• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11.மிஸ் மானஷா சம்யுக்தா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
கார்ரை வேகமாக ஓட்டிக் கொண்டு வந்தவன் கவலையில் குடித்தும் இருந்தான் அவனை தேடி பின்னாலே போனான் அகி.

“அண்ணா அங்கே பாருங்க சீமென்ட் ஒழுங்கா போடலே அதை சரி பண்ணுங்க இது ரெண்டு மாடியா சின்னதா இந்த கம்பெனியே ஆரம்பிச்சாலும் அதை நிறைவா பூர்த்தியா ஸ்ட்டாட் பண்ணி முடிக்கனும்ங்கிறது என்னோட ஆசை அதுக்கு ஏத்த மாதிரி பண்ணுங்க…” என்று அங்கு இருந்த இன்ஜினியரிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளை பின்னால் இருந்து யாரோ அணைக்க சற்று திடுக்கிட்டவள் பின் அது யார்? என தெரிந்ததும் “என்னடி ரொம்ப சந்தோசமா இருக்கப் போல..” என்று அவள் கையை பிடித்து முன்னால் நிறுத்தி அவள் முகம் பார்த்தாள்.

“ஹேய் இது தானே வேணாங்கிறது எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு இப்போ எதுவும் தெரியாத மாதிரி இருக்கியா?.” என்று பதிலுக்கு கேட்ட லில்லியிடம் “அடி சத்தியமா எதுவும் தெரியலை நீ எதை பத்தி சொல்லுற…”

“ஹ்ம்ம்.... உங்க அகி அண்ணாவை என்னை பொண்ணு பார்க்க வர வெச்சதை சொன்னேன்…”

“ஓஹோ அதுவா அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போய் பேசலாம்ன்னு தான் போனேன் அங்க போய் பார்த்தா நம்ம ப்ரென்டு தான் அவரோட மாமாவாம் அப்பறம் என்ன நடந்ததை சொன்னேன் ஆனா அவரை அநாதைன்னு அசிங்க படுத்தினதை நான் சொல்லலே ஏன் நம்ம கிட்ட அதிகமா பேசும் போது அவரு சொல்லிருக்காருல்லே அகிண்ணாவே பத்தி அப்போ தான் அவர் மேல எனக்கு ஒரு மரியாதை வந்தது அதோட
அவர் மேல இவரு வெச்ச பாசமும் புரிஞ்சது எங்க சொன்னா மனசு உடைஞ்சு ஏதாவது பண்ணி பின்னாடி பிரச்சினை வருமேன்னு தான் அமைதியா இருந்தேன்…
ஆனா உன்னை இன்னைக்கு பொண்ணு கேட்டு வந்தது எனக்கு தெரியாதுடி....” என்று சொன்னவளிடம்,

“எனக்கு உன்னை பத்தி தெரியாதாடி அன்னைக்கு அப்பா அப்பிடி பேசினதும் நான் அவர்கூட பேசுறதையே நிறுத்திட்டேன் அதுக்கு பிறகு தான் அப்பவோட வார்த்தையோட வீரியத்தை புரிஞ்சுகிட்டாரு அப்பறம் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கிறதா முடிவு பண்ணிருக்காங்க…”

“ரொம்ப சந்தோசம்டி வாழ்த்துக்கள்…”

“தாங்க்யூ ஆமா கேட்கனும்னு இருந்தேன் இன்னும் வேலை முடியலையா?..” என அந்த கட்டிடத்தை ஆராய்ந்தபடியே கேட்க.

“இல்லை இன்னும் ஒன் மன்த் ஆகும் அதோட சின்ன அரேன்ஜ்மென்ஸ் இருக்கு சரி வா உள்ளே போலாம்…” என்று கூட்டி சென்று சுற்றி காட்டினாள்....

அதன் அழகையும் ஒவ்வொரு வேலையையும் பொறுமையாய் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து இருப்பதை பார்த்து கண்களை விரித்தாள் லில்லி அதன் முன்னே அவள் படும் பாடும் வந்து நிற்க அவளை அணைத்தவள் “எல்லாம் சரியாகும் நீ ஆசைப்பட்ட மாதிரி நடக்கும் நீ எதுக்கு கவலை படக்கூடாது சம்மூ..” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறியவளை பதிலுக்கு அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா.

ஏனோ அது எப்போதும் அவள் கொடுக்கும் நம்பிக்கை என்பதால் சந்தோசமாக ஏற்றுக் கொண்டாள் மனதிற்கும் இதமாக இருக்கும்.

“சரி ரொம்ப லேட்டாகிடுச்சு நான் கிளம்புறேன் அப்பறம் நீயும் போ எவ்வளவு நேரம் தான் வேலை வேலைன்னு திரியுவே…” என்று சிறு கண்டிப்புடன் விடைபெற அவளை அனுப்பி விட்டு வந்தவள் எல்லாவற்றையும் சரி பார்த்து இன்ஜினியரிடம் பேசி விட்டு கிளம்பி சற்று தூரம் போக அங்கு சற்று தள்ளி மரத்தில் மோதிய வண்ணம் ஒரு கார் நிற்பதைக் கண்டவள் என்னாச்சோ ஏதாச்சோ என்று அவ்விடம் சென்றாள் அங்கு போய் பார்க்க தலையில் அடிப்பட்டு ரெத்தம் வந்து கொண்டிருக்க சீட்டில் தலை சாய்த்து மயங்கிய வண்ணம் யாரோ இருக்க “அய்யோ என்னாச்சுன்னு தெரியலையே யாரா இருக்கும்…” என்று முகத்தை திருப்ப பயத்தில் கத்தியே விட்டாள் ஆமாம் அங்கு இருந்தது யுவா குடித்து விட்டு தன்னிலையில் இல்லாமல் வண்டியை கொண்டு இடித்தவனிற்கு இந்த நிலமை....

சிறிது தன்னை நிதானித்தவள் தன் மொபைலை எடுத்தாள்....

“ஹலோ ரிஷிண்ணா எங்கயிருக்க…”

“வீட்டிலே தான்ம்மா என்னாச்சுடா?...” அவளின் குரலின் பதட்டத்தை அறிந்தவன் “நீ கொஞ்சம் உடனே மெயின் ரோட்டுக்கு வாயேன் ஆட்டோ பிடிச்சு வாண்ணா…” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

அவனும் அதே போல் செய்து அங்கு வந்து சேர்ந்தான்.

“என்னாச்சும்மா…” என்றவனிடம் காரைக் காட்ட “ஹேய் இது உங்க எம்டி தானே ஏன் அவருக்கு என்னாச்சு..” சற்று பதட்டத்துடன் கேட்டான்.

“தெரியலைண்ணா நீ என்ன பண்ணு அவரை ட்ரைவிங் சீட்லே இருந்து மத்த சீட்டுக்கு கொண்டு போய் இருப்பாட்டு..” என்றதும் அவனை தூக்கி சாய்ந்து இருப்பதற்கு ஏற்றாற் போல் வைத்ததும் “அண்ணா நீ ஸ்கூட்டி எடுத்துட்டு வீட்டுக்கு போ நான் வரேன்…” என்றவள் ட்ரைவர் சீட்டில் இருந்த சில கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தி விட்டு அவனது காரை ஸ்ட்டாட் பண்ண எந்த சிக்கலும் இன்றி அது இயங்க ஆரம்பித்தது மெதுவாக அதை ஓட்டிக்கொண்டு அவனுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றாள்...

கார் சத்தம் கேட்டு சன்முகவேல் போனவன் வந்திட்டான் என்ற நிம்மதியோடு வாசலிற்கு ஓட அதே நேரம் பார்த்து அவனை தேடி சென்ற அகியும் வந்து விட்டான்.

காரில் இருந்து இறங்கிய சம்யுக்தாவை பார்த்ததும் இருவருக்கும் குழப்பம் அதிகரிக்க “ப்ரென்டு டாக்டர்க்கு இன்போர்ம் பண்ணி உடனே வர சொல்லுங்க…” என்றவள் “அகிண்ணா அவரை வந்து தூக்குங்க…” என்றதும் என்ன ஆனது என்பதை கூட கேட்காமல் ஏதோ நடந்திருக்கு என்பதை யூகித்துக் கொண்டு அவள் சொன்னதை அவசரமாக செய்தனர்.

அவனது ரூமிற்கு கொண்டு வந்து படுக்க வைத்தவன் அப்போது தான் ஆராய்ந்தான் அவன் குடித்திருக்கிறான் என்பதை “அகிண்ணா உடனே மருந்து எடுத்துட்டு வாங்க…” என்று கேட்ட சம்யுக்தாவிடம் ப்ஸ்ட் எய்ட் கிட்யை எடுத்துக் கொடுத்தான் அவன் தலையில் இருந்த காயத்தை துடைத்து அதுக்கு மருந்து போட்டு சின்னதாக கட்டும் போட்டு விட அகி வேறு எங்கயாவது அடிப்பட்டிருக்கா என்று ஆராய்ந்தான்....
அங்கு காலில் கன்றி சிவந்திருக்க அங்கு ஆயில்மன்ட் போட்டு தேய்த்து விட சொல்ல அதை செய்தான் அகிலன்.

டாக்டர் வந்து செக்கப் பண்ணி “லேசான அடி தான் ஆனா ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க அப்பறம் ரொம்ப டென்சனாகாம பார்த்துக்கோங்க இப்போ குடி போதையிலே இருக்கிறதாலே டேப்லெட் எதுவும் குடுக்கலை மார்னிங் நான் வந்து பார்க்கிறேன் என்று விடைபெற அகி அவரை அனுப்பி வைத்து விட்டு வந்தான் சம்யுக்தா அவன் ரூம்மை விட்டு வெளியே வர வேல் அவனுக்கு உடையை மாற்றி விட்டார்.

“தங்கச்சி என்னம்மா நடந்திச்சு?...”

“நான் வேலையை முடிச்சிட்டு வரும் போது தான் கவனிச்சேன் அண்ணா வண்டியை கொண்டுப்போய் மரத்துலே இடிச்சு வெச்சிருந்தாரு இவருன்னு தெரியாது அங்க போய் பார்த்தா தலையிலே அடிப்பட்டு ரெத்தம் வந்திட்டு இருந்துச்சு ரிஷிண்ணாவோட உதவியாலே கூட்டிட்டு வந்தேன் ரெத்தத்தையும் இவரையும் பார்த்ததும் பயத்துலே கத்திட்டேன்…” என்று இப்போது கூட அவனிருந்த நிலையை எண்ணி மனம்‌ கலங்கியது....

“சரிண்ணா பார்த்துங்க நான் கிளம்புறேன்..” என்றதும் “ப்ரெண்டு ரொம்ப தாங்க்ஸ்ம்மா வீட்டிலே இருந்து கோவிச்சுட்டு போனவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்திட்டு தான் இருந்தேன் அவனை பத்திரமா கூட்டியாந்துட்ட..” என்றவர் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் விட்டதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டான்…”

“இதுலே என்னயிருக்கு சரி அவரை பார்த்துக்கோங்க நான் வரேன்…”

“ஹேய் நீ எதுலே போவே மணி வேற 11.30 ஆகிட்டு இரு நான் கொண்டு போய் விடுறேன்…”

“இல்லைண்ணா பராவாயில்லை நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்..”

“இப்போ எங்கன்னு போய் ஆட்டோ பிடிப்ப ப்ரென்டு டேய் அகி நீ போய் விட்டிட்டு வா நான் பார்த்துக்கிறேன்…” என்றதும் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு வந்தான்.

“என்ன அண்ணா அவரு டெய்லி குடிப்பாரா?...” கவலையோடு கேட்க அவளின் மூளையோ அது எதுக்கு உனக்கு என்று கேள்வி எழுப்பினாலும் கேட்டு விட்டாள்.

“இல்லம்மா தப்பு என் மேலே
தான் இத்தனை வருஷத்துலே இன்னைக்கு தான் குடிச்சிருக்கான்…”

“ஓஹ் சார் தான் குடுத்திங்களா குடிக்க சொல்லி…”.

“ஏன்டா அண்ணனை பார்த்தா உனக்கு அப்பிடியா தெரியிது..” பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.

“ச்சே ச்சே அப்பிடியில்ல அண்ணா நீங்க தானே சொன்னீங்க என்னாலேதான்னு அதான் அப்பிடி சொன்னேன் கோச்சிக்காதீங்க....”

“அது அவன் சின்ன வயசுலே இருந்தே என்கூடவே இருந்தவன் எதுவாயிருந்தாலும் என்னோட சேர் பண்ணிட்டு தான் மத்த வேலையை பார்ப்பான் அப்பிடி தான் உன்னை காதலிச்சப்போ என்கிட்ட சொன்னான் ஆனா மொதல்ல என்கிட்ட தான் கேட்டான் எனக்கு இவள் ஓகேயாடான்னு நானும் உன்னை பாலோவ் பண்ணி பார்த்தேன்மா உன்னோட கேரக்டர் எப்பிடின்னு அப்போ என் மச்சானுக்கு 100 சதவீதம் கரெக்ட்டா பொறுத்தமா இருந்த நான் அதை அவன்கிட்ட சொன்னேன் அவனும் உன்கிட்ட லவ் சொல்ல பின்னாடியே சுத்தினான் ஆனா நீ எந்த பசங்களையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்ட அதோட நீ நல்லா படிக்கிற பொண்ணு வேற அதான் டிஸ்டெப் பண்ணக் கூடாதுன்னு படிப்பு முடிஞ்சதும் சொல்லலாம்ன்னு இருந்தான்…

அப்பறம் நீ காலேஜ் விட்டு போய்ட்ட இவனும் பிஸ்னஸ் விஷயமா இருந்ததாலே உன்னை பார்க்க முடியுமா போய்டுச்சு சரின்னு காலேஜ்லே விசாரிச்சு நீ இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சோம்
அதுக்கு அப்பறம் வேலைன்னு சொல்லி உன்னை எங்க கம்பெனிக்கு வர வெச்சோம் இதை எல்லாம் அவன் கூடயிருந்து நானும் ஹெல்ப் பண்ணினேன் அதே சமயம் அவன் உன் பின்னாலே சுத்த நான் லில்லி பின்னாலே சுத்தினேன் ஆனா நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறது தெரிஞ்ச உனக்கு அவன் உன்னை காதலிக்கிறது தெரியாம போய்டுச்சு....
நான் லில்லியை லவ் பண்ணுறது உன் கூட அறிமுகமாகி பேசினது இது எதுவுமே நான் அவன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன் ஏன்னா எனக்கு சின்னதா ஒரு பயம் இருந்துச்சு அவன்கிட்ட சொல்ல.... அது எல்லாம் இன்னைக்கு தெரிய வந்ததும் கோபப்பட்டுட்டான் அவன் கோபமும் நியாயம் தானே…” என்றவனிற்கும் கண்கள் கலங்கியது.

ஆனால் இது எல்லாம் கேட்ட சம்யுக்தாவிற்கு தலை சுற்றியது அவன் தன்னை காதலிக்கிறான் என்பது தெரியும் ஆனால் அதில் இப்பிடி எல்லாம் காதலிச்சிருப்பான் தெரியாது அல்லவா அனைத்தையும் கேட்கும் போது அவளுக்கு அத்தனை அதிர்ச்சி.

தன் வீடு வந்ததை உணர்ந்தவள் “சரிண்ணா எல்லாம் கொஞ்ச நாளையிலே சரியாகிடும் அவரும் இயல்பாகிடுவாரு சரிண்ணா நான் வரேன்…” என்றவள் அவனை வழியனுப்பி விட்டு உள்ளே சென்று விட “எங்கடி போய்ட்டு வர அதுவும் இவ்வளவு நேரம்…” என்றதும் நடந்த அனைத்தையும் சொல்ல “அய்யோ என்னடி இது நல்ல காரியம் தான் பண்ணிருக்க யாராயிருந்தாலும் ஒரு உயிர் தானே …”என்று மனம் உருகி வேண்டிக் கொண்டார் யுவாவிற்காக கனகா....

“நீ போய் ப்ரெஸ்அப் ஆகி வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…”

“இல்லைம்மா எனக்கு சாப்பாடு வேணாம் நீங்க போய் தூங்குங்க…”

“இப்பிடி சாப்பிடாம தூங்காம உடம்பை கெடுத்துக்க போறீயா?...” என்றவர் மிரட்டி சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு போய் தூங்கினார்.

இவளுக்கு போட்ட சாப்பாட்டையே அளந்து கொண்டிருக்க அவளது எண்ணமோ அவள் யுவாவை சுற்றிக் கொண்டிருந்தது.

“நான் நடந்துக்கிறது சரியா தவறான்னு புரிய மாட்டேங்குது ச்சே அவன் எப்பிடி என்னை லவ் பண்ணுறான் ஆனா நான் என்ன மாதிரி நடந்துக்கிட்டேன் பாவம் யுவா எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் அவன்கிட்ட எந்த பெருமையோ எதுவும் இல்லே அன்னைக்கு நம்மளை அப்பா அந்த கேள்வி கேட்ட போ கூட யாருன்னே தெரியாம கை நீட்டினவன் எதுக்காக அவனுக்கு பிடிச்ச எனக்காக தானே....” என்றவளின் உதட்டில் சிறு புன்னகை தவழ்ந்தது.
 
Top