• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

04. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
வீட்டுப் பெரியவர்களின் மறைவு எதிர்பாராதது. அதிலும் தன் தம்பிக்கு நாத்தனாரை கட்டித் தரக் கேட்ட பிறகு இப்படி ஆனதில் வசந்தி மிகவும் கலங்கிப் போயிருந்தாள். அது பற்றி ஒரு சிலரிடம் பேசியதில், மேலும் குழம்பிப் போயிருந்தாள், அவளால் தீர்மானமாக ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.

அந்த சமயத்தில்...

வசந்திக்கு, சத்யாவின் படிப்பு பற்றிய அக்கறையும் இருந்ததால் அவளை பெங்களூர் கல்லூரியில் சேர்க்க எண்ணி அதற்கான வேலையில் மும்முரமாக இருந்தாள். நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் எங்கேயும் அவளுக்கு இடம் கிடைக்கும் என்பதால் தரமான கல்லூரியை அவள் அணுகினாள்.

ஆனால்...

“எனக்கு பெங்களூரில் படிக்க இஷ்டமில்லை அண்ணி. நான் கோவை கல்லூரியில் சேர்ந்து படிக்கிறேன். அங்கேயே சேர்த்து விடுங்க” என்றாள் சத்யா.

“இங்கே, நல்ல கல்லூரிகள் இருக்கிறதே சத்யா, எதுக்காக அவவளவு தூரத்தில் போய் நீ படிக்கணும்? இங்கே என்றால் நீ எங்கள் பாதுகாப்பில் இருப்பாய். வீட்டுச் சாப்பாடு, போக்குவரத்துக்கு கார் என்று எல்லா வசதியும் இருக்கிறதே!” என்றாள் வசந்தி.

“நீங்க சொல்வது எல்லாம் சரிதான் அண்ணி. ஆனால், கோவையில் என்னோடு படித்தவர்கள் சேரப் போகிறார்கள். கல்லூரி படிப்பு முடியும் வரை தான் அவர்களோடு இருக்க முடியும், அதற்கு பிறகு யார் யார் எங்கே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அண்ணி, அது மட்டுமில்லை, இங்கே பாஷை வேற எனக்கு புரியாது. அத்தோடு இங்கே இருந்தால் எனக்கு அப்பா அம்மா ஞாபகம் வரும்” என்றதும் வசந்தி மேலே பேசவில்லை.

நாத்தனார் விருப்பம் போல் அவளை கோவை கல்லூரியில் கொண்டு சேர்த்தாள். விடுமுறைகளில் சத்யா வராவிட்டாலும் வசந்தி, கணவனுடனோ அல்லது தனியாகவோ சென்று பார்த்துவிட்டு வருவாள்.

சத்யா அப்படியே விடுமுறையில் வீட்டிற்கு வந்தாலும் முதலில் இருந்த துள்ளல் காணமல் போயிருந்தது. அருணவ்விடம் தான் அதிக நேரத்தை செலவழிப்பாள். கடைசி வருடம் பொங்கல்,தீபாவளிக்கு கூட வரவில்லை. தேர்வுகள் முடித்துக் கொண்டுதான் அண்ணன் வீட்டிற்கு வந்தாள். வந்ததும் வராததுமாய் அவளுக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதாக தெரிவித்தபோது வசந்தி அதிர்ந்து போனாள்.

“எனக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு”

“நீ வேலைக்கு போய் சம்பாதித்துக் கொண்டு வந்துதான் இங்கே உலை கொதிக்கணும்னு நிலை இல்லை. அதனால் வேலைக்கு எல்லாம் நீ போக வீண்டாம்” என்றாள் வசந்தி.

சத்யா தான் தீர்மானத்தில் திடமாய் இருந்தாள். தடுக்க வேண்டிய அண்ணன் சித்தார்த், “விடு வசு, அவளுக்கு வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். போகட்டுமே, வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறாள்? என்று ஊக்குவித்தது வதந்தியை ரொம்பவே வருத்தியது.

“அத்தான், சத்யாவிற்க்கு வேலைக்கு போய் சம்பாதிக்கணும், என்று என்ன தலை எழுத்து? அவளுக்கு

காலாகாலத்தில் ஒரு நல்ல பையனாக பார்த்து கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டா, அவளும் வாழ்க்கையில் செட்டிலாகிடுவாள்” என்று வசந்தி சொல்லிப் பார்த்தாள்.

கணவனோ,” கல்யாணத்திற்கு இப்போ என்ன அவசரம் வசு?படிப்பை இப்பத்தான் முடிச்சிருக்கிறாள். சின்னப் பெண் ஆசைப் படுகிறாள். உலகத்தை புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு தானே? கொஞ்சம் நாள் ஜாலியா இருக்கட்டும் விடு” என்று முடித்துவிட்டான்.

“சரி அத்தான். உங்க வழிக்கே வர்றேன். அவள் வேலைக்கு போகட்டும் ஆனால், அதை இங்கே இருந்து பார்க்கட்டுமே? இங்கே இல்லாத கம்பெனிகளா? சென்னைக்குப் போய் திரும்பவும் அவள் தனியாக ஹாஸ்டல்ல தானே தங்கியிருக்கணும்? ப்ளீஸ் அத்தான் கொஞ்சம் யோசிங்க “ என்று அவள் கணவன் மற்றும் நாத்தனாரிடம் கெஞ்சாத குறையாக எடுத்து சொன்னாள்.

ஆனால் இருவரும் அவளது பேசாசை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை...

பிறகு வேறு வழி இல்லாமல் வசந்தி மௌனமாகிவிட்டாள். ஆனால், சத்யாவிற்கு தேவையானதை எல்லாம் பார்த்து, பார்த்து செய்தாள். அவளைப் பொறுத்தவரை சத்யா எங்கேயும் கஷ்டப் படக்கூடாது. முன்பு அவள் விடுதியில் தங்கியிருந்தாள். இப்போது அது போல இருக்க வேண்டாம் என்று தனியாக வீடு பார்த்து, அதற்கு தேவையான பொருட்கள், சமையலுக்கு ஆள், போக வர இருசக்ர வாகனம் என்று அவளே சென்னைக்கு சென்று ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்தாள் வசந்தி.

ஆனாலும் சத்யாவின் ஒதுக்கத்தில் மாற்றமில்லை ஏன்?

☆☆☆

அன்றைக்கு. ..

நான்கு வருடங்களுக்கு முன்...

பெற்றோரின் இறுதிக்காரியம் நடந்த அன்று, வசந்தியின் அத்தை பேசியது சத்தியாவை ரொம்பவே பாதித்துவிட்டது. உறவுகள் எல்லாரும் சென்றபின் வீட்டினர் அவரவர் வேலையில் ஈடுபட்டிருக்க..

பெற்றோரின் நினைவில் உதித்த கண்ணீரை மறைக்க முடியாமல் தனி இடம் தேடி சத்யா, அந்த வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் இருந்த பெரிய அகன்ற மரத்தின் அடியில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர எண்ணி நெருங்கியவள்...

அங்கே பேச்சுக்குரல் கேட்டு ஒருகணம் திடுக்கிட்டு நின்றுவிட்டாள். சரி, அவர்கள் பேசட்டும் என்று நகரப் போனவளுக்கு அண்ணியின் பெயர் அவர்களின் பேச்சில் அடிபடவும் இதயம் படபடக்க..நின்று கேட்கலானாள் .

அந்த அத்தை கனகவல்லி தன் கணவரிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள், ”அதில்லைங்க,வசந்தி தலை எழுத்த பாருங்க, நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், முதலில் காதல் என்று அவளுக்கு பிடித்த மாரிதியாக கல்யாணம் பண்ணிக் கொண்டாள். சரி, ரொக்கம், நகைன்னு கேட்கலைன்னு நானும் விட்டுட்டேன். இப்போ, பாருங்க அந்த சின்னப் பெண் பொறுப்பு இவள் தலையில் விழுந்திருச்சு, இன்னும் படிக்க வைச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறது எல்லாமும் இவள் தானே பார்க்கணும், அத்தோட போகுதா விசயம்?”

“அந்தப் பொண்ணு வேற எங்கே போவாள், கனகா?” தங்கையை பார்த்துக்க வேண்டியது அண்ணன் பொறுப்புதானே? மாப்பிள்ளையும் நல்லா சம்பாதிக்கிறார். அப்புறம் என்ன? இதுல உனக்கு என்ன வருத்தம்?” கணவர் தர்மலிங்கம் கேட்டார்.

“அதில் எனக்கு வருத்தமில்லைங்க, அது அவ தலைவிதி. அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? என்னோட கவலை அது இல்லைங்க, அந்தக் குட்டி இங்கன இருந்தாக்க, நம்ப மருமகன் கண்ணுல அடிக்கடி படுவா, அப்புறம் நம்ம ஆசையில் மண்ணு விழுந்துடுமோன்னு எனக்கு ஒரே கலக்கமா இருக்கு”.

“ ம்ம்ம்...ஆமா, வெளிநாட்டுக்கு படிக்கப் போயிருக்கிறான். அங்கேயே வேலையும் கிடைச்சு இருக்கு. ஆனால், அவன் வர இன்னும் இரண்டு வருசம் ஆகுமே? அப்புறமென்ன கனகா? நீ வீணா கவலைப்படாதே, நம்ம அனு இப்போதான் பிளஸ் ஒன் படிச்சிட்டிருக்கா, எப்படியும் அவன் வர்றப்போ இவளுக்கும் 18 வயசு ஆயிடும், அப்போ பேசிக்கலாம்”

“ம்க்கும், இங்கேயே அந்தப் பொண்ணு இருந்தா, வசந்தி தம்பிக்கிட்ட பேசுறப்போ எல்லாம் அவளைப் பத்தி அடிக்கடி பேசி வச்சாள்னு வையுங்க. மருமகனுக்கு மனசுல சஞ்சலம் வராதா? நம்ம வசந்தி மனசுல கூட அந்த நினைப்பு இருந்துச்சின்னா? இத்தனை வருசமா நான் போட்ட திட்டமெல்லாம் கனவாகிடாதா?”

அதற்குமேல் அங்கே நின்றால் தன் விசும்பல் ஒலி அவர்களை எட்டிவிடும் என்ற பயத்தில் வேகமாய் விலகி நடந்தாள் சத்யபாரதி.

☆☆☆

தர்மலிங்கம் வசந்தியின் தாய் மாமா. அவரது அக்கா தேவிகா கணவரை ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்ட பின் அவளுக்கு வாழ்க்கையில் பற்றில்லாமல் போய்விட, தன்னைப் பேணாமல் நோயில் விழுந்தாள்.. அவளையும் பிள்ளைகளையும் தர்மலிங்கமும் கனகவல்லியும் தான் பார்த்துக் கொண்டனர்.

ஆனால்....

மனது பலவீனமாகிவிட்டால் உடலுக்கு வைத்தியம் செய்து என்ன பயன்? தேவிகா சிகிச்சை பலனின்றி இறந்து போனாள். ஒரே நெருங்கிய உறவான தர்மலிங்கத்தை குழந்தைகளுக்கும், அளவற்ற சொத்துகளுக்கும் கார்டியனாக நியமித்து விட்டிருந்தாள்.

கனகவல்லி அப்போதுதான் திருமணமாகி வந்த புதிது. அப்போது வசந்திக்கு பத்து வயது, கண்ணனுக்கு ஐந்து வயது. நாத்தனார் பிள்ளைகளை நல்லபடியாய் வளர்த்தாள். கனகவல்லிக்குப் பெண் பிறந்தபோது அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பாதி சொத்து வசந்திக்குப் போனாலும் மீதி அவளுடைய பெண் மூலம் போகாமல் தடுத்துவிடலாம் என்று அன்று தொடங்கிய கணக்கு, மகள் வளர வளர அந்தப் பக்கம் தொழிலும் வளர ரெட்டிப்பு சந்தோஷத்தில் இருந்தாள். இப்போது எங்கே அந்த கனவு கலைந்து விடுமோ என்று கனவல்லி பயந்து தான் கணவரிடம் புலம்பிக் கொண்டிருந்தாள், அதைத்தான் சத்யா கேட்க நேர்ந்தது.

அந்த சம்பவத்திற்கு பிறகு சத்யா எல்லாரையும் விட்டு விலகி இருக்க தொடஙகினாள்.

ஆனால் நினைப்பது எல்லாமே நடப்பது இல்லை தானே? ?
 

Attachments

  • IMG-20240724-WA0012.jpg
    IMG-20240724-WA0012.jpg
    49 KB · Views: 15

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அடிப்பாவி பொண்ணே... இதுக்கா ஒதுங்கி இருந்தா?
இவங்கெல்லாம் பேசுனா ஆச்சா?
அந்தக் கண்ணன் மனசுல இந்த சத்யா இருந்தா??
ஹ்ம்ம்.. பாப்போம்
 
  • Love
Reactions: Aieshak

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
அடக்கடவுளே இந்த பொண்ண என்ன பன்றது
 
  • Love
Reactions: Aieshak

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சத்யா எண்ணம் சரிதான் அண்ணியை வளர்த்தவர்களின் ஆசைக்கு அவளால இடைஞ்சல் வரக்கூடாதுன்னு ஒதுங்குறது சரியாதான் இருக்கு ஆனால் விதின்னு ஒன்னு இருக்கே 🤔🤔🤔🤔🤔பார்ப்போம் 😃😃😃😃😃
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சத்யா எண்ணம் சரிதான் அண்ணியை வளர்த்தவர்களின் ஆசைக்கு அவளால இடைஞ்சல் வரக்கூடாதுன்னு ஒதுங்குறது சரியாதான் இருக்கு ஆனால் விதின்னு ஒன்னு இருக்கே 🤔🤔🤔🤔🤔பார்ப்போம் 😃😃😃😃😃
😄😄
 

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அடிப்பாவி பொண்ணே... இதுக்கா ஒதுங்கி இருந்தா?
இவங்கெல்லாம் பேசுனா ஆச்சா?
அந்தக் கண்ணன் மனசுல இந்த சத்யா இருந்தா??
ஹ்ம்ம்.. பாப்போம்
அதுக்காகவும் தான்😄