• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

11.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



பிளைட் லேண்ட் ஆனதும் பகலவன் போனை ஆன் செய்ய வந்து விழுந்தது பல்லவி மாலினி கைது பற்றி.அதிர்வெல்லாம் ஆகவில்லை எப்படியும் நாராயணன் சிக்கினால் அடுத்த அடுத்த நிகழ்வு நடந்தேறும் என்று அவர் அறிந்ததே நிதானமாக அவர் வெளியே வர… அவர் போன் அடிக்க தொடங்கி இருந்தது.

சொல்லு வர்மா..

மாமா நீங்க வந்துடுங்க கார் அனுப்பி இருக்கேன் என்று சொல்ல..எங்க வரனும் வர்மா நீ இப்ப எங்க இருக்க?

நான் இப்ப காலேஜ் போய்ட்டு இருக்கேன் ..

ஓஓஓ நானும் வரேன் நீ அங்கேயே வெய்ட் பண்ணு ..

இல்ல மாமா நீங்க வீட்டுக்கு போங்க அவங்க எல்லாரும் என்று முடிக்கும் முன்பே, அங்க போனாலும் ஒரு வேலையும் இல்ல வர்மா நான் வரேன் இரு என்றவன் போனை அணைத்து விட்டு வேறு ஒரு எண்ணுக்கு அழைத்தவன் .. எப்படி பழனி இந்த கேஸ் மூவ் ஆகும் நம்ம காலேஜ் ல இருந்து என்னென்ன டாக்குமெண்ட் ரீ ஓபன் பண்ணு வாய்ப்பு இருக்கு என்று கேட்க…

இப்ப நம்ம கிட்ட டாக்குமெண்ட் எல்லாம் வேற மாதிரி தான் இருக்கு இதோட ஒரிஜினல் இல்ல இப்ப குடுத்து இருக்க டாக்குமெண்ட் என்ன ஏதுன்னு கோர்ட்டு க்கு வந்தா தான் தெரியும் என்று பழனி சொல்ல..

ம்ம்ம்… ரிஷியை நான் பார்க்கனும் பழனி நீ ஏற்பாடு பண்ணு…

என்ன சொல்லுற பகலவா ரிஷியா ..

பகலவன், “நீ அப்ப இன்னும் நாராயணன் அரஸ்ட் ஆனதை பார்க்கலையா?

என்ன சொல்லுற..

ஆமா ரிஷி தான் நாராயணனை டார்ஜிலிங் ல அரஸ்ட் பண்ணி ப்ரொடியூஸ் பண்ணது என்று பகலவன் சொல்ல..

என்னடா சொல்லுற அப்ப நம்ம ரிஷி உயிரோட இருக்கிறளா பாப்பா என்று நிறுத்த

எதுவுமே எனக்கு தெரியாது பழனி நான் ரிஷியை தான் நியூஸ் ல பார்த்தேன் அவளை பார்க்க தான் போனேன் ஆனா பார்க்க முடியல என்று பகலவன் சொல்ல அந்த பக்கம் கேட்டு கொண்டு இருந்த பழனி உடனே அவனுடைய ஆட்களை முடக்கி விட்டான் ரிஷியை தேட..

பகலவன், “என்னடா சத்தமே இல்லாம இருக்க?

என் ஃபிரண்ட் பார்க்கனும் டா நீ தேட வேண்டாம் நானே பார்த்துக்கிறேன் என்றவன் சரி நீ இருக்கிற பிரச்சினையை பாரு நான் அப்புறம் கூப்பிடுறேன்.டேய் பழனி.. சொல்லு டா.. இந்த கேஸ் ரீ ஓபன் பண்ணதே ரிஷி தான் என்று பகலவன் சொல்ல..

……..

பழனி பழனி…

ம்ம் சொல்லு பகலவா…

ஒன்னு இல்ல..சரி நீ கேஸ் விஷயமா எனக்கு டீடெயில்ஸ் அனுப்பு..

அனுப்புவேன் பகலவா ஆனா நான் இதுல உனக்கு உதவி பண்ண மாட்டேன்.

பகலவன், “ நான் உன் கிட்ட உதவி கேட்கல டா என்ன நிலைமை ன்னு தெரிஞ்சுக்க மட்டும் தான் என்று சொன்னவன் போனை அணைத்து விட்டு கண் மூட அடுத்த அரைமணிநேரத்தில் காலேஜ் வந்து சேர்ந்து இருந்தான்.

மாமா என்று வாசலிலேயே வர்மன் அவரை பார்க்க..

என்ன கிடைச்சது வர்மா…

மாமா இங்க எதுவும் இல்ல எல்லாமே ரினவேட் பண்ணி இருக்காங்க அதான் என்ன கிடைக்க போகுது என்று வர்மன் சொல்ல புன் சிரிப்புடன் ஏதோ இருக்கு அதை தான் இத்தனை வருஷம் பாதுகாத்து உங்க அத்த குடுத்து இருக்கா என்றவர் சரி வா நடக்கிறது நடக்கட்டும் .

என்ன மாமா சொல்லுறீங்க உள்ள அம்மாவும் மாலினி அத்தையும் … அவங்க அவங்க பண்ண நல்லது கெட்டது எல்லாத்துக்குமான பாலபலன் ன்னு ஒன்னு இருக்கு வர்மா அது யார் நினைச்சாலும் மாத்த முடியாது என்று சொன்னவன் ,சரி இருபது வருஷத்துக்கு முன்னாடி இங்க வொர்க் பண்ண லோயர் போஸ்ட் யார் யாருன்னு லிஸ்ட் இருக்கா பாரு..

வர்மன் யோசனையோடு அதை எடுக்க சொல்லிவிட்டு பகலவனை பார்க்க..

ஐ விட்னஸ் யாராவது இருந்தா…

அப்ப ரிஷி அத்த சொல்லுறது…என்று வர்மன் இழுக்க..

ரிஷி தப்பு பண்ண மாட்டா அதுல எந்த சந்தேகமும் இல்லை ஆனா இப்ப இருக்கிற சூழ்நிலையில் நான் குடும்பத்தையும் பார்க்கனுமே என்றதும் ஒரு நொடி யோசித்த வர்மன் அப்ப தப்பு நம்ம பக்கமா மாமா..

இருக்க போய் தானே ரிஷி கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கா…

என்ன சொல்லுறீங்க அப்ப தாத்தா அம்மா அத்த ன்னு எல்லாரும்…

போக போக தெரிஞ்சுப்ப வர்மா என்றவன் போகலாம் வா என்று அழைத்து கொண்டு செல்ல …

இங்க வீட்டில் ராமைய்யா தனக்க ஏற்ப ஒரு பலிகடாவை தயார் செய்து இருந்தார்.

அகத்தியன், “ என்ன ராமைய்யா இப்ப இதுக்கு தீர்வு என்ன?

ராமைய்யா, “ அகத்தி கொஞ்சம் பொறுமையா இரு என் மண்டை சூடாகி போய் இருக்கு என்ன என்ன உள்ள இருக்கு எது எல்லாம் பூதம் மாதிரி கிளம்பும் ன்னு புரியாம நிக்குறேன்.

பூதம் கிளம்ப தானே செய்யும் ஆதாரத்தை கொடுத்தது ரிஷி பாலாம்பிகை அப்ப கிளம்பாமா என்ன பண்ணும்.

ராமைய்யா திடுக்கிடலுடன் திரும்பியவர் என்ன சொல்லுற?

போய் நீயே நியூஸை பாரு நாராயணன் பிடிபட்டது ரிஷி கிட்ட நீ என்னமோ வேற யாரோன்னு நினைச்சுட்டு இருக்கியா எப்படி அவ உயிரோட இருக்கா யாருக்கும் தெரியாம உன் மகன் அவளை பாதுகாத்துட்டு இருக்கானா? இல்ல இங்க ஒன்னு அங்க ஒன்னுன்னு குடும்பமா? ஒரு விஷயத்தை கூட சரியா செய்யல இனி உன்னையே என்னனு நம்ப என்று அகத்தியன் பேச பேச ராமைய்யா மனதில் ஓடியது எல்லாம் வெறும் ரிஷி பற்றிய எண்ணங்கள் மட்டுமே ஏதோ ஒன்று நடக்க போகிறது என்று தெரிந்தவர் அதை தடுக்க கடைசியாக வந்து நின்றது மத்திய அமைச்சர்கள் இடம் தான்.ஆளுங்கட்சி உதவ எண்ணினாலும் அதில் இருக்கும் சாதக பாதங்களை ஆராய சிலர் பச்சை கொடி காட்ட வேண்டாம் என்று மறுத்து நின்றாள் நிமாவாகினி.

என்ன தலைவரே இப்படி சொல்லுறா இந்த பொண்ணு…


என்ன விஷயம் நிமா என்றார் லால்..

எஸ் சார் உங்களுக்கு அங்க கிடைக்க போற சீட் இவ்வளவு தான் அதுக்கு எதுக்கு அந்த ஆளுக்கு காம்பரமைஸ் பண்ணிக்கனும் இதுவரை தனியா தானே இருந்தீங்க அப்படியே பண்ணலாம் என்று சொல்ல அங்கே சலசலப்பு. அங்கே மூத்த அரசியல்வாதிகள் ஒரு கணக்கு சொல்ல மறுக்க என்று அந்த கூட்டம் முடிவுக்கு வர …


அங்கிருந்து கிளம்பியவள் சிலதை வெட்டவெளிச்சமாக்கி இருந்தாள்.

லால், “ நிமா என்ன நீ பிரஸ் மீட் ல சொன்னது எல்லாம் உண்மையா…

என் மேல் நம்பிக்கை இல்லையா அங்கிள்? என்ன நிமா உன்னையே சந்தேகப்பறேன்னு சொல்லுறியா நான் அந்த அர்த்தத்தில் கேட்கல இந்த விஷயம் உண்மை தானா..

ஆமா

அப்ப ஏன் இத்தனை வருஷமா இதை சொல்லவே இல்ல..

சொல்ல வேண்டிய நேரம் வரல.

இப்ப என்ன அவசியம் ன்னு இதை நீ சொல்லி இருக்க நிமா..

நான் இருக்கேன்னு தெரியனும் அங்கிள் எந்த உயரத்துல இருக்கேன்னு தெரியனும் . நெருங்கி வர நினைக்கிற யாரா இருந்தாலும் இரண்டு அடி தள்ளியே நின்னு தான் பார்க்கனும் அதுக்கு தான் இவ்வளவு காலம், அந்த காலம் இப்ப வந்துட்டு அதான் இந்த முடிவு.

லால், “ இருந்தாலும் இதுல நிறைய தலையீடு இருக்கே டா அது நல்லது இல்ல நமக்கு..

ஓஓஓ அப்ப தப்பை தட்டி கேட்க கூட தப்பு செய்யறவனோட பர்மிஷன் வேணுமா அங்கிள்.

லால், “ நீ சொல்லுறது எல்லாம் புரியாம இல்ல ஆனா உலகம் அப்படி இல்லடா புரிஞ்சுக்கோ…

எல்லாத்துக்கும் தயாராகி தான் நிக்குறேன் அங்கிள் என்றவளை பெருமூச்சுடன் சரி எந்த நேரமா இருந்தாலும் என் உதவி தேவைபட்டா கூப்பிடு உனக்கு பாதுகாப்புக்கு நான் இப்ப ஆள் அனுப்புவேன் என்றவரை நினைத்து புன்னகைத்தாள் சரி அங்கிள் என்று வைக்க..

இங்கே ரிஷி தான் படபடத்து போனார் என்ன பண்ணி வச்சு இருக்கா இந்த பொண்ணு ஆதி..

விடுங்கம்மா அவ முடிவு எடுத்துட்டா இதுக்கு மேல என்ன பண்ணலாம் ன்னு மட்டும் யோசிங்க..

என்னத்த யோசிக்க ஏற்கனவே என்னைய தேடு வாங்க இப்ப இது வேற அப்ப நேரா அவளை வச்சே எல்லாத்தையும் வெளியே கொண்டு வர பார்ப்பாங்க அதுவும் அவங்களுக்கு சாதகமா..

ஆதி , “ வரட்டுமே மோதி பார்த்துடலாம் அவங்களுக்கு இருக்க அதே செல்வாக்கு நமக்கும் இருக்கு மா நீங்க கவலைப்படாதீங்க..

ம்ம்ம் இந்த விது வேற எங்க இருக்கான் ன்னு தெரியல போன் பண்ணவே இல்ல என்று அடுத்த விஷயத்திற்கு ரிஷி தாவி இருக்க…


பழனி கிளம்பிவிட்டார் நிமாவை பார்க்க..இத்தனை வருட பாரமெல்லாம் இறங்கியது போல் இருந்தது பழனிக்கு…பழனி கிளம்பி பத்து நிமிடத்தில் பகலவன் அழைக்க..

சொல்லு பகலவா…

பழனி… என்று திக்கி திணற…புரியுது டா ஆனா என்ன ஏதுன்னு நேர்ல பார்த்தா தான் தெரியும் கொஞ்சம் பொறுமையா இரு பகலவா…எப்படி டா பொறுமையா இருக்கிறது வருஷம் கடந்து இத்தனை காலமா நான் ஏங்கின ஒன்னு அதை தொட்டு பார்க்க முடியாத இடத்தில் என்னால் எப்படி இருக்க முடியும்.

இருந்து தான் ஆகனும் பகலவா மாலினி தாரா இரண்டு பேர் இருக்காங்க அது உனக்கு தெரியுமா என்று கேட்டதும் தீப்பட்டது போல் இருக்க…அடுத்த நொடி அதுக்காக…வாய்விட்டு சிரித்த பழனி அப்ப அங்க என்ன பதில் சொல்லுவ பகலவா

டேய் நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி சொல்லுற..

தப்பு இல்லன்னும் ஆகாதே…

பழனி…

இதைப்பத்தி பேசவேண்டாம் பகலவா நான் எந்த காலத்திலும் ரிஷி பக்கம் தான் என்று போனை அணைத்து விட மாமாவின் தவிப்பை பார்க்க முடியாமல் ஒரு பக்கம் இருந்தாலும் வந்து விழுந்த செய்தியில் மொத்தமாய் நொறுங்கி போய் இருந்தான் வர்மன்…

எங்கே எந்த இடத்தில் தவறிவிட்டோம் ஏன் எதையும் ஆராயாமல் விட்டோம் என்று அவன் மனது பரபரக்க அந்த நொடி உலகம் நின்றுவிடாதா என்று இருந்தது . வர்மன் ஏதேதோ எண்ணத்தில் சுழல் ராமைய்யா அழைத்து விட்டார் வர்மனை….


தொடரும்
 
  • Love
Reactions: shasri