர்சியினால கூட சாத்தியமாகாது.... மறுக்க முடியாத சில அனுபவங்களினாலயும் சாத்தியமாகும் நிமலன்.


எத்தனையோ குழந்தைங்க கண்ணு முன்னாடி பெத்தவங்களை இழந்து, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுட்டிருக்காங்க... இதை எல்லாம் பார்த்திட்டு என்னால இருக்க முடியல... அதுவும் பெண் குழந்தைங்க, பாலினம் பாராம பிச்சை எடுக்கிறப்போ, அதை குடுக்கிறவன் பார்வை இருக்கே........

வார்த்தையால கூட வர்ணிக்க முடியாத அளவுக்கு கேவலமா இருக்கும்.


அதான் என்னால எதை குடுக்க முடியுமோ அதை குறையில்லாம குடுத்திட்டிருக்கேன்." எனறாள்.


"உதவி செய்யணும்ன்னு நினைச்சா, அந்த குழந்தைங்கள நல்ல ஒரு ஆசரமத்தில நீங்க சேர்த்து விட்டு... அதுங்க செலவுகளை ஏற்க வேண்டியது தானே... அது என்ன நீங்களே ஒரு ஆசரமம் அமைக்கிறது...? என்றான் வரும்போது தான் நினைத்தது தான் உண்மை என உறுதி செய்து கொள்ளும் விதமாய்.



"ஒரு அம்மா தன் குழந்தையை பார்த்துக்கிறதுக்கும், பக்கத்து வீட்டுக்காரங்க அந்த குழந்தைய பார்த்துக்கிறதுக்கும் உள்ள வித்தியாசம் நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

என்ன தான் பண உதவி செய்தாலும், வேறு ஒரு இடத்தில குழந்தை நல்ல விதமா வளருதா, அதோட தேவைகள் தீர்க்கப்படுதா? என்கிறதை கூடவே இருந்து என்னால பார்க்க முடியாதுல்ல.... அவங்க என்ன சொல்லுறாங்களோ, அதை தான் என்னால நம்ப முடியும்.
அதுக்கு உதாரணமா ஒண்ணில்ல மூணு குழந்தைங்க இருக்காங்க.


நீங்க சொன்னது போல.. மூணு குழந்தைங்கள ஒரு ஆசரமத்தில சேர்த்தேன். கிட்டத்தட்டு மூணு வருஷம் அவங்க செலவுக்கான பண உதவியும் பண்ணிட்டிருந்தேன்.

அவங்களும் குழந்தைங்களுக்கு எல்லாம் பண்ணிட்டிருக்கோம்ன்னு தான் சொன்னாங்க. நானும் அதை முழுசா நம்பிட்டு விட்டுட்டேன். எனக்கிருந்த பிஸியினால அவங்க போய் பார்க்க கூட முடியல...


அன்னைக்கு ஒரு பெருநாள்ன்னு கோவிலுக்கு போனேன். அங்க நான் உதவி பண்ணிட்டிருக்கிறேன்னு நம்பிட்டிருந்த அந்த பெண்குழந்தை பார்வையை இழந்திட்டு, பிச்சை எடுத்திட்டிருந்தா. எனக்கு அதிர்ச்சியா இருந்தாலும், அந்த இடத்தில அதை வெளிக்காட்டாம... குழந்தையை தனியா அழைச்சிட்டு போய் விசாரிச்சப்போ தான் அதிர்ச்சி காத்திட்டிருந்திச்சு.


அது ஒரு காப்பகமே இல்லை. காப்பகம் என்கிற பெயரில நடந்திட்டிருக்கிற மோசடி. ஆதரவற்ற குழந்தைங்க உடல் உறுப்புக்களை திருடிட்டிருக்காங்கன்னு...


அவங்கள போலீஸ்ல புடிச்சுக்குடுத்தாலும், நான் கொண்டு போய் சேர்த்த மீதி ரெண்டு குழந்தைங்களும் என்னானங்கன்னே தெரியல.... அது என்னை உறுத்திட்டே இருந்திச்சு. அதான் மத்தவங்கள எதுக்கு நம்பணும், நானே ஒரு ஆசரமம் ஆரம்பிச்சிடலாம்னு ஆரம்பிச்சேன்." என்றாள்.


"ஓ...." என்றவன்,

"நம்ம நாட்டில இந்த மாதிரி ஆதரவற்ற குழந்தைங்க அதிகமா இருக்கத்தான் செய்றாங்க. எல்லாருமே அதை கண்டும் காணதமாதிரி கடந்திட்டு போறப்போ, உங்களுக்கு மட்டும் ஏன் இந்த அக்கறை? இதனால உங்களுக்கு என்ன லாபம்...?"


"இருக்கே ரொம்பவே பெரிய லாபம் இருக்கே." என்றவளை நோக்கி உதட்டு வளைவில் புன்னகைத்தவனுக்கு, தன் எண்ணம் பொய்க்கவில்லை என்ற கர்வம் தோன்றி மறைவதற்குள்,


"ஆத்ம திருப்தி" என்றாள்.

சுத்தமாக புரியவில்ல நிமலனுக்கு. வலது புற புருவத்தை உயர்த்தியவன் செய்கையினை புரிந்து போக,


"ஓக்கே.... சுத்தி வளைச்செல்லாம் பேச வேண்டாம்.. நேர விஷயத்துக்கு வரேன்.


உங்க ரெண்டுபேருக்கும் அம்மா இருக்காங்களா..?"

சம்மந்தமற்ற கேள்வி தான். இருந்தும் இருவரும், ஆமென தலையசைக்க,


"ஆனா எனக்கு தாயும் இல்லை, தாய் நாடும் இல்லை." என்றாள் குரலில் அத்தனை வலியினை நிரப்பி.


"என்னது.... உங்க நாடு இது இல்லையா...? அப்போ உங்க நாடு தான் எது...? " என இருவரும் நம்பமுடியாது ஒரே சேர வினவினார்கள்.


ம்ம்.... என தலையசைத்தவள், மடிக்காது நீட்டியிருந்த வலது காலினை மூடியிருந்த புடவையினை முட்டிக்கால்வரை இழுத்து காண்பித்தாள்.


அதை பார்த்தவர்கள் இருவருமே விழிகளை விரித்து ஆர்ச்சரியம் காட்டினார்கள்.


இதையும் இருவரும் எதிர்பார்க்கவில்லை. அவள் நடக்கும் போது ஏதோ ஓர் மாற்றத்தை இருவருமே உணர்ந்தார்கள் தான். புடவை மறைவில் இருந்த பொய் கால் தான் காரணமாக இருக்குமென நினைக்கவில்லை.

இப்போதும் மாறாப்புன்னகையினை சிந்தியவள்.


"என்னடா இவ போலிக்கால் போட்டிட்டிருக்கேன்னு பார்க்கிறீங்களா...? நான் போலிக்கால் மட்டும் தான் போட்டுட்டிருக்கேன். ஆனா என்னோட லட்ஷம் உறவுகள் போலியான அங்கங்களை மாட்டிக்கிட்டதும் இல்லாம, போலி வாழ்க்கையை வாழ்ந்திட்டிருக்காங்க.


ஆமா என்னோட தாயாகம் இலங்கை.... என் உயிரை காப்பாத்திக்கிறதுக்காக சுயநலமா சிந்திச்சு, என்னோட அத்தனை உறவுகளையும் விட்டிட்டு தப்பிச்சு வந்தேறின இடம் தான் இந்தியா.
 

Sathish Ramasamy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 21, 2022
11
8
3
Coimbatore
அருமை சகோ‌.. இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை.. ஆனால் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
 
  • Like
Reactions: Balatharsha

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
அருமை சகோ‌.. இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை.. ஆனால் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
நன்றிடா