• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

03.Miss மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
தன் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கை என்றும் வீண் போகாது என்ற நம்பிக்கையில் அவள் இருந்தாலும் அவர் சொல்லும் விதிகளை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது தலை சுற்றியது ஆனால் அதை வெளிக்காட்ட வில்லை....

அவள் யோசிப்பதை உணர்ந்தவராய் "அவசரத்துலே முடிவு எடுக்காதடா நிதானமா தனிமையிலே யோசி உனக்கு ஒரு‌ தெளிவு பிறக்கும்…" என்றவரிடம் சரி என்று விடைப்பெற்று நடையிலே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்....

சம்யுக்தா வா சாப்பிடலாம் என்றவளை அழைத்த கனகாவிடம் "அம்மா எனக்கு எதுவும் வேணாம் நீங்க சாப்பிடுங்க…" என்றவள் தன்னறைக்குள் சென்று குறுக்கும் நெடுக்கும் யோசித்தவாற நடந்தாள்.


"இப்போ வேலை வேணும்னா திடீர்ன்னு எப்பிடி வேலைக்கு போறது அதுவும் இல்லாம இப்போ நான் சுயநலமா கம்பெனி ஆரம்பிக்கிறதுகாக மட்டும் யோசிக்க முடியாது அக்காவோட கல்யாணத்துக்கும் பணம் வேணும் அதையும் அம்மா என்ன நம்பி சொல்றாங்கன்னா கண்டிப்பா என் மூலமா ஏதாவது பண்ண முடியுமான்னு தான் கேக்குறாங்க போல இப்போ எப்பிடி இதை எல்லாம் சமாளிக்கிறது…" என்று தீவிரமாக யோசித்தாள் அப்போது அவள் கண்ணில் பட்டது மேசையில் இருக்கும் அந்த லெட்டர் அதை எடுத்து பிரித்து பார்க்க அது புரியாத புதிராக இருந்தது அவள் எண்ணங்களுடனே உறங்கியும் போனாள்.

அகி... அகி... என்று தூங்கி கொண்டிருந்தவனின் அறைக்கு வந்து அவனை எழுப்பினான் யுவா.

"அட என்ன கொடுமைடா இவனாலே ஒவ்வொரு நாளும் என்னோட தூக்கமே போகுது இவன் ஒரு பொண்ணை காதலிச்சிட்டு மனுஷனே போட்டு படுத்துறான்‌…" என்று அழுத்துக்கொண்டு இப்போ "என்னடா உனக்கு வேணும்…" என்று அழாத குறையாக கேட்டான் அகிலன்....

"விகி எனக்கு அவன் யாருன்னு தெரியனும்டா அதை நெனச்சி டென்ஸனாவே இருக்குடா?..."

"அப்போ நினைக்காத சிம்பிள் எப்பவும் அவளோட போட்டோவே பார்த்தப்படி கனவு கண்டுகிட்டு தூங்குவலே அதே மாதிரி தூங்கு காலையிலே ப்ரெஸ்ஸா எழும்புவே...." என்று திரும்பவும் போர்வை இழுத்துப் போட்டு தூங்க...

ஆனா அகி.... என்று மறுபடியும் இழுக்க....

"என்னடா பொஸசிவ்னஸ்ஸா? ஒரு வேலை பண்ணவா கூகிள் இருக்குல்லே அதுலே சேர்ச் பண்ணி பார்க்கவா அவன் யாரு என்ன என்கிற டீடைல்ஸே…" என்றான் சற்று நக்கலாக....

"மவனே நான் சீரியசாக கேக்குறேன் நீ விளையாடுறீயா? இப்போ புரியாது என் வலி உனக்கு எவளாவது மாட்டுவாள் அப்போ இது மாதிரி நடக்கும்லே அப்போ பார்த்துக்கிறேன்டி…" என கிட்ட தட்ட சாபம் இட்டவனாய் தன்
அறைக்கு சென்று
புகுந்துக் கொண்டான் அங்கு எப்போதும் போல் அவளது போட்டோவை எடுத்து பார்த்து அதை அணைத்தவாறே உறங்கினான் யுவேந்திரன் அவனது காதல் சொல்லப்படாத ரகசிமாய்
அவனுள் புதைந்திருக்க அவனின் வலிகளோ சந்தோஷங்களோ அந்த புகைபடம் மூலம் தீர்க்கப்பட்டு கொண்டது....


தடைகள் எதுவும் இல்லாமல் காலை விடியலை அழகாக்கி கொண்டிருந்தான் சூரியன்.

காலையில் எழுந்தவள் நார்மலாக சிவப்பு நிற டாப் அணிந்து அதற்கு மேச்சாக பிளெக் கலரில் லெகின் அணிந்து துப்பட்டாவை ஒரு பக்க தோளில் சுமந்தவாரு ப்ரீ ஹெர் ஸ்டைலில் கூந்தலை விரித்து விட்டு சிறு பையுடன் ஒரு கையில் சர்ட்டிபிகேட் அடங்கிய ஃபைல்யை தூக்கி கொண்டு வெளியே வந்த பேரழகியை கேள்வியாக பார்த்தனர் இருவரும்...

"எங்க கிளம்பிட்டே பைலும் கையுமா…" என்று அவளை புரியாமல் பார்த்த மோனிகாவிடம்.

"வேலைக்கு தான் பின்னே எங்க போவாங்கே... ஆமாக்கா நீ போகலே…"

"நான் இப்போ போக தான் போறேன் ஆனா நீ ஏதோ கம்பெனி பிஸினஸ் அப்பிடி ஏதோ முடிவுலே இருக்கன்னு சொன்னதா கேள்வி பட்டேன் அப்போ அது எல்லாம் சும்மா வீண் வார்த்தையா?.."

"ஹ்ம்ம்.... யார் சொன்னா அதுக்கான வேலையை ஆரம்பிக்க இது என்னோட முதல்படி அவளோ தான்...." என்றாள் மிடுக்காக,

"ஏன்டி அவ பாட்டுக்கு சும்மா கிடைச்ச வேலையை பார்த்திட்டு இருக்கலாம்ன்னு முடிவு பண்ணி போறான்னா நீ எல்லாத்தையும் சொல்லி திரும்ப ஞாபகப்படுத்தி வேதாளம் முருங்க மரம் ஏறின கதையா அவ திரும்பவும் மாறிட்டா சும்மா இருக்க மாட்டியா?..." என்றார் கோபத்தோடு கனகா.

"இங்க யாரும் முருங்க மரம் ஏறலே இது எல்லாம் கொஞ்ச
நாளைக்கு தான்
வீணா ஏதேதோ போட்டு
யோசிச்சுகிட்டு இருக்க வேணாம் நான் கிளம்புறேன்…" என்றவளை அழைத்து கொண்டு சென்றான் ரிஷி அவனுடையே ஆபிஸ் போகும் வழியிலே அமைந்திருந்தது அந்த கம்பெனி...

அவள் வந்து இறங்கியதும் Vs. A Motors என பொறிக்கப்பட்டிருந்த கம்பெனி பெயர் பலகையை வாசித்தவாற ரிஷியிடம் விடைப்பெற்றுக் கொண்டு கம்பெனிக்குள் அடி எடுத்து வைத்து சென்றாள்.....

ரிசெப்சனிஸ்ட் இடம் CEO பார்க்க வேண்டும் என்று அப்பாயின்மென்ட் லெட்டரை காட்டி தான் வந்த நோக்கத்தையும் சொல்ல அவளும் அந்த லெட்டரை பார்த்தது சார் உள்ள தான் இருக்காரு நீங்க போங்க என வழி சொன்னாள்.

அந்த கம்பனியின் கடைஷி தளத்திற்கு வந்தவள் எஸ் கியூஸ் மீ சார் மே ஐ கமின்.... என்று அனுமதி கேட்டு நின்றவளிற்கு கமின் என கம்பீரக் குரலில் அனுமதியும் கிடைத்தது.

உடனே உள்ளே சென்றவள் புன்னகையுடன் நிற்க ஒரு பைலில் தன் கையொப்பத்தை இட்டு நிமிர்ந்து யார்? என பார்த்தப்போ அவனது கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது...

சம்முயுக்தா..... என்று அவள் பெயரை உச்சரித்தவன் மறுநொடி தன்னை நிதானப்படுத்தி கொண்டு வாங்க உட்காருங்க… என்று அமர வைத்தவன் அவளையே பார்த்து இல்லை இல்லை ரசித்தான்.

"ஹலோ சார்... எனக்கு இந்த கம்பெனியிலே இருந்து அபாய்மென்ட் ஆடர் கிடைச்சது அதனாலே தான் இங்கே வேலைக்கு சேர வந்தேன்…" என்று அவள் கூற கேட்டு உள்ளுக்குள் பாட்டுப்போட்டு குத்தாட்டமே ஆடினான் இருந்தும் வெளியில் முகத்தை கடுமை போல் வைத்துக் கொண்டே பேசினான்....

"ஆஹ் யாஹ் சம்யுக்தா.... குட் எனிவே நீங்க வொர்க் பண்ணுறத்துக்கு இங்க எந்த ப்ராப்ளமும் வராது டோன்ட்வெரி அப்பறம் சின்ன பார்மலிட்டிஸுக்காக அக்ரிமென்ட் போட்டுடலாம் என்ன
ஓகே தானே...."

"சார் அதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு அதை க்ளியேர் பண்ணுறீங்களா?..."

"அய்யோ என்னத்த கேட்க போறாளோக்.." என்று மனதிற்குள் பயந்தாலும் வெளியே கூலாக சொல்லுங்க என்றான்....

"சார் நான் என்னோட படிப்பு டிகிரி எல்லாம் முடிச்சாலும் நான் எந்த வேலை தேடவும் இல்லை அப்ளே பண்ணவும் இல்லை அப்போ நீங்க எப்பிடி சரியா என்னோட வீட்டு அட்ரஸுக்கே அபாய்மென்ட் லெடர் அனுப்பி வெச்சிங்க…" என்று தன் மனதிற்குள் உருத்திக் கொண்டிருந்த அந்த கேள்வியை அவனிடமே கேட்டு வைத்தாள்...

"அப்பறம் நான் படிச்சது MBA ஆனா அதோட நான் எக்ஸ்டரா மெக்கனிக்கல் டெக்னலொஜி படிச்சது யாருக்குமே தெரியாது அப்பிடி இருக்கிறப்போ எப்பிடி கரெக்ட்டா அதை மட்டும் வெச்சு எனக்கு வேலை கொடுக்க டிசைட் பண்ணீங்க...."

"அடுத்து என்னோட பேர்... நான் யாருன்னு மொதல்லயே உங்களுக்கு தெரியுமா?..." என்ற கேள்விகளை முன்னிட்டதும் புன்னகையுடனே "நான் யாருன்னு உனக்கு ஞாபகமே இல்லையா?..."என்று தீர்க்கமான பார்வையோடு கேட்டவனை பார்த்து "ஒரு வேளை நமக்கு நன்கு தெரிந்து நாம மறந்து விட்டோமா... இப்போ அவன் முன்னாடி நாகரிகம் இல்லாம உன்னை எனக்கு தெரியாதுன்னு எப்பிடி சொல்றது…"
திரு திரு வென விழித்தாள்.

அது... வந்து... அவள் தடமாறுவதை நினைத்து "ரொம்ப சிரமபடாத சம்யுக்தா நீ படிச்ச அதே யுனிவர்சிட்டிலே உனக்கு நான் சீனியர் அது டூயியர்ஸ் முன்னாடி…"

"ஓஹ் ஐயெம் சோ சாரி எனக்கு…"

"உனக்கு பசங்கன்னாலே பிடிக்காது யார் கிட்டயும் அவ்வளவா பழக மாட்டன்னு தெரியும் உன்னோட ப்ரென்ட் லில்லியே தவிர யார்கிட்டயும் பேசவே மாட்டே அதோட நீ படிச்சது எல்லாம் தெரியும் உன்னோட டேலென்ட்டும் எனக்கு நல்லாவே தெரியும் அதனாலே தான் உன்னை என்னோட கம்பெனியிலே வேலைக்கு வர ஏற்ப்பாடு பண்ணினது…"

"ஓஹோ அப்பிடியா? ஆனா சார் நான் இங்க நிதந்தரமா வொர்க் பண்ண விரும்பலே எனக்கு இங்க தெம்பரிரீயா தான் வேலை வேணும்…" என்றதும் அவன் புருவம் சுருக்கி கேள்வியாய் பார்க்க...

"இங்க ஒரு ஆறு மாசம் இங்க வொர்க் பண்ணுவேன் அப்பறம் நான் வர மாட்டேன் சார் இந்த முடிவு உங்களுக்கு ஓகேன்னா நான் இங்க வொர்க் பண்ணுறேன்...."

"ஏன்? ஆறு மாசத்துக்கு அப்பறம் என்ன பண்ண ஐடியா?..." ஏதோ உரிமையோடு அவளிடம் கேட்டு விட்டான்.

"அதுவா சார் அதுக்கு பிறகு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு புருஷனோட செட்டில் ஆகிடலாம்ன்னு இருக்கேன்…" என கேலியாக பொய் உரைத்தாள் அவனிடம்.

"ஓஹ் நம்ம ஆளு இந்த திட்டத்தோட இருக்காளா?.." என்று சந்தோசப்பட்டவன் அதோடு அன்று அவளோடு நின்ற ரிஷியை நினைத்து பார்த்து அவனாயிருக்குமோ... என்ற யோசனையும் எழுந்தது.

"என்னாச்சு சார் எனி ப்ராப்ளம்…"

"ஆஹ் நோ ஐயம் ஓகே.." என்றவன் அகிலனை போன்னில் அழைத்தான்...

அவனோ மற்றவர்கள் முன்னாடி யுவாவை மரியாதையாக பேசுவான் தனியாக இருக்கும் போது மட்டும் வாடா போடா என அழைப்பான் அதே நினைவில் அவனறைக்கு தனியாக இருப்பான் என்ற எண்ணத்தில் சொல்லுடா என்று அறைக்குள் வர அவனையும் யுவாவையும் மாறி மாறி பார்த்தவளை கண்ட யுவா வாய் திறந்து இவன் தன் நண்பன் என்று அறிமுகப்படுத்த முன்னே.... "ஹாய் விகிண்ணா எப்பிடியிருக்கீங்க.." என்று பேச வாய்யடைத்தது யுவா தான்.

"ஹாய் தங்கச்சி நான் நல்லாயிருக்கேன்மா நீ எப்பிடி இருக்கே அப்பறம் அவங்க…" என்று மறைமுகமாக கேட்டு சிரிக்க.

சூப்பராயிருக்கோம் என்றாள் புன்னகையோடு....

"டேய் விகி சம்யுக்தாவை உனக்கு தெரியுமா?.."

"என்னடா மச்சி இவளே எனக்கு தெரியும்ங்கிறது உனக்கும் தெரியும் தானே....."

"டேய் தெரியும்ன்னா நல்ல பழக்கமான்னு கேட்டேன் பழகின மாதிரி பேசிக்கிறீங்க…"

"ஆஹ் நல்லாவே தெரியுமே ஏன் விகிண்ணா நீங்க இவர்கிட்ட சொல்லயில்லையா?.."

"அது வந்து தங்கச்சி நான் ஏதும் சொல்லயில்லை அதான் இனி தெரிஞ்சிடுச்சே சரி அதை விடு ஆமா இங்க என்ன பண்ணுற…"

"அது வேலைக்கு வந்தேன் அண்ணா இப்போ தான் எல்லாம் பேசி முடிச்சோம்…" என்றதும் "அய்யோ இன்னையிலே இருந்து இவனோட ஆட்டம் தொடங்கிடுமே.." என்றாலும் மனதிற்குள் சந்தோசமும் எழுந்தது அவனிற்கு...


"சரி சரி supervisor போஸ்டிங் காலியா தானே இருக்கு அந்த ரூம்முக்கு கூட்டிட்டு போய் எல்லா ஏற்ப்பாடு பண்ணிக் கொடு அப்பறம் வொர்க் ஏரியா எல்லாத்தையும் கொஞ்சம் காட்டி அவங்க வேலை எல்லாம் என்ன என்னன்னு சொல்லி கொடு…" என்று கம்பெனி CEOவாக பொறுப்பாக சொல்ல தலையாட்டிவிட்டு அவளை கூட்டிச் சென்று அவன் சொன்ன வேலைகளை முறைப்படி செய்தான் அகிலன்.

"நாரப்பயலே என்கிட்ட சொல்லாம ஏதோ மறைக்கிறான் இவன் முன்னாடியே சம்யுக்தாவே சந்திச்சு பேசினது எதுவுமே எனக்கு தெரியலே அதோட ஏதோ மர்மமா பேசிக்கிறாங்க என்ன தான் நடக்குது…" என்று குழம்பி
தவித்தான் யுவா.


"எது நடந்தாலும் அதை
நிகழ்காலத்தில் சந்திப்பது தான்
நல்லது..."
 
Top