• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. இதயம் பகிர்திட வா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
671
அன்றாட வேலைகளின் நடுவே, தன்னைத் தானே நொந்து கொண்டவள் நாட்களோ விரைந்தோடி இருந்தது.
இப்போதெல்லாம் சத்தியன் அவளுடன் மல்லுக்கு நிற்பதில்லை. மல்லுக்கு நிற்க மாட்டான் என்றில்லை, அதற்கான சந்தர்ப்பம் தான் எதிர் எதிர் வீட்டில் இருந்தாலும் அமையவில்லை. பிரியாவும் அதற்கான வாய்ப்பை அவனுக்கு தருவதில்லை.


அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள் என்றால் சொல்லவா வேண்டும் பிரியாவுக்கு.? அன்றைய தினம் ஆசரமத்தில் அல்லவா சரண் புகுந்து கொள்வாள்.
வழமை போல் தயாராகி ஆசரமத்துக்குள் நுழைந்தவன் விழியானது ஆச்சரியத்தில் பெரிதாய் விரிந்தது.



ஆம் அவள் ஆச்சரியப் பட்டதற்கான காரணம், இதுவரை அவள் காணாத அலங்காரங்களுடன் அந்த ஆசரமம் பிரகாசித்தது தான். வாயிலில் ஆரம்பித்த மலர் தோரணங்கள் ஆனது, அந்த இல்லம் முழுவதும் நிறைத்திருக்க, இடையிடையே தொங்க விட்டிருந்த ஐிகினா காகிதங்களின் பிரகாசமும், பலூன்களின் அணிவகுப்பும் பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தது.


"அக்கா..." என்றவாறு காலை சுற்றிய பிள்ளைகளின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.


"ஏய் வாலுங்களா....! இன்னைக்கு என்ன விசேஷம்...? இப்பிடி ஜெலிக்குது." என்றாள் தெரிந்து கொள்ளும் ஆவலில்.


"தெரியலக்கா... யாரோ நிறைய பேரு வந்தாங்க. எங்களுக்கு எல்லாம் புது ரெஸ் கொடுத்தாங்க.. அப்பிடியே மேடத்தோட பர்மிசன்னல இதெல்லாம் கட்டிட்டு கிளம்பிட்டாங்க. பாருங்க நாங்க எல்லாரும் அவங்க குடுத்த புது ரெஸ் தான் போட்டிருக்கோம்" என்றாள் அவர்களுக்குள்ளேயே பெரியவளாய் இருந்தவள் தம் உடையினை காண்பித்து.


"அப்பிடியா..! சரி நீங்க விளையாடுங்க... நான் மேடத்தை பார்த்துட்டு வரேன்." என்றவளுக்கோ ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
நிர்வாகியின் அறை வந்தவள், அவர் யாருடனோ செல்போனில் உரையாடிக் கொண்டிருப்பதை கண்டதும்,


'நான் வரப்போ தான் போன் பேசணுமா...? போனை வைச்சதும் என்னை கண்ணுக்கே தெரிிறதில்லை. பிறகு நீ எப்போ வந்தன்னு கேக்கிறது.' மனதில் தான் நினைத்தாள். இதை எல்லாம் வெளியே சொல்லிட முடியுமா...? அவள் நினைத்தது போலவே போனை வைத்ததும் அவளை கண்டு கொள்ளாது,
அறையிலிருந்த அலமாரியினை துழாவியவருக்கு தேடியது கிடைக்கவில்லை போலும், மீண்டும் செல்போனினை எடுத்து யாருக்கோ அழைப்பினை தொடுத்தார். எதிர் புறம் ஏற்க வில்லை போல.


"அவசரத்துக்கு கூப்டா யாரும் எடுக்க மாட்டாங்களே!" பெரிதாகவே முணுமுணுத்த படி திரும்பியவர் கண்களில் பிரியா விழுந்தாள்.


"வாம்மா... எப்போ வந்த...?" என்றார்.
இதை அவள் எதிர் பார்த்தாள் தானே. தான் நினைத்ததையே அவர் கேட்டதும், உதடுகள் உதிர்க்காத புன்னகை தானாக அரும்பி மறைந்தது.


"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மேடம். ஆமா இன்னைக்கு என்ன விசேஷம்... இல்லம் இவ்ளோ அலங்காரமா இருக்கு... எனக்கு தெரிஞ்சு ஆண்டு விழாவை தான் இந்த மாதிரி கொண்டாடுவீங்க... ஆனா அதுக்குத் தான் நாள் இருக்கே..."


"அதுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கு... ஆனால் இது வேற.."


"வேறன்னா.. !"


"பெரிய இடத்தில பிறந்த ஒருதங்களுக்கு பர்த்டேவாம். அதை இந்த பிள்ளைங்களோட கொண்டாட ஆசைப்படுறாங்க. அதான் நானும் மறுப்பு சொல்லல." அவர் அப்படிச் சொன்னதும் பிரியா முகம் சட்டென சுருங்கிப் போக..


"ஓ... " என்றதோடு மேலே பேச்சு எழாது அமைதியாகிப் போனாள்.

"ஏம்மா முகம் சுருங்கி போச்சு..? எதாவது பிரச்சியைா..?" என்றவருக்கு அவளது மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.


"பர்த்டே இங்க கொண்டாடுறதில எந்த பிரச்சரனையும் இல்ல மேடம்... ஆனா இந்த மாதிரி கொண்டாடினா, நமக்கு இந்த மாதிரி கொண்டாட யாருமில்லன்னா ஏக்கம் பிள்ளைங்க மனசில வராதா...?" என்றாள் அவர்களது நிலையினை கருத்தில் கொண்டு.


"நீ சொல்லுறது சரி தான்ம்மா.. நான் இல்லன்னு சொல்லல.. ஆனா நீயே நல்லா யோசிச்சு பாரு... நாலு சுவத்துக்க இருக்கிற இவங்களுக்கு சந்தோஷமே இப்பிடியான ஒரு சிலர் செய்யிற பங்க்ஷன் தான். அதோட நமக்கு கிடைக்கிற ஃப்ண்ட் வைச்சு, வயிறு காயாம சாப்பாடு போடுறதே சிரமமா இருக்கிறப்போ, நல்ல சாப்பாடு......?" என்று உதடு பிதுக்கியவர்,


"ஒரு நாளைக்காவது இவங்க வித்தியாசமா நல்ல சாப்பாடு சாப்பிடட்டுமே!" என்றவர் குரலில் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடு போட முடியவில்லை என்ற கவலை அப்பட்டமாக தெரிந்தது. இதன் பின் பேசிட முடியுமா அவளால்? இருந்தும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர் மேல் தான் கோபம் எழுந்தது.
பின்னே இத்தனை ஆயிரம் செலவழித்து இந்த அலங்காரங்கள் தேவையா...? அதற்கு அந்த பணத்தை காப்பகத்தில் கட்டியிருந்தால் குழந்தைகள் வயிறு குளிர்ந்திருக்குமே!


"ஆமா யாரு அந்த பெரிய மனுஷங்க மேடம்...?"


"நான் உள்ள வரலாமா...?" அவள் கேட்டு முடிப்பதற்குள், வாசலில் ஓர் குரல் கேட்க. அதில் திரும்பியவர்,


"வாங்க சார்..." என்றார் சந்தோஷமா.
'இவன் என்ன இங்க...? அதுவும் இந்த நேரம்?' வந்தவனை கண்டு புருவங்கள் வில்லாய் வளைந்தது.

"உங்க ரெண்டு பேரோட பேச்சை குழப்பலையே!" என்றான் சங்கடம் போல்.


"எப்பவும் பேசிக்கிற எங்களுக்குள்ள, என்ன பேச்சு வார்த்தை நடந்திட பாேகுது.. நீங்க குழப்புறதுக்கு... எப்பவும் போல பரஸ்பர விசாரிப்புத்தான். ஏற்பாடு எல்லாம் முடிஞ்சிட்டிங்களா சார்!" என்றார் இயல்பாய்.


"முடிஞ்சிது மேடம்.. நீங்க வந்தா ஆரம்பிச்சிடலாம்." என்றான் பணிவாக.




'இவனிடம் இத்தனை பணிவா..? அதுக்கு வாய்ப்பே இல்லையே...' மனதுள் நினைத்தபடி அவனையே நம்ப முடியாது அவள் பார்த்திருக்க.

"ம்ம்..." என அவன் அழைப்பை மறுக்காது அவனுடன் செல்லத் திரும்பியவர், அவனையே பிரியா பார்த்திருக்கவும் தான், தன் தவறு புரிந்தவராக.


"ஷ்.... மறந்திட்டேன்... இவங்க இந்த ஆசரமத்துக்கு ரொம்ப வேண்டியவங்க. குழந்தைங்களுக்கு இவங்கன்னா ரொம்ப பிடிக்கும்.. பேரு........."


"பிரியா.... பக்கத்தில இருக்கிற ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க." அவர் முடிப்பதற்குள் மிதியை சொல்லி முடித்தவனையும், பிரியாவையும் ஆச்சரியம் தாளாது விழி விரித்தவர்,


"ஏற்கனவே இவளை உங்களுக்கு தெரியுமா...?" என்றார்.


"என்ன மேடம் நீங்க...! எதிர் வீட்டில குடியிறக்கிறவங்களை தெரியாதா...?" என்றவன் பேச்சில் கேள்வியாய் திரும்பி பிரியாவைப் பார்த்தார் அவர்.
அவரது பார்வையில் உள்ள வினா புரிந்தவளோ,


"அ.... அது... எனக்கு.... எதிர் வீட்டில புதுசா யா.... யாரோ... குடி வந்து... வந்திருக்காங்கன்னு தெரியும்.. ஆனா... அது.. அது இவரு தான்னு தெரியாது." திக்குத் திணறி சொல்லி முடித்து விட்டு அப்பாவியாய் பெரியவரை பார்த்தாள். எங்கே தான் சொன்ன பொய்யிற்கு தன்னை தவறாக எண்ணி விடுவாரோ என்று பயந்து.


பின்னே அவளும் என்ன செம்வாள். எப்போதும் திமிரில் முறுக்கிக் கொண்டு திரிபவன், தன்னை தெரிந்தவள் என காட்டிக் கொள்வான் என்று ஜாதகமா பார்த்தாள்.

அவளது பதிலும், அதிலுள்ள தடுமாற்றத்தையும் உணர்ந்தவனுக்கு புரிந்து போயிற்று, தன்னை அவளுக்கு தெரியாது என்பது போல் பெரியவரிடம் பேசியிருக்கிறாள் என்பது.


"அந்த வீட்டுக்கு வரும் போது, பால் காய்ச்சினதே இவங்க என்கிறப்போ, எப்பிடி மேடம் தெரியாம போகும்.?" மாட்டி விடுபவன் போல் கூறிவிட்டு, உதட்டினுள் நகைத்தவன் செயல், அவருக்கு புரிந்ததோ, பிரியாவிற்கு புரிந்து போயிற்று பெரியவரிடம் தன்னை முணைந்து விடப் பார்க்கிறான் என்று.


"அது.. அது... அந்த அக்கா, கூட யாருமில்ல.. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள பால் காய்ச்சணும்ன்னு அவசரமா கூப்டாங்க... அன்னைக்கு நான் இருந்த அவசரத்தில, பாலை மட்டும் காய்ச்சி குடுத்துட்டு வந்துட்டேன். யார் எவர் குடி வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கல.. அதோட அது எனக்கு அனாவசியம்." ஆரம்பிக்கும் போது எப்படி சமாளிக்கலாம் என்று தான் ஆரம்பித்தாள். இவனது வெறுப்பேற்றும் சிரிப்பை எப்போது பேச்சின் நடுவே கண்டாளோ அதில் காண்டாகி, அவன் பேச்சு தனக்கு அனாவசியம் என்பதாக முடிக்க,


"ம்ம்... உண்மை தான்... அன்னைக்கு நானும் உங்கள காணல... அப்புறம் ஸ்கூல்க்கு கிளம்புறப்போ தான் எதார்த்தமா எதிர்ல பார்த்தேன்." என்று தன்னுடைய திமிரையும் விட்டுக் காெடுக்காதவன், பெரியவரிடம் அடுத்த கொக்கியை நீட்டினான். அதை கண்டு கொள்ளாதவரோ,

"என்னவோ இப்பவாவது தெரிஞ்சு கிட்டீங்களே! சரி பசங்களுக்கு பசிக்க போகுது... நாம கிளம்பலாமா...?" என்றவாறு பாதை நோக்கி நகர்ந்தவர் இவர்களின் பேச்சை பெரிதாகவே எடுக்கவில்லை.
அப்பாடா என்றிருந்தது பிரியாவிற்கு. அடுத்த கேள்வி கேட்டால், பாவம் என்ன சொல்வாள்? உண்மையாக இருப்பவரிடம் பொய்யிற்கு மேல் பொய்யினை அடுக்க உள்ளம் குறுகுறுத்தது.


'இவனால இன்னும் என்னன்ன பொய்யா சொல்லணுமோ!' அவனை முறைத்து விட்டு, அவர் பின்னே ஓடினாள்.


சாப்பாட்டு மண்டபம் முழுவதும் விதவிதமாக அலங்காரங்களில் மின்ன, நடுவே மேசை ஒன்றில், இரண்டு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான அணிச்சல்(கேக்) வைக்கப்பட்டு, அதை பல வர்ண சக்கரை களி கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதன் பின்புறம் அணிச்சலின் நிறத்துற்கு ஏற்றால் மோல் ஊது பைகள் நேர்த்தியாக தொங்க விட்டிருக்க, அதை சூழ்ந்து நின்ற குழந்தைகளை கண்டதும் தான் புரிந்தது.


இந்த ஏற்பாடுகள் அனைத்துற்கும் காரணமானவன் இவன் என்று. கூடவே கோபமும் உண்டாக, மற்ற இருவரையும் உள்ளே செல்வதற்கான வழி கொடுத்து வாசலிலேயே ஒதுங்கிக் கொண்டவள் கால்கள் அதற்குமேல் முன்னேற மறுத்தது.
மார்புக்கு குறுக்காக கையினை கட்டிக் கொண்டவள், அதே இடத்தில் நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்க்க தயாரானாள்.
குழந்தைகளோ அவர்களை கண்டதும் கை தட்டி ஆர்ப்பரிக்க.


"ஓகே ஓகே.... சைலன்ட் பசங்களா... பங்க்ஷன் ஆரம்பிக்க போகுது. கொஞ்சம் அமைதியா இருங்க." பெரியவர் தான் கூறி அடக்கினார்.


"சார் கேக்கை வெட்டிடலாமா...?"


"வெட்டிடலாம் மேடம்... ஆனா யாரு கேக் வெட்டுறது?" என்றான் அவரிடமே.


"என்ன கேள்வி சார்! நீங்க தான் வெட்டணும்."

"நானா... நோ மேடம்... எனக்கு இதில எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல... வேற யாரையாச்சும் வைச்சு வெட்டிடலாம்." என்றான்.


"உங்க பர்த்டேவுக்கு நீங்க தானே வெட்டணும்." அவருக்கு இவன் பேசுவது புரியவே இல்லை. எப்படி புரியும்..? சிறுவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடப் போகிறேன் என்று இத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டு, இப்போது கேக்கினை வெட்ட மாட்டேன் என்றால், என்ன அர்த்தம்.


"நோ மேடம்... இன்னைக்கு என் பர்த்டே இல்லை.. எனக்கு மனைவியா வரப்போற
பொண்ணோட பர்த்டே... அவளுக்கு இந்த மாதிரியான இடத்தில பர்த்டேவ கொண்டாடுறதுன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா அவ ஊர்ல இருக்கிறதனால இங்க வரமுடியல.. அதான் யாரையாவது வெட்ட சொன்னேன்." நீண்டு விளக்கினான்.


"அப்பிடியா...? ஆனா நீங்களே கேக்க வெட்டலாமே!"


"சாரி மேடம்... எனக்கு பொம்மையா நிக்கிறது எல்லாம் பிடிக்காது. அதோட இதுவெல்லாம் பிடிக்காது. அவளோட சந்தோஷத்துக்காகத் தான் இதுவே!" சொன்னதில் பாதி உண்மை பாதி பொய் கலந்திருந்தது.


"அப்பிடியா.... சரி பசங்கள்ல ஒருத்தங்கள வெட்ட சொல்லுறேன்." நேரம் போவதை உணர்ந்து மனமே அற்று ஒப்புக் கொண்டவர்,


"பிள்ளைங்களா ஒருதர் வாங்கடா..." கூறியதும் தான் தாமதம் மொத்த கூட்டமும் ஓடிவர, தலையில் கை தை்தவர்,


"இதுங்களுக்குள்ள யாரு வெட்டுறதுன்னு அடிபாடு வரப்போகுது." என்றவர்,


"யாரும் வராம அங்கேயே நில்லுங்க.." என அவர்களை மறித்தவர்,


"பிரியா உன் பர்த்டே எப்போ?" என்றார் சம்மந்தமே அற்று.


"அது இப்போ எதுக்கு மேம்... முதல்ல கேக்கை வெட்டுங்க.. என் பர்த்டே எப்போன்னூ நிதானமா சொல்லுறேன்." என்றாள் விரைந்து இந்த வேலையினை முடித்தால், அவன் சென்று விடுவான். பின் தான் குழந்தைகளுடன் நாளினை கழிக்கலாம் என்ற எண்ணத்தில்.


"கேக் தான் வெட்டப் போறோம்... முதல்ல நீ உன் பிறந்த தேதிய சொல்லு" என்றார் விடாமல். அதற்கு மேல் பேசப் போனால், நேரம் கடந்து விடும். தேதி தானே சொல்வோம். என நினைத்தவள்,

"அது.." என ஆரம்பித்து தன் பிறந்த திகதியினை கூறினாள்.
அவளது பதில கேட்டு முகம் மலர்ந்தவர்,


"அப்புறம் என்ன...? இந்த கேக்கை பர்த்டே பேபிய கொண்டே வெட்டிடலாம்.. வா பிரியா... கேக்கை கட் பண்ணு" என்றவர் பேச்சில், சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்து போல் முழித்தாள்.


"என்னம்மா முழிக்கிற.. இன்னைக்கு தான் உன் பர்த்டே.. மறந்துட்டியா..?" அவளது முழிப்பிலே கண்டு கொண்டார் அவர், அவளுக்கு தன் பிறந்த தினமே மறந்து போய் விட்டது என்று.
இன்னமும் அவளுக்கு அது உறைக்கவில்லை போல.. அதே இடத்தில் நின்றவள் கையினை பிடித்து வந்து கேக்கன் முன் நிறுத்தியவர்,

"இன்னைக்கு தேதி பதின்முன்று பிரியா...." என்றதும் தான் அவளுக்கே இன்று தன் பிறந்த நாள் என்பது நினைவில் வந்தது.
ஆம் அவள் தன் பிறந்த தினத்தினை மறந்து இன்றோடு மூன்று ஆண்டுகள் கழிந்து போயிற்று. அப்படி ஓர் நாள் ஒன்று உண்டு என்று நினைவு படுத்தவும் யாருமில்லை. அவளுக்கும் அதில் நாட்டமில்லை. அதனால் அந்த நாள் எப்போதும் போல் சாதாரண நாளாகவே கழியும்.


"என் பரத்டே தான் மேம்... ஆனா இது இன்னொருத்தங்க கேக்.. அதை வெட்ட எனக்கு உரிமையும் இல்ல.. இஷ்டமும் இல்லை. பிள்ளைங்கள்ல ஒருத்தங்கள கூப்பிட்டு வெட்டுங்க." நாசுக்காக நழுவிக் கொள்ள பார்த்தாள்.


"பரவாயில்ல மேடம்... நான் எதுவும் நினைக்க மாட்டேன். எனக்கு வேண்டியது எல்லாம் அந்த கேக்க கட் பண்ணி, பசங்களுக்கு கொடுத்து, அவங்களையும் சந்தோஷப் படுத்தணும்." அவள் நழுவுவதற்குள் முந்திக் கொண்டான் அவன்.


நின்று அவளை நிமிர்ந்து பார்த்தவளை கண்டே கொள்ளவில்லை. செல்லில் படம் பிடிக்க தயாரானவனை கொன்றால் என்னவென இருந்தது.


"இல்ல மேடம்.. நான்..." ஏதோ சொல்ல அவள் எத்தணிக்க,


"ப்ளீஸ் பிரியா... நாம என்ன சொன்னாலும் கலைக்டர் சார் அதை வெட்ட மாட்டாரு... அவர் சொன்னா மாதிரி குழந்தைங்கள விடலாம் தான், ஆனா நான் தான் வெட்டுவேன்னு ஒன்னை ஒன்னு அடிச்சுக்குங்க. அப்புறம் வெளி ஆளுங்க மத்தியில மானம் போயிடும். அவரோ சம்மதிச்சதுக்கு அப்புறம் என்னம்மா..." குரலோடு கண்களும் அவளை கெஞ்சி நின்றது.


மறுக்க முடியவில்லை அவளால். சரி என தலையசைத்து வேண்டா வெறுப்பாக கேக்கினை வெட்டியவளை, பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தவனை அழைத்தார் பெரியவர்.

"சாருக்கும் ஊட்டி விடு பிரியா!" என்றார். இதுரை பெரியவர் என எல்லாவற்றயும் சகித்துக் கொண்டு இருந்தவளால் அதற்கு மேல் பொறுமை காக்க முடியவில்லை.

"சாரி மேடம்... எனக்கு கொஞ்ச வேலை இருக்கு. நான் கிளம்பணும். நீங்களே இந்த கேக்க பகிர்ந்துக்கங்க." அவர் பேச இடம் தராது கூறியவர் திரும்பியும் பார்க்காது ஓடி விட்டாள்.
புரிந்திற்று பெரியவருக்கு... அவளுககு இதில் உடன்பாடு இல்லை என்று.

"சார் அது...." என அவர் தயங்க.

"தப்பு மேடம்... நீங்க மனசில வஞ்சகம் இல்லாம சொல்லியிருந்தாலும், அவ ஒரு பொண்ணு. பழக்கமே இல்லாத ஆணுக்கு எப்பிடி கேக்....?" என்றவன் அவதற்குவேமல் கூறவில்லை. அவன் பேச்சில் தலை தவிழ்ந்தவரும்.


"நீங்க இதை தப்பா எடுத்துக்கலன்னா சரி.. நானும் கொஞ்சம் யோசிச்சிருக்கணும். பரவாயில்ல... நம்ம பொண்ணு தானே.. அவ கிட்ட நான் சாரி கேட்டுக்கிறேன்." என்று அவனை சாமாதானம் செய்தவர்,

"சாப்பாட்டை பரி மாறிடலாமா...?" என்றார்.

"ம்ம்... " என்றவன் பார்வையோ பிரியா சென்ற திசைக்கே சென்றது.
 
Top