நீலாங்கரை..
ஆனந்தன் தன் அறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்! வழக்கமாக அவர் அப்படி ஓர் இடத்தில் அமர்கிறவர் கிடையாது! எப்போதும் அவர் சிந்தனை முழுவதுமாக தன் தொழிலை மேம்படுத்துவதில் தான் இருக்கும்! அடுத்து புதிதாக என்ன செய்யலாம்? எந்த தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம்? இப்படியாகத்தான் இருக்கும்!
ஆனால் இன்றைக்கு மகன் பேசிய பேச்சு அவருக்கு தன் இளமைக்காலத்தை நினைவு படுத்திவிட்டது! எப்போதும் பின்னால் திரும்பிப் பார்க்கிற வழக்கம் அவருக்கு கிடையாது! அப்படிப் பார்த்தாலும் தான் செய்ததுதான் சரி என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்! ஆனால் இன்றைக்கு அப்படி நினைக்க முடியவில்லை!
அன்று தான் இருந்த நிலையில் தன் மகனும் இருக்கிறானோ என்று சந்தேகம் உண்டானது! அன்று அவரது பிடிவாதத்தால் நேர்ந்த சம்பவங்களை, இன்று நினைக்கும்போது குற்றவுணர்வு உண்டாயிற்று!
🩷🩷🩷
சென்னை
புறநகர் பகுதியில் தான் ஆரம்ப காலத்தில் தன் வாழ்க்கையை தொடங்கினார் நாதன்! கிராமத்து மனிதரான நாதன், விசாலாட்சியை காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது உறவுகள் யாரும் போக்குவரத்து வைத்துக் கொள்ளவில்லை!
நாதனுக்கு, திருமணமான புதிதில், கட்டிடம் கட்டுவதில் தான் ஆர்வம் அதிகமாக இருந்தது! ஆகவே அவர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்! படிப்படியாக தன் உண்மையான உழைப்பால் சில வருடங்களில் தொழிலை அட்சர சுத்தமாக பயின்று கொண்டார்!
அதன் பிறகு, சிறிய அளவில், "ஆனந்தன் கன்ஸ்ட்ரக்ஷன்" என்ற கட்டுமான நிறுவனத்தை தொடங்கி, தனது கடின உழைப்பால் முன்னேறி, வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார்! ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் சொந்தமாக இரண்டு அறைகள் கொண்ட வீடு,கார் என்று சற்று வசதிகளை பெருக்கினார்! ஆனந்தனை இஞ்சினியரிங் படிப்பு படிக்க வைத்தார்! கல்லூரி படிப்பு முடித்ததும், மேற்படிப்புக்கு என்று வடக்கே அனுப்பி வைத்தார்! நாதனின் இடைவிடாத உழைப்பு, நேரத்திற்கு உண்ணாமல், உறங்காமல், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஒருநாள் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு காலமாகிவிட, ஆனந்தன், படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்து நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்!
ஆனந்தனுக்கு தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஒரே உறவு அவனது தாய் விசாலாட்சி மட்டும் தான்! அந்த அம்மாளுக்கு காதல் திருமணம் செய்து அவர் பட்ட கஷ்டத்தை மகனும் படக்கூடாது என்று எண்ணினார்! காதல் திருமணத்தால் பட்ட கஷ்டங்களின் விளைவாக மகனுக்கு, முறையாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம்! அதிலும் பெரிய இடத்தில் பெண் கட்ட வேண்டும் என்றும் ஆசை! ஏன் லட்சியம் என்றே சொல்லலாம்!
இப்போது விசாலாட்சி, பக்கத்து சொந்தங்கள் எப்போதேனும் வந்து போய்க் கொண்டிருந்தனர்! அவர்களில் மிகுந்த செல்வந்தரான ஒருவரது மகளைத் தன் மகனுக்கு பேசி முடிக்க நினைத்திருந்தார்! ஏற்கனவே அரசல்புரசலாக, தெரிந்தவர்கள் காதில் விஷயத்தை அந்தம்மாள் போட்டு வைத்திருந்தார்! ஆனால்.. பெண்ணின் தந்தை பிடி கொடுக்கவில்லை! காரணம் அப்போது தான் ஆனந்தன் பொறுப்பேற்றிருந்தான்!
ஆனந்தன் நிறுவனத்தை பொறுப்பெடுத்த பின்னர், HAPPY HOME CONSTRUCTION என்று நிறுவனத்தின் பெயரை மாற்றினான்! புது புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றான்! சில ஆண்டுகள் கடந்த நிலையில் மகனுக்கு திருமணம் செய்வது பற்றி விசாலாட்சி பேச, இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டான்! தந்தையின் நிறுவனத்தை முன்னேற்றி, அதை அடுத்த மாவட்டங்களிலும் காலூன்றும் மும்முரத்தில் இருந்தான்!
ஆனந்தனின் வளர்ச்சியைக் கண்டு,அறிந்தவர்,தெரிந்தவர், எல்லாம் பெண் தர நான், நீ என்று படை எடுத்தனர்! ஆனால் அவன் தான் பிடி கொடுக்கவில்லை!
இந்நிலையில் செங்கல்பட்டில் ஆனந்தனுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்டும் வாய்ப்பு கிடைத்தது! அங்கேயே பாதி நாட்கள் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தான்!
ஒருநாள் அந்தி சாய்ந்துவிட்ட பிறகு, கட்டுமானப் பணி இடத்திற்கு வந்து அன்றைய வேலையைப் பற்றி மேஸ்திரியிடம் கேட்டுக் கொண்டே வந்த ஆனந்தன்,கவனியாமல்,நடந்ததில்,சரளைக் கல்லில் கால் இடறிவிட்டது! காலில் சின்னதாக அடிபட்டு, ரத்தம் கசிய ஆரம்பிக்கவும், மேஸ்திரி
பதறிப்போனவராக,"ஐயா,
பக்கத்துல புதுசா ஒரு கிளினிக் இருக்கு! வாங்க முதல்ல அங்கே போய் காயத்துக்கு மருந்து போட்டுடலாம்!" என்றார்!
அவர்களது கட்டுமான இடத்திற்கு அருகில் தான் இருந்தது அந்த, சின்ன கிளினிக்! அவர்கள் சென்றபோது, அப்போது தான் ஒரு அழகான இளம் பெண், மருத்துவரின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்!
சற்று நேரம் கழித்து, உதவிக்காக இருந்த பெண், ஆனந்தனை உள்ளே அழைக்கவும், சென்றார்! அங்கே அந்த இளம் பெண் தான் மருத்துவர் என்று பிறகு தான் புரிந்தது!
முதல் பார்வையில் ஆனந்தனின் மனது அந்த பெண்ணிடம் சிக்கிக் கொண்டது!
அந்த இளம் பெண் மருத்துவரின் கனிவான பேச்சும், புன்னகையும், வலிக்காமல் ஊசி போட்ட விதமும் அவனை மேலும் கவர்ந்தது!
இருவரும் வெவ்வேறான துறைகளில் இருப்பவர்கள் என்பதால் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை!
மனதில் காதல் புகுந்துவிட்டால், அந்த பெண்ணின் முகவரி, அவளது அன்றாட நடைமுறைகள், அவளது பிறந்த நாள் முதற்கொண்டு கண்டு பிடித்துவிடும் வல்லமை பெற்றவர்கள் காதலர்கள்! இது இரு பாலருக்கும் பொருந்தும்!
ஆனந்தனுக்கு அந்த பெண்ணின் பெயர் சாருபாலா, என்று முதல் நாளே தெரிந்து விட்டதால், மற்ற விவரங்களையும் சேகரித்து விட்டான்! அவள் காலை முதல் மாலை வரை ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறாள் என்பதும்,மாலையில் அவளது கிளினிக்கில் பணியை தொடர்வதும் தெரிய வந்தது!
அவளது தந்தை பூபதி, சிறிய அளவில் டிப்பார்மெண்ட்டல் ஸ்டோர் நடத்திக் கொண்டிருக்கிறார்,சொந்தமாக, பூர்வீக வீடு, நாலு சக்கர வாகனம் என்று மத்தியதர குடும்பம் தான்! மனைவி இறந்து ஒரு சில ஆண்டுகள் ஆகியிருந்தது! சாருவுக்கு ஒரே ஒரு தம்பி, பெயர் சுரேந்திரன்! அவனும் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டான்! ஒருபுறம் அரசாங்க வேலை, இன்ன பிற வேலைகளுக்கு படித்துக் கொண்டும், விண்ணப்பித்துக் கொண்டுமிருந்தான்! மறுபுறம் பார்ட் டைமாக ஒரிடத்தில் வேலையும் செய்து கொண்டிருந்தான்! கிடைத்த தகவல்கள், ஆனந்தனுக்கு திருப்தியாக இருந்தது!
ஆனால்...
காதல் வந்துவிட்டால், அது கைகூடுமா, இல்லையா என்பதைப் பற்றி ஆரம்பத்தில் யாரும் சிந்திப்பதே இல்லை! இரு மனம் ஒன்றுபட்டால் தான் காதல்! அதே போல, இரு குடும்பமும் ஒன்றுபட்டால் தான் திருமணம். ஆனந்தன் சாருபாலாவை விரும்பினால் போதுமா??

Attachments
Last edited: