• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

1. தள்ளாடும் உள்ளங்கள்

kkp43

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
4
1
3
Tamilnadu
ஹாய் friends!

நா உங்க kkp43. தள்ளாடும் உள்ளங்கள் ங்கற ஒரு சுவாரசியமான கதையோட உங்கள சந்திக்க வந்திருக்கேன். கதை உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். கதைய படிச்சு கருத்திட்டு எனக்கு மேலான ஆதரவு குடுக்கணும்ன்னு கேட்டுக்கறேன். வாங்க கதைக்குள்ள போலாம். இன்னிக்கு முதல் எபி.

உள்ளம் - 1


சென்னையின் பரபரப்பான சாலையொன்றில் அமைந்திருந்த அந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அலுவலகத்தின் வாசலில் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் திலீபன்!

வண்டியைப் பூட்டி சாவியை எடுத்துத் தன் பேன்ட் பாக்கெட்டில் போட்டபடி அவசரமாக வங்கியின் ஏடிஎம் நோக்கி நடந்தான்!

"ஆ!"

என்ற சத்தம் கேட்க, திடுக்கிட்டு நின்று, சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தான்!

இவனைப் போலவே இன்னும் சிலரும் திரும்பிப் பார்க்க, அங்கு நின்றிருந்த ஒரு இளம்பெண் யாரையும் கண்டு கொள்ளாமல் தன் வேலை முடிந்ததாய் வங்கிக்குள் நுழைந்தாள்!

"ஏய்! என்னையே அடிச்சிட்டல்ல! ஒரு நாள் நீ மாட்டுவ! அன்னிக்கு இருக்குடீ ஒனக்கு!" என்று அடி வாங்கியவன் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, போகிறவளைப் பார்த்துக் கத்தினான்!

அவளோ, இவன் பேசியது எதுவும் தன் காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய இருக்கைக்குச் சென்றிருந்தாள்!

'அவளேதான்! கிராதகி! பொம்பளையா அவ! இப்டி அரை குறை காலோட இருக்கறப்பவே இவ்ளோ திமிரா நடந்துக்கறா! ஒரு வேள எல்லாரையும் மாதிரி ரெண்டு காலும் நல்லா இருந்திருந்தா எவ்ளோ திமிரா நடந்துப்பா?' அவளைப் பார்த்த மாத்திரத்தில் தோன்றிய இந்த எண்ணத்தினால் திலீபனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!

'போயும் போயும் இவளப் போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேனே?! என்ன சொல்லணும்.. சே!' என்று நினைத்தபடியே ஏடிஎம்முக்குள் சென்று அந்த இயந்திரத்தினை இவன் இயக்க, அது வன் இட்ட கட்டளையை செய்யாமல் முரண்டியது.

'இவங்க பேங்க் ஏடிஎம் மிஷினும் இவளாட்டமே ராங்கு பண்ணுது பாரு! எல்லாம் என் நேரம்!' என்று நினைத்துக் கொண்டு வங்கிக்குள் சென்றான்!

வெளியே ஒருவனை அறைந்தது பற்றி எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கடமையே கண்ணாக வேலையைத் தொடங்கியிருந்தாள் அவள்!

அவளுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி உள்ளே வந்து கொண்டிருக்கும் திலீபனைப் பார்த்துவிட்டு,

"ஏய் !" என்று கிசுகிசுப்பாக அழைத்தாள்!

".." பதிலில்லை!

"ம்ச்! ஏய் முல்லை!"

"என்ன?! ஏண்டீ தொண தொணக்கற?" என்று கடுகடுத்தாள் அந்த முல்லை.

"உன் ஹஸ்பன்ட் வராரு பாரு!" என்று மீண்டும் கிசுகிசுத்தாள்!

"பாத்தேன்! பாத்தேன்! இங்க வந்து யார் உசிர வாங்கப் போறானோ? நீ கம்முனு இரு!" என்று முல்லை முணுமுணுத்தாள்!

உள்ளே நுழைந்த திலீபன், நேராக அந்த வங்கிக் கிளையின் மேலாளரின் அறைக்குச் சென்றான். அந்த மேலாளர் இவனைக் கண்டு கொள்ளவேயில்லை!

இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தவன், அந்த மேலாளர் இவனைக் கண்டு கொள்ளாததைப் பார்த்து கடுப்பாகிப் போய், அங்கிருந்த நாற்காலியை சத்தப்படுத்திக் கொண்டே பின்னால் இழுத்து அதில் ஆர்பாட்டமாக அமர்ந்தான்!

இப்போது வேறு வழியின்றி அந்த மேலாளர் இவனை என்ன என்பது போல பார்க்க, இவன் என்ன சொன்னானோ அந்த மேலாளரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல ஔி வீசியது! வாயெல்லாம் பல்லாக இவனிடம் அவர் பேசியதோடு மட்டுமல்லாமல் கூடவே இவன் குடிப்பதற்கு குளிர்ந்த பழரசமும் தருவித்தார்!

அவன் பழரசத்தை ஸ்டைலாக வாங்கிப் பருகினான்!

அதற்குள் அவனுடைய வேலையை முடிப்பதற்காக, வங்கி மேலாளர் இவளைத்தான் அழைத்தார்!

'வீட்லதான் என் உசிர வாங்கறான்னா இங்கயுமா? ஹூம்!' என்று பெருமூச்சு ஒன்றை சத்தமில்லாமல் விட்ட முல்லை, வேறு வழியின்றி எழுந்து சென்றாள்!

"இங்க பாருங்க முல்லை! சார் நம்ம பேங்க்ல ஒன் சி டெபாசிட் பண்றார்! அதுக்கு வேண்டிய ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பக்கத்தில இருந்து முடிச்சி குடுங்க!" என்று இவளைப் பார்த்து உத்தரவு போட, இவள் மிகவும் கடுப்பாகிப் போனாள்!

'ம்க்கும்.. ஃப்ராடுப்பய.. ஒன் சியாம்! எவ்ளோம் பெரிய பொய்! அவ்ளோம் பெரிய அமௌன்டை இவன் கண்ணால கூட பார்த்திருக்க மாட்டான்னு இந்த முசுடு மேனேஜருக்கு எப்டி தெரியும்? உன்ன சொல்லி குத்தமில்லடா! உன் முக ராசி அப்டி! எல்லாரும் நல்லவன்னு நம்பற மாதிரி இருக்கற உன் நடிப்பு அப்டி!'

'ஹூம்! நல்லவன்னு நம்பி உன்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன்ல.. என்ன சொல்லணும்.' என்று தன்னையே நொந்து கொண்டாள் முல்லை!

"சார்! அதுக்கு முன்னாடி.. ஒரு முக்கியமான வேலை! கொஞ்சம் ஏடிஎம் வரைக்கும் போய்ட்டு வந்திடறேன்!" என்று திலீபன் எழுந்து கொள்வதைப் போல பாசாங்கு செய்ய,

"நீங்க ஏன் சார் போறீங்க? உங்களுக்கு என்ன வேணுமோ அத இங்கேர்ந்தே பண்ணித் தரோம்!" என்று அவனிடம் கூறிய மேலாளர், இவளைப் பார்த்து இதையும் செய்யுமாறு கட்டளையிட்டார்!

"என்ன வேணும்?" என்றாள் வெடுக்கென்று!

"என்னம்மா? கஸ்டமர் கிட்ட இப்டி பிஹேவ் பண்றீங்க?" என்று மேலாளர் இவளைக் கடிந்து கொள்ள, நொந்து போனவள்,

"சார்! சொல்லுங்க சார்! உங்களுக்கு என்ன சார் வேணும்? பேலன்ஸ் தெரியணுமா சார்? பின் சேஞ்ச் பண்ணனுமா சார்? சொல்லுங்க சார்!" என்று வார்த்தைக்கு வார்த்தை 'சார்' போட்டு கேட்டாள்!

'அப்டி வாடீ வழிக்கு!' என்று மனதில் நினைத்த திலீபன்,

"தேங்க்ஸ்! எனக்கு ஜஸ்ட் இந்த புது ஏடிஎம் கார்ட் ஆக்டிவேட் பண்ணனும்! பின் ஜெனரேட் பண்ணிட்டேன்.. பட் அது அக்செப்ட் ஆக மாட்டிது.." என்றான் நிதானமாக!

"போங்க முல்லை! சார கூட்டிட்டு போய் அத ஆக்டிவேட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க!" என்றார் மேலாளர்!

"தேங்க்யூ சார்! நா நாளைக்கு மானிங் வரேன்! தேங்க்யூ!" என்று மேலாளரிடம் கைகுலுக்கிவிட்டு அவன் எழுந்தான்!

வேறு வழியின்றி அவனை அழைத்துக் கொண்டு ஏடிஎம் இயந்திரம் வைத்திருக்கும் இடத்துக்குச் சென்று அவன் கேட்டதை செய்து கொடுத்தாள்!

தான் வந்த வேலை எந்த இடையூறுமின்றி முடிந்ததில் திருப்தியாகிப் போன திலீபன், தன் பார்வையைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே குனிந்து கொண்டிருப்பவளை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வங்கியை விட்டு வெளியே வந்தான்!

'உன்ன எப்டி என் வாழ்க்கையில இருந்து விரட்டணும்னு எனக்கு நல்லா தெரியும்டீ!' என்று தன் மனதிற்குள் நினைத்தபடி தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான் திலீபன்!

'என் வாழ்க்கைய விட்டு உன்ன விரட்டினாதான் எனக்கு நிம்மதி!' என்று நினைத்துக் கொண்டே தன் வேலையைக் கவனிக்கச் சென்றாள் முல்லை.

அவர்கள் உள்ளம் தள்ளாடுமா?

- விரைவில்...
 

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
அருமையான ஆரம்பம். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

திலீபன் அவன் பெயர். அவன் மனைவி பெயர்?
 
  • Love
Reactions: kkp43

k. ஆனந்த ஜோதி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 16, 2023
35
8
28
Chennai
அருமையான ஆரம்பம். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

திலீபன் அவன் பெயர். அவன் மனைவி முல்லை! ஆரம்பமே மோதலாகவும், பிரிய நினைப்பதாகவும் வருதே...

வெயிட்டிங்...
 
  • Love
Reactions: kkp43

kkp43

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
4
1
3
Tamilnadu
அருமையான ஆரம்பம். எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

திலீபன் அவன் பெயர். அவன் மனைவி முல்லை! ஆரம்பமே மோதலாகவும், பிரிய நினைப்பதாகவும் வருதே...

வெயிட்டிங்...
Thankyou