• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

09. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
பாகம் - 09

"சுடுதண்ணிய கால்ல ஊத்தி டான்ஸ் ஸ்கூல் போகவிடாமல் பண்ணனும்னு நினைச்சேன். அதுல தப்பிச்சிட்டா அந்த வேலக்காரி.

ம்... இந்த லாரியே அவ கால உடச்சி ஓர் இடத்துல உட்கார வச்சிடுச்சி. இனி அவ டான்ஸ் ஸ்கூல மூடவேண்டியதுதான். உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாக முடியுமா? " ஓடும் காரை பார்த்து சிரித்தாள் ஆராதனா.

இமைக்கும் நொடியில் அவ்விடத்திலிருந்து காரை மாயமாக்கினான் வர்ஷன்.

"ஓடு ஓடு.... இதோட வேலைக்காரி ட்டூ பிஸினஸ் மேன் காதல் காவியம் பூல்ஸ்டொப்தான்." முழு திருப்தியோடு ஆனந்தமாய் சிரரத்தவாறு உள்ளேச் சென்றாள் ஆராதனா.

காரணமே தெரியாது வியர்க் விருவிருக்க அங்கு வந்து நின்றான் அகரன்.

அர்ஜன்ட் மெஸ்ஸேஜோடு வர்ஷனது லொகேஷன் மெசேஜைப் பார்த்துவிட்டு, வர்ஷனுக்கு ஏதோ... என பதறி ஓடி வந்தவன், ஹொஸ்பிடல் உள்நுழைந்ததுமே, முதலுதவி பிரிவு வாயிலில், வாடியச் மலராய் நின்று கொண்டிருந்தவனை கண்டான்.

அவனை கண்ட மறுகணமே, உள்ளூர திருப்தியாக, மனம் மறுநொடியே ஏதோ தோன்ற இதயம் தாறுமாறாக துடித்தது.

அதற்கான விடை தேடி வர்ஷன் தோளில் தன் கையினை பதித்தான்.

அதுவரை தூண் இல்லா கூரையாய் தனிமையில் தவித்தவன், ஒர் ஊண்றுகோல் கிடைத்த திருப்தியில் தாவி அவனை அணைத்தான்.

"யாருக்கு என்னாச்சி? ஏன் இவ்ளோ பதற்றம்?" அகரனின் வார்த்தையற்ற முகபாவனை வினவி நின்றது.

"யா...யாழினி... யாழினிக்கு..." தடுமாறித் தவித்தான் வர்ஷன்.

"யாழினீ... யாழினிக்கா..? அம்முக்கு என்னாச்சு? " அகரனின் புருவங்கள் கேள்வியாய் உயர்ந்தது. இதயம் வேகமாய் துடிக்க, கற்பனையற்ற சம்பவங்கள், அவன் முன் நிழலாக நொடிப் பொழுதில் அவனை உருகுழைத்தது.

மூடப்பட்ட அறைக்குளிருந்து ஒரு ட்ரொலி "கிளீஸ் கிளீஸ்" சத்தத்தோடு உருண்டு வந்துக்கொண்டிருந்தது.

அசைவின்றி யாழினி உறங்கிக்கொண்டுச் சென்றாள். அகரனையும் வர்ஷனையும் அந்த ட்ரொளி கடக்க, இருவரும் அதன் பின்னே ஓடினார்கள்.

நீண்ட ஓட்டத்தின் பின், பெண்கள் வாட்டில் (ward) பதினான்காவது கட்டிலிலருகில் நின்றது ட்ரொலி.

பின்னே ஓடிவந்த வர்ஷன் முந்திக்கொண்டு, வலதுபுறமாக நின்றான் அகரன். இரண்டு தாதியர்கள் யாழினியை, ட்ரொலியிலிருந்து கட்டிலுக்கு மாற்றம் செய்ய முயற்சித்தார்கள்.

வர்ஷன் அவர்களை நகர்த்திவிட்டு, அவனது இரு கரங்களால் அவளை ஒரு குழந்தையைப் போல அள்ளி எடுத்து, அந்த கட்டிலில் படுக்கச் செய்தான்.

நெற்றியோடு அவள் தலையை வருடிக் கொடுத்தவன், அசைவின்றிக் கிடந்த அவளை ஒரு நிமிடம் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களிலிலிருந்து, வடிந்த ஒரு துளி நீர், யாழினியின் நெற்றிப்பொட்டில் சொட்டாக விழுந்து வடிந்தது.

தன் தங்கையை காப்பாற்ற, இவள் உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தாளே.... என்ன பெண் இவள்....? அவளது கைகளை எடுத்து ஐந்து விரல்களும் கன்னத்தில் பதியுமாறு பொத்திக்கொண்டான்.

அவள் பாதங்களைப் பற்றிக்கொண்ட அகரனோ,
"சீக்கிரம் கண்ண திற அம்மு, யாருக்குமே கெடுதல் நினைக்க மாட்டியே நீ... எப்படி இப்படியொரு சம்பவம்.....? கடவுளே இவளுக்கா இந்த நில....?" அவளின் உறக்க நிலை, அவனை அசைத்துப்பார்க்க, செய்வது அறியாமல் இறைவனைத் தான் திட்டித் தீர்க்க ஆரம்பித்தான்.

பக்கத்துக் கட்டிலிலுருந்து அவன் கையைப் யாரோ பற்றுவது போலிருந்ததது. விருப்பமே அற்று விழிகளை , திரும்பினான் வர்ஷன்.

அப்போதுதான் நினைவு திரும்பி எழுகிறாள் கவிநிலா.

"அண்ணா..." முணங்கியள் தங்கைப் கண்டதும், பொத்திப் பிடித்துக் கொண்டிருந்த யாழினியின் கரத்தை விட்டான்.
கவியின் பார்வை யாழினியிடம் மாறியது.

மூன்று கிலோ பாரமிருக்கும் அந்த மா கட்டு, அதற்குள் அவளது வலது காலை வலுகட்டாயமாய் புகுந்திருந்ததைக் கண்டாள் கவி.

அதை கண்டதும் தான் சற்று நேரத்திற்கு முன்னர், வீதியில் நடந்த சம்பவவங்கள் அவளது நினைவில் படமாய் ஓடியது.
"ஐயோ... யாழினி...." என எழுந்தவள்,

"என்ன காப்பாற்ற போய்....ச்சே என்னால தான் யாழினிக்கு இந்த நில...
சொரி அண்ணா, சொரி அகரன்....நா கவனமில்லாமல் ரோட்ல நின்னதால தானே, என்னைய காபாற்றப்போய் அந்த லொரியில அவ கால்.... சொரி...ரியல்லி சொர்ரி..." அழுது புலம்ப ஆரம்பித்தாள்.

அவள் புலம்பலை வைத்தே, நடந்ததை ஒரு வாராக யூகித்துக்கொண்டான் அகரன்.

'என் அம்முவோட இந்த நிலைக்கு இந்த ஆட்டக்காரிதான் காரணமா..?'
கோபம் தலைக்கேறினாலும், வர்ஷன் அங்கிருப்பதால் அடக்கிக் கொண்டான் அகரன்.

பார்வை நேரம் முடிய... ஆண்கள் அந்த வாட்டினைவிட்டு வெளியேறவேண்டியிருந்தாலும், இன்னமும் கண் விழிக்காத யாழினியை எப்படி விட்டுச் செல்ல முடியும்.?

"அண்ணா... யாழினி நான் பக்கத்துல இருந்து பாத்துக்கொள்றன். நீங்க ரெண்டு பேரும் போங்க." என்றாள்.

'இந்த ஆட்டக்காரிய நம்பி... எப்படி யாழினிய விட்டுப்போறது???'த யங்கினான் அகரன்.

ஆனாலும் வேறு வழி இல்லை.

"சரி கவி.. நீ இருந்து கவனமா பாத்துக்கோ. இந்தா என் போன்ன வச்சிக்க.... யாழினி கண் முழிச்சதும் அகரன் நம்பருக்கு கோல் பண்ணு. கவனமா பாத்துக்கோ டி..." உயிரை விட்டு பிரியும் உடல் போல் மனமின்றி வெளியேறினான் வர்ஷன்.

யாழினியின் சித்தி, ஆராதனாவை விட இவளே மேல்தான். என என்னியவன்,
"சரி கவனமா பாத்துக்கங்க கவி" கூறிவிட்டு வர்ஷன் பின்னேச் சென்றான் அகரன்.

* **** ***

மறுநாள் காலை பார்வை நேரம்... கண் விழித்தாள் யாழினி. அகரன், வர்ஷன், கவி, அவர்களின் தாய் பார்வதி அனைவரும் சுற்றி நிற்க, யாழியின் பார்வை கவியை நோக்கியே திரும்பியது. அவள் சிரித்தாள். கவி அழுதாள்.

"என்னாலதானே யாழினி உனக்கு இப்படி...! சொரி யாழினி...." சிறு பிள்ளைப்போல் விம்மினாள்.

"இதோ பார்டா....? குழந்த அழுகுது...."
வர்ஷனில் கேலி கேட்டு திரும்பினாள் யாழினி.

"என்னாலதானே யாழினி உனக்கு இப்படி...சொர்ரி யாழினி....."
விரல்களால் கண்களை தேய்த்துக்கொண்டு விம்மி விம்மி கவியைப்போல், வர்ஷனும் நடித்து காண்பிக்க, அங்கிருந்த அனைவரின் உதடுகளிலும் சிரிப்பு தொற்றிக்கொண்டது.

யாழினியின் உதட்டிலும் மெலிதான புன்னகை இழையோடியது.

கூட்டத்தோடு சேர்ந்து சிரித்த வர்ஷனின் ஓரப்பார்வையில், யாழினியின் புன்னகை தாயைத் தேடி கதறி அழைந்த கன்றின் முன், வந்த தாய்பசுவின் முகமாய் பதிந்தது. இறைவனுக்கே நன்றி சொன்னான் உள்ளூர நேசிக்கும் இந்த காதலன்.

"டொக்டர பார்த்து பேசிட்டு வாரேன்" என்று அவ்விடத்திலிருந்து நகர்ந்தான் அகரன்.

காலைச் சற்று தூக்கினாள். அவள் கால்கள் மூன்று கிலோ பாரத்தைச் சுமந்திருப்பதை அப்போதே உணர்ந்தாள்.

தாங்கமுடியாத வலி! ஆனால் நோகும் இடத்தை அவளால் சரியாக உணரமுடியவில்லை. அவள் அழுதால் கவி மீண்டும் வருத்தப்படுவாள். அதனால் வலியை மறைக்க நினைத்தாள்.

இந்த வெகுளிப் பெண்ணின் மனதை புரிந்துக்கொண்டவன், அவள் வலியை உணராமல் இருப்பதற்காக அவள் சிந்தனைகளை வேறு திசைக்குத் திருப்ப நினைத்தான்.

"ஹேய் யாழு.... செம்ம சான்ஸ் உனக்கு.... வீட்டில வேலையே செய்யாமல் ஜாலியா இருக்கலாம். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் யாருக்கு கிடைக்கும்? உங்க சித்திட்டருந்து கொஞ்ச நாளைக்கு ரிலக்ஸா இருக்கலாம் " என்று சிரிக்க.

"ஆமா ஆமா..., நீ கொஞ்சம் ஓய்வெடுக்க.... காலம் தந்த வாய்ப்பாக நினைத்துக்க யாழினி" வர்ஷனின் தாய் சொல்லி முடிக்க,

யாழினி உண்மையாய் அழுதாள்.

அவள் வேலைகளை அவளே செய்து, அவர்கள் வேலையும் செய்யும் போதே அவளை ஒரு தண்டச்சோறாகத்தான் நினைப்பாள் அவள் சித்தி.

இப்போது காலுடைந்து ஓரிடத்திலேயே இருந்தால், சித்திதான் கவனிப்பாளா? இல்லை ஆராதனாதான் கவனிப்பாளா?

இதையெல்லாம் நினைத்தவள் கண்களிலிருந்து நீர் மல மலவென கொட்டியது.

அகரன் வரவும், யாழினி அழவும் சரியாக இருந்தது. வர்ஷனை முறைத்த அகரன்.

"ஏன் அம்மு அழுகுறா?
நீங்க அவளுக்கு என்ன சொன்னிங்க சேர் ? அவள இந்த நிலைக்கு ஆளாக்கினதும் இல்லாமல்.... இன்னும் அழ வைக்கிறிங்களே அறிவில்ல..." கோபத்தில் சற்று அழுத்தமாகவே பேசினான்.

அகரன் வர்ஷனைத் திட்டுவது இதுவே முதல்முறை. அவனிடம் வேலை செய்யும் ஒருவன், அவனையே அதட்டி பேசுவதா? என்ற ஆணவம் இல்லையென்றாலும், யாழியின் இந்த நிலையை நினைத்து அகரனைப்போலவே வர்ஷனும் வேதனைப்படுட்டுக்கொண்டு தான் இருக்கிறான்.

வேணுமென்றே செய்தது போல் அகரன் பேசியதைக் கேட்ட, வர்ஷனுக்கு வேதனையாக இருந்தது. அந்த வேதனை கோவமாக மாறியது.

"எல்ல மீறி பேசுற அகரா, கொஞ்சம் நிதானமா பேசு"

"உன் ஆட்டகாரி தங்கச்சிய காப்பாத்த போய்தானே இவளுக்கு இந்த நில, டான்ஸ் கிளாஸ் அது இதுனு அவளால நடக்க முடியாமலேயே பண்ணிடிங்களே..."

தங்கையை ஆட்டக்காரி என்றதும், வர்ஷனின் கோபம் இன்னும் தலைக்கேறியது.

அழுதுக்கொண்டே வெளியேறினாள் கவி.

வைத்தியசாலையில் அநாகரீகமாக நடந்துக்கொள்ள கூடாது என்பதால், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , அங்கிருந்தால், நிதானம் இழந்துவிட நேரும் என்பதால், அவனை முறைத்து விட்டே வேகமாய் வெளியேறினான் வர்ஷன்.

"நீ அழாத யாழினி. எல்லாம் சரியா போய்டும். " என்றவாறு அவளருகில் செல்ல,

அதுவரை அங்கு நடந்த அந்த வாக்குவாதத்தை தடுக்க முடியாமல், இயலாதவளாய் தவித்துக்கொண்டிருந்தவள்,

"என்ன அகரன்... ஏன் இப்படியெல்லாம் பேசுற நீ? பாவம் கவியும், வர்ஷனும். அவங்களா என்ன தள்ளிவிட்டாங்க.? காட்டு கத்து கத்துற.. உன்கிட்ட சொல்லி பிரரயோசனம் இல்ல..."

அம்மு திட்டியதையெல்லாம் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தானே தவிர, பதிலுக்கெதுவும் பேசவில்லை.

"என்னபா அகரன், டொக்டர் என்ன சொன்னாங்க? எப்ப கூட்டிடுபோகலாம்?"

அங்கு நடந்த சம்பவத்தை குழந்தைகள் சண்டைபோல் பார்த்துக்கொண்டிருந்த பார்வதி, நிதானமாய் யாழிக்கு செய்யவேண்டியது பற்றி விசாரித்தாள்.

" அது வந்து அம்மா...., கால் முட்டியில எலும்பு விலகியிருக்குதாம். மத்தியானம் இந்த மா கட்டை அகற்றிட்டு ஒரு ஒபரேசன் செய்வாங்களாம். நாளைக்கு வீட்ட கூட்டிட்டு போகலாம் எண்டு சொன்னாங்க. மூன்று மாதமாவது நடக்காமல் இருக்கணும். "

"சரி அகரன்... நா இன்னைக்கு பக்கத்துல இருக்கன். ஒபரேசன் செய்றதால மத்தியானம் யாரும் வர தேவையில்லை, "
என்று பார்வதி கூற, பார்வை நேரமும் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

அகரன், வர்ஷனின் தாயிடம் யாழினியை விட்டுச் சென்றான்.

அன்னை இல்லாத குறையை நீக்கினாள் பார்வதி. யாழினியை தாய்போல் அருகில் இருந்து பார்த்துக்கொண்டாள். அருகிலிருந்து தலைதடவி,

"ஒன்னும் யோசிக்காத யாழினி. என் பிள்ளைய காப்பாற்றிட்டு நீ இப்படி படுத்து இருக்கியே... வலிக்குதாடாம்மா? " அன்பாய் கேட்டாள்.

"இல்ல அம்மா, வலி தெரியல, நீங்க கவலப்படாதிங்க"
"ஏன்டாம்மா முதல்ல அழுத? "

"அது வந்து....அது வந்து...அட ஒன்னும் இல்லமா விடுங்க. "

"எதுவாக இருந்தாலும் சொல்லுடாம்மா "

"எனக்கு அம்மா கிடையாது. என் சித்தி கூடத்தான் இருக்கேன். அவங்க எப்பவுமே என்ன திட்டிகிட்டே இருப்பாங்க. இந்த நிலையில என்ன வீட்டுக்குள்ள விடுவாங்களோ தெரியல... அது நினைச்சாதான் பயமா இருக்கு." யாழினி கூறி முடிக்க,

யாழினியை சகிச்சைத் தியேட்டருக்கு எடுத்துச்செல்ல தாதியர்கள் வந்திருந்தார்கள். அவளை பெட்சீட்டோடு இழுத்து, ட்ரொளியில் போட்டு தள்ளிக்கொண்டுச் சென்றார்கள்.

அவள் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி.

* **** ***

மறுநாள் கவியை அருகில் நிறுத்திவிட்டு பார்வதி வீட்டிற்குச் சென்றாள்.

" ஒபரேசன் முடிய வந்து சாதாரண மாகவே இருந்தாள். மருத்து ஊசி போட்டிருந்ததால் வலி தெரியாமல் தூங்கியிருப்பா போல. ஆனால் நடு சாமத்தில் எழுந்து அழத் தொடங்கிவிட்டாள்.

இரவு முழுதும் வலியால் புரண்டுக்கொண்டிருந்தாள். நேர்ஸ் பெய்ன் கிள்ளர் கொடுத்த பிறகுதான் தூங்கினாள். அவள் தூங்கட்டும். கவனமா பாத்துக்கொள்"

என்று கவிக்கு பெரிய ஒரு பாடம் எடுத்துவிட்டே சென்றிருந்தாள் பார்வதி.

வர்ஷன் வந்து போகும் வரை, வெளியில் காத்திருந்து, அவன் சென்றவுடனேயே வந்தான் அகரன்.

அகரன் வந்துச் சென்றவுடன்,

"யாழினியை பார்த்துக்கொள்ள, நேர்ஸ் ஒருதவங்கள போடுருக்கம். நீங்க போகலாம் "
என்றுச் தாதியர் ஒருவள் சொல்ல, வீட்டிற்குச் சென்றாள் கவி.

மதியம் யாழினியை அழைத்துச்செல்ல காரை எடுத்துக்கொண்டு வந்தான் வர்ஷன்.

யாழினியை அருகில் இருந்து எப்படி எப்படியெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு திட்டத்துடனேயே வந்தான்.

இவ்வாறு ஓரிடத்தில் முடங்கவேண்டிய நிலை கவலைக்குரிய ஒன்றாக இருந்தாலும், நேசிப்பவர்களுக்கு அவர்கள் அன்பை முழுதாய் வெளிகாட்டவும், நம்மை நேசிப்பவர்களின் அன்பை முழுதாய் புரிந்துக்கொள்ளவும், கிடைக்கும் ஒரு வாய்ப்பு அல்லவா. அதனாலோ என்னவோ வர்ஷன் ஆரம்பத்தில் அவள் வலியால் துடிக்கும்போது, இவனும் அழுதான் உண்மைதான்.

ஆனால் இப்போது அவனுக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகவே நினைத்தான்.

உள்ளே கிடந்த ஒட்டுமொத்த பாசத்தையும் இழுத்து, ஒரு பாசமூட்டையை நெஞ்சில் சுமந்துக்கொண்டு வந்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

கட்டிலில் யாழினியைக் காணவில்லை. உடனே சென்று விசாரித்தான்.

அகரன் வந்து அழைத்துச் சென்றதாக கூறினார்கள்.

'அவன் எப்படி தனியாக யாழினியை பார்த்துக்கொள்ள முடியும்? அவன் ஏன் இப்படி முட்டாள்தனமான வேலையைச் செய்கிறான்? ' மனதுள் திட்டிதீர்த்துவிட்டு, விறு விறு எனச் சென்று காரில் ஏறினான்.

அவன் அம்மா தான் யாழினியை வீட்டிற்கு அழைத்துவரும்படியும், குணமாகும் வரை அவளே கவனித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தாள்.

இதுதான் அவள் அருகிலேயே இருப்பதற்கு நல்ல வாய்ப்பு என்று துள்ளிக்குதித்து ஓடி வந்த வர்ஷனுக்கு, அகரன் செய்தது பெரும் கோபத்தையே வரவழைத்தது.

வேகமாய் காரை எடுத்தான்.

"அம்மா....அம்மா..." கத்திக்கொண்டே வீட்டினுள் நுழைய, பதறிக்கொண்டு வந்தாள் பார்வதி.

"அம்மா...! அந்த அகரன் செய்த காரியத்த பார்திங்களா? யாழினிய அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருக்கான். அவன் எப்படிம்மா தனியா யாழினிய கவனிசிப்பான்? அறிவுகெட்டதனமா வேல செய்றான்"

தாய் தொலைபேசியில் அகரனுடன் தொடர்பு கொண்டாள். நீண்ட உரையாடலின் பின் அழைப்பைத் துண்டித்து விட்டு,

" அவங்க சித்தி வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது. அவங்க அவள ஒரு சுமையாதான் நினைப்பாங்க. அதனால நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். என் தாய் அம்முவ நானே பாத்துப்பன். அவள கவனிச்சிக்க ஒரு நேர்ஸ்ச அரன்ஜ் பண்ணிருக்கேன்." அகரன் சொன்னவற்றை சொல்லி முடித்தாள் பார்வதி.

ஒரு மாதமாய் அவளை குறையில்லாமல் கவனித்துக் கொண்டான் அகரன். அவளுக்காகவே ஒரு புதிய வீல் செயார் ஒன்றையும் வாங்கியிருந்தான்.


மாத கிளினிக் (பிணி ஆய்வு) முடிய கட்டை பிரித்தப் பிறகு உடற்பயிற்சிக்காக, பிஸியோதரபிஸ்ட் ஒருவரையும் வீட்டுக்கு வரவழைத்திருந்தான்.

ஒரு வாராக அவள் தேறி வந்தாள். வைத்தியர் பூரணக் குணமடைய மூன்று மாதம் ஆகும் என கூறியிருந்தாலும், அகரினின் கவனிப்பினாலும், அகரனுக்கு நீண்டகாலம் சுமை கொடுக்க கூடாது என நினைத்ததாலும், சீக்கிரம் எழுந்து நடந்தே ஆகவேண்டும் என்ற யாழினியின் வைராக்கியத்தினால், இரண்டே மாதங்களில் நடக்கத் தொடங்கினாள். மனதைரியம் உடல் குறையை நீக்கும் என்பது உண்மைதான்.

இரண்டு மாதங்களாய் யாழினியை ஆர அமர தேடி, ஒருவாராக அவள் அகரன் வீட்டில் இருப்பதை தெரிந்துக்கொண்டாள் அவள் சித்தி.

எங்கோ தொலைந்துவிட்ட நிம்மதியில் இருந்தவள், யாழினியின் அப்பாவிற்காகவே அவளை தேடிக்கொண்டிருப்பது போல் நடித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் அமைதியான அந்த தேடல், அகரனின் வீட்டில்தான் இருக்கிறாள் என்று செய்தி கிடைத்ததும் தீவிரமானது.
அது ஏனோ அவளை அகரனுடன் பார்த்தாலே இவள் மனம் சூடேறிவிடுகிறது.

அகரனின் வீட்டு வாசல் முன் வந்து நின்று கத்தத் தொடங்கிவிட்டாள்.

இரண்டு மாதமாய் யாழினியை பார்க்காது தவித்துக் கொண்டிருந்த வர்ஷனுக்கும், அன்றுதான் அகரன் மீதிருந்த கோபம் தனிந்து, அவளை பார்ப்பதற்காக அகரன் வீடு தேடி வந்திருந்தான்.

"அடியே... வெளிய வாடி. வீட்டுக்குள்ள அவனோட என்னடி பண்ற? உன் ஆய்காரி புத்திதானேடி உனக்கும் வரும்... வீட்ட விட்டு வந்து இப்படி தனியா ஒருத்தனோட இருக்கியே...! உனக்கு வெட்கமா இல்ல? இனி என் வீட்டுவாசல்படி மிதிச்சிராத...

என் பொண்ணும் உன்ன பார்த்து கெட்டுபோய்டுவா. உன்னால என் பொண்ணயும் தப்பா பேசுவாங்க. மரியாதையா சொல்றேன்.... அந்த வீட்டு பக்கம் வந்துராத. உனக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்மந்தமும் கிடையாது. " காட்டுக் கத்து கத்திவிட்டு சென்றாள் சித்திக்காரி.

இப்படியொரு பெயர் வரும் என்று அகரன் அந்த சமயம் நினைத்து பார்த்திருக்கவீல்லை தான். அவனைப் பொருத்தவரை யாழினி அவன் தாய்க்கு இணையானவள்.

சித்தி கத்திவிட்டுச் சென்றப் பிறகு, வெளியில் வரவே தயங்கினாள் யாழினி.

உள்ளே நுழைந்த வர்ஷன், பழைய கதைகள் எதையும் நினைவுபடுத்தி பேசாது,

"கவலப்படாத அகர... யாழினி...! நீயும் எதுவும் யோசிக்காத. மற்றவங்க பார்வைக்கு நாம எப்படி இருக்கம் என்றது முக்கியம் இல்ல, நீ நம்ம வீட்டுக்கு வா , எங்க அம்மா உன்ன நல்லா பாத்துபாங்க" என்று கூறியவன் சற்று யோசித்தவனாய்....,

"இல்லை வேணாம். உனக்கு நா நல்ல இடம் பார்த்து தாறேன். நீ யாருக்கும் கீழ இருக்க தேவையில்ல. பெண்ணால தனித்து வாழவும் முடியும். அதுக்கான ஏற்பாட நான் செய்றேன்."

என்று சொல்லிவிட்டு, திரும்பி நடக்க, யாழினி வர்ஷனை வழியனுப்ப அவன் பின்னே வந்தாள்.

அவள் நடந்து வருவதை உணர்தவன், திரும்பிப்பார்க்க... அவள் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். அவனையே அறியாமல் பார்த்து இரசித்தான். நேரம் நினைவு வர, விரைவாய் சென்றான்.

எதற்கு இத்தனை வேகமாய் செல்கிறான் தெரியுமா? அவள் நடன வகுப்பையே இன்னும் பெரிதாக்கி மூன்று அறைகளுடன் அவள் தங்கும் வீடாக மாற்றி கொடுப்பதற்காகத்தான்.

யாழினிக்காக ஒன்றை செய்வதென்றால் வர்ஷனுக்கு உற்சாகம் பன்மடங்கு கூடுமல்லவா.! அங்கு அவள் தனியே இல்லாமல் இருப்பதற்காகவும், ஒரு திட்டம் தீட்டினான்.

அதை ஒரு ஹொஸ்டலாக மாற்றி, நடனம் கற்கும் மாணவிகள் அங்கு தங்கி கற்பதற்கான வசதிகளையும் செய்ய நினைத்தான். அதை ஒரு நிறுவனமாக யாழினியே தனியாக இருந்து நிர்வகிப்பாள்....

இதையெல்லாம் கற்பனைச் செய்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருந்தான் வர்ஷன்.

அவன் வீட்டில் ஒரு அறையில் தங்கவைக்காது, இப்படி ஒரு தனி நிறுவனமே அவள் பொறுப்பாக்க நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

யாழினி வர்ஷன் வீட்டில் இருந்தாலும், இதுபோன்ற அவபெயர் வரக்கூடும். மற்றொன்று யாழினி அவன் மனைவியாகவே அவன் வீட்டில் முதல் அடி வைக்கவேண்டும் என வர்ஷன் அப்போது விரும்பினான்.

மற்றொரு காரணம் தான் அவளை ஏளனமாக பார்க்கும் அவள் சித்திக்கும், ஆராதனாக்கும் முன்னால், ஒரு சிறந்த தலைமைத்துவம் உள்ள நிர்வாகியாக வாழ வேண்டும் என்பது.

இவற்றையெல்லாம் மனதில் நினைத்துக்கொண்டே காரின் சக்கரமும் வர்ஷனின் நேர்மறையான மனமும் ஓடிக்கொண்டிருந்தது.


......தொடரும்.........
.....08.09.2022.....
பிரியபாரதீ