• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

08. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ஆனந்தன் வெளியூர் சென்ற விவரம் சாருபாலாவுக்கு தெரியாது!
ஆகவே முதல் இரண்டு தினங்கள் அவளுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை! ஆனால் நாட்கள் வாரமான போது தான், ஆனந்தன் அவளை அழைக்கவோ, அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை என்பது கருத்தில் பதிந்தது!

சாருவுக்கு வழக்கமாக காலை, மாலை ஆனந்தனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துவிடும், சாப்பிட்டாயா, என்ற சில அக்கறை வார்த்தைகள் அவன் பேசுவான்! அது எதுவும் கடந்த சில தினங்களாக நடக்கவில்லை என்பதால் உள்ளூர துணுக்குற்றாள்! அவனுக்குத் தான் உடம்பிற்கு முடியாமல் போயிற்று போல என்று நினைத்து கொஞ்சம் கவலையாகிவிட்டது!
ஆனால், தீவிரமாக யோசித்தாள்!
அப்படி உடம்புக்கு ஏதும் என்றால் அதை சாக்கிட்டு முதலில் அவளிடம் தானே வந்திருப்பான்? அதனால அவன் நலத்திற்கு ஏதும் சுகக்கேடு இல்லை! அப்படியானால் எதற்காகவாது கோபத்துடன் இருக்கிறானா?? வேலை நடுவே இப்படியான சிந்தனைகள் ஓடியது! ஏழு நாட்கள் கழிந்த நிலையில், அவன் என்ன ஆனான் என்று தெரிந்தே ஆக வேண்டும் என்று அவனது கைப்பேசிக்கு அழைத்தாள்! சில கணங்கள் கழித்து எடுக்கப்பட்டது!

"என் நினைவு எல்லாம் உனக்கு இருக்காதுன்னு நினைச்சேனே! என்ற ஆனந்தனின் குரல் மறுமுனையில் கேட்டது!

"பழகினவங்களை, மறக்கிற குணம் எனக்கு இல்லைப்பா!" என்றாள்

"நல்ல விசயம் தான்! நான் இப்ப வேலை விஷயமா வெளியூர் வந்திருக்கிறேன்! குறிப்பிட்ட நேரத்துல முடிச்சு கொடுக்கணும்! அதான் உனக்கு மெஸேஜ் கூட போடவில்லை! என்றவன்," நீ நலம் தானே? "

சாருவுக்கு அவன் வேண்டுமென்றே தான் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று தோன்றியது! அதை அவனிடம் கேட்டால், அவனது பதில் என்னவாக இருக்கும் என்று அறிந்திருந்ததால், "நான் நல்லா இருக்கிறேன்! நீங்களும்ம் ஹெல்த் பார்த்துக்கோங்க! எனக்கு பேஷண்ட் வந்துட்டாங்க, பை" என்று சாரு கைப்பேசியை வைத்துவிட்டாள்!

ஆனந்தனுக்கு அவளது கைப்பேசி அழைப்பு மேலும் நம்பிக்கையை அளித்தது!

🩷💙🩷

தனுஷ்கோடி தன் மனைவி மகளை அழைத்துக் கொண்டு அன்றே ஊருக்கு கிளம்பிச் சென்று விட்டார்!

விசாலாட்சிக்கு மகன் மீது மிகுந்த ஆத்திரம் தான்! ஆயினும் பெற்ற பிள்ளையிடம் கோபத்தை காட்டுவதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்று அதை மகனிடம் மறைத்து, தினமும் நலவிசாரிப்புக்காக பேசியபோதும், அவனது காதலைப் பற்றி ஏதும் கேட்காதது சற்று உறுத்தியபோதும், தன் காதல் விவகாரத்தை அறிந்து கோபப்படாமல், இந்த மட்டிலும் அம்மா சமூகமாக பேசுவதே, அவர் அங்கீகரித்து விட்டதுபோல, மகிழ்ந்து போனான்!

வேலை முடிந்து ஊர் திரும்பிய மகனிடம் , பட்டும்படாமலும் நடந்து கொண்டார் விசாலாட்சி!

ஆனந்தனுக்கு இப்போது தாயை சமாதானம் செய்வதை விட, சாருவிடம் சம்மதத்தை பெறுவதே முக்கியமாக தோன்றியது! ஆகவே அன்னையிடம் எந்த தர்க்கமும் செய்யாமல், உண்டு ,உறங்கி எழுந்தவன்,முதலில் தன் அலுவலகத்திற்கு சென்றான்! அதன் பிறகு கட்டுமானாம் நடக்கும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டான்! சாருவை கைப்பேசியில் தொடர்பு கொண்டு, சந்திக்க முடியுமா என்று கேட்டான்!
அன்றைக்கு இரவு பணி என்பதால் மறுநாள் காலையில் சந்திக்கலாம் என்றாள்!

மறுநாள்

காலையில் உணவை முடித்துவிட்டு,வெளியே கிளம்பிய ஆனந்தனிடம்," இந்த வீட்டில் எனக்கு என்று எந்த மரியாதையும் இல்லையா? "என்று ஆரம்பித்தார் விசாலம்!

"ஏன் அம்மா ? இப்ப என்ன மரியாதை இல்லாமல் நடந்து கொண்டேன்?"

"உன் அம்மாவா எனக்கும் ஆசை இருக்கும் தானே ஆனந்து? அதை நிறைவேற்றுவது உன் கடமை இல்லையா? அனிதாவுக்கு என்ன குறை? அழகு, படிப்பு, அந்தஸ்து வசதி என்று எதில் குறை? அவளைப் போய் வேண்டாம்னு சொல்லிட்டியே! அன்னிக்கு அந்தப் பொண்ணு எப்படி அழுதாள் தெரியுமா? ஒருத்தர் நம்மளை நிராகரிக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? அதிலயும் எந்த ஒரு குறையும் இல்லாத நிலையில் நிராகரிக்கப்படும் போது ஏற்படும் வேதனையை எப்படி சொல்றது? ஆனந்து அம்மா உன்கிட்ட இதுவரை எதுவும் கேட்டதே இல்லை! இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் நீ சம்மதம் சொல்லு தம்பி! "விசாலம் உருக்கமாக பேசினார்! சொல்லப் போனால் அவர் பேசியதில் நியாயமும் இருக்கத்தான் செய்தது! ஆனால்.. அதற்காக வாழ்க்கை முழுவதும் மனதுக்கு பிடிக்காதவளுடன் எப்படி வாழ முடியும்??

"அம்மா தயவு செய்து, என் மனசை புரிஞ்சுக்கோங்க! என் வாழ்க்கைக்கு நான் ஆசைப்பட்ட பெண் தான் மனைவியாக வரணும்! வேற யாரோடும் என்னால் சந்தோஷமாக வாழ முடியாதும்மா! நான் விரும்பும் பெண் மிகவும் நல்லவள், அழகானவள்! அவளை முதலில் பாருங்கள் ! ஒரு வேளை உங்களுக்கு அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை என்றால் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் அம்மா! கடைசி வரை உங்கள் பிள்ளையாக இருந்துவிடுவேன்! இது சத்தியம் அம்மா!"

விசாலாட்சி, அப்படியே அதிர்ந்து போனார்! அவரது அன்பு மகன், தனி மரமாக வாழவா அவர் இத்தனை பாடுபட்டு வளர்த்தார்??

"ஐயோ ராசா, எதுக்கு இப்படி எல்லாம் பேசுறே? அவள் எப்படி இருந்தாலும் சரி, உன் மனசுக்கு பிடிச்சவளா இருந்தா போதும்! நான் சம்மதிக்கிறேன் கண்ணா"! என்றார் உணர்ச்சி பெருக்குடன்!

அன்னையின் சம்மதம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியுடன், சாருவை பார்க்கச் சென்றான் ஆனந்தன் ! இனியும் அவன் தள்ளிப் போட விரும்பவில்லை!
💙❤️🩷
ஒரு ஜூஸ் ஷாப்பில் ஆனந்தனும், சாருபாலாவும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர்!

"சாரு, நான் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை! ஏற்கனவே நான் என் காதலை சொன்னேன்! நீ மறுத்துவிட்டாய்! அதன்பிறகு நாம் இத்தனை காலமாக பழகி வருகிறோம்! வீட்டுல என் அம்மா கல்யாணம் செய்துக்க சொல்லி ரொம்ப நச்சரிக்கிறாங்க! உன்னை தவிர வேற எந்த பெண்ணையும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது! என் மேலே உனக்கு வெறுப்பு ஏதும் இல்லை! கொஞ்சம் அக்கறை இருக்கிறது! இது எல்லாம் ஒரு திருமணத்திற்கு போதுமானது இல்லை தான் ஆனால், மஞ்சள் கயிறு மாயம் என்பார்களே அதுபோல, நமக்குள் அந்த பிணைப்பு ஏற்படலாம் அல்லவா?"

"ஆனந்த், நான் முதலில் சொன்னது போல எனக்கு திருமணம் செய்வதில் விருப்பமே இல்லை! அது என் வைத்திய தொழிலுக்கு சரி வராது என்று தோன்றுகிறது! ஏனோ எனக்கு குடும்பம், குழந்தை என்ற வாழ்க்கை கால் விலங்காக மாறிவிடுமோ என்று பயம்! அதனால் தயவு செய்து இந்த பேச்சை விட்டுவிடுங்களேன்! நாம் நல்ல நண்பர்களாக எப்போதும் இருக்கலாம்!

"ப்ச், என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா சாரு? உன்னோட பணிக்கு குறுக்கே நான் ஏன் வரப் போகிறேன்? அத்தோடு, உலகத்தில் எத்தனையோ மருத்துவர்கள் திருமணம் செய்து கொண்டு, சிறப்பாக வாழ்கிறார்கள் தானே சாரு? நீ இல்லாத வாழ்வை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை சாரு! எனக்கு நீ துணையாக கிடைத்தால் நான் நிச்சயமாக நிறைய சாதிப்பேன் சாரு!"

சாருபாலா எதிர்பார்த்தது தான்! என்றாலும் ஆனந்தன் புரிந்து கொள்ள மறுக்கிறானே என்று சங்கடப்பட்டாள்! அத்தோடு அவன் சொல்வது போல மருத்துவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழத்தானே செய்கிறார்கள்? ஒருவேளை அவளாலும் திருமண வாழ்க்கையோடு மருத்துவ பணியையும் சிறப்பாக செய்ய முடியுமோ? சற்று நேரம் எண்ணங்களுடன் போராடிவிட்டு, "எனக்கு, யோசிக்க, அவகாசம் வேண்டும் ஆனந்த்! என்னைப் பொறுத்தவரை இது சரிவரும் என்றே தோன்றவிலலை! ஆயினும் நீங்க இவ்வளவு தூரம் சொல்வதால், யோசிக்கிறேன்!" என்று பதில் சொன்னாள்!

"நல்லவிதமாக யோசி சாரு! தற்சமயம், எனக்கும், உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடியாத நிலைதான்! வெளியூர்களில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருக்கிறது! அதனால் அவசரம் இல்லை தான்! ஈசிஆர் பக்கம் நிலம் ஒன்று வாங்கிப் போட்டிருக்கிறேன்! இந்த வேலைகள் முடியவும், அதில் பங்களா கட்ட வேண்டும் என்பது என் கனவு! அது, முடிய எப்படியும் இன்னும் ஒரு வருடத்திற்கு மேலாகும்! உனக்கு அதுவரை அவகாசம்! சரிதானா? "

சாருபாலாவுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை! ஆனாலும் அவனுக்காக அந்த அவகாசத்தை ஏற்றுக் கொண்டாள்!

கல்யாணம் நடந்ததா இல்லையா??
 

Attachments

  • CYMERA_20240326_172924.jpg
    CYMERA_20240326_172924.jpg
    67.9 KB · Views: 13

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கல்யாணம் ஆச்சா இல்லையா...? 🙄
இது தானே நாங்களும் கேக்கறது... 🧐
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஆனந்தன், சாருபாலா கல்யாணம் நடந்ததா இல்ல இவன் அம்மா சாருவை பார்த்து ஏற்கனவே குழப்பதுல இருக்க சாருவை ரெம்ப குழப்பி விலக வச்சுட்டாங்களா 🤔🤔🤔🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ஆனந்தன், சாருபாலா கல்யாணம் நடந்ததா இல்ல இவன் அம்மா சாருவை பார்த்து ஏற்கனவே குழப்பதுல இருக்க சாருவை ரெம்ப குழப்பி விலக வச்சுட்டாங்களா 🤔🤔🤔🤔🤔🤔🤔
அடுத்த எபி போட்டேன் மா படிங்க😍😍