• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

06. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ஆனந்தன் அதன்பிறகு அடிக்கடி செங்கல்பட்டுக்கு வந்து போனான்! சும்மா இல்லை, அவனது பணி நிமித்தமாகத்தான்! அவனது வேலைத் திறனைப் பற்றி கேள்விப்பட்டு, அந்த ஊரில் இருந்தவர்கள், அவனுக்கு வாய்ப்புகளை கொடுக்கத் தொடங்கியிருந்தனர்! சொல்லப்போனால், அங்கே ஒரு அலுவலகத்தை திறந்து விட்டான்! சென்னைக்குள் தான் இடமே இல்லாமல் எல்லாம் பட்டா போட்டு விட்டார்களே! ஆகவே ஏற்கனவே, சென்னை முதல் செங்கல்பட்டு வரைக்குள்ளான இடங்களை பட்டா, போட ஆரம்பித்த தொடக்க காலம் அது! அதனால் ஆங்காங்கே தனி வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் முளைக்க தொடங்கியிருந்தது! கட்டுமானக் கம்பெனிகளுக்கு அதிக போட்டா போட்டி வேறு! அதில் ஆனந்தன் முந்நிலையில் இருந்தான்!

அப்படி வரும்போது சில சமயங்களில் சாருபாலாவை சந்தித்தான் ஆனந்தன்! தங்களுக்குள் நல்ல நட்பு உருவாகியிருப்பதாக, சாருபாலா நினைத்தாள்! அவனுடன் பேசுவது பிடித்தது! பிற ஆண்களைப் போல பார்வையால் துகிலுரியவில்லை! முகத்தை பார்த்து பேசினான்! அவ்வப்போது அவன் கண்களில் தெரியும் எதிர்பார்ப்பு அவளை சங்கடத்தில் ஆழ்த்தியது! ஆதலால் அவள் மனம் தூலாபாரம் போல ஒரு நிலையில் இல்லை!

இவ்வாறாக மாதங்கள் சில கடந்து போயிற்று! சுரேந்திரன் ஆசிரியர் பணிக்கான பட்டப்படிப்பை முடித்துவிட்டிருந்தான்! அரசு பள்ளிகளில் பணிக்கு விண்ணப்பித்து இருந்தான்! அது கிடைக்கும் வரை வேறு சில பணிக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தான்! அப்படித்தான், சென்னையில் உள்ள ஒரு பெரிய தனியார் பள்ளிக்கும் விண்ணப்பித்து இருந்தான்! அங்கே ஆசியர் வேலை கிடைத்துவிட, சென்னைக்கு கிளம்பிவிட்டான்! ஒரு மேன்ஷனில் தங்கிக் கொண்டான்!

இந்நிலையில், ஒருநாள் ஆனந்தன், அவளை பார்க்க வந்த போது, கன்னியாகுமரிக்கு ஒரு நட்சத்திர உணவு விடுதி கட்டும் வேலையாக செல்வதாகவும், அதனால் இனி அடிக்கடி சந்திக்க வர முடியாது என்றும் தெரிவித்துவிட்டு சென்றான்! சாருக்கு அப்பாட என்று தான் இருந்தது!

சுரேந்திரனைப் போலவே சாருபாலாவும் அரசு மருத்துவமனைகளில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அதற்காக விண்ணப்பம் செய்திருந்தாள்! அதற்கு முதல் கட்டமாக நேர்முக தேர்வுக்கு சென்னைக்கு அழைத்தனர்! மூன்று சுற்று தேர்வில், அவளுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது! ஒரு மாதம் கழித்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் வந்து பணியை ஏற்றுக்கொள்ளச் சொன்னார்கள்!

பூபதிக்கு, மிகுந்த சந்தோஷம்! பிள்ளைகள் அங்கே இருக்க தான் மட்டும் எதற்காக தனியாக இருக்க வேண்டும் என்று, அந்த ஒரு மாத அவகாசத்தில், வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, கடையையும் வேறு ஒருவரிடம் கைமாற்றிவிட்டு, பிள்ளைகளுடன் சென்னையில் வந்து குடியேறிவிட்டார்!!

அவள் சென்னை வந்ததைப் பற்றி ஆனந்தனிடம் சொல்லவில்லை!
காரணம் அவனுக்காக வந்ததாக தப்பர்த்தம் செய்து கொள்வதை அவள் விரும்பவில்லை!

சாரு புதிய வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள், கடந்து விட்டது! ஆனந்தன் அவளை சந்திக்க வரவில்லை என்றாலும் அவ்வப்போது கைப்பேசியில் நலம் விசாரித்துக் கொண்டுதான் இருந்தான்! அப்போதும் கூட சாருபாலா தான் ஊர் மாறி வந்ததை தெரிவிக்கவில்லை!

ஒருநாள்.. மத்தியான வேளை..! சாருபாலா, ஒரு நோயாளிக்கு அவசர சிகிச்சை செய்வதற்காக, சென்றிருந்தாள்! அந்த தெருவில் ஆனந்தனின் வீடு இருப்பது அப்போது அவளுக்கு தெரியாது! அவள் வந்த வேலை முடிந்து கிளம்பும் சமயத்தில், தன் வீடு இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன்பாக, இருசக்கர வாகனத்தில், வந்து இறங்கினான்! ஆனந்தன்!

சாருபாலா தான் முதலில் அவனை பார்த்தாள்! அவன் ஏதேனும் வேலை விஷயமாக வந்திருந்தால்?
தன்னால் எதற்கு தொந்தரவு என்று நினைத்தவள், அவளது இருசக்கர வாகனத்தில் ஏறி கிளப்பியும் விட்டாள்! ஆனால் அதற்குள்ளாக ஆனந்தன் அவளை பார்த்துவிட்டான்!

"ஹே.. சாரு, வாட் எ சர்ப்ரைஸ்? சென்னைக்கு எப்போ வந்தாய்? இந்தப் பக்கம் வந்திருக்கிறாய் ? இங்கே யாரும் உறவினர் இருக்காங்களா? என்று, படபடவென்று, கேட்டபடி அவளிடம் வந்தான்!

சாரு, வேறு வழியின்றி, தன் வேலை விவரம், மற்றும் அங்கே வந்த காரணம் எல்லாமும் சொல்லிவிட்டு, "நீங்க?" என்றாள்!

ஆனந்தனுக்கு அவள் சென்னை வந்த விஷயத்தை சொல்லாதது உள்ளூர சற்று வருத்தமாக இருந்தது! கூடவே அவனுக்கு அவளது எண்ணமும் புரிந்ததால், அதைப் பற்றி, பேசாமல் விட்டுவிட்டு,"அதோ அந்த அப்பார்ட்மெண்ட்ல தான் நம் வீடு! இப்போதைக்கு சொந்தமாக இருப்பது, அந்த டபுள் பெட்ரூம் பிளாட் தான்! கூடிய சீக்கிரமாக பங்களா வீடு கட்டும் யோசனை இருக்கிறது!" என்றவன், "இவ்வளவு தூரம் வந்துவிட்டாய் , வீட்டிற்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு போ! என் அம்மா நல்லா சமைப்பாங்க! அப்படியே உன்னையும் அறிமுகம் செய்து வைக்கிறேன்!" என்றான்.

இவன் என்னவென்று அவளை அறிமுகம் செய்வான்? சாருபாலா உள்ளூர பதறித்தான் போனாள்! ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாது"நீங்க கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி ஆனந்த்! ஆனால், மன்னிக்கவும், நான் இப்ப ட்யூட்டியில் இருக்கிறேன்! போய் ரிப்போர்ட் செய்து விட்டு தான் சாப்பிடப் போகணும்! அதனால இன்னொரு நாள் வந்து விருந்தே சாப்பிடுறேன்! இப்ப வீட்டில் அப்பாவும், தம்பியும் எனக்காக காத்திருப்பாங்க! நான் போய் தான் சாப்பாடு கொடுக்கணும்!"

"ம் ம்.., சரி நீ இவ்வளவு தூரம் சொல்றதால விடுறேன்! ஆனால், எனக்காக, இந்த வெயிலுக்கு, ஜில்லுனு ஒரு கூல் ட்ரிங்காவது சாப்பிட்டு போகணும்! நீ மறுக்கக்கூடாது! என்றவன் இரண்டு வீடுகள் தள்ளியிருந்த குளிர்பான கடைக்கு அழைத்துப் போய் ஒரு பழரசத்தை குடிக்க வைத்த பிறகே, அவளை போக விட்டான் ஆனந்தன்!

அந்த செயலே தனக்கு வினையாக மாறும் என்று ஆனந்தன் அப்போது அறியவில்லை!

🩷🩷🩷

ஆனந்தனின் வீட்டில்..

விசாலாட்சி, மகனுடைய வண்டி சத்தம் கேட்டுவிட்டு, உணவை எடுத்து மேசை மீது வைத்துவிட்டு,சில கணங்கள் காத்திருந்தார்! ஆனால் மகன் வருவதாக காணோம்! இவ்வளவு நேரமாக என்ன செய்கிறான் என்று அவர்கள் வீட்டு பால்கனியில் வந்து நின்று பார்த்தார்! அவர்களுடையது முதல் தளம்! அப்போதுதான், ஆனந்தன், ஜூஸ் கடையில் இருந்து சாருபாலாவுடன் வெளியே வருவதை பார்த்தார்!

அவளை வழியனுப்பி விட்டு முகமெல்லாம் சிரிப்பாக வரும் மகனை யோசனையுடன் பார்த்திருந்தார்! அவர் மனதுக்குள் அபாய மணி அடித்தது! இதை வளர விடக்கூடாது, இல்லாவிட்டால் அவர் தகனவு கண்ட வாழ்க்கை, கனவாகவே போய்விடும் என்று தோன்ற, ஒரு கணம் பதறித்தான் போனார்! உடனடியாக, அவர் மனம் செய்ய வேண்டியதை யோசித்து கொண்டதோடு, அப்போதைக்கு அவர் எதையும் மகனிடம் காட்டிக் கொள்ளவில்லை!

அதன் விளைவு... இரண்டு தினங்கள் கழித்து, ஆனந்தனின் தாய் வழியில் தூரத்து சொந்தமான மாமனும்,அத்தையும் வீட்டிற்கு சம்பந்தம் பேச வந்து நின்றனர்!

முன்னறிவிப்பு இல்லாமல், திடுமென, எப்படி திருமணம் பேச எப்படி வந்தார்கள்? என்று செய்வதறியாது திகைத்து நின்றான் ஆனந்தன்!

1000047746.jpg