• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

05. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சாருவின் தந்தை பூபதிக்கு ஒரு தனியார் நிறுவனத்தில், மானேஜர் வேலை! அவளது தாயார் சாந்தி, அவளுக்கு எட்டு வயதிருக்கும் போது நோய்வாய்ப்பட்டு, இறந்து பேனாள்!

மகளை வளர்ப்பதற்கு, பூபதி பிரியா என்ற விதவைப் பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்! ஐந்து வயதில் சுரேந்திரன் என்று ஒரு மகனும் அவளுடன் வந்தான்!

சித்தியாக வந்த பிரியா, பெரிதாக அன்பு பாராட்டவில்லை என்றாலும், கொடுமைப்படுத்தவும்
இல்லை! சாருவுக்கு தேவையானதை செய்து கொடுத்தாள்! அரவணைப்பும் இல்லை அதிகாரமும் இல்லை! அந்த போக்கு, முதலில் சற்று வருத்தமாக இருந்தபோதும் சாரு, காலப்போக்கில்,விவரம் புரிந்து,சமாளித்து,தேற்றிக் கொண்டாள்.

சாருபாலா மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்திருந்தாள்! சுரேந்திரன் கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்தான்! அப்போது பிரியா ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்!

சாருவுக்கு சிறு வயது முதலே டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை! அதற்கு அவளது தாயும் ஒரு காரணம்! சிறுமியான அவளிடம் மருத்துவம் படித்து, ஏழைகளுக்கு வைத்தியம் செய்யணும் கண்ணு" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்!

அன்னை சொன்ன வார்த்தைகள் அவளது மனதில் ஆழமாக பதிந்து இருந்தது!! அதனை கருத்தில் கொண்டு படிப்பில் தன்னை தீவிரமாக புகுத்திக் கொண்டாள்!
உபகார சம்பளம் கிடைத்தது! பூபதியும் மகளின் விருப்பப்படி படிக்க வைத்தார்!

சாருபாலா திருமண வயதை அடையும் போதே வரன்கள் தேடி வந்தது! பூபதியும் பெற்ற கடன் முடித்துவிட எண்ணினார். ஆனால், தனக்கு திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்!

சாருபாலா பெயருக்கேற்ப அழகாக இருந்தாள்! அவள் மனதில் எப்போதும் மருத்துவத்திற்கு தான் முதலிடம்! அவளுக்கு திருமணம் பற்றிய நினைப்பே இல்லை எனலாம்! அவள் படிக்கும் காலத்திலும் சில மாணவர்கள் அவளிடம் காதல் சொல்லத்தான் செய்தார்கள்!

அவளோ தன் லட்சியம் சேவை செய்வதில் தான் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்!

சாருபாலாவிடம், ஆனந்தன் காதலை சொன்னபோதும் அவள் அதே பதிலைத்தான் உரைத்தாள்! ஆனால் ஆனந்தனுக்கு அவளை விட்டுவிட மனமில்லை! அதே சமயம் மீண்டும் அவளை சந்திக்க முயற்சி செய்யவில்லை! ஆனால் அவள் செல்லும் இடங்களுக்கு பின் தொடர்ந்து கொண்டிருந்தான்!

சாருபாலா தன் முடிவில் தீர்மானமாக இருந்தாள்!

🩷🩷🩷

கொட்டிவாக்கம்..

தனது அறைக்குள் தஞ்சம் புகுந்த மருத்துவர் பாலாவின் மனம் கடந்த காலத்தில் பயணித்துக் கொண்டிருந்தது! கண்களில் கண்ணீர் அரும்பிக் வழிந்தது!

வழக்கமாக கடந்துவிட்ட காலத்தை அவர் நினைத்துப் பார்த்து வருந்துவது கிடையாது!

ஆரம்பத்தில் பெற்ற பிள்ளையை பிரிந்து வந்ததில் மிகுந்த வேதனைக்கு ஆளானார் தான்!

ஆனால் அதன் பிறகு மேற்படிப்புக்கு முயன்று மனதை அதில் செலுத்தினார்! ஆனால் இன்றைக்கு அவரால் ஒன்றும் செயலாற்ற முடியவில்லை!

அன்றைக்கு மட்டும் அவர் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இன்றைய இந்த வேதனைக்கு வழியின்றி போயிருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை!

செங்கல்பட்டு !

ஆனந்தனுக்கு அந்த ஊரில் கட்டுமானப்பணி முடிந்த பிறகு, மேற்கொண்டு அங்கே தங்க முடியாது என்று சிறு வருத்தம் உண்டானது! ஆனால், மேலும் ஒரு வாடிக்கையாளர் வந்து தனக்கு சொகுசு பங்களா ஒன்று கட்டித்தரக் கேட்கவும், அவனுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று! இது கடவுள் செயல், சாருவை தன்னுடன் சேர்த்து வைக்கத்தான் இப்படி நடக்கிறது என்று எண்ணிக் கொண்டான்! அதனால் அவள் போகும் இடமெல்லாம், ஆனந்தன்
அவள் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தான்!

சாருபாலா, முதலில் அது தற்செயல் என்று தான் நினைத்தள்! ஆனால் அப்படி இல்லை என்பது கூடிய சீக்கிரமே தெரிந்து போனது! அவள் வாழ்க்கைக்கு திருமணம் பெரும் தடையாக இருக்கும் என்று அவள் தீர்மானமாக நினைத்தாள்! ஆகவே ஆனந்தனின் அந்த செயல் அவளை பெரிதாக பாதிக்கவில்லை! கண்டு கொள்ளாமல் தன் பணியில் கவனமாக இருந்தாள்!
நாட்கள் மாதங்கள் ஆயிற்று! ஆனந்தன் வந்த வேலை முடிந்து விட்டதாக தெரிவித்துவிட்டு ஊருக்கு கிளம்பியும் போய் விட்டான்! சாருவுக்கு அப்பாடா என்றுதான் இருந்தது !

ஆனால்.. அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவு!

ஆம்! ஆனந்தன் அவளது பிறந்தநாள் அன்று மீண்டும் பிசன்னமானான்!
🩷🩷🩷
செங்கல்பட்டில் இருக்கும் ஆசிரமத்திற்கு சாருபாலா இலவசமாக மருத்துவ சேவை செய்து வந்தாள்! அது தவிர அவள் சிறு வயது முதல் பிறந்தநாள் அன்று இல்லத்திற்கு சென்று சிரமபரிகாரம் செய்துவிட்டு, தான் சேமித்து வைக்கும் சிறு தொகையை கொடுத்துவிட்டு, அவர்களுடன் சாப்பிட்டு வருவது வழக்கம்!

அன்றைக்கும் அப்படித்தான் சாரு, தனது பிறந்தநாளை வழக்கம்போல அங்கே கொண்டாட சென்றாள்! அங்கே அவளுக்கு முன்பாக ஆனந்தன் இருந்தான்! அன்றைக்கு இல்லத்தில் இருந்தவர்களின் மூன்று வேளை உணவுக்கும் அவன் பணம் கொடுத்திருப்பதாக இல்லத்தின் காப்பாளர் தெரிவித்தார்!

சாருபாலாவுக்கு சற்று உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று!

"உங்களை போல இளைஞர்கள் இந்த மாதிரியான இல்லங்களுக்கு வருவது என்பது அபூர்வம்! நீங்க வந்ததோடு உணவும் வழங்கி யிருக்கீங்களே சார்! யூ ஆர் கிரேட்! என்றாள் சாருபாலா!

"இது, என் மனதுக்கு பிடிச்சவங்களுக்காக நான் செய்கிறேன்! "

"ஓ! எப்படி என்றாலும், இது நல்ல விஷயம் தான்! "

"அது யார்னு கேட்க மாட்டிங்களா டாக்டர்!"

"அதை தெரிஞ்சு நான் என்ன பண்ணப் போறேன்! அவங்க புண்ணியத்தால இன்றைக்கு இங்கே இருக்கிறவங்க வயிறார சாப்பிட்டாங்களே அது போதும் எனக்கு, அப்புறம், ஒரு விஷயம் சார், நான் மருத்துவமனையில் தான் டாக்டர்! வெளியில் நான் ஒரு சாதாரண பெண்தான்! அதனால நீங்க என்னை பெயர் சொல்லி அழைக்கலாம்!" என்றாள் சாரு!

"அட, என்ன இப்படி சொல்லிட்டீங்க ? முக்கியமாக நீங்க தான் தெரிஞ்சுக்கணும், இன்னிக்கு உங்க பிறந்த நாள் ! அதற்காகத் தான் இந்த ஏற்பாடு!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சாரு!" என்று ஒரு சின்ன அட்டைப் பெட்டியை நீட்டினான் ஆனந்தன்!

சாருபாலா உள்ளூர வியந்து போனாள்! மனிதர்களைப் பற்றிய மனோதத்துவம் படித்திருந்த அவளுக்கு, இது ஏனோ அப்போது தெரியாமல் போயிற்று!

யாராக இருந்தாலும் தன்னை சிறப்பாக நினைத்து கொண்டாடும் போது, மனம் உருகுவது இயல்புதானே? அந்த நிலையில் தான் இருந்தாள் சாரு! ஆனால், ஆனந்தனின் பரிசை பெற்றுக் கொள்ள அவளுக்கு மனமில்லை!

அதே சமயம், அவன் தனக்கென மெனக்கெட்டு, சென்னையில் இருந்து வந்ததை ஒதுக்க முடியாமல்,

"நீங்க இவர்களுக்கு உணவு கொடுத்ததே எனக்கு பெரிய பரிசு போல தான்! அதற்கு மேலாக இது வேறு எதற்கு?" என்று தயங்கினாள்!

"ப்ளீஸ் நீங்க
மறுக்கக்கூடாது சாரு! அது உங்களுக்காக, இது என் மனதிருப்திக்காக" என்று, அவளது கையில் பரிசை வைத்த ஆனந்தனின் சிரிப்பு வசீகரமாக இருந்தது !

சாருபாலாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை! பொதுவாக அவள் ஆண்களிடம் சற்று தள்ளி நின்றே உரையாடுவாள்! மீறி நெருங்க முயன்றால் முகத்தில் கடுமையை காட்டிவிடுவாள்! அப்படிப்பட்டவள் இன்று சற்று தடுமாற்றத்தில் நின்றாள்! ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு,"நன்றி, சார், எனக்கு அவசரமாக போக வேண்டும், வருகிறேன்" என்று கிளம்பி விட்டாள்!

ஒருவர் மனதில் இடம்பிடிப்பது வேறு ,காதல் வேறு என்று ஆனந்தன் புரிந்து கொள்ளவில்லை!
 

Attachments

  • CYMERA_20240326_173400.jpg
    CYMERA_20240326_173400.jpg
    53.5 KB · Views: 17
Last edited: