• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

04. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை..

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
பாத்திமா அஸ்கா

அத்தியாயம்-4

"சித்தி யாரு" இரு புருவம் சுழிய, ஆள்காட்டி விரலை நெற்றி இடுக்கியில் தடவிய படி கேட்க, அமுதாவும் அகரனும் நீ என்ன கேட்டாலும் சொல்லிவிடப் போவதில்லையென, முட்டையை முழுங்கினாற் போல் நின்றிருந்தனர்.


"ப்ளடி ஹெல்! யாருன்னு கேட்டா சொல்ல தெரியாதா...?" காரை எட்டி உதைந்த வேகத்தில், அமுதாவின் பி.பீ ஏகத்துக்கும் ஏறி இறங்கியது.


ருத்ரமூர்த்தியின் மறு உருவமாய் நின்றிருந்தவனை அகரன் இன்று தான் பார்க்கிறான்.

பூவுக்குள் பூகம்பமா என்றிருந்தது அவனுக்கு,

மது வர்ஷனைக் கண்டு, மேலும் மிரண்டு போய் இருந்த அமுதாவை நெஞ்சோடு அணைத்தவன்.

"சார்.... !!!! நீங்க போங்க.... நான் பாத்துக்குறேன்.... அம்மு நீ வா நம்ம போலாம் " என்று நகரப் போகவும்,

"நீயே பாத்துகுவன்னா.. இப்படியே போயிடு அகரா.... நாளைக்கு ஆஃபிஸ் முன்னாடி வந்து நிக்காத....." அவன் என்ன சொல்ல வறுகிறான் என அகரனுக்கு புரிந்தாலும், சோறு போடும் வேலையை விட, தாயன்பை நட்பெனும் நற்பெயரால் புகட்டி, இன்று அவனே கதியென வந்திருப்பவளை, அவனிடம் விட்டு கொடுத்திடுவானா......?

"என்ன சார்! பணத்தை காட்டி மெரட்டுறிங்களா....?
அப்பிடின்னா அந்த வேலைய நீங்களே வைச்சுக்கங்க..
வா அம்மு! எனக்கு நீ மட்டும் போதும்
உன்னோட நட்புக்காக பட்டினி வேணும்னாலும் கெடக்குற....!!!!" மது வர்ஷன் இருக்கும் கோபத்துக்கு, அமுதாவின் வீட்டுக்கு வந்தால், நிச்சயம் ஷோபனாவை மலை ஏற்றி விடுவான்.


அடுத்த நொடி, அவள் அமுதாவின் மீதே சீறிப் பாய்வாள். இப்படி அகரன் எண்ணியிருக்க, அமுதா மாறாக எண்ணி இருந்தாள்.
தொண்டை வரை வந்த அழுகையை அடக்கிக் கொண்டவள்,


"நில்லு அகரா! என்னால உன்னோட வேல போகக் கூடாது....
சாரும் நம்ம கூட வரட்டும்... மிஞ்சி மிஞ்சிப் போனா..... சித்தி கன்னத்துல ரெண்டு அறை... கால், கைல இருக்குற அடையாளம் போதாதுன்னு.... சூடு வைப்பாங்க.... அவ்வளவு தானே! எனக்கு பழகிப் போச்சு....
நீங்க வாங்க சார்! நான் வீட்டுக்கு வழிய காட்றன்" கமறிய குரலில் செத்த விழிகளோடு பார்த்தவளை, மது வர்ஷனால் எதிர் கொள்ள முடியவில்லை..

ஏனோ அவள் அழுகை இதயத்தை கீறிக் கிழிப்பது போல் ஒரு உணர்வு.

மூத்த தொழிலதிபர்களை கூட, இமைக்கும் நொடியில் வீழ்த்தி விடும் வல்லமை கொண்டவன் அவன்.

ஆனால் பெண்ணவளின் கண்ணீரை கண்டதும் சிந்தை அற்று நிற்கிறான்.

றோஜாவும் சாமந்தியும் குழைத்தது போல் இருந்த அமுதாவின் தேகத்தில், ஆங்காங்கே சிவப்பும் கறுப்பு கோடுமாய் இருந்தது. அதற்கு காரணமான சித்தியை என்ன செய்தால் ஆகுமென பல்லை நற நறத்துக் கொண்டான்.

"பொண்ணுக்கு இருக்குற தைரியம் கூட உனக்கு இல்ல பாரு.....!!!!!!!!
அகரன் எடு வண்டிய.... இன்னிக்கு ஒரு வழி பண்ணிட வேண்டியது தான்....." என்றான் பாெங்கி வந்த ஆத்திரத்தோடு..

"கார் ஓட்ட தெரியாது சார்......" சற்று கோபம் தான்.. அவன் மேல் உண்டான கோபம்.. அதனால் தான் தெரிந்ததையும் தெரியாது என்றான்..

"டேய் டேய்.... நடிக்காத டா! நானும் ஹீரோவாவே இருந்துட்டு போலாம்ன்னு பாக்குறன்... வில்லனா ஏன் டா மாத்துறிங்க...?" இம்முறை எகுறுவது வர்ஷன் முறையானது..

"முடியாது சார்...."

"ப்ளீஸ் அகரன்! வண்டிய எடு! இல்லன்னா வேல போய்டும்.....!!!" ஏற்கனவே நொந்திருந்தவள் காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.

"டேய் அம்முல் பேபி! நீ மட்டும் வண்டிய எடுக்லன்னு வை! இந்தா பாரு...." என தன் கைக்குள் இருந்த, அமுதாவின் கையை காட்டியன்,

"இந்த கைய்ய இன்னிக்கி பூறா விடாம இப்படியே பிடிச்சுட்டு நிப்பேன்...." என்று சவால் விடுவது போல.. காரின் மேல் ஏறி அமர்ந்தவன், காலுக்கு மேல் கால் போட்டு, கோட்டை கழற்றி தோளில் தொங்க போட்டபடி அவனை தெனாவட்டாக பார்த்து வைத்தான்.

அமுதாவோ அகரனை பாவமாக ஏறிட்டாள்.

'இவருக்கு என்ன வந்துச்சாம்....? மூடிட்டு போய் படுத்து தூங்க வேண்டியது தானே! என்னோட ப்ரெண்ட பாத்துக்க எனக்கு தெரியாதா?' உள்ளுக்குள் தான்பொறுமியவன்,

"வாங்க சார் போலாம்...!!!"என்க வர்ஷனும் காரில் ஏறினான்.
அகரன் வண்டியை ஓட்ட.... மது வர்ஷன் அமுதாவை அழைத்துக் கொண்டு சென்று பின்னே அமர்ந்தான்.

அது வரை உணவற்று இருந்தவள், காரில் ஏறியதும் தான்.. தன் கை மது வர்ஷனின் கைக்குள் இருப்பதை உணர்ந்து, விறுட்டென இழுக்க, அதை விட வேகமாக அமுதாவின் கையை பற்றிக் கொண்டான்.


என்னவோ போலானது அவளுக்கு.. அகரன் அந்நிய ஆண் தான், இருந்தாலும் அவன் தொடுகையில் இல்லாத ஸ்பரிசம் இவனோடு கண்டாள்.

"இப்போ மட்டும் இழுக்குற...
சித்தி சூடு வைக்கும் போது, இந்த தைரியம் எங்கப் போச்சு...?
பளார்ன்னு ஒன்னு விட்றுக்க வேண்டியது தானா! பொண்ணுங்கன்னா பூ மாதிரி இருக்கனும்ன்னு இல்ல...... நெருப்பு மாதிரி இருக்கணும்.... புரியுதா!!" என்றான் அவள் விழிகளையே நோக்கியபடி,

ஆம் என்பது போல் கலங்கிய விழிகளோடு தலையை ஆட்டினாள் அம்முவும். ஆனால் இதெல்லாம் நடக்கின்ற காரியமா.....? தற்போதைய நிலையை சுமூகமாக்கவே இந்த தஞ்சாவூர் பொம்மை தலையசைத்தது.

'ஏதாச்சும் சொல்றாளா பாரு! ரெண்டும் சரியான அமுக்குனிங்க' மனதார கறுவிக் கொண்டவன் இடையிடையே வந்த அழைப்பிலும், குறுந்தகவலிலும் மூழ்கிப் போனான்.

"ஓகே சார் டயத்துக்கு வந்துடுங்க..." அணைப்பை காது மடலில் இருந்து விடுவித்தவன்.


"டேய்...! கொஞ்சமாச்சும் சிரி டா! சிரிக்காம இருந்தா.... சீக்கிரம் வயசாகிடும். அப்றம் யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க.... வர்ஜின் பயலாவே செத்து போயிட போற...." கண்ணாடியில் எள்ளும் கொள்ளுமாக இருந்த அகரனை வம்பிழுக்க, அமுதாவும் சிரித்து வைக்க அதை பார்த்த அகரனும் சிரித்தான்.



"மேடம் சிரிச்சா தான் சார் சிரிப்பாரோ....? ரொம்ப பண்றடா டேய்!" அகரனின் முகம் மெல்ல சுருங்கியது..அவனை வம்பிழுத்து பல்பு வாங்குவதில், மது வர்ஷனுக்கோ அலாதி சந்தோசம்.

கார் அமுதாவின் வீட்டில் வந்து நிற்க, அவளின் கால் நங்கூரமிட்ட கப்பலாய் அங்கேயே தரை தட்டியது.

இனி என்னாகுமோ என்று ஷோபனாவை நினைத்து இதயம் பட படத்துக் கொண்டது.


அகரனும் அமுதாவின் நிலை அறிந்து, மனதால் அழுது வடிந்தான். சிறு வயதிலிருந்தே, தாயன்புக்காக ஏங்கியவளை, ஒரு உயிராகவாவது மதித்திருக்கலாமே! பாவம் அவளும் எத்தனையை தாங்குவாள்?

"உன்னோட ஃப்ரண்ட்க்கு வேல வேணும்ல... இப்படியே தயங்கி நின்னா வேல போயிடும்மா...!!!" நாக்கை சுழற்றிய படி, மது வர்ஷன் அவளை மர்ம நகைப்போடு மிரட்ட, இல்லாத தைரியத்தை வரவழைத்தவள்,


மது வர்ஷனின் கையை பிடித்தவாறு உள்ளே நுழைந்தாள்.

ஹாலில் தொலைக்காட்சியை திறந்து போட்டு, சில நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளியபடி, சொகுசு கதிரையில் அமர்ந்திருப்பவள் தான் சித்தியென அறிந்து கொண்டவன்,

விறுவிறுனெ சென்று ஷோபனாவின் எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டது மட்டுமில்லாமல், ரீமோட்டை எடுத்து, தொலைக்காட்சி அலைவரிசையும் மாற்றியும் விட்டான்.


"இன்னிக்கு க்றிகட்ல பைனல் மெச் மேடம்... யார் பக்கம் வெற்றி இருக்குன்னு பாக்க வேணாமா....?
அவ புருஷன காணும்ன்னு இவளும், இவ புருஷன காணும்ன்னு அவளும் அழுற இந்த சீரியல பாத்து, என்ன மேடம் பண்ண போறிங்க....?" என்றான் ஏதோ தன் வீடாட்டம் எகத்தாளமாக..

திடீரென யாரோ ஒருவன் உள்ளே புகுந்ததும் இல்லாமல்... எதிர் இருக்கையில் அதுவும் அவளுக்கு நிகராக கால்மேல் கால் போட்டுக்கொண்டு, தன்னையே ஏழனம் செய்யவும், விழிவிரித்து அவனை கேள்வியாக நோக்கியவள்,

"ஹேய்....! யாரு நீ? தெறந்த வீட்டுக்குள்ள நாய் மாதிரி நுழையியே அறிவில்லை.....?" என்றவள், அவன் கைபிடியில் இருந்தவளை அப்போது தான் கண்டளாட்டம்..


"அடியேய்.....! உனக்கு ஒருத்தன் போதாதா? அவன் இருக்கிறப்பவே, இவனையும் இழுத்துட்டு வந்திருக்க... அதுவும் என் வீட்டுக்குள்ளயே! நீ எல்லாம் என்ன பொறப்பு டி? மானம் கெட்டவளே?" ஆரம்பித்து விட்டாள்.. வானுக்கு பூமிக்கும் குதிக்காது ஓயமாட்டாள் அவள் சித்து..

கண்கள் கரித்துக்கொண்டு வர, அவளையும் மீறி அழுகை பீறிட்டது.. மது வர்ஷனால் ஏனோ அவள் அழுவதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

போக கோபத்தின் உச்சியில் எறிமலைக் குழம்பானான்.

மேஜையை அலங்கரித்த இரும்பு பூச்சாடியை, சரேலென இலக்கின்றி வீசியடிக்க, அது தொலைக்காட்சியை பதம் பார்த்து விட்டுத் தான் பூமி தொட்டது.

அதுவரை தைய தக்க ஆடிய ஷோபானாவின் வாய், மதுவர்ஷனின் அதிரடி தாக்குதலில் அப்படியே மூடிக்கொள்ள, விழிகள் பிதுங்கத் தொடங்கியது.

அவளும் ஆண்களை பார்த்திருக்கிறாள் தான்... ஆனால் அடக்கினால் அடங்கிவிடும் ஆண்களை மாத்திரம் பார்த்து பழகியவளுக்கு, மதுவர்ஷனின் தடாலடியான செயல் பயத்தை ஏற்படுத்தியது..

"பேசுங்க மேடம்....
டீவி ல ஓவர் வாலும்மா இருந்திச்சு.... அதான் ஒடச்சுட்ட.... நீங்க தான் ரொம்ப பவ்வியமா பேசுறிங்களே! உங்கள ஒன்னுமே பண்ண மாட்டன்...

இப்போ பேசினா தெளிவா கேட்கும்...
பேசுங்க மேடம்...!!!" என்றவன், அவளது நொறுக்குத் தீனியை தன்வசமாக்கி, அதை தான் புசிக்க ஆரம்பித்தான்..

இத்தனை நாள் தான் செய்ய வேண்டியதை, வந்த அன்றே செய்து விட்டானே என அகரனுக்கு ஆச்சரியம் கலந்த பூரிப்பு.

"வாங்க சார்! சொன்ன டயத்துக்கு வந்துடிங்க.... குட் ஜாப்! ப்ரோமோஷன் பத்தி நாளைக்கே மேலிடத்துல பேசுறேன்..." என்றவனது பார்வையே வாசலை கடக்க, அவனின் வரவேற்பில் புன்னகைத்தவாறே எதிரே வந்து நின்ற காக்கிச்சட்டை காவல் அதிகாரியிடம் கைகளை நீட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்..


ஷோபனா இப்படி ஒன்றை எதிர்ப்பார்க்க வில்லை. கையும் காலும் ஆட்டம் கண்டிருந்தது.

"நா.... நான்... ஒன்னும் பண்ணலயே.. என்னை கைது பண்ணிடாதீங்க..." போலீஸை கண்டதும், நடுக்கத்தில் தானாகவே உளற ஆரம்பித்த ஷோபனா..


'எல்லாத்துக்கும் காரணம் நீ தானே!' என அமுதாவையும் முறைக்கவும் தவறவில்லை அவள்.

"தோட்டதுல மாதுளம் பழம் இருந்தத பாத்துட்டு, அகரன் தா அதை கொண்டு வந்து கொடுத்து இருக்கான்னு உங்களுக்கு தெரியும்.....


அதனால கண்ட கண்டவ எல்லாம் வந்துட்டு போறானுங்க.... இந்த வீட்டோட மானமே போகுதுன்னு அமுதாவ கட்டாயக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி மெறட்டி இருக்கீங்க....!!!!
அந்தப் பொண்ணு வேணான்னு சொன்னதும்
கன்னத்துல அறஞ்சு.... சூடும் வச்சு இருக்கீங்க மேடம்...


கல்யாணம் பண்ணிக்க முடியாட்டிக்கி, எவன் உன்னை வைச்சிருக்கிறானோ! அவன்கிட்டையே போன்னு, ராத்திரின்னும் பாக்காம வீட்டை விட்டு தெறத்தி இருக்கீங்க ....
இதெல்லாம் எனக்கு மட்டுமில்ல..... இந்தா வந்துருக்குற போலிஸ்
காரங்களுக்கும் தெரியும்.... எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கிறோம்...


என்ன சார் இன்னும் பேச விட்டு வேடிக்கை பாக்கிறீங்க....? கம் ஓன்....


இந்த லேடிய அரஸ்ட் பண்ணுங்க.... மனித உரிமை மீறல்ன்னு, நான் கம்ளைண்ட் கொடுக்குறன்... அப்றம் சித்தி கொடுமைன்னும் ஒரு கம்ளைண்ட் கொடுக்குறன்...

என்னங்க மேடம்...! நா சொல்றது சரி தானே!" என்றான் உதட்டு வளைவில் அவளை நக்கலாய் பார்த்து புன்னகைத்தவாறு..


'இவருக்கு இதெல்லாம் எப்படி தெரியும்....?


ஓஹ்......! போன்ல இதப் பத்தி தான் ராெம்ப நேரமா பேசிட்டு இருந்தாரா? பக்கத்துக்கு பக்கம் டுவிஸ்ட்டா தற்ர புக் மாதிரி இருக்காரே' கண்கள் அகல அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள்,

ஷோபனாவின் சத்தம் கேட்டு தான் உலகிற்கே வந்தாள்.

"நான் போலீஸ் ஸ்டேஷன் வர மாட்டன்... நான் எந்த தப்பு பண்ணல.... இவதா தப்பு பண்ணா..." என்றாள் பெரிதாக சொன்னால் எல்லாம் உண்மையாகும் என்ற எண்ணத்தில்..


" சித்தி எதுவும் பண்ணல..... இந்த சூடு கூட நானே வச்சுகிட்டது தான்" என்ன தான் கொடுமைக்காரியாக இருந்தாலும், அவளை இத்தனை தூரத்திற்கு வளர்த்து விட்டவரை போலீஸிடம் மாட்டிவிட அவளுக்கு மனம் ஒப்பவில்லை..

'இவ்ளோ செய்தும் எப்பிடித்தான் சப்போர்ட் பண்றாளோ....! இந்த மனசு யாருக்குமே வராது.. அதை அவங்களும் புரிஞ்சு கொள்ள போறதில்லை.... இவளும் இந்த நரகத்தில இருந்து வெளிய வர போறதில்ல.. என்கிட்ட வந்திடு உன்னை கண்ணுக்குள்ள வைச்சு பாத்துக்கிறன்..' இமை வெட்டாது அவளையே நோக்கியவன், எண்ணக்கருவில் ஏதோதே எண்ண ஓட்டங்கள். ஆனால் இது எதன் தாக்கமென கேட்டால் நிச்சயம் பதில் அவனிடம் இல்லை..



"அரஸ்ட் ஹேர்..." மீண்டும் ஓர் குரல் கேட்டதும்.


"கெஞ்சிக் கேட்டுக்குற சார்! இந்த வாட்டி மட்டும், அவங்கள விட்டுடுங்க என்ன இருந்தாலும், எனக்கு அம்மா அவங்க " அவள் மனம் கண்டு வெப்படையாக நகைத்தவன்.


"லீவ் ஹேர் லிசின் மேடம் ஷோபனா.....! இன்னிக்கு மாதிரி எப்போதும் உங்கள விட மாட்டன்.... அடுத்த வாட்டி அமுதா மேல கை வைக்கும் போது, இந்த மது வர்ஷன் தா நெனப்பு வரணும்" என்று எச்சரித்தவன்,


அதிகாரிகளை அனுப்பி விட்டு, தன் கைக்குள் அத்தனை நேரமும் அடக்கமாகியிருந்த தன்னவளின் பட்டுக் கரங்களை மனமின்றி விடு வித்து, மின்னலென மறைந்தான்.