• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

09. சொந்தமடி நானனுக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சாருவுடன் படித்தவர்கள் ஒரு சிலர் மேற்படிப்பை மேற்கொண்டிருந்தனர்!அவளுக்கும் படிக்க ஆசை தான்! ஆனால் புதிதாக சேர்ந்திருக்கும் அரசு வேலையால் நேரம் ஒதுக்கி படிக்க முடியும் என்று தோன்றவில்லை! அதிலும் ஆனந்தன் திருமணப் பேச்சை பேசிவிட்டு சென்ற பிறகு, எதிலும் அவளால், ஒருமனதாக ஈடுபட முடியாத நிலை!

சாருபாலாவிடம் அவகாசம் கேட்டுவிட்டு வந்த ஆனந்தன், தன் அலுவலகப் பணியை விரைவாக முடித்துக் கொடுப்பதில் முனைந்தான்! அவனுக்கு இந்த கால அவகாசத்தில் சாருவின் மனம் மாறிவிடும் என்று பூரண நம்பிக்கை இருந்தது!

இந்நிலையில், தனுஷ்கோடி, ஊர் திரும்பிய சூட்டோடு, மைத்துனர் மாணிக்கத்திடம் சென்று சம்பந்தம் பேசினார்! அவரும் சம்மதித்து பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்டனர்!

அடுத்து வரும் முகூர்த்தத்தில் அனிதாவிற்கும், அவளது மாமன் மகனுக்கும் திருமணம் என்று பேசி முடித்தனர்!

தனுஷ்கோடி மகளின் திருமணத்திற்காக பணத்தை கணக்கு வழக்கு பாராமல் செலவழித்தார்! ஊர் மெச்ச திருமணம் செய்ய ஆசைப்பட்டார்!
இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டில் சீர், பணம் என்று எதுவும் கேட்கவில்லை! திருமணத்தை மட்டும் சிறப்பாக செய்து கொடுத்தால் போதும் என்றிருந்தார் மைத்துனர் மாணிக்கம்!

அந்த திருமணத்திற்கு, விசாலம் முன்னதாக கிளம்பிச்சென்றிருந்தார்! ஆனந்தனுக்கு வேலை இருந்ததால்,காலையில் முகூர்த்த நேரத்திற்கு வருவதாக சொல்லியிருந்தான்!

ஆனால், அனிதாவிற்கு அந்த திருமணத்தில் இஷ்டமில்லை! அவள் மனதில் ஆனந்தன் தான் இடம் பிடித்திருந்தான்! அதை தாயிடம் சொன்ன போது,"இன்னொருத்தியை நினைக்கிறவனை, உனக்கு கட்டி வைச்சு உன் வாழ்க்கையை பாழாக்க நாங்க தயாராயில்லை! அத்தோடு இந்த விசயம் ஊருக்குள்ள தெரிய முந்தி, உன்னோட கல்யாணத்தை நடத்திடணும்னு தான்,உன் அப்பாவே தன் கௌரவத்தை விட்டு, போய் எங்க அண்ணன் வீட்டுல சம்பந்தம் பேசிட்டு வந்திருக்கார்! அதனால பேசாமல் கல்யாணத்தை பண்ணிக்கிற வழியை பாரு, எல்லாப் பொண்ணுகளுக்கும் ஆசைப்பட்டவன் கணவனா அமையறது இல்லை! புரிஞ்சு நடந்துக்கோ " என்று வத்சலா திட்டவட்டமாக சொல்லிவிட்டார்!

ஆனந்தனின் மனதில் இன்னொரு பெண் இருப்பதை அறிந்தது முதல் அவளுக்கு உள்ளூர ஆத்திரம் தான்! ஆனால் அடுத்தவளுடன் அவன் வாழ்வதை பார்க்கும் சக்தியும் இல்லை! அதே போல அவளாலும் இன்னொருத்தனுடன் வாழ முடியாது! திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில், திருமண மண்டபமே ஆழ்ந்த நித்திரையில் இருந்தது! அனிதா கண்ணீருடன், கையில் இருந்த விஷபாட்டிலை பார்த்தவாறு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தாள்! அவளுக்கு சாகும் வயதா என்ன? ஆனால் வாழும் வகையும்தான் தெரியவில்லையே! கண்ணீரை துடைத்துக் கொண்டு, பாட்டிலை திறந்த போது அந்த குரல் கேட்டது!

யாரோ அலறும் சத்தம் அது, தன் கையில் இருந்த பாட்டிலை விட்டெறிந்து விட்டு, கீழே ஓடினாள்!

அங்கே அவளது தாய் மாமன் மாணிக்கம் ஆத்திரத்தில் இறுகிப் போய் அமர்ந்திருக்க, அத்தை செவ்வந்தி, அழுகையில் காட்சியளித்தனர்! வத்சலாவோ தன் அண்ணனை திட்டிக் கொண்டிருந்தார்!

அனிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை! குழப்பமாக, அங்கிருந்தவர்களைப் பார்த்தாள்! எல்லோரும் அவளைத்தான் பரிதாபமாக பார்த்திருந்தனர்!
என்னவாயிற்று? யாருக்கு ஏதும் உடம்பிற்கு முடியவில்லையா?" என்று தன் தந்தையை பார்க்க அவரும் தலையை குனிந்தபடி இறுகிப் போய் அவமானத்துடன் நின்றிருந்தார்!

இங்கே திருமணம் நின்று போயிற்று! ஆம்! மணமகன் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணோடு கம்பி நீட்டிவிட்டான்! அதை கடிதமாக எழுதி சின்னக் குழந்தை கையில் கொடுத்துவிட்டுப் போயிருக்க, அது நேராக தன் தாயிடம் கொடுத்துவிட்டது!

அனைவருக்கும் அந்த செய்தி அதிர்ச்சிதான்! மகன் இப்படி செய்துவிட்டானே என்ற அவமானத்தில் குன்றிப் போனார் மாணிக்கம்! அங்கே இருந்தவர்கள் சற்று நெருங்கிய உறவுகள் தான்!
"பொண்ணு கல்யாணம் மண்டபம் வரை வந்து நின்னுட்டா, அடுத்து வேற யாரும் அவளை கட்டிக்க யோசிப்பாக! அதனால யாரவது முறைப் பையன் இருந்தா கட்டி வைக்கிற வழியைப் பாருங்க" இப்படியாக ஆளாளுக்கு தங்கள் ஆலோசனையை வழங்கிக் கொண்டிருந்தனர்!

"என் மகன் இப்படி செய்வான் என்று நான் நினைக்கலை! அனிதா என் தங்கை மவள், அவளுக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் செய்து வைப்பேன்" இப்போ எல்லாரும் கிளம்புங்க! என்று மாணிக்கம் விஷயத்தை முடித்து வைக்க..

நிம்மதி பெருமூச்சு விட்டாள் அனிதா! விசாலத்திற்கும் திருமணம் நின்று போனதில், ஒரு பக்கம் வருத்தம் உண்டான போதும், மறுநாள் காலையில் மகன் வந்ததும், கண்ணை கசக்கி, அனிதாவை கட்டி வைக்க திட்டம் போட்டார் ! ஆனால் அது, மாணிக்கத்தின் பேச்சில் நிறைவேறாமல் போயிற்று!

ஆனந்தன், திருமணத்திற்காக கிளம்பியிருந்த வண்டி மழை காரணமாக நடுவழியில் நின்று போயிற்று ! மாற்று வண்டியை ஏற்பாடு செய்த போதும் அது வந்து சேர பல மணி நேரமாகும் என்று பயணிகள் அங்கிருந்த தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்தனர்!

காலையிலும் மழை வேறு அடித்து ஊற்றியது! நேரம் செல்லச் செல்ல மழை நிற்கும் அறிகுறியே தெரியவில்லை! பிற்பகலில் தான் மழை சற்று ஓய்வெடுத்தது! இதற்கு பிறகு அங்கே போய் என்ன செய்வது என்று ஆனந்தன் வந்த வழியாக திரும்பி விட்டான்! அதை அன்னையிடம் சொன்னபோது தான், அங்கே திருமணம் நின்று போன விவரத்தை அவர் சொல்ல, ஒரு புறம் மிகவும் வருத்தமாக இருந்தபோதும், மறுபுறம்,அங்கே போகாமல் இருந்ததே நல்லாயிற்று என்று ஆசுவாசம் உண்டானது!

ஊர் திரும்பிய விசாலம்," என்ன இருந்தாலும் அவங்க நம்ம சொந்தம் ராசா! அவங்களுக்கு ஒரு இக்கட்டு என்றால் நாம்தானே உதவணும்? இப்ப அந்த புள்ளையை யார் கட்டிக்க முன் வருவான்? சொந்த மாமன் மகனே கட்டிக்காமல் வேலைக்காரி மேல் காதல் என்று ஓடிவிட்டான்,என்றால் அந்தப் பொண்ணுக்கிட்டே தான் ஏதோ கோளாறு என்று ஊர்ல பேசுவாங்க! பாவம் அனிதா! அப்படியே இடிஞ்சு போய் மூளையில் உட்கார்ந்துட்டா! எனக்கு அவளை நினைச்சாலே தொண்டையில் சோறு இறங்க மாட்டேங்குது கண்ணா" ஒரு பாடு புலம்பி தள்ளிவிட்டார்!

அனிதாவின் மீது ஆனந்தனுக்கு கொஞ்சம் இரக்கம் உண்டாயிற்று! பாவம் எத்தனை ஆசையாக காந்திருந்தாளோ? கல்யாணம் வேண்டாம் என்றால் முன்பே சொல்லியிருக்க வேண்டியது தானே? இப்படி ஊர் முன்னால் அந்த பெண்ணுக்கு மட்டுமின்றி இரு பக்கத்து பெற்றவர்களுக்கும் அல்லவா அவமானமும் வருத்தமும் உண்டாக்கிவிட்டான்? அது சும்மாவே சின்ன கிராமம்! அங்கே தனுஷ்கோடி பெரிய மனிதர் வேறு!
கேட்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் நிலை ரொம்ப கொடுமை! அவனால் பரிதாபப்படத்தான் முடிந்தது!

ஆனந்தனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை! உள்ளூர கொஞ்சம் குற்ற உணர்வு உண்டாயிற்று!

விருப்பம் இல்லை என்கிறவளிடம் காதலுக்காக காத்திருப்பதும், தன்னை துணையாக ஏற்க ஒருத்தி முன்வந்தும் அதை ஒதுக்குவதும்.. மனித மனமே விந்தையானது தான்! அதிலும்.. ஆசை கொண்ட மனதுக்கு எந்த நியாயமும் புரியவில்லையே??
 

Attachments

  • Picsart_24-07-11_20-30-06-906.jpg
    Picsart_24-07-11_20-30-06-906.jpg
    201.9 KB · Views: 12
Last edited: