10.எந்தன் தேன் ஜவ்வே
பந்தல் இரவே போட ஆரம்பித்து விடியற்காலையில் முடித்து இருந்தனர் எவ்வளவு வேலை இருந்தும் காலையிலேயே தயாராகி இருந்தார் பார்வதி.
யாருக்கு உறுத்தியதோ இல்லையோ கயலுக்கு தான் என்ன என்பது போல் இருந்தது.தேனு கூட காலையிலேயே குளித்து தயாராகி இருந்தாள் நேற்று பார்லர் ஆட்கள் வந்து சென்றதே கயலுக்கு கலக்கத்தை தர இப்போது என்னவோ கல்யாண பெண் போல் சீக்கிரம் கிளம்பி இருந்தாள். முதன் முறை புடவை கட்டி இருந்தாள் தேனு அதுவும் பார்வதியின் உதவியுடன்,பாரி இளவழகன் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்த சில்க் காட்டன் புடவையில் அழகாய் தோன்றி இருந்தாள்..
கயல், “ இது எப்ப வாங்குனீங்க எனக்கு எதுவும் வாங்கி தரல இந்த மெட்டீரியல் ல
இது அவளோட பணத்தில் வாங்கினது.
என்ன எப்ப பார்த்தாலும் அவ பணம் ன்னு சொல்லுறீங்க? அப்பா இல்லாம இவ படிச்சதுல சாம்பாதிச்சிடுறாளா..
ஆமா அவ அவங்க படிக்க வச்சு படிப்புல சாம்பாதிக்கல நீ தான் உங்க அப்பா படிக்க வச்சு அது மூலமா சம்பாதிச்சுட்டு இருக்க அதையே என் பணம் ன்னு நீ சொல்லும் போது இது அவளோட கற்பனையில் உருவான உருவம் அதுக்கு தான் இந்த பணம் அப்ப அது அவளோட பணம் தானே என்று முடிக்கையில்
மேளதாள சத்தம் வாசலில் கேட்க தேனு உள்ள இரு, நான் வந்து கூப்பிடும்போது வா என்றவர் எழுந்த வர அதற்குள் கார்த்தி வேலாயுதம் இருவரும் கேள்வியாக என்னப்பா இப்பவே மாப்ள வீடு வரதா சொன்னார்களா?
இல்ல தம்பி இது யாரு என்ன ஒன்னும் புரியல என்று இருவரும் வெளியே செல்லும் முன் அவர்களை தள்ளி கொண்டு வேகமாக இறங்கி சென்றார் பார்வதி..
வாங்க ம்மா வா அழகா உள்ள வாங்க என்றவர் மடமடவென செயல்பட
என்ன வேலாயுதம் இது யாரு மாப்ள வீடு மாதிரி தெரியல?
பாரி இளவழகனை பார்த்ததும் ஏதோ யோசனையில் வேலாயுதம் நிற்க..அங்கே பாய் விரித்து அமர வைத்து விட்டார் பார்வதி பந்தலிலேயே.
அம்மா உள்ள அழைக்கலன்னு உங்களுக்கு வருத்தம் இல்லையே..
துயமல்லி பதில் தரும் முன் அத்த இந்தாங்க தேனை இதை கட்டிஅழைச்சிட்டு வாங்க அவளுக்கு.
இங்க இருக்க எந்த உரிமையும் எங்களுக்கு வேண்டாம் இங்கேயே இந்த பந்தலிலேயே நாங்க அவளை அழைச்சிட்டு ….என்று நிறுத்தியவன்
போங்க அத்த நல்ல விஷயம் பண்ணும் போது உள்ள வந்து அவளை கஷ்டப்படுத்த நான் விரும்பல
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே விஷயத்தை உணர்ந்த மதி முன்னே வந்து தட்டை வாங்கி கொண்டவள் வாங்க அண்ணா என்றாள் பாரி இளவழகனை பார்த்து அவன் சின்ன சிரிப்பை உதிர்த்தவன்,மற்றவர்களை ஒரு பார்வை பார்க்க அங்கே சலசலப்புடன்
குசுகுசுவென பேச
தேனை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க மத்ததை அவளை வச்சு பேசிக்கிறேன் என்று சொல்ல இதோ அண்ணா என்று உள்ளே செல்ல..
கார்த்தி, “ மதி என்ன இது.. எனக்கும் விஷயம் தெரியாது ஆனா தேனுக்கு இன்னைக்கு விடுதலை தள்ளுங்க என்று உள்ளே சென்று இருந்தாள்
மதி, “ சீக்கிரம் வாங்க தேனு இன்னைக்கு உங்களுக்கான நாளும் காலமும் வந்துடுச்சு என்று தயார் செய்து வெளியே அழைத்து வர அது வரை வேலாயுதம் சொந்தங்களை சமாளிப்பதில் இருந்தவர் பொங்கி விட்டார்..
என்ன நடக்குது பார்வதி..
தைரியத்தை வரவழைத்தவர் தேனுக்கு கல்யாணம் பண்ண போறோம்..
என்னது யாரை கேட்டு முடிவு பண்ண?
யாரை கேட்கனும்?
பார்வதி..
ஆமாங்க யாரை கேட்கனும் உங்க மத்த பிள்ளைங்களுக்கு முடிவு பண்ணிட்டு என்கிட்டே தகவல் சொன்னீங்க ஏன் இவளுக்கு கூட பார்த்த மாப்ள அப்படி தானே அப்புறம் கை விட்டாச்சு இப்ப நான் முடிவு பண்ணி நடக்கிற கல்யாணம் தகவல் போதுமா?
கார்த்தி, “அம்மா என்னம்மா இது?
….
ஏன் மா பதில் சொல்லாம இருக்கீங்க?
மதி, “கார்த்தி ..
மதி நீ பேசாம இரு
அத்தை பண்ணுவதில் தப்பு இல்லையே தேனுக்கு கல்யாணம் சந்தோஷம் தானே படனும்
புரியாம பேசாத
புரிஞ்சு தான் பேசுறேன் .. நீங்க எல்லாம் மாடியில் பந்தி வைக்குறாங்க சாப்பிட்டு வாங்க தேனு கல்யாணத்தை பார்க்க என்று மதி அனைவரையும் அப்புறப்படுத்த,சிலரோ அங்கேயே நின்று என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.
மாமா, கார்த்தி அத்த சரியான முடிவு தான் எடுத்து இருக்காங்க
மதி இவங்க யாருன்னு தெரியாது அப்புறம் எப்படி?
பார்வதி, “அழகா இங்க வா”
அத்த..
பாரி இளவழகன் ஐபிஎஸ் ஆபிசர் அவங்க பாட்டி துயமல்லி கெங்கவள்ளி ஜமீன் ..
என்னது என்று கயல் வாயை பிளந்து பார்க்க.
அப்புறம் என் பொண்ணுக்கு பிரச்சினை ன்னு வந்தப்ப அவளுக்கு தோள் தந்து நம்பின ஒரே ஆள் அழகன் தான் தேனு ஸ்கூல் படிச்ச பையன் இது உங்க அப்பாக்கு தெரியும் யாருமே தேனு நம்பாதப்ப அவளை நம்பின ஒரே ஆள் அதேநேரம் அவளை அவ விருப்பத்தை அவ திறமையை நேசிக்கிற ஒரே ஒரு ஜீவன் அழகன் தான் .
இப்போ சொல்லு இதை விட வேற என்ன தெரியனும். இதோ இங்க இருக்க சொந்தத்தை தாண்டி இவங்க எல்லாம் தேனு கூட படிச்சவங்க அதோட அழகன் நண்பர்கள்.
நம்ம யாருக்குமே தெரியாத தேனை பார்த்தாங்க இவங்க, இவங்களுக்கு தெரியும் தேனையும் அழகனையும் இவங்க எல்லாரையும் நம்பி என் பொண்ணை அழகனுக்கு தரேன்.அழகன் எனக்கு தெரிஞ்ச பையன் அதைவிட அவங்க பாட்டி எனக்கு பழக்கம்
மதி தேனை அழைச்சிட்டு வா என்றவர் போகலாம் அம்மா..
இளவழகன், “ஒரு நிமிஷம் அத்த..
உங்களுக்கு தேனு மேல் தப்பு இல்லன்னு தெரியும், எப்ப அன்னைக்கு சாயந்தரமே, அதனால் தான் அவளை பன்னிரண்டு முடிக்க விட்டீங்க அவமேல தப்பு இல்லன்னு தெரிஞ்ச பிறகு அவளை நீங்க மேற்கொண்டு படிக்க வச்சு இருக்கனும் படிக்க வைக்காது உங்க தப்பு அப்படி இருக்கப்ப அவ படிக்காதவ அவ வாழ்க்கை எப்படி சரியாக அமையும் ன்னு பேசி தட்டி கழிச்சா என்ன அர்த்தம்?
இல்ல உண்மையாவே வந்தவங்க என்று கார்த்தி ஆரம்பிக்க..
இருங்க கார்த்தி நான் பேசிடுறேன்.
தெரிஞ்சே தான் உங்க அப்பா அவளுக்கு இப்படி ஒரு விஷயத்தை பண்ணார் அது தெரியுமா உங்களுக்கு?
….
எப்படி தெரியும் நீங்க எல்லாரும் தான் உங்க விஷயத்தை மட்டும் பார்த்தவங்களாச்சே மத்தவங்க உணர்வு எப்படி புரியும்..
நான் சொன்னது சரி தானே என்று வேலாயுதத்தை பார்த்து கேட்க அவர் அசையாமல் அவனை தான் பார்த்து நின்றார் அன்று பார்த்தது போலவே இன்றும் பேசிக்கொண்டு இருந்தான்.
அவ படிக்காதது தான் உங்க பிரச்சினையா இல்லையே அவ திறமை உங்களுக்கு உறுத்தி இருக்கு இல்லையா?
படிப்பு முக்கியம் தான் இல்லன்னு சொல்லல அவ படிப்பே வராத பொண்ணா இருந்து இருந்தா கூட அவளுக்கு பிடிச்ச துறையில் போகலாம் நீ படிப்பில் பாஸ் ஆனா போதும் ன்னு தட்டி குடுத்து இருந்தீங்கனா அவ இங்க இப்படி நின்னு இருக்க மாட்டா
சரி அதை பண்ணல விடுங்க அவ படிக்கிற பொண்ணு தானே 75% வாங்கி இருந்தாளே அவளை எப்படி நீங்க உருப்படாதவன்னு சொல்லலாம்.
ஹனி …
தேனு நிமிர்ந்து பார்க்க அவள் கைபிடித்து அருகில் அழைத்தவன் நான் உன்னோட குடும்ப வாழ்க்கையை மட்டும் பகிர நினைக்கல உன்னோட விருப்பு வெறுப்பு வெளிவாழ்க்கைக்கும் இணையா வர ஆசைப்படுறேன் உனக்கு நான் தர முதல் என்று நிறுத்தியவன் …. இதை எப்படி சொல்லுறது ன்னு தெரியல உனக்கு எப்படி இது தோணுதோ அப்படி நீ எடுத்துக்கலாம் என்று ஒரு பைலை தர
அனைவரையும் ஒரு முறை பார்த்தவள் அதை கையில் வாங்க
பிரிச்சு பாரு ஹனி
அதை எடுத்து பார்க்க அரசு கவின் கலைக் கல்லூரி என்று இருந்தது அதை பிரித்து பார்க்க பிஎஃப்ஏ படிப்பிற்கானது என்றதும் கண்களை அகல விரிக்க
நீ இனி பறக்கலாம் யார் என்ன சொல்லுவான்னு நினைக்க தேவை இல்ல படிப்பு அவசியம் தான் இல்லன்னு சொல்லல அதோட மத்த கலைகளையும் கத்துக்கிறது தவறு இல்லையே…
இரண்டையும் சம அளவா மதிச்சு கத்துக்கோங்கன்னு தான் பெத்தவங்க சொல்லனும் அதை விட்டுட்டு இது மட்டும் தான் வாழ்க்கையில் கை கொடுக்கும் ன்னு சொல்லி அவங்களை மட்டுப்படுத்த வேண்டாம்…
போகலாமா ஹனி..
படக்கென அவன் கைகளை பிடித்து கொண்டாள் அழகனின் ஹனி..
நடந்ததை எல்லாம் ஷாக் ஆகி வேலாயுதம் கயல் இருவரும் பார்த்து கொண்டு இருக்க
பார்வதி நடையை கட்டி இருந்தார்..
மதி கார்த்தியை இழுத்து கொண்டு பார்வதி பின்னே செல்ல இனிதே பெருமாள் கோவிலில் திருமணம் முடிந்து இருந்தது..
இனி நீ சந்தோஷமா உன் வாழ்க்கையை வாழு தேனு இப்ப தான் அம்மாக்கு சந்தோஷமா இருக்கு..
வெறும் புன்னகையை மட்டும் சிந்தி இருந்தாள்..
திருமணம் முடிந்த கையோடு தேனை அழைத்து கொண்டு செல்ல பார்க்க..
மதி, “ வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டு அப்புறம் கிளம்பலாம் அண்ணா
இல்லம்மா அந்த வீட்டுக்குள்ள தேனை அழைச்சிட்டு போக எனக்கு விருப்பம் இல்ல
அண்ணா ப்ளீஸ் தேனுக்கு கல்யாணம் ஆகிட்டு ன்னு ஊரே பார்க்கனும் இனி அவ வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இல்லன்னு தெரியவேண்டியவங்களுக்கு தெரியும் அண்ணா…
இப்பவே இதோட அவ வாழ்க்கையில் எல்லாம் முடிஞ்சதுன்னு காட்ட எனக்கு திருப்தி இல்ல இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு கண்டிப்பா எல்லாரும் திரும்பி பார்க்கிற இடத்திற்கு தேனு வருவா அப்ப அழைச்சிட்டு வரேன் என்று அதோடு முடித்து விட,அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்று அமைதியாகி விட்டாள் மதி.
மேகா, “ அண்ணா அப்பத்தா வீட்டுக்கு போய்ட்டு முறையை முடிச்சிட்டு கிளம்பலாம்
சரி…
அன்று மாலை வரை நேரத்தை கடத்தி தள்ளிவிட கயல் திருமண வேலை நடக்க ஆரம்பித்து இருந்தது..
யாருக்காகவும் நேரமும் காலமும் காத்து இருக்கவில்லை.
சென்னை வந்த இரண்டு நாட்களில் வண்ணங்கலை எடுத்து படிக்க ஆரம்பிக்க…
மறுபக்கம் பாரி இளவழகன் குடும்பம் என்னும் கூட்டில் அவள் சிறகடித்து பறக்கவும் அந்த கூடு அழகாகவும் நம்பிக்கையானதாகவும் அவள் உணர வழி ஏற்படுத்தி கொண்டு இருந்தான்.
ஒரு வாரம் கடந்து இருந்தது தேனு கயல் திருமணம் முடிந்து அன்று சனிக்கிழமை காலை வேளையில் பார்வதி தேனிற்கு அழைத்து இருந்தார்..
சொல்லுங்க அம்மா..
அடுத்த வாரம் மூணு நாள் சேர்ந்தாப்புல லீவ் வருது அழகுக்கு லீவ் இருக்கா நேரம் கிடைக்குமா ன்னு கேட்குறியா தேனு..
ஏன் நீங்களே கேட்கலாமே..
அது இல்ல தம்பிக்கு காலையே போன் போட யோசனை அதான்..
நான் சும்மா தான் இருப்பேன் ன்னு
தேனு என்று பார்வதி அதட்ட
நீ சாதாரணமா பேசினா கூட என் மனசு அதைத்தான் முன்னாடி கொண்டு வருதுமா இத்தனை வருஷமா அப்படித்தானே அங்க இருந்தேன் என்றவள் அந்த பக்கம் பிரசை வைத்து புதிதாய் சொல்லிக் கொடுத்த ஆயில் பெயிண்டிங்கை தான் எப்படி மற்ற கலவைகளுடன் சேர்த்து புது பரிமாணத்தை தருவது என்று தீட்டி கொண்டே கேட்டு இருந்தாள்..
இனி உனக்கு போன் பண்ணல தேனு என்னைக்கு உனக்கு மனசு வருதோ அன்னைக்கு நீயே போன் பண்ணு அடுத்த வாரம் அப்பத்தா வீட்டுக்கு விருந்துக்கு வந்துட சொல்லலாம் ன்னு தான் போனை போட்டேன் என்றவர் போனை அணைத்து விட
என்ன காலைலயே மகளுக்கு போன் போட்டு இருக்க எனக்கும் தான் கல்யாணம் ஆகி இருக்கு என்னைய கூப்பிட போன பண்ண தோணுல இல்ல இந்த ஒரு வாரத்தில்
அந்த அறைக்குள் எட்டி பார்க்க பவன் இல்லை
அவரு வெளியே போய் இருக்காரு
உன்னையே எதுக்கு நான் கூப்பிடனும்
என்னம்மா இப்படி பேசுற
உன்னையே மாதிரி பேயை பெத்ததுக்கு வேற எப்படி பேசனும் என்றவர் சென்று விட
இங்கே அழகன்…
எதுக்கு அத்த கிட்ட இவ்வளவு கோவம் ஹனி என்று பின்னிருந்து அவளை அணைத்து கொள்ள
எல்லாம் தெரிஞ்சே கேட்குறீங்க?
நீ கூட அந்த சூழ்நிலை புரிஞ்சு அவங்களை கேட்கிற?
அப்ப நான் தவறா நடந்துக்கிறேனா?
ஹனி அப்படி இல்ல அவங்க அவங்க இடத்தில் இருந்து பார்த்தா அவங்க செஞ்சது சரின்னு தோணும் நீ அவங்க சூழ்நிலையில் இருந்து பாரேன் கண்டிப்பா உன்னால புரிஞ்சுக்க முடியும்.
அப்ப என் சூழ்நிலை..
அதுக்கு தான் நான் இருக்கேனே வேற யார் உன்னையே புரிஞ்சுக்க வேணும்…
ம்ம்ம என்று ராகம் இழுக்க..
என்னடி என்கிட்ட மட்டும் உனக்கு வார்த்தை பஞ்சமாகிடுமா?
அப்படின்னு யார் சொன்னா?
பின்ன இந்த ஒரு வாரமா கேள்வி பதில் மாதிரி தானே போய்ட்டு இருக்கு…வேற எதுவும் இங்க இல்லையே? என்று அவள் இடையில் குறுகுறுப்பூட்ட…
இளா..
ம்ம்..
ப்ளீஸ்…
நானும் தான்…
சொன்னா கேளுங்களேன் என்றவள் ஒரு கை அவனையும் மற்றொரு இறுக்கமாக பிடித்து இருந்தது அவள் தூரிகையை …அவள் தீட்டிய வண்ணங்களோடு அவளையும் தீட்ட ஆரம்பித்து இருந்தான் பாரி இளவழகன்..
இங்கே நம் சமூகம் இல்லாதவனுக்கு ஒன்றும் இருப்போருக்கு ஒன்றும் என்று உருவாக்கி வைத்து இருந்த காலத்தில் வேலாயுதம் போன்ற பெற்றவர்கள் படிப்பை முன்னிலைபடுத்துவது தவறு இல்லை தான் ஆனால் அதற்க்காக அந்த கோபத்தில் சரி தவறை ஆராயாமல் யார் என்ன சொன்னாலும் இவள் தவறு என்று முடிவு செய்வது தவறு தானே…
வாழ்க்கை துணை சரியான முறையில் அமைந்து விட்டாள் இனிமை தான் இல்லை என்றால் நரகம் தானே…
அந்த நரகத்திற்கு தள்ளவா நாம் ஒரு உயிரை உருவாக்கினோம்… காலங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது நாமும் சற்றே மாறி குழந்தைகளின் ஈடுபாட்டிற்கு சற்றே செவி சாய்த்து ஒத்துழைப்பு தந்தால்
வண்ணமயமான ,அழகான திறமையான ஒளியை உருவாக்கி உலகை பிரகாசமாக ஒளிர
விடலாமே….
இதோ தேன்மொழி தன் மொழியில் உலகை வண்ணமயமாக்க கிளம்பி விட்டாள்.. நாமும் கிளம்பலாம்
நன்றி
இப்படிக்கு
கயிறு மிட்டாய்