• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

05.Miss மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
"உன்னை எல்லாம் எவன்டி கல்யாணம் பண்ணிப்பா காசியில்லாத நாயே...."

"பணம் மட்டும் தான் முக்கியமா அப்போ இவளோ நாளும் என்னையே காதலிக்கிறதாவும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு என்னோட அம்மாக்கிட்ட வந்து பேசினது எல்லாம் நாடகமா?..."

"ஆமான்டி நாடகம் தான் நீ ரொம்ப அழகா இருக்கியா அதை பார்த்து வந்த எனக்கு உன்கிட்ட பணம் இல்லைன்னதும் நான் எதுக்கு உன்னை கல்யாணம் பண்ணனும் எனக்கு வேற வேலையில்லை உனக்கு வேனும்ன்னா இன்னொரு வழி இருக்கு அதுலே ட்ரைப் பண்ணலாமா? இவள் புருவம் உயர்த்தி பார்க்க உன்னோட உடம்பை வித்து என் கூட வாழ்க்கை நடத்துவியா?...." என்ற அவனது ஏளனப் பேச்சுக்கள் கேட்டதும் அவன் கன்னத்தில் பளார் என அறைய சரி தான் போடி… என்று அவன் அவளை பள்ளத்தாக்கு வழியாக தள்ளிவிட அம்மாஆஆஆ.......... என்று அலறிக் கொண்டு எழுந்தாள் படுக்கையில் இருந்து இவளின் அலறைக் கேட்டு அருகில் படுத்துக் கொண்டிருந்த மோனிக்கா திடுக்கிட்டு எழுந்தாள்.

"சம்யுக்தா என்னடி ஆச்சு...." என்றவள் தண்ணீர் பாட்டிலை நீட்ட அதை வாங்கி மட மட வென ஒரு சொட்டு நீரை விடாமல் குடித்தவள் முகத்தில் இருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

"என்ன ஏதாவது கெட்ட கனவா?.."

"ஹா அக்கா ஆமா நீ என்ன இன்னைக்கு என்னோட
ரூம்லே வந்து படுத்திருக்க
அதெல்லாம் ஒன்னும் இல்லைடி அங்கே இருக்கிற ஃபேன்லே இருந்து காத்து வர மாட்டேங்குது அதான்…."

"சரிக்கா நீ படுத்துக்கோ.." என்று எழுந்தவள் வெளியே ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள் அந்த கனவின் விளைவில் அவளுக்கு உடம்பில் சிறு நடுக்கம் ஏற்பட்டது.... எவ்வளவு நேரம் அப்பிடியே இருந்தாலோ தெரியவில்லை விடிந்து விட "அம்மா இருங்க நான் கொஞ்சம் வெளியே இப்பிடியே நடந்திட்டு வரேன்…" என்றவளை அவர் தடுக்க வில்லை அவருக்கு தெரியும் தன் மகளிற்கு மனது சரியில்லை ஏதாவது குழப்பத்தில் இருக்கும் போது தான் இப்பிடி நடந்துக் கொள்வாள் என்று வெளியே வந்தவள் குளிர்காற்றின் மோதல்களில் நடந்ததை எல்லாம் மறக்க துணிந்தாள் சிறிது நேரம் வெளியே அப்படியே நடந்து வந்தவள் வீட்டை அடையும் போது அருகில் இருந்த வீட்டு பெண் அவள் காலடியில் ஒரு உணவுப் பொதியை வீசி விட்டார் அதையும் அவரையும் கேள்வியாய் பார்த்து நிற்க...

"ஏய் பொண்ணே அது நேத்து வெச்ச பழைய சோறு கொண்டு போய் சாப்பிடுங்க…" என்று ஏதோ பெருந்தன்மையாக கொடுக்கிறார்களாம் என்று அவரின் தோரனையில் ஏளனம் எட்டி பார்த்துக் கொண்டிருக்க அதை எண்ணி அவள் கை முஷ்டி இருகினாலும் எதுவும் பேசாமல் நின்றுக் கொண்டிருக்கையில் அருகில் அந்த சாப்பாட்டை பார்த்தவாறு நின்ற நாய் அதை அவசரமாக ஓடிவந்து அதை சாப்பிட அதையே பார்த்துக் கொண்டு இருந்தவள் அது குடிக்க தண்ணீரையும் வைத்து விட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.

காலையில் எப்போதும் இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்து பழக்கப்பட்டிருத்தனர் தனியாக ஜிம் போல் ஏற்பாடு செய்து வைத்திருந்த அந்த அறையிற்கு சென்றவன் இன்னும் அகி வராததால் அவன் அறைக்கே போய் பார்த்தான் எப்போதும் மூவரின் அறையும் லாக் பண்ணாமலேயிருக்கும் என்பதால் இலகுவாக கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அங்கு அவன் போட்டோ ப்ரேமை ஒன்றை அணைத்துக் கொண்டு உறங்க அவன் கண்களில் கண்ணீர் வடிந்த கோடுகளை கண்டதும் அழுதுயிருக்கிறான் என்று புரிந்துக் கொண்டான் யுவா இது என்ன ப்ரேம் என்று அதை எடுத்து பார்க்க அதில் அவனது அப்பா அம்மா இருவரும் சேர்ந்து நின்று எடுத்த
போட்டோ அது.

அதை பார்த்த யுவாவிற்கு மனம் வலித்தது தன்னுடைய கோவத்தால் அவனை இந்த அளவுக்கு பீல் பண்ண வைத்து விட்டோமே என்று....

அகி.... மச்சி... என்று எழுப்பியவன் அவன் எழுந்ததும் அவனை அணைத்துக் கொண்டான் "சாரிடா நான் ஏதோ என்னை நீ ஹேட் பண்ணுறேன்னு நினைச்சு தான் அப்பிடி கோவப்பட்டுட்டேன் ஐயம் சாரிடா…" என்றவனிடம் இருந்து பிரிந்தவன்.

" அப்பிடி எல்லாம் எதுவும் இல்லைடா என்கிட்ட நீ கோவப்படாம வேற யாரு கோவப்படுவா நான் எதையும் பெருசா எடுத்துக்கலடா நீ பீல் பண்ணாத…" என்று அவனிடம் கூறியவன் எழுந்து ப்ரெஸ்அப் ஆகி வர இருவரும் பேசியபடி வொர்க்அவுட் பண்ண தொடங்கினர்....

பின் இருவரும் சண்முகவேலுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்....

கம்பெனிக்குள் இருவரும் சிரித்து பேசியபடி வர அதை கண்டவளிற்கு ஆச்சிரியம் "நேத்து எலியும் பூனையுமா சுத்திக்கிட்டு இருந்திச்சுங்க இன்னைக்கு இப்பிடி வருதுங்க…" என்று யோசனையுடன் பார்த்தாலும் அதே செகன்ட் இது எல்லாம் நமக்கு எதுக்கு என்று வேலையை கவனிக்க தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் அவர்கள் உருவாக்கிய வாகனங்கள் ஏற்றுமதிக்கு தயாராக இருப்பது சம்மந்தமான விஷயத்தை தெரிவித்து விட்டு வர எண்ணி அவள் யுவாவின் அறைக்கு சென்று சார்..... என அழைக்க அவள் குரல் கேட்டு ஆஹ் சொல்லு பொண்டாட்டி… என்றபடி சாதாரணமாக பைல் ஒன்றை பார்வையிட இதை கேட்ட சம்யுக்தா அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டு நிற்கயில் அதே சமயம் பார்த்து அகி அங்கு வர அவனும் அதை கேட்டு விட்டான்.


"அய்யோ இந்த பொண்ணு இப்ப என்ன பண்ணப்போறாளோ…" என்றவன் நண்பனை ஆபத்தில் இருந்து காப்பாற்ற அடித்து பிடித்து அறைக்குள் வந்தவன் "மச்சி நீ போன் பேசுறது ரூம்மே தாண்டி கேக்குதுடா…" என்று சமாளிக்க அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்தவன் அடே ஆமா ஹிஹிஹி... என இழித்து வைத்தான் உளறிட்டோமா என மனதிற்குள் நினைத்துக் கொண்டு அதையே மெயின்ட்டென் பண்ணினான் "சரிடா மச்சான் இனி அமைதியா பேசிக்கிறேன்…" என்றவன் ஓரே கண்ணால் சம்யுக்தாவை பார்த்தபடி...

"ஆஹ் மிஸ் சம்யுக்தா ஏன் அங்கயே நின்னுட்டீங்க உள்ளவாங்க…" என்று அப்போது தான் கண்டது போல் அழைக்க அவளும் தான் வந்த நோக்கத்தை தெரிவித்து விட்டு அவன் காதில் இருந்த ப்லூட்டுத்தை பார்த்ததும் தனக்கு கூறவில்லை என்பதை எண்ணி உறுதிப்படுத்தியவளாக அங்கிருந்து செல்ல அப்போது தான் சீராக மூச்சு விட முடிந்தது இருவருக்கும்.

இப்படியாக அவனின் காதல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க வாரங்கள் நாட்களாக கடந்தது இரண்டு மாத சம்பளத்தையும் தன் தாயின் கையில் கொடுத்தவள் அன்று வழமை போல் ஆபிஸுக்கு தயாராகி வந்தாள் "அம்மா எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா?..." என்று அவர் அருகில் அமர்ந்தவள் கேட்க....

"உனக்கு என்ன வேணுமோ கேளுடா அம்மாவாலே முடிஞ்சா எதுன்னாலும் பண்ணுறேன்...."

"அம்மா இந்த வீட்டோட பத்திரம் கொடுப்பீங்களா சின்னதா ஒரு பார்மெலிட்டிசிக்கு...."

"என்ன திடீர்ன்னு இப்பிடி எல்லாம் கேக்குறே...."

"எல்லாம் கம்பெனி ஆரம்பிக்க லோன் வாங்க தான் ம்மா ஒரு டூ இயர்ஸ்லே எல்லாத்தையும் திருப்ப கொடுத்திடுவேன்ம்மா....."

"என்ன விளையாடுறீயா பைத்தியம் மாதிரி பேசாத நீ நினைக்கிற மாதிரி இது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது
ஆமா எந்த நம்பிக்கையிலே இதை எல்லாம் பண்ணனும்ன்னு முடிவு பண்ணி இறங்குற... நீ பிசினஸ் பண்ண ஆரம்பிச்சு அதுலே எந்த லாபமும் இல்லைன்னா எப்பிடி பட்ட கடனை அடைப்பே இதை எல்லாம் யோசிச்சியா? நாணயத்துக்கு எப்படி ரெண்டு பக்கம் இருக்கோ அது மாதிரி தான் இதுவும்..."

"அம்மா ஜெயிக்க முடியாதுன்னு ஒரு விஷயத்துலே இறங்க முன்னாடியே தீர்மானிக்க கூடாது எதுவா இருந்தாலும் இறங்கி எல்லாத்தை பேஸ்டு பேஸ் சந்திச்சு ஜெயிக்கனும்ங்கிறது என்னோட பாலிஸி உங்களாலே கொடுக்க முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லுங்க அதை விட்டுட்டு என்னோட திறமையே மட்டம் தட்ட நினைக்காதீங்க...." என்றவள் கோவத்துடன் கிளம்பி ஆபிஸூக்கு போனாள் ரிஷியுடன்.

"ஹேய்.... மை சண்டகாரி சிஸ்டர் என்னடி ஆச்சு எதுக்கு இப்போ மூஞ்சை உம்முன்னு வெச்சிட்டு வர...." அவள் எதற்கும் பதில் பேசாமலே வந்தாள் அவள் இறங்க வேண்டிய இடம் வர இறங்கி போக போனவளின் கைகளை பிடித்து நிறுத்தியவன் "ஏன்டி இப்பிடியிருக்க சித்தி ஏதாவது சொன்னாங்களா இல்லை வேற ஏதாவது ப்ராப்ளமா சொல்லு நான் என்னாலே முடிஞ்சளவு ஹெல்ப் பண்ணுறேன்…"

"எதுக்குண்ணா எல்லாரும் என்னை மட்டமாவே பாக்குறாங்க அதுவும் என்னாலே முடியாதுங்கிற வார்த்தையோட சப்போர்ட் பண்ணலன்னாலும் பரவாயில்லை அட்லீஸ்ட் இப்பிடி என்னோட ஆசை கனவு இதையெல்லாம் கொச்சைப்படுத்தாம இருக்கலாமே அண்ணா அதை எல்லாம் நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...." என்றவளிற்கு அவளை மீறி அழுகையும் வந்துவிட்டது.

அவள் வாழ்க்கையிலே எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்த்தது இல்லை ஆனால் இன்று மனம் நொந்து அழுவதை பார்த்தவனிற்கு ஏனோ மனம் ரணமாய் கொதித்தது.

"ஹேய் சம்மூ நீ அழ பொறந்தவே இல்லை சாதிக்க பிறந்தவே எதுவாயிருந்தாலும் சாதிச்சிட்டு பேசு நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன் நீ ஏதாவது ஒன்னை அடையனும்ன்னு நினைக்கும் போது நீ அதை ஈசியா அடைஞ்சிட்டா சுவாரஸ்யம் இருக்காது அது மாதிரி தான் இதுவும் நீ எவ்வளோ கஷ்டப்படுறீயோ அவ்ளோவுக்கு அவ்ளோ நீ நல்லாயிருப்ப அதாலே எதையும் போட்டுக் குழப்பிக்காத…" என்று கண்ணீரை துடைத்துவிட அவனை அணைத்துக் கொண்டாள் தன்னை புரிந்துக் கொள்ள தன் அண்ணன் இருக்கிறான் என்ற தைரியத்தில் அவனும் அவளை அணைத்து தலையை வருடி முத்தம் ஒன்றைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவனும் கிளம்பினான்.

இதை எல்லாம் தனது அறையில் இருந்து கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டிருந்தான் யுவா.

அவள் வந்து ஒரு பத்துநிமிடத்தில் தனது பிஏ மூலமாக தன்னறைக்கு
அழைத்தான் யுவா.

அவளும் அவன் அழைப்பை ஏற்று வந்தவள் மரியாதை நிமித்தமாக சொல்லுங்க சார் என்றவளை தீப் பார்வை பார்த்தான்.

"என்னடி பண்ணிட்டு நிக்கிற நடுரோட்லே அசிங்கமா அதுவும் பார்க்கிறவன் என்ன நினைப்பான்…" என்று முதல் முறையாக தன் கோவத்தை அவளிடம் காட்டினான்.

"ஹலோ... மிஸ்டர் மரியாதையா பேசுங்க அது என்ன டி எல்லாம் போட்டு ஏதோ நான் உங்க பொண்டாட்டி மாதிரி பேசுறீங்க...." என்றாள் அவனது கோபத்திற்கு ஈடாக பிறகு என்ன ஏதென்று சொல்லாமல் எடுத்த எடுப்பில் இப்படி பேசினால் யாருக்கு தான் கோபம் வராது...

"சொன்னாலும் சொல்லாட்டியும் என் மனசுலே நீ அந்த ஸ்தானத்துலே தான் இருக்க…" என்ற வார்த்தையில் ஒரு நிமிடம் அவளின் உடல் தூக்கி வாரி போட்டது... "பிகாஸ் நான் உன்ன காதலிக்கிறேன் அது இன்னைக்கு நேத்து இல்லை நாலு வருஷமா?..." அதே கோபத்தோடு கத்தியவன் பின் தன் குரலை தனித்து "நான் காதலிக்கிற பொண்ணு இன்னொருத்தனை கட்டி பிடிச்சிட்டு இருக்கும் போது எனக்கு அப்பிடியே ஏதோ மாதிரி இருக்குடி நடக்குறதை பார்த்திட்டு நான் எப்படி அமைதியா இருக்க முடியும்…"என்றவனின் ஒவ்வொரு சொற்களிலும் திகைத்து நின்றாள் மங்கையவள்.


"உனக்கான கனவு உன் கையில் ஆயிரம் பேர் எதிர்த்தாலும் உன் கனவை நீ இறுக்கி பிடித்துக் கொள் என்நிலையிலும் கைவிட்டு விடாதே
நீ ஜெயித்து விட்டால் நாளை அவ் எதிர்ப்பு எல்லாம் ஆதரவாக
வந்து நிற்கும் மனம் தளராதே"
 
Top