• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10.மிஸ் மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
தன்னை யாரோ கவனிப்பது போல் ஒரு குறு குறுப்பு உள்ளுணர்வு குறிப்பு காட்ட கண்விழித்தவள் தன் மேசையில் அமர்ந்திருப்பது போல் ஒரு உருவம் தெரிய கண்களை நன்கு தேய்த்து விட்டு பார்ப்பதற்குள் அவசரமாக தன் முகத்தில் இறுக்கத்தை கொண்டு வந்தவன் அவள் செயலில் வந்த சிரிப்பை கப்சிப் என அடக்கி கொண்டான்....

சார்.... என்று எழுந்து நின்றவளை முறைத்தவன் “ஆமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க மேடம்… அங்க மீட்டிங் போய்ட்டு இருக்கு அது தெரியுமா உங்களுக்கு...” என‌ நக்கலாக கேட்டவனிடம்‌…

“அய்யோ சாரி சார் தூங்கிட்டேன் இதோ வரேன்..” என்றவள் மீட்டிங் ரூமிற்கு செல்ல எத்தனிக்கையில்.....

“ஹேய் ஒரு நிமிஷம் இங்கவா இப்பிடியே போனா அங்க உள்ளவங்க பேய் வருதுன்னு பயந்து ஓடிட போறாங்க…” என்று அவளருகே செல்ல அவளோ
அவனை முறைத்தபடியே “என்னது நான் பேயா..” என்றவள் அவனுக்கு அன்பளிப்பாக முதுகில் ஒரு அடியையும் போட்டால் அதை புன்னகையுடன் வாங்கி கொண்டவன் “போ போய் முகத்தை முடி எல்லாம் சரி பண்ணிட்டு வா..” என்று முன்னே செல்ல...

இவளோ போன் கேமராவில் தன்னை பார்த்தவள் “நாம பேய் மாதிரியா இருக்கோம்..” என்றவள் தன்னை சரி பார்க்கவும் மறக்கவில்லை...

“என்ன நான் சொன்னதை நம்பலையா?...” என்றவன் கேட்டதும் தான் அவன் அங்கு இன்னும் நிற்பதை அவதானித்தாள்.

“அய்யோ இவன் இன்னும் போகலையா?..” என்றவள் தலையில் அடித்துக் கொண்டு நல்ல பிள்ளை போல் அவன் பின்னாலே வந்தாள்.

ஒருவாறு மீட்டிங் முடிந்து வரும் போது “அகிண்ணா என்னை விட்டுட்டு சாப்பிடாதீங்க இதோ வரேன்…”என்றவள் ஓடுவதை பார்த்தவன் “நம்மலை தவிர எல்லார்க்கூடயும் எவ்வளோ அழகா உறவு முறை சொல்லி பழகுறா ஹும்…” என்று பெருமூச்சு விட்டபடி தன் வேலையை கவனிக்க சென்றான் யுவா அது மட்டும் தானே அவனால் முடிந்தது.

இவளோ தன் வீட்டில் சமைத்து கொண்டு வந்ததை எடுத்தவள் அகியின் அறைக்குள் சென்று அவனுக்கு பரிமாறினாள்.

“சம்யுக்தா யாரு சமைச்சது வாசனை தூக்குது....’

“அக்கா தான் அகிண்ணா அவ தான் எங்க வீட்டே சமையல் பண்ணுவா…”

“அப்போ பயம் இல்லாம சாப்பிடலாம்…” என்றான் குறும்போடு “அண்ணா என்னோட சமையலை லில்லி சமையல் மாதிரி நினைச்சீங்களா?...” என்றதும் அவள் செய்து வந்த உப்புமாவை நினைத்து தன்னை மீறி சிரிப்பு எட்டி பார்க்க அதே சமயம் விழியினோரம் கண்ணீர் துளி எட்டிப்பார்த்தது அதை அவள் அறியாமல் துடைத்துக் கொண்டான்.

“எல்லாம் சரியாகும்ண்ணா உங்க தங்கச்சி நான் இருக்கேன் ஆனா இதுலே ஒரு சுயநலமும் இருக்குதுண்ணா என்னோட உயிர் நண்பி எப்பவும் சந்தோசமா இருக்கனும்ங்கிறது அதுக்காக தான் உங்க ரெண்டு பேருக்கும் தெரியாம ப்ளேன் போட்டேன்..” என்று தன் மனதிற்குள் கூறிக்கொண்டிருக்க...

அப்போது அவன் அறைக்குள் அவசரமாக வந்த யுவா.

அகி.... என்றவன் அவன் சாப்பிடுவதைக் கண்டு “டேய் அப்பா ஈவினிங் நேரத்தோட வர சொன்னாரு என்னமோ தெரியலை வேலையை முடிச்சிட்டுவா நான் வெயிட் பண்ணுறேன்…” என்றவன் அதற்கு மேல் நில்லாமல் சென்று விட இருவரும் அவசரமாக சாப்பிட்டு முடித்தனர்...

பின் தங்களது வேலையை பார்க்க சென்று விட்டனர் சன்முகவேல் ரெடியாகி தன் மகனுக்கு மருமகனுக்கும் காத்திருக்கையில் அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“என்னாச்சுப்பா எதுக்கு அவசரமா கிளம்பி வர சொன்னீங்க அங்கே வேலை போய்ட்டிருக்கு....”

“உன் வேலை எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம் மொதல்ல என் கூட ரெண்டுப் பேரும் வாங்க அப்பறமா நான் எல்லாத்தையும் பொறுமையா சொல்றேன்…” என்றதும் சரி என்று தங்கள் அறைக்கு போக போனவர்களை நிறுத்தினார்.

“ஆஹ் நில்லுங்கடா மொதல்ல இந்த ட்ரெஸை கழட்டிட்டு நார்மலா ட்ரெஸ் பண்ணி வாங்க…” என்றதும் ஒன்றுமே புரியாமல் அவர் சொன்னதை தட்டவும் முடியாமல் போய் உடை மாற்றி
வந்தனர் இருவரும்.

அகிலன் கருப்பு ஜீன்ஸ் வைட் சேட்டில் வர யுவேந்திரன் ப்லூ ஜீன்ஸ் ப்ளெக் சேர்ட் அணிந்து வர இருவரையும் பின்னால் அமர வைத்து விட்டு முன் சீட்டில் சன்முகவேல் அமர்ந்து கொண்டார்.

“ட்ரைவர் வண்டி எடுப்பா…” என்று சொல்ல இதை எல்லாம் யுவா வேடிக்கை பார்த்து வர அகியோ கார் செல்லும் பாதையை பார்த்தவனிற்கு இதயம் எகிறி துடித்தது....

இதை பார்த்த யுவாவோ தான் பார்த்துக் கொண்டு இருந்த மொபைலை தூக்கி தூரமாக வைத்து விட்டு “மச்சி நீ எதுக்கு இப்ப இவளோ டென்சனாயிருக்க..” என்று தோள் மேல் கை வைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தான் “ஒன்...னு ...மில்..லையே.. ட்ரைவர் வண்டியை நிறுத்துங்க மாமா நீங்க போங்க நான் வரலே எனக்கு முக்கியமான வேலை இருக்கு…” என்று எஸ்கேப் ஆக போனவனை இழுத்து பிடித்து அமர்த்தியவன்.

“அப்பிடி என்ன பொல்லாத வேலை உனக்கு அதுவும் எனக்கு தெரியாம மூடிக்கிட்டு உட்காரு..” என்றவனை கடுப்பாக பார்த்தான் யுவா.

“இவன் வேற நேரங்காலம் தெரியாம…” என்று வாய்க்குள் முனு முனுத்தவனை பார்த்து பொய்யாக முறைத்தார் வேல்.

“டேய் மவனே இன்னும் கொஞ்ச நேரத்துலே உண்மை தெரியும் அப்போ பார்த்துக்கோ எல்லாத்தையும்…” என்றதும் உடனே அந்த வீட்டின் முன் கார் நின்றது.

“சரி எல்லாரும் வாங்க..” என்றதும் “மாமா நான் வரமாட்டேன் நீங்க போங்க..” என்று காரில் அவன் அமர்ந்து விட,

“என்னப்பா இவன் குழந்தை மாதிரி அடம் பிடிச்சிட்டிருக்கான் ஆமா ஏன் இப்பிடி ரெண்டு பேரு பிகேவ் பண்ணுறீங்க..” என்று சிறு கடுப்புடனே கேட்டவனிடம் அமைதியாக இருக்கும் படி கூறிவிட்டு அகியிடம் சென்ற வேல்.

“டேய் உன்னோட மச்சான் அதுவும் உயிர் நண்பனுக்கு பொண்ணு கேக்க போறோம் நீ இப்பிடி தான் உட்கார்ந்திட்டு இருப்பியா இது கொஞ்சம் கூட சரியில்லை இறங்கிவா…” என்றவரது வார்த்தைகள் காதில் இறங்க உடல் தூக்கிவாரிப் போட்டது.

“என்..ன யு..வாவுக்கா?..”

“டேய் கத்தாத இதை கேட்டா அவன் வர மாட்டான்னுதான் சொல்லாம இழுத்திட்டு வந்தேன் ஆனா அவனை விட உன்னை சமாளிக்கிறது தான் பெரிய விஷயமா இருக்கு…” என்று ரகசியமாக சொல்லி அலுத்துக் கொண்டவரை திசைதிருப்பும் பொருட்டு..

“மாமா நீங்க தப்பா செலக்ட் பண்ணிட்டீங்க... இங்கே எந்த பொண்ணும் இல்லை ஒரு பையன்தான் இருக்கான்....”

“அது எப்பிடி உனக்கு தெரியும்…” என்று அவனை சந்தேகமா பார்ப்பது போல் அனைத்தையும் தெரிந்து கொண்டே பார்த்தவரிடம்
“அது.. இந்த.. பக்..கம் வந்தப்போ கேள்விபட்டிருக்கேன்…” ஏதோ ஒரு சப்பை காரணத்தை சொன்னான்.

“இப்போ கூட பாரு நான் லவ் பண்ணுறேன்னு ஒரு வார்த்தை வாயிலே வருதா இதுலே ஏதேதோ உலறிட்டிருக்கான்…” என மனதிற்குள் நினைத்து கொண்டிருக்க யுவா சத்தம் போட்டான்.

“அங்கே என்ன குசு குசு வீட்டுக்காரங்க வேற வெளியே வந்து பார்த்திட்டிருக்காங்க வாங்க போலாம்…” என்றதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்தான் அகிலன்.

வந்தவர்கள் யார் என அறிந்ததும் ராஜபாண்டி மரியாதையாக வரவேற்றார்.

அதோடு அங்கு நின்ற அகியையும் யோசைனையுடனே பார்த்தார் அவர்.

“ச்சே... இது தெரிஞ்சிருந்தா நமக்கு சப்போர்ட்டா நம்ம தங்கச்சியை இழுத்துட்டு வந்திருக்கலாம்…” என மனம் கிடந்து அடிக்கும் பயத்தில் எதை எதையோ யோசித்து கொண்டிருந்தான் அவன் பாவம் அவனுக்கு தெரியவில்லை அவளது ஏற்ப்பாடு தான் இது என்பது.

“அடடே சன்முகவேல் சார் நீங்களா சப்ரைஸ் ஆஹ் இருக்கு அதுவும் என்னோட வீட்டுக்கு வந்து இருக்கீங்க வாங்க வாங்க…” என்று அவர்களை வரவேற்று அமர வைத்த ராஜபாண்டியை புன்னகையுடன் ஏறிட்டார் சன்முகவேல் இதற்கிடையில் மொத்த பேமிலியும் அங்கு புடைசூழ்ந்தனர்...

“இது என்னோட மனைவி விமலா அப்பறம் இவன் என்னோட மூத்த பையன் குகன் இது என்னோட பொண்ணு லில்லி இது என்னோட தங்கச்சி…” என்றதும் அனைவரையும் அறிமுகப்படுத்த சன்முகவேல் அவர் பங்கிற்கு “இது என்னோட பசங்க…” என்றதும் ராஜபாண்டியனின் முகத்தில் ஒரு குற்ற உணர்வு பரவியது ஏனோ அதை அகி பார்த்தும் கண்டு கொள்ளவில்லை...

“ராஜ் உனக்கிட்ட கொஞ்சம் பேசனும் ஆனா எப்பிடி எடுத்துக்குவேன்னு தெரியாது…”

“என்ன சார் இது இவளோ தயங்குறீங்க....”

“அது என்னோட பையனுக்கு உன் பொண்ணை கேக்கலாம்ன்னு என் பையன் ஆசைப்பட்டா எல்லாம் பண்ணிடுவேன் இது அவனோட வாழ்க்கை துணை அதை அவன் தேர்ந்தெடுத்து இருக்கான் அது கண்டிப்பா எந்த விதத்திலும் தப்பா ஆகாதுன்னு எனக்கு தெரியும் அந்த நம்பிக்கையிலே தான் பெண் கேட்டு வந்து இருக்கேன் அதுவும் இல்லாம அவ உன்னோட வளர்ப்பு....” என்று நிறுத்தியதும் பெருமையாக தன் மீசையை முறுக்கி விட்டார் ராஜபாண்டி சன்முகவேலிற்கு எங்கு எப்படி பேசினால் காரியம் ஆகும் என்பது தெரியாமலா இருக்கு‌ம் அதே போல் பேசினார்
அதற்கு ஏற்றாற் போல் அவரும் “ஆமா உங்க பையன்னு தெரியாம ஏதேதோ பேசிட்டேன்…” என்று வருந்தியவர்.

“சரி இவளோ தூரம் நீங்க கேட்டு என்னாலே மறுக்க முடியாது அதுவும் இல்லாம நீங்க எவ்வளவு பெரிய ஆளுங்க... நீங்க வந்து என் வீட்டிலே பொண்ணு கேக்குறத்துக்கு நினைச்சு பார்க்க ஏன் என்னாலே நம்பவே முடியல ரொம்ப சந்தோஷமா இருக்கு…”

“உங்களுக்கு பிடிச்சா போதுமா பொண்ணுக்கிட்டயும் கேட்கலாம்..” என்றவர் “ஏம்மா லில்லி என் பையன் இவன் தான் அகிலன் அவனை உனக்கு பிடிச்சிருக்கா?.” என்றதும் பட்டென “பிடிச்சிருக்கு ப்ரென்... அய்யோ என நாக்கை கடித்தவள் அன்கிள்…” என்றதும் அப்போது தான் அகிலனின் முகம் இறுக்கத்தில் இருந்து
வெளியே வந்தது தன்னவளை காதலோடு பார்த்தான் அப்போ நமக்கு தான் பொண்ணு பார்க்கிற படலமா? என்று ஆச்சிரியமாக வேல்லை பார்க்க அவரும் சிரித்துக் கொண்டார்.


“என்னப்பா அப்போ தட்டை மாத்திக்கலாமா?...”

“சரிங்க சார்....”

“என்ன ராஜ் சார் எல்லாம் சொல்லி கூப்பிடுற இனிமே சம்மந்தின்னு கூப்பிடு..” என்று சிரிக்கும் போது ராஜ் உடைய தங்கை ஏதோ பேச வர அவரை பார்வையாலே அடக்கியவர் “விமலா எல்லாருக்கும் ஜூஸ் எடுத்திட்டுவா..” என்று கூற பின் அங்கு பார்வையாளராக நின்ற யுவாவை பார்த்து “ஆமா இந்த தம்பி கல்யாணம் பண்ணிட்டாரா?..”

“ஹ்ம்ம்... அவ என்னை ஏர் எடுத்து பார்த்து என் காதலை அக்செட் பண்ணவே படாதபாடு இதுலே கல்யாணமா இவளை வெச்சிட்டு பண்ணின மாதிரி தான்…” என மனதிற்குள் அழுதான் ஆணவன்.

ஆனால் அகியோ லில்லியை சைட் அடிப்பது தான் தலையாய கடமை என்பது போல் பார்த்து கொண்டிருந்தான் அதை பார்த்தவனுக்கு ஏக்க பெருமூச்சு வெளிவர அப்போது தான் தன் மண்டையில் ஏதோ உரைக்க வீட்டிற்கு போனதும் கேட்கனும் என்று முடிவு எடுத்தான் யுவேந்திரன்.

“அவனுக்கும் பொண்ணு பார்த்திட்டிருக்கேன்... இவனுக்கு முடிச்சதும் அப்பறம் பொறுமையா பண்ணிக்கலாம் என்று நினைச்சிட்டு இருந்தேன் சம்மந்தி…”

சில பல மணி நேரங்களிற்கு பிறகு வீட்டிற்கு வர அகி யுவா மற்றும் வேல் ஹாலில் அமர்ந்து இருக்கையில் பேச்சை தொடங்கினார் வேல்.

“டேய் அகி என்கிட்ட எதுக்குடா மறைச்ச நீ லவ் பண்ணுறே விஷயத்தை என்கிட்ட சொல்லுறதுக்கு என்ன உனக்கு நான் அவளோ முக்கியம் இல்லாம போய்ட்டேனா..” என சிறு கோபத்துடன் கேட்க.

“அய்யோ அப்பிடி இல்லை மாமா உங்களே கஷ்டப்படுத்த கூடாதுன்னு வேற வழியில்லாம அதோட அவங்க எ.....” எனும் போது சம்யுக்தா சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வர கூற வந்ததை மறைத்தான்.

“சரி சரி விடு இப்போ உனக்கு சந்தோசம் தானே நீ ஆசைப்பட்ட அந்த பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்…” என்றதும் தாங்க்ஸ் மாமா என்று அணைத்துக் கொண்டான்.

“டேய் யுவா நம்ம வீட்டிலே கல்யாணம் நடக்கப்போகுது ஆமா நீயேன் டல்லாயிருக்க ஏதாவது பேசுடா…” என்றதும் “இதுலே நான் பேச என்னப்பா இருக்கு அவங்க அவங்க லைப் அவங்க இஷ்டம் நம்ம கிட்ட எல்லாத்தையும் சொல்லிக்கிட்டா இருக்காங்க…” என்றவன் அகிலனை ஆழமாக பார்த்தான்.

அவனின் பார்வையை உணர்ந்தவனாய் “யுவா சாரிடா..” என்று எழுந்தவனிடம்,

“அய்யோ வேணாம் சார் வேணாம் நான் யாரோ தானே அப்பிடி தானே எல்லாரும் பாடா படுத்துறீங்க…” அடக்கப்பட்ட கவலையுடன் அவனின் வார்த்தைகள் வெளியே வந்தது.

“நான் மட்டும் தான் எல்லார்கிட்டயும் பாசமா இருக்கேன் அன்பையும் எதிர்பார்க்கிறேன் ஆனா மத்தவங்க இல்லைன்னு இப்போ தான் இந்த மர மண்டைக்கு புரியிது இதுலே வேற அவ ஒருத்தி டார்ச்சர் பண்றா எல்லாருக்கும் நான் என்ன அவளோ கெட்டவனாடா?..” என்றவனின் மனம் அகிலன் ஒரு வார்தைக்கூட தன்னிடம் அவன் காதலிப்பதை சொல்லவில்லை தான் அவனோடு பழகி எதையும் மறைக்காமல் சொல்லி அதிகம் பாசம் வைத்திருக்கிறேன் என்ற எண்ணத்தில் அவனக்குள் ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது எப்படி இவன்‌ தன்னிடம் மறைக்கலாம் என்ற எண்ணமே மனதை வலிக்க வைத்தது வெளியே
வந்தவன் தன் காரை எவளோ ஸ்பீடாக ஓட்ட முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக ஓட்டினான் கோபம் கண்ணை மறைக்க‌ விளைவு??....
 
Top