• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

06. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
அவன் எதற்கு கையை நீட்டுகிறான் என்று புரியாமல் அவள் விழிக்க.


"கையில இருக்கிறதை தந்துட்டு அப்படி இருக்கலாமே!" எதிரில் இருந்த இருக்கையை காட்டியவன்,
அவள் வந்து அமரவும், அவள் பைல்லை ஆராய்ந்தான்.


"அப்புறம் சொல்லுங்க மிஸ் துஷாந்தினி. இவ்ளோ படிசிருக்கிறீங்க... எதுக்கு ஹாஸ்பிரல் போகம இங்க வந்திங்க? ஏன் அங்க வேலை தரமாட்டன் எண்டாங்களா?
அவங்க மறுத்ததூக்கும் காரணம் இல்லாமல் இருக்காது.

டாக்டராக வேலை செய்யணும் எண்டா பொறுமையும், அடக்கமும் அன்பும் வேணும்... உங்களுக்கு அது சுத்தமா கிடையாதே!" என நக்கலாக பேசி அவளை வம்பிற்கு இழுத்தான்.

"எனக்கு அந்த வேலையில விருப்பமில்லை சார். அப்பா ஆசைப் பட்டதனால படிச்சன். அதோடு நான் பைனல் தேர்வு எழுதேல...


சோ எடுக்காத பட்டதுக்கும், வேலை யாரும் தரமாட்டாங்க." என்றாள் அமைதியாக.
பாவம் இவன் தான் பல்ப்பு வாங்கிக்கொண்டான்.

"ஓ...... நான் அதை கவனிக்கேல. ஏன் படிச்சு கிழிசது போதும் எண்டு படிப்ப விட்டுடாச்சா மிஸ் துஷாந்தினி." என்றான் அவனும் தன் தோள்வியை ஒப்புக்கொள்ள முடியாது அவளை குறுகச்செய்யும் நினைப்போடு.


"அது...அது" என்று தடுமாறியவள்,

"கடைசி தேர்வு அப்போ, வீட்டில சூழல் சரியில்ல.. அதால எழுத முடியேல." என்றாள் விழிகளின் ஓரம் எட்டிப்பார்த்த கண்ணீரை உள்ளிழுத்தவாறு.



"ஓ.." என்றான் அவளது நன்கு கவனித்தவாறு.

"உனக்கு யாருமில்லையா? அப்ப யார் கூட தங்கியிருக்க."


"என்னோட ஃப்ரெண்ட் இங்க படிச்சிட்டிருக்கா... அவளோடு தான் நான் இருகின்றன்."
ஏதோ கேட்க வாயெடுத்தவன், வேண்டாம் நேரம் வரும்போது கேட்க்கலாம் என்றெண்ணி.



"அப்ப உனக்கு இங்க வேலை செய்யிறதில எந்த பிரச்சினையும் இல்ல.. " என அழுத்தமாக கேட்டான்.

அவனை விழிகளை நேராக நோக்கியவள்,

"எனக்கு என்ன பிரச்சினை? நான் செய்கின்ற வேலைக்கு சம்பளம் தரபோகிறீர்கள். இங்க பிரச்சினைக்கு என்ன இடம்?" என்றாள் அவளும் மிடுக்கோடு.

"ஒரு வேளை இங்க நான் வேலை தர மாட்டன் எண்டா என்ன செய்வீங்க.?"
இதை தானே முன்னரே எதிர் பார்த்தாள்.

"இதுக்குத்தான் என்னை கேவலப்படுத்துறது போல பேசினியா... எண்டு உங்க கன்னத்தில அறைவேன் எண்டா சார் சொல்ல முடியும்.? அது என்னோட குணமும் இல்ல... என் பைல வாங்கிட்டு போயிடுவன்.


ஊரில நிறைய வேலை இருக்கு சார்." என்றவள் பேச்சில் ரதன் அதிர்ந்தானே இல்லயே ரவி அதிர்ந்தே போனான்.
"ஓகே துஷாந்தினி! நீங்க கொஞ்சம் வெளிய நில்லுங்க. இங்க வேலை செய்யோணும் எண்டா, சில நிபர்ந்தனைகள் இருக்கு.. அதை ரெடி பண்ணிட்டு கூப்பிடுறன். படிச்சு பாத்துட்டு விருப்பம் இருந்தா வேலையில சேரலாம்." என்றான்.


அவனது பேச்சிற்கு இணங்கி வெளியே வந்தவளால் நம்ப முடியவில்லை.

ஏதாவது சதி பின்னுறானோ என்றே எண்ணத் தோன்றியது.


"என்னடா இது? நீ ஒரு பொண்ணோட இவ்வளவு பேசுவியா?
உங்க பேச்சை பாத்தா, இது முதல் சந்திப்பு போல தெரியேலயே!


அவளை பாக்க நல்ல பொண்ணு போல தான் இருக்கா.. உனக்கு என்னடா அவகூட தகராறு.?" என சந்தேகமாக நண்பனை வினவினான் ரவி.

"நீ வேறடா! அவளை பாக்க தான் அப்பிடி. வாயதிறந்தா எண்டு வையி. காது கிழிஞ்சிடும்.
நேற்று றோட்டில நின்டு எப்பிடி சண்டை போட்ட தெரியுமா?" என்று அந்த நிகழ்வினை நினைத்தவனுக்கு கோபத்தை மீறி புன்னகையே அரும்பியது.

"அப்ப வேலை தர முடியாது எண்டு சொல்ல வேண்டியது தானேடா! எதுக்கு ஓகே சொன்ன?"

"அவ்ளோ ஈஸியா அவளை விட மாட்டன்?.
நேற்று போகேக்க, இவர் பெரிய மினிஸ்டர், இவரை பார்க்க தூங்காமல் நாங்க காத்து கிடக்கிறோம் எண்டா....
தானாக வந்து சிக்கினவளை சும்மா விடுவனா...?" என்றவனிடம்,

"ஏய் அவ சின்ன பொண்ணுடா! ஏதோ விவரம் தெரியாம சொல்லி இருக்கும். அதுக்கு போய்...! அவளை எதுவும் செய்யாதடா..!" என துஷாவிற்காக அவன் பரிந்து பேச.

"இருகட்டுமே! தெரியாமலே செய்திருக்கட்டும்.. ஆனா நான் தெரிஞ்சு செய்யிறன்.
நீ இப்போ நான் சொல்லுற போல பேப்பர் ரெடி பண்ணு. " என்றவன் தனது திட்டத்தை கூறினான்.
அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்தவன்,

"மச்சான் நீ சரியில்லடா..! இது அவளை நீ பழிவாங்க செய்யிறியா? இல்ல அவளை உன்னை விட்டுட்டு போகக்கூடாது எண்டு போடுற பிளானா?.." என்றான்.

"நீ சொல்லுறதாயும் இருக்கலாம்." என சாதரணமாக சொன்னவனிடம்.

"என்ன லவ் வாடா?.."

"தெரியேல..... அதுவாயும் இருக்கலாம்... இல்ல.. வெறும் ஈர்ப்பா கூட இருக்கலாம்.. ஆனா எனக்கு இது எதிலையும் நம்பிக்கை இல்லை.
என் எதிரிலை நின்று பேச கூட யாராக இருந்தாலும் பயப்படுவாங்க!


ஆனா என் எதிரில நின்டு ஒரு பொண்ணு பேசிட்டா டா... சும்மா விட சொல்லுறியா?
கடைசி ஒரு வருஷத்துக்காவது, அவளை என் கட்டு பாட்டில வைக்கணும்.

ஆனா ஒன்டு... அவ அவ்ளோ பேசியிருக்கா... எனக்கு கோபத்துக்கு பதிலா சிரிப்புத்தான் வருது.

இதுவே வேற யாராச்சும் இருந்திருந்தா. இருக்குற இடம் தெரியாம செய்திருப்பன்.
அவள் பேசுறது சின்ன பிள்ளையை கண்டிப்பது போல தான்டா இருந்துது." என்றவனை வினோதமாக பார்த்தவன்,

"ஆமாடா! அப்பிதான் இருக்கும்.. ஏன்னா உன்னட்ட வந்து மாட்டிட்டாளே! பாவம்டா.. யாரும் இல்லாத பொண்ணு வேற." என்றான் அவளின் மேல் கருணை கொண்டு.

"நீ பாவம் பாத்தது போதும். நான் சொன்னதை செய்யிறியா?" என்றான் கறாராக.


என்ன மாயம் செய்தாயடி பெண்ணே
உன் விழிகளால் கைது செய்து எனை
உன் இதய கூண்டுக்குள் அடைத்து வைத்தாய்
தப்பி செல்ல தான் நினைக்கின்றேன்.


என் மனம் ஏனோ மீண்டும் மீண்டும்
உன் விழி விலங்கில் மாட்டிக் கொள்ள துடிக்கின்றது.
போதுமடி என் சிறை வாசம்
விடுவித்து எனை என்னிடமே தந்துவிடு பெண்ணே.




மறைத்து வைத்த வார்த்தைகளும்
ஔித்து வைத்த எண்ணங்களும்
வெளிவர துடிக்கின்றது
அவள் விழி பார்வை
வேறொருவனை தீண்டுகையில்.


ரதன் கூறியதை போல் பேப்பரை தயாரித்து ரதனிடம் கொடுத்தான் ரவி..

அதை ஆராய்ந்தவன் துஷாவை அழைத்தான்.

"உக்காருங்க துஷா" என்றவன், அவளிடம் பேப்பரை நீட்டி,

"படியுங்க... வர்மனையும் கூப்பிட்டு அனுப்பியிருக்கன். அதுக்குள்ள வர்மன் வந்துடுவான்.. ரெண்டே பேருக்கும் சேர்தே விளக்கம் தாறேன்." என்றவன்
தனது இருக்கை நுணியில் நகர்ந்து அமர்ந்து, முழங்கை இரண்டையும் மேசையில் ஊன்றி, நாடிக்கு முன்று கொடுத்தவன், பத்திரத்தை படிப்பவள் முகம் மாறுதலை பார்கலானான்.

பத்திரத்தை படித்தவளுக்கு 'இப்படியும் சட்டதிட்டங்களா?' என்று நினைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனது குறு குறு பார்வையில் ஏதோ போல் உணர்ந்தவள். கேட்க வந்த வார்த்தைகளை முழுங்கி,

வர்மன் வரும் வரை மீண்டும் தலை குனிந்து, அதையே படிக்கலானாள்.

அதற்குள் வர்மனும் வந்து விட,

"வாங்க வர்மன்..! உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை.
இப்ப இங்கே வேலை செய்யிறவங்க காரணம் சொல்லாம திடீர் எண்டு வேலையால நின்டுறாங்க..,


அதால புதுசா அந்த இடத்துக்கு ஒருதங்கள போட்டா, அவங்களும் வேலைய பழகிட்டு நிக்கிறாங்க..
இதனாலேயே நிறைய சிக்கல் வருது.
அதனால புதுசா சில நிபர்ந்தனையோட தான் வேலைக்கு ஆள் எடுக்கிறது எண்டு நினைச்சிட்டேன்.


அது என்ன எண்டா
குறைஞ்சது ஒரு வருசமாவது இங்க வேலை செய்யோணும்.

அதுக்கு பிறகு வேலை செய்ய விருப்பம் இருந்தா அதே வேலைய தொடர்ந்து பார்க்கலாம்.
இல்லை எண்டா
ஆறு மாதங்களுக்கு முன்னமே எனக்கு அறிவிக்கோணும்.

அதுவும் இவ இடத்திற்கு இன்னொருத்தர நியமித்து அவர்க வேலை பழக்கின பிறகு தான நிக்கோணும்." என்றான்.









அவன் கூறியதை கேட்டதும் வர்மன் தான் முதலில் அதிர்ந்தான்.

'இப்படி ஒரு நிபர்ந்தனை தேவை தானா..?
அதுக்கு அவசியமே இல்லையே!

இங்க தர்ற சம்பளத்துக்காகவே வேற சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யிறவங்களே அதை விட்டுட்டு இங்க வரேக்க, ஏன் இதெல்லாம்...?'
ஆயிரம் கேள்விகள் அவனை குடைந்தாலும், ரதனிடம் ஏன் என்று கேட்டிட முடியுமா..?

என்ன தான் சொல்கிறான் என்று கேட்போம். என்று அவன் முகத்தையே நோக்கினது.
தன்னுடைய நிபர்ந்தனையை கூறி விட்டு, அவர்களை ஏறிட்டவன்,


"இதுக்கு சம்மதம் எண்டா, சைன்ன வைச்சிட்டு வேலையில சேரலாம்.
நான் யாரையுமே கட்டாயப் படுத்தேல." என்றவன்,

"சம்மதிச்சு கையெழுத்து போட்ட பிறகு, அதே போல நடக்கேல எண்டா, சட்டப்படி நவடிக்கை எடுப்பன் எண்டும் அந்த பத்திரத்தில சேர்த்திருக்கிறன்..
அவசரம் எதுவும் இல்லை மிஸ் துஷாந்தினி. இப்பவே கையெழுத்து போட வேணூம் எண்டில்ல...


ஒரு கிழமை உங்களுக்கு டைம் தாறேன்.
அதுவரைக்கும் இங்க நீங்கள் வேலை பார்க்கலாம். பிடிச்சிருந்தா இதில கையெழுத்து போட்டுட்டு உங்கட வேலையை தொடரலாம்.


இல்லை எண்டா நீங்க போகலாம். ஆனால் ஒரு வாரம் மட்டும் தான் டைம்" என்றவன்." அவன் பேச்சில் துஷா விழிப்பதை கண்டு,

"என்ன ரவிவர்மன்? நீங்க கூட்டிக் கொண்டு வந்தவங்க முழிக்கிறத பார்த்தா, ஒரு வாரம் என்ன? ரெண்டு நாள் கூட தாக்கு பிடிக்க மாட்டாங்க போலயே!" என்றான் கேலியாக.

அவன் அப்படி கேட்டதும், எங்கே தன்னால் வர்மனுக்கு அசிங்கமாகி விடுமோ! என்று நினைத்தவள்
அந்த பத்திரத்தை எடுத்து,

'எது வந்தாலும் பார்த்து விடுவோம்.

இவன் என்னை பழி வாங்கவே செய்தாலும் பரவாயில்லை. தாங்கிக் கொள்ளுறன். ஆனா அண்ணாவ இவன் அசிங்கமா கதைக்க கூடாது.' எண்ணியவள் அதில் கை ஒப்பமிட்டாள்.

அவனுக்கு தான் தெரியுமே! எங்கு அடித்தால் என்ன காரியம் ஆகும் என்று
அதனால் தான் அவ்வாறே கூறினான்.

"என்ன துஷாந்தினி! இப்பிடி பண்ணிட்டிங்களே! ஏன் இவ்ளோ அவசரம்? அது தான் ஒரு கிழமைக்கு டைம் இருக்கே!
சரி இருக்கட்டும்! இருந்தாலும் இந்த சைன் ஒரு வாரத்துக்கு செல்லாது. பிறகு உன் விருப்பம்." என்றவன் வர்மன் புறம் திரும்பி,

"என்ன வர்மன்! அவங்க தான் யோசிக்காம கையெழுத்து போடுறாங்க.. பாத்திட்டு இருகிங்க.

நாளைக்கே இந்த வேலை பிடிக்கேல.. போக போகிறன் எண்டா, நஷ்ட ஈடா எவ்வளவு வேணும் எண்டாலும் நான் கேட்க ஏலும். இதை எடுத்து சொல்ல மாட்டிங்களா?" என்றான் வர்மனின் அசட்டுத்தனத்தை பார்த்து உள்ளே மர்மமாய் புன்னகைத்தவாறு.

அவன் அவ்வாறு கூறியதும் தான், எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன் என்பதை உணர்ந்தவள்,


அங்கு நின்றவர்கள் முகத்தை பீதியில் ஒவ்வொருவராக ஏறிட்டு, வர்மனில் நிலைக்கவிட்டவளது பயத்தினை அறிந்து கொண்ட வர்மனோ,

அவள் தோளில் அழுத்தமாக கை பதித்து, ஆதரவாய் தட்டி கொடுத்தவன் பார்வையால்,

'நான் இருக்கிறன்.. அப்படி எதுவும் நடக்காது.' என்று கண்களால் சமாதானம் செய்யதவனது செயலிலேயே அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்ததே.



இவள் நடுக்கத்தை கண்டு, அவனோ கண்களால் சமாதானம் கூற, அதில் சாந்தமானவளது கண்களின் சம்பாசனைகளை, ஒற்றை புருவம் உயர்வில் கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு, உள்ள தகதகவென அனலானது கொழுந்து விட்டெரிந்தது.

"ஓகே வர்மன்! இவங்கள கூட்டிக்கொண்டு போய், என்ன வேலை எண்டுறதையும் விளக்கமா சொல்லுங்க." என்றான்.


"சரி சார்... நான் வாறேன்" என்றவன்,

"வா துஷா!" என்று முன்னே நடக்க, அவன் பின்னே ஓடிச்சென்றாள்.

" எனக்கு ஏதோ கருகுற மாதிரி வாடை வருதே! உனக்கு அப்படி ஏதாவது தோன்டுதா மச்சான்." என்றான் ரவி.

மேசையில் இருந்த பேனா ஒன்றை எடுத்து அவன் மேல் வீசியவன்,
"என்ன....... நக்கலா?"

"பின்ன என்னடா...!
அவன் என்னடா எண்டா கண்ணாலையே கதைக்கிறான். நீ அப்பிடியே அவங்கட வாயை பாத்துட்டு நிக்கிற...
என்ன உன்னோட சாப்பாட்டை, எவனோ ஒருத்தன் தட்டிப்பறிச்சு, சாப்பிடுறது போல ப்பீல் ஆகுதா?' என்றான் நக்கலாக.


"இல்லடா! அவன் அவளை எப்பிடி கூப்பிட்டான் பாத்தியா? துஷாவாமே...! பேரு வைச்சவன் கூட இவ்ளோ உரிமையா கூப்பிட மாட்டாங்கடா..!
அவளுக்கு தான் துஷாந்தினி எண்டு அழகான பெயர் இருக்கே! அதை சொல்லி கூப்பிட்டா அவ பாக்க மாட்டாளோ...?... என்றான் கடுப்பாக.

அவனது கோபமான பேச்சில் பெரிதாக சிரித்தவன்,
"அவளை எப்படியோ அவன் கூப்பிட்டு போறான்? உன்ர வேலையை பாரு!" என்றவன்,

"சரி மச்சான்! நான் போய் வாறேன்டா.
பாட்டிய கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போக வேணும்." என்ற போது தான் ரதனுக்கே நினைவு வந்தது.


"மச்சான் சொல்ல மறந்துட்டன்டா!
பாட்டி மயங்கி விழுந்தாங்களே நினைவிருக்க? என ரதன் ஆரம்பிக்கும் முன்னரே.

"அதுக்கென்னடா? அதுக்கு தான் அண்டைக்கே அந்த மொத்து மொத்திட்டியே! இன்னும் எதாவது மிச்சம் இருக்கா?

வேண்டாம்டா தாங்காது இந்த உடம்பு. அப்புறம் கொலை கேஸ்ல உள்ள போயிடுவ" என்றவன் எங்கு அன்று போல் அடிக்கத்தான் போகிறான் என உடம்பினை வளைத்து அமர்ந்து கொண்டான்.

"அது இல்லடா! அண்டைக்கு பாட்டிக்கு உதவினாளே அது அதான்டா" என்றான்.
"யாரு துஷாந்தினியா?" என்றான் ரவி ஆச்சரியமாக.

"ம்ம்ம் அவதான்."


"ஏன்டா! அத முன்னமே சொல்ல மாட்டியா?
சொல்லியிருந்தா, ஒரு நன்றி சொல்லி இருப்பனே!" என்றவன்,

"இரு அவளிட்ட போய் சொல்லிட்டு வாறேன்" என்று இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள எத்தணிக்க,

"நீ ஒண்டும் கிழிக்க வேண்டாம். உன் வேலைய பாரு! நானே சொல்லுன்." என்றவன் அவனை விரட்டியே விட்டான்.


அவனை விரட்டியதும், வேலையில் கவனம் செல்லாது, எதையெதையோ சிந்தித்தவன்,

இங்க இருந்து வேலை ஓடாது. என தோன்ற வெளியேறியவன் நேராக வீட்டிறனகே சென்றான்.

சோபவில் அமர்ந்திருந்த வசந்தாவோ, தன் கால் முட்டியை தானே அழுத்தியபடி அமர்ந்திருக்க, அவர் முன் வந்து நின்றவன்,

"என்னாம்மா.... கால்வ லிக்குதா?
எங்கயாவது நடந்து போனிங்களா?" என்றான் அக்கறையாய்.

" பக்கத்தில இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போனன்ப்பா! அது தான் கொஞ்சமா முட்டி வலிக்கிது." என்றார்.

"ஏம்மா நடந்து போனீங்க? அது தான் வீட்டில கார் இருக்கே!
இந்த வயசில நடந்தெல்லாம் தேவையா?


இப்ப என்ன குறை நான் உங்களுக்கு வைச்சிட்டன் எண்டு, கோவிலுக்கு போனீங்கள்? என்றான் காலை அழுத்திக்கொண்டிருந்தவர் வேதனை தாங்காது கோபமாக..


"இருக்கேடா..! குறை இருக்கிறதால தானே போனன்.
காலா காலத்தில கல்யாணம் செய்து, எனக்கொரு பேரனையோ, பேத்தியையோ பெத்து போட்டிந்தா, நான் ஏன் கோவிலுக்கு போறன்.!


அதுங்களோட விளையாடவே என்ர பொழுதுபோகுமே!." என்றான் இத்தனை வயது வந்தும் மகன் திருமனத்துக்கு சம்மதிக்கவில்லை என்ற கவலையில்.

"அது சரி! இந்த நேரத்தில வீட்டுக்கு வர மாட்டாயே! எதையாவது விட்டுட்டு போட்டியா? "


"இல்லம்மா அது.., எனக்கு.." என்று இதுவரை இல்லாது தடுமாறியவன்,


"தலை வலிக்கிறா மாதிரி இருந்தது. அது தான் கொஞ்சம் தூங்கி எழும்பினா சரியாகும் எண்டு வந்தன்." என்றான்.

"இதுக்கு தான் சொல்கிறன். உன்னை கவனிக்க உனக்கு எண்டு ஒருத்தி இருந்தா, வேலை வேலை எண்டு இப்பிடி உடம்ப பழுதாக்குவியா..?" என்றவாறு அவன் நெற்றியை தொட்டு பார்த்தார்.

"தலைவிலிக்கும் கல்யாணத்துக்கும் என்னம்மா சம்மந்தம்...? எப்ப பாத்தாலும் ஒண்டை ஒண்டு முடிச்சு போடுறது.

இப்போ என்ன..? உங்க இஷ்டப்படி கல்யாணம் செய்துக்கிறன்.
ஆனால் இப்போ இல்ல.. எப்ப எண்டுமம நானே சொல்லுறன்.
ப்ளீஸ்மா......
இனி இந்த பேச்ச எடுக்காதிங்கோ." என்றாவாறு தாயின் கையை நெற்றியில் இருந்து எடுத்தவன்.


" ஒரே ஒரு டீ உங்க கையால போட்டு தாங்கம்மா!" என்றான் கெஞ்சலாய்.


எதற்கும் பிடி கொடுக்காமல் பேசுபவன், இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே பெரிதென்று சமையலறை நுழைந்தாள்.


அவங்க டீ போடட்டும், அதுக்குள்ள நம்ம ரதன் குடும்பத்தை பற்றி தெரிஞ்சுப்போம்.

செல்வம் வசந்தா தம்பதிகளுக்கு ஒரே மகன் தான் பகீரதன்.
நடுதரமான குடும்பம்.
செல்வமும் சுந்தரமும் (ரவியினுடைய தந்தை) சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள்.


சுந்தரம் ஊர் பெரிய மனிதனின் மகன். பெரிய செல்வந்தனும் கூட.
சுந்தரத்தின் தந்தை ஊரில் பெரிய கடை வைத்து நடத்தி வந்தார்.


மகனுக்கு திருமணம் செய்து வைத்தவர், மகனது ஆசைக்கு இணங்கி, அவனுக்கும் ஓர் கடையினை போட்டுக் காெடுத்தார்.


தனது நண்பனான செல்வத்திடம் கடையின் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு, வெளிவேலைகளை பார்க்க சென்று விடுவார் சுந்தரம்.

அக்கடையை விரிவாக்கி, எல்லா வசதிகளும் கொண்ட கடையாக மாற்ற வேண்டும் என்று செல்வம் சுந்தரத்திற்கு ஒரு ஐடியா சொல்ல,.
சுந்தரத்திற்கும் அதுவே சரி எனப்பட்டது.

ஆனால் இனி தந்தையிடம் பணம் கேட்க முடியாது.
மாற்று ஏற்பாடு செய்யலாம் என்றதும்.
வங்கியில் லேன் வாங்கலாம் என்றான் செல்வம்.
அதற்கான பத்திரங்கள் எல்லாம் ரெடி பண்ணிக் கொண்டு, நாளைக்கு வீட்டிற்கு வா! என்று செல்வத்திடம் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு சுந்தரம் சென்று விட்டான்.

மறு நாள் அவன் வீடு தேடிச்சென்றவனை வரவேற்றது சுந்தரத்தின் மனையாள் கலாவின் கோபக்குரல்.


"யாரை கேட்டு இந்த முடிவெடுத்தீங்க? ஒண்டுமில்லா அந்த செல்வத்தை பார்ட்னராக எப்படி ஆக்குவிங்க?
எந்த முதலும் போடாம ஓசியிலயே, அவனும் முதலாளி எண்டு உரிமை கொண்டாட போறானா?" என்ற வார்த்தையில், அதற்க மேல் அவன் வீடு போகமல் வாசலோடே திரும்பி விட்டார்.

அவருக்கே அப்போது தான் தெரியும். நண்பன் தன்னையும் முதலாளி இடத்தில் வைத்து பார்க்க ஆசை படுகிறான் என்று.

ஆனால் அது அவன் மனைவிக்கு பிடிக்கவில்லையே!.
தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும். என நினைத்தவன்,

நன்பனுக்கு போன் போட்டு,

" பத்திரம் தயாரா இருக்கு, ஒரு அவசர வேலை, அதனால வீட்டுக்கு வரமுடியேல.
யாரையாவது விட்டு எடுக்கிறியா?" என்றவன் போனை வைத்து விட்டான்.

செல்வம் குரலில் இருந்த மாறுதலை உணர்ந்தவனும், உன்மையில் வர முடியாத காரணமாக இருக்கலாம் என்று விட்டு விட்டான்.


மறு நாளும் அவன் வேலைக்கு வராதது ஏதோபோல் இருக்க, போனில் அழைத்தான்.

பகீரதன் தான் போனை எடுத்ததே.


"என்ன அங்கிள் சொல்லுங்க?" என்றவன்,

"அப்பா வெளிய போட்டாரே." எனறான்.

"எங்க போனான் எண்டு உனக்கு தெரியுமா?"

"ஆ.... தெரியும் அங்கிள்! அப்பா புதுசா கடை திறக்க போறார், அதான் இடம் பார்க்க போட்டார்." என ரதன் சொன்னதும் தான், நேற்று தங்களுக்குள் நடந்த வாக்கு வாதத்தை செல்வம் கேட்டிருக்கலாம். அதனால் தான் அவன் குரலும் ஒரு மாதிரி இருந்திருக்கவேண்டும் என நினைத்தவர்,

"சரி ரதன் அப்பா வந்த உடன, நான் எடுத்தேன் எண்டு சொல்கிறாயா! என்றார்.

"ஓகே அங்கிள்! நான் சொல்கின்றன். நானும் ரவியை கேட்டதா சொல்லுங்காே" என்றது அழைப்பை துண்டித்தார் சுந்தரம்.

இவர்கள் நட்பு இவர்கள் பிள்ளைகளையும் தொடர்ந்தது.

வீட்டிற்கு வந்ததும் வசந்தாவிடம் அனைத்தையும் கூறிவிட்டார் செலாவம்.

தனது நகையுடன் வீட்டு பத்திரத்தையும் கணவனிடம் நீட்டியவள்,

இதை வைச்சு உஙகட நண்பன் இஷ்டப்படி நீங்களும் முதலாளி ஆகோணும்." என்றாள்..


மனைவியை மெச்சும் பார்வை பார்த்து விட்டு, அதை வாங்கியவன் சிறு கடையாக ஆரம்பித்தார்.

பகீரதன் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டின் ஆரம்பமே அது தான்.
ஆனால் அவர்கள் நட்பு அன்பும் குறையவே இல்லை. அவர்கள் வழியில் அவர்கள் புத்திரர்களும் சிறந்த நண்பர்கள்.

பகீரதன் உயர்தரம் படிக்கும் போதே அவனது தந்தை கிருமி சொற்றிற்கு ஆளாகி இறந்து விட, இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்தவன், தந்தையின் நிறுவனத்தை தனது கையில் எடுத்து, ஒன்றை நான்காக்கி இருந்தான்.


தொழில், தொழில் என்றிருப்பதால் தனது வாழ்க்கையை பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை அவன்.

இன்றுமே தாயிடம் தப்பிப்பதற்காகவே அவ்வாறு கூறினான்.

வசந்தா கொண்டு வந்து கொடுத்த டீயினை குடித்தவன், மாடியில் இருக்கும் தனது அறையில் நுழைந்தான்.


டையை லூசாக்கி விட்டு, பெட்டில் அமர்ந்தவன் சிந்தனைகளோ மீண்டும் மீண்டும் அவளிடமே வந்து நின்றது.

ரவிவரமனுக்கு துஷாந்தினியை எப்படி தெரியும்? என்றது தான் மூளையை குடைந்தது.
'இவர்களுக்குள் என்ன உறவு.?' என்றவன் நினைவுகளோ சற்று முன் நடந்தவற்றில் உலன்றது.
பத்திரத்தை பார்த்ததும் குழம்பியவள், அவனை கேலி செய்ததும் எதை பற்றிய சிந்தனையும் இல்லாமல் கையெழுத்திட்டாளே!


பின் அது தவறென நான் விளக்கமாக கூறி, நஷ்ட ஈடு என்றதும் நடு்ங்கியவள், வர்மனின் கை அவளை தட்டி கொடுத்தது,
அதற்கு அவள் அடங்கியது. என்று அனைத்தும் இப்போது ரதன் கண்முன் வந்து போனது.

'முந்தநேத்து பஸ் ஸ்டாப்ல இவனுக்காக தான் காத்திருந்தாளோ?
வர்மனும் அண்டைக்கு லீவ் சொல்லி இருந்தானே!
இவனை நம்பித்தான் இங்க வந்திருப்பாளோ!
அதனால தான் கண் பார்வையில அவளை வைச்சிருக்க, இங்கயே சேர்த்திருப்பானே...!' தலைக்கும் காலுக்கும் முடிச்சிட்டவனுக்கு
ஒன்றோடு ஒன்று பொருந்துவது போல தான் தோன்றியது.

ஆனால் துஷா அப்படி பட்டவள் போல தோன்றவும் இல்லை.
எல்லாவற்றையும் யோசித்தவன்
"பார்க்கலாம்.... எங்க போயிடப் போயினம். என் கண் வளையத்தில் தானே இருக்கோணும்." என்றவாறு மீண்டும் தனது நிறுவனம் சென்றான்.



மாயங்கள் செய்யும்
மர்ம உலகில்
சூழ்ச்சிகள் செய்யாமல்
எனை சுவீகரித்து விட்டாய்.
சூழ் நிலை கைதியாய் என் நெஞ்சம்
உனை சூழ்ந்து விட்டது.
கோபத்தின் முதல் வரியும்
முகவரியும் நானாக இருந்தேன்.
இன்று அன்பின் முதல்வரி அறிந்து
அந்த முகவரியை தேடி செல்கிறேன்.


சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தவன் மின் தூக்கியில் ஏறி நேரடியாக துஷாவின் பகுதிக்கே சென்றான்.

துஷாவிடம் வர்மன் பேசிக்கொண்டிருப்பதை கண்டவன், எப்போதும் போல் ராஜ நடையுடன், பேன்ட் பாக்கட்டினுள் இரு கைகளையும் திணித்தவாறு அவர்கள் அருகில் வந்தவன்,

"என்னென்ன வேலை எண்டு எல்லாத்தையும் செல்லிட்டிங்களா வர்மன்?" என்றவன்.
"ஆனாலும் உங்களுக்கு தெரிஞ்சவர் கடும் டியூப் லைட் போல" என்றான் நக்கல் சிரிப்பென்றை சிந்தியவாறு.



திடீர் என்று ஏன் இவன் இப்படி கூறுகிறான்? என்று இருவருக்குமே விளங்கவில்லை.

ஒரே சேர இருவரும் அவன் முகத்தை ஏறிட,
ரெண்டு மணித்தியாளத்தையும் தாண்டி போகுது, இன்னமுமா சொல்லி குடுக்கிறீங்க." என்றவன் கேட்டது என்னமோ வர்மனை தான்.. ஆனால் பார்வை துஷாவையே மேய்ந்தது.



"இல்லை சார்! நான் வேலையாக நின்டப்ப தான் நீங்கள் ரூமுக்கு வரச் சொல்லி ஆள் அனுப்பினீங்கள்.
அப்ப பாதியில் விட்டு தான் உங்களிட்ட வந்தன்.


பிறகு துஷாவை இங்க விடாடுட்டு, பாதியில விட்ட மிச்ச வேலைய முடிச்சிட்டு, இப்ப தான் திரும்பி வந்து சொல்லி குடுக்கிறன்" என்றான் பாதி உண்மையும் பாதி பொய்யுமாக.

"ஓ..... அப்படியா? இப்ப எல்லாம் விளக்கமா சொல்லி முடிஞ்சுதா..?"
"ம்ம் முடிஞ்சுது சார்." என்றதும் தான்.

"அப்ப இன்னும் ஏன் இங்கயே நின்டு கொண்டு இருக்கிறீங்கள்..?
உங்களுக்கு தான் நிறைய வேலை இருக்குமே! அதை கவனிக்கலாமே!" என்றான் குரலில் அழுத்தத்தை கூட்டி.

அந்த குரலில் இருந்த கட்டளையை புரிந்து கொண்டவர்,

"ஓகே சார்! நான் என் வேலையை பார்கிறன்." என கூறி சென்றான்.

"என்ன துஷாந்தினி! சொல்லித் தந்தது விளங்கிட்டுது தானே!
விளங்கேல எண்டா பரவாயில்லை.. என்னட்ட வந்து கேளு! நான் சொல்லுறன்.. வேலைக்கு வந்துட்டா தேவையில்லாத பேச்சுக்கு இங்க இடமில்லை.


நீங்கள் வந்ததே வேலையை மட்டும் கவனிக்கிறதுக்கு தான் எண்டது நினைவிருக்கட்டும்." என்று கறாராக கூறியவன், சிறிது தூரம் சென்று திரும்பி வந்தவன்,


"இண்டைக்கு உனக்கு முதல் நாள் எண்டுறதால மூண்டு மணிக்கே வீட்டுக்கு போகலாம்...

இண்டைக்கு மாட்டும் தான் இப்படி.! இனி வர்ற நாள் மற்றவர்கள் போல தான் நீயும்...
மறந்துட்டன்... இங்க எல்லாருக்கும் சீருடை குடுப்பம்.. உனக்கும் இருக்கு.


நீ மேற்பார்வையாளர் எண்டுறதால சாறி தான். சோ.... அடுத்த கிழமை வேலை உறுதியாக செய்யிறதா இருந்தா, உனக்கும் அது தருவம்." என்றவன் சென்று விட்டான்.
இவளுக்கு தான் இவன் லூசா என்றிருந்தது.

'வேலைக்கு வந்தா.. வேலை பாக்காம இவனையா பாக்க வந்தன்...?
மற்றவங்க போல தான் நீயும் எண்டா என்ன அர்த்தம்?
நான் என்ன அடமா பிடிச்சன்..?

வேளைக்கு வீட்ட போக போறன் எண்டு! . தானாத் தானே மூண்டு மணிக்கு போ எண்டான்.

இப்பவே தொடங்கீட்டான். ஒரு வருடம் எப்படி போக போகுதோ!' என்று பெரும் மூச்சை விட்டு தனது வேலையை தொடர்ந்தாள்.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
நல்லா இருக்குல்ல.. உங்களுக்கு மொழி விளங்குதா
ஒரு சில வார்த்தைகள் புரியலை சகி, ஆனால் வாக்கியங்களை தொடர்ந்தால் அர்த்தம் புரியுது 👍👍👍👍