• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

06. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
54
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
மறுநாள்…

சத்யாவை காண கோவைக்கு கிளம்பிவிட்டான் கண்ணன். அவள் படிக்கும் மாணவி, அவள் எண்ணத்தை கலைக்க கூடாது என்று கண்ணன் எண்ணினான். ஆகவே அவள் அறியாமலே அவளைப் பார்த்தான். நேரில் அவள் இன்னும் அதிகமாய் மனதை கவர்ந்தாள். சும்மாவே அவள் மீது பரிவும் பிரியமும் கொண்டிருந்த மனதுக்குள் மாற்றம் ஒன்று கட்டுப்படுத்த முடியாமல் நிகழ்ந்தது. அதுவரை அவன் அது போன்று உணர்ந்ததில்லை.

அது இன்னதென்று அறிந்தவனுக்கு மனசுக்குள் தென்றல் வீசிற்று. ஓடிச்சென்று அவளை தூக்கி தட்டாமலை சுற்றத் துடித்த உடம்பையும் மனதையும் கட்டுப் படுத்த அவன் ரொம்பவும் சிரமப்பட்டான். சத்யாதான் தன் வாழ்க்கை துணை என்று அந்த கணத்தில் முடிவு செய்தான்.

அடுத்து வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தாய் நாட்டில் சுயதொழில் செய்ய தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான். அத்தோடு அக்காவுடனான தன் தொடர்புகளை தொலைபேசியில் மட்டுமாக வைத்துக்கொண்டான். அதுவும் அடிக்கடி இல்லை. அவசியமான தருணங்களில் மட்டும்.

தொழில் தொடங்கி முழு மூச்சாக வேலை செய்தான். வாரம் தவறாமல் அவன் சத்யாவை காணச் சென்றான், அவள் அறியாமல் தான். தொழில் விஷயமாகவும் அவன் அங்கு செல்ல நேர்ந்தது. அதனால் ஒரு நன்மையும் விளைந்தது.

அவன் நினைவலைகளை தடை செய்வது போல திடுமென கைப்பேசி ஒலித்தது. எடுத்தால் அவர்களின் குடும்ப மருத்துவர் சகாயம் பேசினார். அவர் சொன்ன விஷயம் அதிர்ச்சியை தந்தது.

☆☆☆

நாத்தனாரிடம் பேசிய வசந்திக்கு தம்பி நினைவு வந்தது. எப்போதேனும் கைப்பேசியில் தொடர்பு கொள்வதும், நல்ல நாட்களில் பரிசு அனுப்புவதுமாக தொடர்பை நிறுத்திக் கொண்டு தம்பியும் பாரா முகமாகிப் போனதில் ரொம்பவும் வருத்தம். கூடப் பிறந்தவள் என்பதே இல்லாமல் இப்படியா ஒருவன் விலகிப் போய்விடக்கூடும். அவளுக்கு மட்டும் ஆசை இல்லையா? அக்கா எதற்காக அப்படி சொல்கிறாள் என்று ஒருகணம் சிந்திக்க தோன்றாமல் கோபித்துக் கொண்டு போய்விட்டானே? அவனை அங்கே பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்று அறிந்தவர்கள் கூறும் போது மனம் வலிக்கத்தான் செய்தது. ஆனால் அவளால் அவனை நெருங்க முடியவில்லை.

கண்ணில் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டு அவள் சாப்பாட்டு அறைக்கு வரவும், தர்மலிங்கம் மாமாவின் வீட்டுப் பொறுப்பை கவனிக்கும் கணக்குப்பிள்ளை கணபதி பதற்றமாய் அழைத்தவாறு அலைய குலைய ஓடி வரவும் சரியாக இருந்தது.

அவளது பெற்றோர் காலத்திலிருந்து வேலை செய்பவர் என்பதால் தயக்கமின்றி சாப்பாட்டு அறைக்குள் நுழைய...

"என்னாச்சு, கணக்குப்பிள்ளை? "யாருக்கு என்ன?"அவரது பதற்றம் வசந்தியையும் தொற்றிக் கொண்டது.

"உன் மாமாதான் கண்ணு திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு" தண்ணிய தெளிச்சு மாத்திரையை கொடுத்தாச்சு. வியர்வை ஆறாக ஓடுது. நம்ம டாக்டருக்கு போன் பண்ணினேன். அவர் வர தாமதமாகும்னு மாமாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வரச் சொன்னார். அதுக்குள்ளார அத்தையம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிருச்சு, உனக்கு போன் போட்டா பிஸினு வந்துச்சு. அதான் நானே நேர்ல வந்தேன்" அவர் சொல்ல சொல்ல அவசரமாய் வாசலுக்கு விரைந்து அவர் வந்த காரில் ஏறினாள். கணபதியும் ஏற வண்டி விரைந்தது. நல்ல வேளையாக அங்கே போய் சேர்ந்த போது ஆம்புலன்ஸ் வந்துவிட்டிருக்க மாமாவை ஏற்றிவிட்டு, வசந்தி அத்தையை உடன் அழைத்துக்கொண்டு காரில் பின் தொடர்ந்தாள். அப்படியே கணவனை கைப்பேசியில் அழைத்து விவரம் சொன்னாள்.

மருத்துவமனையில்...

மருத்துவர் தயாராக இருந்தார். தர்மலிங்கத்தை பரிசோதனை செய்துவிட்டு வசந்தியை தனியே அழைத்து விபரம் சொல்ல அவள் அதிர்ந்து போனாள்.

தர்மலிங்கத்தை பரிசோதித்தபின் மருத்துவர் சகாயம் சொன்னது," உன் மாமாவுக்கு இருதயத்தில் பிரச்சினை, ஏற்கெனவே ஒருமுறை இப்படி வலி வந்த போது என்னிடம் வந்தார். அப்போதே சொன்னேன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று" அவர் மேற்கொண்டு சொல்லும் முன்...

கனகவல்லி, "ஐயோ, ஐயோ , கடவுளே நான் இப்போ என்ன பண்ணுவேன், நானும் என் பொண்ணும் எங்கே போவோம்" என்று பெருங்குரலின் அழத் தொடங்கவும்,செவிலியரை அழைத்து அவளை வெளியே அனுப்ப முயன்றார் சகாயம்.

"நா போகமாட்டேன், அவருக்கு என்னனு தெரிஞ்சுக்காம போகமாட்டேன்" என்று வெளியேற மறுத்தாள் கனகவல்லி.

"அப்படியானால் அமைதியாக நான் சொல்வதை கேளுங்கள். முடியாது என்றால் தயவுசெய்து வெளியே போய் இருங்கள். இது மருத்துவமனை, பல நோயாளிகள் இருக்காங்க. அவங்களுக்கு தொந்தரவு உண்டாக அனுமதிக்க முடியாது." என்று டாக்டர் சகாயம் கண்டிப்பான குரலில் கூறவும் அமைதியானாள் கனகவல்லி.

தொடர்ந்து சகாயம், சொன்னார், "அப்போதே நான் சொன்னதை செய்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. வீட்டில் சொல்ல வேண்டாம். நானே வேலைகளை ஒதுக்கிக் கொண்டு வந்து அட்மிட் ஆகிக்கிறேன்னு சொன்னதால் நான் விட்டுவிட்டேன். அப்புறமும் நான் நினைவு படுத்தினேன். மனுஷன் அசையவே இல்லை. இப்போது நிலமை கொஞ்சம் அபாயகரம் தான். அவருக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும். அதில் அவர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவே என்றாலும் சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்சமயம் அந்த சிகிச்சை செய்யக்கூடியவர் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார். அவர் திரும்பி வர ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். அதனால் உடனே சென்னைக்கு அழைத்து போய்விடுவது நல்லது. அங்கு இந்த சிகிச்சையில் பெயர் பெற்ற மருத்துவர் இருக்கிறார். அவர் எனக்கு நல்ல நண்பர். நான் கடிதம் தருகிறேன். கூடவே தொலைபேசியிலும் பேசுகிறேன்" என்றவர், உடனேயே தொலைபேசியில் அந்த மருத்துவரை தொடர்பு கொண்டார்.

வசந்திக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. வாய் பொத்தி அழுகையில் குழுங்கிய அத்தையை சமாதானம் செய்ய முயன்றாள்.

"மாமாவுக்கு ஒன்றும் ஆகாது அத்தை, ஆபரேஷன் பண்ணினால் நிச்சயம் பிழைத்துக் கொள்வார். தைரியமாக இருங்கள்." என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் கதவை தட்டிவிட்டு அவசரமாய் உள்ளே நுழைந்தான் சித்தார்த்.

சகாயம் அவனிடம் விபரத்தை தெரிவித்தார். அவனுக்கும் சற்று அதிர்ச்சிதான் உடனேயே சமாளித்துக் கொண்டு மேற்கொண்டு செய்ய வேண்டியதை மருத்துவரோடு கலந்து அலோசனை செய்தான்.

வசந்தியை மாமாவிடம் இருக்கச் சொல்லிவிட்டு கனகவல்லியை அழைத்து போய் வீட்டில் விட்டவன், கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்யச் சொல்லி அவளை மேலும் அழவிடாமல் துரிதப்படுத்திவிட்டு பயணச் சீட்டுகளுக்கு ஏற்பாடு செய்தான் சித்தார்த்

☆☆☆

அதேசமயம் மருத்துவர் சகாயம் கண்ணனுக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ந்தவன், மேலும் விபரங்களை கேட்டு அறிந்து கொண்டு சித்தார்த்தை தொடர்பு கொள்ள முயன்றான். அது பிஸியாக இருந்தது. அக்காவிடம் பேச அவனுக்கு விருப்பமில்லை. சற்று நேரம் கழித்து இணைப்பு கிடைக்கவும் பேசினான்.

"அத்தான் நான் கண்ணன் பேசுறேன்"

" அடடே, மாப்பிள்ளை எங்க ஞாபகமெல்லாம் இருக்குதா உனக்கு?" என்று கேலியாக கேட்டுவிட்டு ,"உனக்கு தான் போன் பண்ண நினைச்சேன், நீயே பண்ணிட்டே, ஆமா நீ இப்ப சென்னையில் தானே இருக்கிறே? என்றதும்

"ஒருகணம் உள்ளூர வியந்து போனான்,"ஆமா அத்தான். உங்களுக்கு யார் சொன்னது?"

"யாரும் சொல்லவில்லை மாப்பிள்ளை. நானாகத்தான் தெரிஞ்சுக்கிட்டேன், உனக்கும் உன் அக்காவுக்கும் என்ன சண்டை என்று எனக்கு தெரியாது. நான் அவளை கேட்டால் நீ சரியில்லை. மாறிட்டேனு சொல்றா. அது கோபத்தில் சொல்கிறாள் என்று எனக்கு தோனுது. அது உங்கள் இருவருக்கும் உள்ளது. அது எனக்கு தேவையில்லை மாப்பிள்ளை. எனக்கு எப்பவும் நீ பாசமுள்ள மைத்துனன் தான். உன் நலனில் எனக்கு அக்கறை இருக்கிறது கண்ணா, அதை நீ எப்போதும் நினைவில் வைத்துக் கொள்."

"ம் ம்... அடடா அதெல்லாம் நீங்க சொல்லணுமா அத்தான்? உங்களைப் பத்தி எனக்கு தெரியாதா? என்றவன், "நான் இங்கே தனியா பிஸினஸ் பண்றேன் அத்தான். நல்லா இருக்கேன். ஆனால் ப்ளீஸ் அத்தான் நான் இங்கே இருக்கிற விஷயத்தை அக்காகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க. உங்ககிட்ட பேசாமல் இருந்ததுக்கு காரணம் அக்காவுக்கும் உங்களுக்கும் என்னால பிரச்சினை வரவேணாம்னு தான். I'm so sorry அத்தான்" என்றவனின் பேச்சில் குறுக்கிட்டு"

"மாப்பிள்ளை, நமக்குள் மன்னிப்பெல்லாம் எதுக்கு? நீ நல்லா இருந்தா அதுவே போதும், என்றவன் தொடர்ந்து, தர்மலிங்கம் உடல்நிலை குறித்து சொல்லவும்,

"தெரியும் அத்தான். கொஞ்சம் முன்னாடிதான் நம்ம டாக்டர் பேசினார். அதுக்காக தான் நான் போன் பண்ணேன். எல்லாம் சொன்னார். நான் இங்கே எல்லா ஏற்பாடும் பண்ணிடுறேன். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து சேருங்கள்" என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டு அவனுடைய மேலாளரை அழைத்து சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, கைப்பேசியில், சென்னையில் உள்ள அந்த பிரபல மருத்துவமனையை தொடர்பு கொண்டான் கண்ணன்.

 

Attachments

  • FB_IMG_1519991850373.jpg
    FB_IMG_1519991850373.jpg
    92.6 KB · Views: 34